Advertisment

Tamil New Updates: இன்று மாலை சென்னை வருகிறது பவதாரிணி உடல்

அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ssasa

IE tamil updates

பெட்ரோல், டீசல் விலை : சென்னையில் 613-வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

 முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்

 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2753 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 784 மில்லியன் கன அடியாக உள்ளது.  500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 494 மில்லியன் கன அடியாக உள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • Jan 26, 2024 00:51 IST
    பவதாரிணி மறைவு; பா.ரஞ்சித் வேதனை

    சகோதரி இசைக்கலைஞர் பவதாரணி அவர்களின் இறப்பு செய்தி, பெரும் அதிர்ச்சியையும் மனவேதனையும் அளிக்கிறது! அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள் என்று இயக்குனர் பா.ரஞ்சித் வேதனை தெரிவித்துள்ளார்.



  • Jan 26, 2024 00:33 IST
    இளையராஜா மகள் பவதாரிணி மறைவுக்கு உதயநிதி ஸ்டாலின் இரங்கல்

    இசைஞானி இளையராஜா மகள்  பின்னணி பாடகி சகோதரி பவதாரணி மறைவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 



  • Jan 26, 2024 00:30 IST
    விஜயகாந்த்க்கு பத்ம பூஷன் விருது 

    கலைத்துறையில் சிறப்பான சேவை ஆற்றிய தே.மு.தி.க தலைவர், நடிகர் விஜயகாந்த்க்கு (இறப்பிற்குப் பிறகு) மத்திய அரசின் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில், நடிகர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் காலமானார்.



  • Jan 26, 2024 00:26 IST
    வைஜெயந்திமாலா பாலி, பத்மா சுப்ரமணியமிற்கு பத்ம விபூஷன் விருது 

    பரதநாட்டியக் கலைஞரும், கர்நாடக சங்கீத கலைஞருமான வைஜெயந்திமாலா பாலி, பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியமிற்கு மத்திய அரசின் பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 



  • Jan 25, 2024 22:29 IST
    இளையராஜா மகள் பவதாரிணி மறைவுக்கு மத்திய இணையமைச்சர் எல். முருகன் இரங்கல்

    இசைஞானி இளையராஜா மகள் பவதாரிணி மறைவுக்கு மத்திய இணையமைச்சர் எல். முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.



  • Jan 25, 2024 22:27 IST
    இளையராஜா மகள் பவதாரிணி மறைவுக்கு அண்ணாமலை இரங்கல் 

    இளையராஜாவின் மகள் பவதாரிணி மறைவுக்கு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். அண்ணாமலை தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது: “சிறந்த பின்னணிப் பாடகியும், இசையமைப்பாளரும், இசைஞானி இளையராஜா அவர்களது புதல்வியுமான பவதாரணி அவர்கள், உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி, மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. 

    தனது தனிச் சிறப்பான குரலால், இதயத்தை நெகிழச் செய்யும் பல பாடல்களைப் பாடியவர் பவதாரணி. இளம் வயதிலேயே தேசிய விருது வென்ற பவதாரணி அவர்கள் இசையுலகில் பல சாதனைகள் படைப்பார் என்று அனைவரும் விரும்பியிருந்த போது, அவரது எதிர்பாராத மறைவு சற்றும் ஏற்க முடியாததாக இருக்கிறது. 

    பவதாரணி அவர்களைப் பிரிந்து வாடும் இசைஞானி இளையராஜா குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. இந்தக் கடினமான நேரத்தில் அவர்களுக்கு இறைவன் துணையிருக்கட்டும்.” என்று பதிவிட்டுள்ளார்.



  • Jan 25, 2024 22:21 IST
    என் நண்பனுக்கு எப்படி ஆறுதல் சொல்வேன்; பவதாரிணி மறைவுக்கு பாரதிராஜா இரங்கல்

    இயக்குனர் பாரதிராஜா தனது நண்பர் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.



  • Jan 25, 2024 22:14 IST
    கோவை வள்ளி ஒயில் கும்மி நடனக் கலைஞர் பத்ரப்பனுக்கு பத்மஸ்ரீ அறிவிப்பு

    கோவையைச் சேர்ந்த வள்ளி ஒயில் கும்மி நடனக் கலைஞர் பத்ரப்பனுக்கு (87) ஒன்றிய அரசின் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Jan 25, 2024 22:13 IST
    இளையராஜா மகள் பாடகி பவதாரிணி மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

    இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பாடகி பவதாரிணி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.



  • Jan 25, 2024 21:33 IST
    கீர்த்தி சக்ரா மூன்று படை வீரர்களுக்கு மரணத்திற்கு பிறகு அறிவிப்பு

    கேப்டன் அன்ஷுமன் சிங், ராணுவ மருத்துவப் படை, 26வது பட்டாலியன் பஞ்சாப் ரெஜிமென்ட், 9 பாரா சிறப்புப் படை பிரிவின் ஹவால்தார் அப்துல் மஜித் மற்றும் 55 ராஷ்டிரிய ரைபிள்ஸ் (கிரெனேடியர்ஸ்) சிப்பாய் பவன் குமார் ஆகியோருக்கு, இரண்டாவது மிக உயர்ந்த அமைதிக்கால வீர விருது கீர்த்தி சக்ரா விருது மரணத்திற்குப் பின் வழங்கப்படுகிறது.

    இந்திய ராணுவத்தின் வடக்கு ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி, மத்திய ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி, தெற்கு ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே. சிங் ஆகியோர் குடியரசு தினத்தன்று பரம் விசிஷ்ட் சேவா பதக்கம் வழங்கப்படுகிறது. இந்திய விமானப்படையின் பராமரிப்புக் தலைமை கம்மாண்ட் அதிகாரி ஏர் மார்ஷல் விபாஸ் பாண்டேவுக்கு பி.வி.எஸ்.எம் விருது வழங்கப்படுகிறது.

    இந்த குடியரசு தினத்தில் இந்திய கடற்படையின் துணை தலைமை வைஸ் அட்மிரல் தினேஷ் கே திரிபாதி பரம் விசிஷ்ட் சேவா பதக்கத்தை பெறுகிறார். இந்திய கடலோர காவல்படை தலைமை இயக்குனர் ராகேஷ் பால் அதி விஷிஷ்ட் சேவா பதக்கத்தை பெறுகிறார்.

    மேஜர் திக்விஜய் சிங் ராவத், 21 பாரா சிறப்புப் படைகள், மேஜர் தீபேந்திர விக்ரம் பாஸ்நெட், 4 சீக்கியர்கள் மற்றும் ஹவில்தார் பவன் யாதவ், 21 மஹர் ஆகியோர் இந்த ஆண்டு கீர்த்தி சக்ரா விருது பெற்றனர்.



  • Jan 25, 2024 20:48 IST
    இசைஞானி இளையராஜா மகள் பவதாரிணி மரணம்

    இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 47. பாரதி படத்தில் இடம்பெற்ற  ‘மயில் போல பொண்ணு ஒன்னு’ என்ற பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது பெற்றவர்.



  • Jan 25, 2024 20:45 IST
    நீதித்துறை மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு ராமர் கோயில் ஒரு சான்று - ஜனாதிபதி திரௌபதி முர்மு

    இந்தியாவின் தலைமையின் கீழ், தலைநகரில் 20 பேர் கொண்ட உச்சிமாநாட்டை வெற்றிகரமாக ஏற்பாடு செய்தது, உலக தெற்கின் குரலாக இந்தியாவை உயர்த்திய முன்னோடியில்லாத சாதனை என்று குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரௌபதி முர்மு தனது உரையில் கூறினார். நீதித்துறை மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு ராமர் கோயில் ஒரு சான்று என்று ஜனாதிபதி திரௌபதி முர்மு கூறினார்.



  • Jan 25, 2024 20:41 IST
    12-வது உலகத் தமிழ் மாநாடு: ஜன. 27-ம் தேதி அறிவிக்கப்படும் - உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம்

    12-வது உலகத் தமிழ் மாநாடு நடைபெறும் இடம் குறித்து ஹோட்டல் ரமடாவில் நடைபெறவுள்ள கலந்தாய்வுக் கூட்டத்தில் ஜனவரி 27ம் தேதி அறிவிக்கப்படும் என்று உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் தெரிவித்துள்ளது.



  • Jan 25, 2024 20:28 IST
    இந்துக்களின் உண்மையான எதிரி பாஜக; முதல்வர் மு.க.ஸ்டாலின்


    இந்துக்களின் உண்மையான எதிரி பாரதிய ஜனதா கட்சிதான். இந்தி பேசும் வட இந்தியர்களுக்கு கூட அவர்கள் எதுவும் செய்யவில்லை என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சித்தார்.



  • Jan 25, 2024 19:50 IST
    நீட் தேர்வை நுழைய விட்டவர் எடப்பாடி; மு க ஸ்டாலின் குற்றச்சாட்டு

    மக்களவைத் தேர்தலில் பாஜக அதிமுக தோற்கப்பட வேண்டும் என மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.
    மேலும் நீட் தேர்வை தமிழகத்தில் நுழைய விட்டவர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்றும் தமிழ் மொழியை புறக்கணித்து இந்தி மொழியை திணிக்க உதவியவரும் அவர்தான் என்றும் குற்றம் சாட்டி உள்ளார்.



  • Jan 25, 2024 19:39 IST
    பெண்களை கிண்டல் செய்த கும்பல்; தட்டிக் கேட்ட போலீசுக்கு அடி உதை

    வடலூரில் பெண்களை கிண்டல் செய்த கும்பலை தட்டி கெட்ட போலீசாரை,  அக்கும்பல் தாக்கிய சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



  • Jan 25, 2024 19:28 IST
    90% ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஒத்துழைப்பு; அமைச்சர் சிவ சங்கர்

    90% ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஒத்துழைப்பு கொடுத்துள்ளதாக அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.



  • Jan 25, 2024 18:52 IST
    "கொரோனாவை விட கொடியது பாஜக அரசு"; முதல்வர் மு.க.ஸ்டாலின்

    கொரோனவை விட கொடியது பாரதிய ஜனதா அரசு தான் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.



  • Jan 25, 2024 18:43 IST
    ராமர் பக்தியை எதிர்க்கவில்லை; திருமாவளவன்

    “ராமர் பக்தியை எதிர்க்கவில்லை; ராமரை வைத்து நடக்கும் அரசியலை தான் எதிர்க்கிறோம்" என திருமாவளவன் கூறியுள்ளார்.



  • Jan 25, 2024 18:16 IST
    செய்தியாளர் மீது தாக்குதல்; இருவர் கைது

    திருப்பூர் பல்லடம் செய்தியாளர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



  • Jan 25, 2024 17:53 IST
    புனே திரைப்பட கல்லூரியில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல்!

    புனே திரைப்பட கல்லூரியில், 'பாபர் மசூதி இடிப்பு இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது' என பேனர் வைத்த மாணவர்கள் மீது வலதுசாரி அமைப்பினர் தாக்குதல் நடத்தி, பேனரை தீயிட்டு எரித்துள்ளனர்

    கடந்த 23ம் தேதி பிற்பகல் கல்லூரி பாதுகாவலரை தாக்கி, அத்துமீறி உள்ளே நுழைந்த கும்பல் 'ஜெய் ஸ்ரீ ராம்' என முழக்கமிட்டபடி தாக்குதல் நடத்தியுள்ளனர். மர்ம நபர்களை அடையாளம் கண்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.



  • Jan 25, 2024 17:44 IST
    காசிரங்கா தேசிய பூங்காவில், அறியவகை தங்கப்புலி : அசாம் முதல்வர் தகவல்

    அசாமின் காசிரங்கா தேசிய பூங்காவில், அறியவகை தங்கப்புலி கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமந்த் சிங் பிஸ்வா தகவல் தெரிவித்துள்ளார்.



  • Jan 25, 2024 17:05 IST
    பாஜக தேர்தல் அறிக்கை : இளைஞர்கள் கருத்து கூறலாம் என அறிவிப்பு

    பாஜக தேர்தல் அறிக்கை தொடர்பாக இளைஞர்கள் கருத்து கூறலாம் என பிரதமர் அழைப்பு விடுப்பு NaMo செயலி மூலம் இளைஞர்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என பிரதமர் மோடி X தளத்தில் பதிவு



  • Jan 25, 2024 17:03 IST
    சிறுமியை சித்ரவதை செய்த திமுக எம்.எல்.ஏ மகன் - மருமகள் கைது

    வீட்டு வேலைக்கு வந்த சிறுமியை சித்ரவதை செய்த விவகாரம் பல்லாவரம் திமுக எம்.எல்.ஏவின் மகன் மற்றும் மருமகள் கைது



  • Jan 25, 2024 16:26 IST
    2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதே நமது நோக்கம் : பிரதமர் மோடி

    2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதே நமது நோக்கம். விவசாயிகள் உரங்கள் பெறுவதை உறுதி செய்ய சில ஆண்டுகளில் பல லட்சம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. உலகில் யூரிய ஒரு மூட்டை ரூ3000 க்கு விற்கும் நிலையில், நமது விவசாயிகள், ரூ300-க்கு பெறுகின்றனர் என உத்திரபிரதேசத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.



  • Jan 25, 2024 16:21 IST
    விநாயகர் சிலைகளை கரைக்க இனி கட்டணம் : தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

    விநாயகர் சதுர்த்தியின் போது சிலைகள் கரைப்பதற்கு அனுமதி வழங்க கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் தமிழக சுற்றுச்சூழல் துறை செயலாளர் தலைமையிலான குழுவுக்கு தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. அனுமதி வழங்க வசூலிக்கப்படும் கட்டணத்தை அறிவிக்கப்பட்ட நீர்நிலைகள் பராமரிப்புக்கு செலவிட அறிவுறுத்தியுள்ளது. அறிவிக்கப்படாத நீர்நிலைகளில் சிலைகளை கரைத்தால் விதிக்கப்படும் அபராதம் குறித்து விளம்பரப்படுத்தவும் உத்தரவு



  • Jan 25, 2024 16:05 IST
    செய்தியாளர் மீது தாக்குதல் - இருவர் கைது

    திருப்பூரில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேற்கு மண்டல ஐஜி தகவல் தெரிவித்துள்ளார். 



  • Jan 25, 2024 15:46 IST
    தேர் கவிழ்ந்ததால் பரபரப்பு : அதிஷ்டவசமாக தப்பிய பக்தர்கள்

    சத்தியமங்கலம் அருகே பொன்மலை ஆண்டவர் கோயில் தேரோட்ட விழாவில், தேர் கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வளைவில் திரும்பும் போது, சாலையோரம் இருந்த குழியில் தேரின் சக்கரங்கள் இறங்கியதால் நிலைத்தடுமாறி தேர் கவிழ்ந்தது.  இதனை பார்த்து பக்தர்கள் அலறியடித்து ஓட்டமெடுத்த நிலையில், அதிர்ஷ்டவசமாக பக்தர்கள் காயம் எதுவும் இன்றி தப்பினர். பொக்லைன் இயந்திம் மூலம் தேரை மீட்கும் பணி தீவிரம்



  • Jan 25, 2024 15:44 IST
    பழனி கிரிவலப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு

    பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு சொந்தமான இடங்கள், கிரிவலப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு எடுக்கக் கோரிய வழக்கில், கோயில் கிரிவல வீதிகளில் சட்ட விரோதமாக செயல்படும் வணிக ரீதியான அனைத்து வியாபார நடவடிக்கையை முற்றிலும் அகற்ற வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்



  • Jan 25, 2024 15:41 IST
    சனாதனத்தை வீழ்த்த முடியாது : சிவராஜ் சிங் சவுகான்

    சனாதனத்தை எதிர்க்கும் அரசு வீழுமே தவிர சனாதனத்தை வீழ்த்த முடியாது. தமிழகத்தில் உள்ள கோவில்களில் இருந்து அரசு வெளியேற வேண்டும். தமிழக மக்கள் மோடியின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். என்று மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.



  • Jan 25, 2024 15:34 IST
    நாடாளுமன்ற தேர்தல் பணிகள் : தமிழகம் வரும் மல்லிகார்ஜூன் கார்கே

    நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்த வரும் பிப்ரவரி 13-ந் தேதி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தமிழகம் வருகிறார். இதில் கூட்டணி மற்றும் தொகுதிப்பங்கீடு குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.  



  • Jan 25, 2024 14:46 IST
    திருப்பூர் செய்தியாளர் மீது தாக்குதல்: ஸ்டாலின் கடும் கண்டனம்

    திருப்பூரில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

    மேலும், சிகிச்சையில் உள்ள செய்தியாளருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும், உரிய நடவடிக்கை எடுக்காத சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளரை உடனடியாக காத்திருப்போர் பட்டியலில் வைக்கவும் உத்தரவிட்டுள்ளார். 

    தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்



  • Jan 25, 2024 14:23 IST
    நடிகர் பாபி சிம்ஹா-வுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

    நடிகர் பாபி சிம்ஹா-வுக்கு சென்னை ஆலந்தூர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

    ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கக் கோரி முன்னாள் எம்.பி ஆரூணின் சகோதாரர் உசேன் தொடர்ந்த வழக்கில் உத்தரவிட்டுள்ளது. 

    கட்டுமான ஒப்பந்ததாரர் உடனான பிரச்சினையில் தன்னையும், தனது தந்தையையும் மிரட்டியதாக உசேன் புகார் கொடுத்துள்ளார். வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை பிப்ரவரி 2ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 



  • Jan 25, 2024 14:22 IST
     மீண்டும் பாஜகவில் இணைந்த செகதீசு செட்டர்

    செகதீசு செட்டர் இன்று மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு தரவில்லை என்று கூறி செகதீசு செட்டர் காங்கிரஸில் இணைந்தார். 



  • Jan 25, 2024 14:21 IST
    மக்களவை தேர்தல் - அமைச்சர்களுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

     

    "உங்கள் தொகுதியில் வெற்றியை நழுவவிட்டால், உங்கள் அமைச்சர் பொறுப்பே நழுவி விடும். தீர்க்க முடியாத பிரச்சினையை திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவின் கவனத்திற்கு கொண்டு வரவும். மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள், தொகுதியில் இருக்கும் கட்சியின் சாதக - பாதக அம்சங்கள் குறித்து, தேர்தல் குழுவிடம் ஆலோசிக்க வேண்டும். 

    "அமைச்சர்களின் மாவட்டம் - பொறுப்பு மாவட்டத்தின் வெற்றித் தோல்விக்கும் அமைச்சர்களே பொறுப்பேற்க வேண்டும். கூட்டணியை ஒருங்கிணைத்து நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை அறுவடை செய்ய வேண்டும்" என்று மக்களவை தேர்தலையொட்டி அமைச்சர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். 



  • Jan 25, 2024 13:35 IST
    மக்களவை தேர்தல் -  பிரசாரத்தை தொடங்கிய பா.ஜ.க

     

    மக்களவை தேர்தலுக்கான பிரசாரத்தை பா.ஜ.க தொடங்கியது. பா.ஜ.க அரசின் சாதனைகளை விளக்கி பிரசார வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. 

    பிரதமரின் இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம், வீடுகள் தோறும் குடிநீர் வழங்கும் திட்டங்கள் குறித்தும், ஜல் ஜீவன் திட்டம், அயோத்தி ராமர் கோவில், சந்திரயான் 3 விண்கலம் குறித்தும் பாஜக பிரசாரம் செய்து வருகிறது. 

    மோடி தலைமையிலான பா.ஜ.க அரசின் பல்வேறு சாதனைகள் குறித்தும் பிரசார வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



  • Jan 25, 2024 13:34 IST
    திருப்பூர் செய்தியாளர் கொலைவெறி தாக்குதல் - இ.பி.எஸ் கண்டனம் 

    நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 

    கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 



  • Jan 25, 2024 13:29 IST
    தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு 

    அங்கித் திவாரிக்கு எதிரான லஞ்ச வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி அமலாக்கத்துறை ரிட் மனு தாக்கல் செய்த நிலையில், ரிட் மனுவுக்கு 2 வாரத்தில் பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

    அமலாக்கத்துறையும் சி.பி.ஐ-யும் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

    2 வாரத்திற்குள் தமிழ்நாடு அரசும் மத்திய அரசும் இந்த விவகாரம் குறித்து பேசி சுமுக தீர்வு காண வேண்டும் என்றும், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் தொடர்புடைய பண மோசடி வழக்குகளை அமலாக்கத்துறை விசாரிக்க கூடாது என எப்படி தமிழ்நாடு அரசு கூற முடியும்? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளார். 

    அங்கித் திவாரி விவகாரத்தில் கைப்பற்றிய ஆவணங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 



  • Jan 25, 2024 12:03 IST
    திமுக எம்.எல்.ஏ மருமகள் தாக்கிய விவகாரம்: பணிப்பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை

    பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ மகன் இல்லத்தில் பணிப்பெண் தாக்கப்பட்ட விவகாரம் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார் பணிப்பெண் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு பிரிவு மருத்துவர்கள் இளம் பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை பணிப்பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்யும் 7 பேர் கொண்ட மருத்துவ குழு எம்.எல்.ஏ மகன் மற்றும் மருமகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு திமுக எம்எல்ஏ வீட்டிலும், அவரது மகனின் நண்பர்களிடமும் போலீசார் விசாரணை



  • Jan 25, 2024 12:01 IST
    மொழிப்போர் தியாகிகளின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார் ஓ.பி.எஸ்

    தமிழ் மொழிக்காக உயிர் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்



  • Jan 25, 2024 11:44 IST
    மக்களவை தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது அதிமுக

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர் மாளிகையில் நடைபெறும் கூட்டம் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், ஜெயக்குமார், நத்தம் விசுவநாதன், ஓ.எஸ்.மணியன் ஆகியோர் பங்கேற்பு முன்னாள் அமைச்சர்கள் பா. வளர்மதி, செம்மலை பொள்ளாச்சி ஜெயராமன், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் பங்கேற்பு தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், வைகைச்செல்வன் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை மக்களவை தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது அதிமுக



  • Jan 25, 2024 11:13 IST
    தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இலக்கியமாமணி விருது அறிவிப்பு!

    2023ம் ஆண்டிற்கான இலக்கியமாமணி விருதிற்கு, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஞா.மாணிக்கவாசகன்(94) (மரபுத்தமிழ்),  திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பேராசிரியர் சண்முகசுந்தரம் (73) (ஆய்வுத்தமிழ்),சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கவிஞர் இலக்கியா நடராசன் () . நடராசன்(64) (படைப்புத்தமிழ்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 



  • Jan 25, 2024 10:59 IST
    அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது

    மக்களவைத் தேர்தல் அறிக்கை தயார் செய்யும் குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தொடங்கியது பொன்னையன், செம்மலை, பா. வளர்மதி, O.S. மணியன் உள்ளிட்ட 10 உறுப்பினர்கள் இதில் பங்கேற்பு



  • Jan 25, 2024 10:24 IST
    காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கான குடியரசுத் தலைவர் விருது அறிவிப்பு

    காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கான குடியரசுத் தலைவர் விருது அறிவிப்பு. தமிழ்நாடு ஐஜி லலிதா லட்சுமி, கமென்டண்ட் ராஜசேகரன், துணை காவல் ஆய்வாளர் ராயப்பன் ஆகிய 3 பேருக்கு விருது .மெச்சத்தக்க சேவைக்கான குடியரசுத் தலைவர் விருது தமிழகத்தை சேர்ந்த 21 காவலர்களுக்கு அறிவிப்பு



  • Jan 25, 2024 09:47 IST
    தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் இரட்டைப்பாலத்தில் நிகழ்ந்த சாலை விபத்து - முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

    தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் இரட்டைப்பாலத்தில் நிகழ்ந்த சாலை விபத்து - முதல்வர் நிவாரணம் அறிவிப்பு 3 லாரிகள் மற்றும் 2 கார்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி தொப்பூர் விபத்தில் 8 பேர் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிந்து மிகவும் வேதனையடைந்தேன் - முதல்வர் ஸ்டாலின் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.2லட்சம், காயமடைந்து சிகிச்சை பெறும் நபர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க உத்தரவு



  • Jan 25, 2024 09:14 IST
    அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனின் மருமகள் பூர்ணிமா உயிரிழப்பு

    அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனின் மருமகள் பூர்ணிமா உயிரிழப்பு 80 % தீக்காயங்களுடன் வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பலி கடந்த 18-ம் தேதி மாலை தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் தனது வீட்டில் விளக்கு ஏற்றும் போது தீப்பிடித்ததில் காயமடைந்தார் பூர்ணிமா



  • Jan 25, 2024 08:49 IST
    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வசதிகள் இல்லை என்பது தவறு: அமைச்சர் சேகர் பாபு 

    பொங்கல் முடிந்தவுடன் கிளாம்பாக்கத்திலிருந்து பேருந்துகளை இயக்குவோம் என்றார்கள் கோயம்பேட்டில் 1000 பேருந்துகள் நிறுத்தும் வசதி உள்ளதா? நாங்கள் கோயம்பேட்டிலிருந்து தான் இயக்குவோம் என்றால் என்ன அர்த்தம்? கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வசதிகள் இல்லை என்பது தவறு ஆம்னி பேருந்துகளுக்காக 5 நடைமேடைகள் உள்ளது..77 பேருந்துகளை நிறுத்த முடியும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் போதிய வசதிகள் உள்ளன ஏற்கனவே திட்டமிட்டப்படி, கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும்- அமைச்சர் சேகர் பாபு 



  • Jan 25, 2024 08:21 IST
    தென் மாவட்டங்களில் இருந்து இயக்கப்பட்ட 217 ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நிறுத்தம்

    தென் மாவட்டங்களில் இருந்து இயக்கப்பட்ட 217 ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நிறுத்தம் 145-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் பார்க்கிங் பேவிலும், இதர ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள்ளும் நிறுத்தம் தென்மாவட்டம் செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகள் இனி கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே புறப்படும் ரெட் ஹில்ஸ் மற்றும் பூந்தமல்லி வழியாக செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகள் மட்டுமே கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட வேண்டும்- போக்குவரத்து துறை



  • Jan 25, 2024 08:00 IST
    மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த சிறுமியை நேரில் வர போலீசார் அறிவுறுத்தல்

    பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ மகன் இல்லத்தில் சிறுமி கொடுமைப்படுத்தப்பட்ட விவகாரம் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த சிறுமியை நேரில் வர போலீசார் அறிவுறுத்தல்



  • Jan 25, 2024 07:56 IST
    அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு இன்று ஆலோசிக்கிறது

    அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு இன்று ஆலோசனை. முன்னாள் அமைச்சர்கள் 10 பேர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment