/indian-express-tamil/media/media_files/reFLLDnOhjWdaOxXGSxE.jpg)
IE Tamil Updates
Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Mar 11, 2024 22:02 IST
மாநில உரிமைகளை விட்டுக்கொடுத்து திமுக ஊமையாக இருக்கிறது; எடப்பாடி பழனிசாமி
மாநில உரிமைகளை விட்டு கொடுத்து தி.மு.க ஊமையாக இருக்கிறது என எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் காங்கிரஸ் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் மற்றும் பாஜக மூத்தத் தலைவர் சி.டி. ரவிக்கும் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.I strongly condemn the highly objectionable remarks made by Karnataka Deputy CM @DKShivakumar and Karnataka BJP leader @CTRavi_BJP over providing Cauvery water to Tamilnadu.
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) March 11, 2024
This reflects the historic dual stand and hypocritical nature of National Parties in inter-state issues.… -
Mar 11, 2024 21:24 IST
குடியுரிமை சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்
குடியுரிமை சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மனித நேய குடியுரிமை கொள்கையை, மத்திய பா.ஜ.க அரச இன, மதம் என பிளவுவாத கொள்கையாக மாற்றியது; பா.ஜ.க.வின் பாதம் தாங்கியான அ.தி.மு.க ஆதரித்ததால் தான் சி.ஏ.ஏ சட்டம் அமலுக்கு வந்தது. சி.ஏ.ஏ.வுக்கு ஆதரவாக வாக்களித்த அ.தி.மு.க.வுக்கு, வாக்காளர்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். தேர்தலில் தனது அனைத்து அஸ்திரங்களும் நீர்த்துப்போனதால் சி.ஏ.ஏ சட்டம் மூலம் வெற்றி பெற முயல்கிறது பா.ஜ.க என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
Mar 11, 2024 21:11 IST
மக்களின் உணர்ச்சிகளைச் சீண்டி மோடி அரசியல் ஆதாயம் அடையப் பார்க்கிறார் - ஸ்டாலின் விமர்சனம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்: “அமைதிமிகு இந்தியாவில் பிளவு சட்டத்தைக் கொண்டுவந்த பா.ஜ.க.வுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்; குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தி தேர்தலில் கரையேற முயற்சிக்கிறார் பிரதமர் மோடி. மக்களின் உணர்ச்சிகளைச் சீண்டி பிரதமர் அரசியல் ஆதாயம் அடைப் பார்க்கிறார்” என்று கடுமையாக சாடியுள்ளார்.
-
Mar 11, 2024 19:57 IST
நடிகர் சங்க கட்டடம் கட்ட ரூ. 1 கோடி நிதி வழங்கினார் விஜய்
தென்னிந்திய நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கு நடிகர் விஜய் ரூ. 1 கோடி நிதியுதவி வழங்கினார். நடிகர் சங்க கட்டுமானப் பணிகளுக்கான வைப்பு நிதியாக த.வெ.க தலைவர் ரூ. 1 கோடியை வழங்கினார். ஏற்கெனவே, அமைச்சர் உதயநிதி, கமல்ஹாசன் ஆகியோர் ரூ. 1 கோடி வைப்பு நிதி வழங்கியுள்ளனர்.
-
Mar 11, 2024 19:44 IST
இரட்டை இலை சின்னம் - இ.பி.எஸ் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தக்கூடாது என திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் அளித்த புகாரில் விளக்கம் தரும்படி அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
Mar 11, 2024 19:41 IST
ரமலான் மாதம் தொடங்கிவிட்டதாக அறிவிப்பு
பிறை பார்க்கப்பட்டு ரமலான் மாதம் தொடங்கிவிட்டதாக தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். இதனால், ரமலான் நோன்பு நோற்பது, தொழுகை உள்ளிட்டவைகளை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Mar 11, 2024 19:38 IST
பெரம்பலூரில் 3வது முறையாக போட்டியிடுகிறேன் - ஐ.ஜே.கே தலைவர் பாரிவேந்தர்
இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனத் தலைவரும் பெரம்பலூர் எம்.பி-யுமான பாரிவேந்தர், “பா.ஜ.க கூட்டணியில் ஐ.ஜே.கே-வுக்கு பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி தொகுதியைக் கேட்டுள்ளோம்; ஆராய்ந்து வழங்குவதாகக் கூறியுள்ளனர். பெரம்பலூர் தொகுதியில் 3வது முறையாக போட்டியிடுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
-
Mar 11, 2024 18:56 IST
பா.ஜ.க கூட்டணியில் சரத்குமார்: கமலாலயத்தில் பேட்டி
பாரதிய ஜனதா கூட்டணிக்கு ஆதரவு கொடுத்துள்ள நிலையில் சரத் குமார் தி. நகர் கமலாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, “வரும் மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் பயணிக்கிறோம்; சீட் தொடர்பாக எந்த நிர்பந்தமும் விதிக்கவில்லை. எந்தத் தொகுதியில் நின்றாலும் வெற்றி பெறுவேன்” என்றார். -
Mar 11, 2024 18:31 IST
அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி; மோடி வாழ்த்து
அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி பெற்ற நிலையில் பிரதமர் மோடி விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்விட்டரில், “தொழில்நுட்பத்துடன் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணையின் முதல் பறப்புச் சோதனையான மிஷன் திவ்யஸ்த்ரா” நமது விஞ்ஞானிகளுக்கு கிடைத்த பெருமை எனத் தெரிவித்துள்ளார். -
Mar 11, 2024 18:29 IST
குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்
குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடு முழுவதும் மத்திய அரசு அமல்படுத்தியது.
-
Mar 11, 2024 18:07 IST
பா.ஜனதா, அ.ம.மு.க கூட்டணி; டி.டி.வி. தினகரன்
“தற்போதைய காலகட்டத்தில் இந்தியாவின் வளர்ச்சிக்காக பாஜக தான் தேவை;
நரேந்திர மோடி தான் 3-வது முறை பிரதமராக போகிறார் என்பது அனைவருக்கும் தெரியும்;
தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுகவிற்கு எத்தனை தொகுதி என்பதெல்லாம் முக்கியமல்ல” என திருச்சியில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். -
Mar 11, 2024 17:27 IST
நாட்டு மக்களுக்கு மோடி உரை
பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு சற்றுநேரத்தில் உரையாற்ற உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Mar 11, 2024 17:09 IST
ஆன்லைனில் சி.எஸ்.கே டிக்கெட் விற்பனை?
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளுக்கு விரைவில் டிக்கெட் விற்பனைத் தொடங்க உள்ள நிலையில், ஆன்லைன் மூலம் மட்டுமே டிக்கெட் விற்பனை நடத்த சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மார்ச் 22ம் தேதி மோத உள்ளன
-
Mar 11, 2024 16:54 IST
பொன்முடி வழக்கில் தீர்ப்பு நிறுத்திவைப்பு; சபாநாயகர் ஆலோசனை
பொன்முடி வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சபாநாயகர் அப்பாவு உடன் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் ஆலோசனை நடத்தினார்.
-
Mar 11, 2024 16:35 IST
பதட்டமான வாக்குச்சாவடிகளை அடையாளம் காண வேண்டும்; தலைமை தேர்தல் ஆணையர் அறிவுறுத்தல்
வாக்குப்பதிவு சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். வாக்குப்பதிவு மையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, பதட்டமான வாக்குச்சாவடிகளை அடையாளம் காண வேண்டும் என தேர்தல் பார்வையாளர்களுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்
-
Mar 11, 2024 16:11 IST
பா.ஜ.க.,வுடன் கூட்டணி பேச்சு இல்லை; பிரேமலதா திட்டவட்டம்
மக்களவை தேர்தல் தொடர்பாக பா.ஜ.க.வுடன் கூட்டணி பேச்சு எதுவும் நடக்கவில்லை என தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜய்காந்த் தெரிவித்துள்ளார்
-
Mar 11, 2024 15:52 IST
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 25ஆவது முறையாக நீட்டிப்பு..!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் 25வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று நடந்த விசாரணையில் புழல் சிறையில் இருந்து காணொலி வாயிலாக செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். -
Mar 11, 2024 15:44 IST
மிகப்பெரிய ஊழல் பிரதமர் மோடியின் தேர்தல் பத்திரம் தான் - செல்வப்பெருந்தகை
இந்தியாவில் இதுவரை வெளிவந்த ஊழல்களில் மிகப்பெரியது பிரதமர் மோடியின் தேர்தல் பத்திரம் தொடர்பான ஊழல்தான் என SBI வங்கியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்
-
Mar 11, 2024 15:21 IST
பொன்முடி வழக்கில் முதற்கட்ட வெற்றி - ஆர்.எஸ்.பாரதி
பொன்முடி வழக்கில் தண்டனை நிறுத்திவைக்கபட்டது முதற்கட்ட வெற்றி என்றும், இறுதி வெற்றியை பொன்முடி பெறுவார் என்றும் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்
-
Mar 11, 2024 14:51 IST
பொன்முடி குற்றவாளி என்ற தீர்ப்பு நிறுத்திவைப்பு
முன்னாள் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என்ற தீர்ப்பை நிறுத்தி வைத்தது உச்சநீதிமன்றம்
சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனை நிறுத்திவைப்பு
-
Mar 11, 2024 14:37 IST
வெள்ளி அன்று விசாரணை
மக்களவை தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் கோரி நாம் தமிழர் கட்சி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் வரும் வெள்ளி அன்று விசாரணைக்கு வருகிறது
-
Mar 11, 2024 14:35 IST
அங்கித் திவாரி வழக்கு
திண்டுக்கல்லில் லஞ்சம் வாங்கிய போது பிடிபட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமின் மனு மீது மெரிட் அடிப்படையில் முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
அங்கித் திவாரியை தங்களது கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்கவும் நீதிமன்றம் உத்தரவு
-
Mar 11, 2024 14:16 IST
உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்
நாட்டின் பிற மாநிலங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகளை சேகரித்த பிறகு சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்வது பற்றி கொள்கை முடிவு எடுக்கப்படும் - உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்
7 மாநிலங்கள் தகவல்களை வழங்கியுள்ளன. மற்ற மாநிலங்களிடம் இருந்து விளக்கங்களை பெற வேண்டியதுள்ளது - அரசுத்தரப்பு பதில்
-
Mar 11, 2024 14:12 IST
உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்- ப.சிதம்பரம்
தேர்தல் பத்திரம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்
தேர்தல் பத்திர வழக்கில் எஸ்.பி.ஐ வங்கி உண்மையை மறைக்கிறது
வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்துகள் எஸ்.பி.ஐ.க்கு ஏற்பட்டுள்ள இழுக்கு
-ப.சிதம்பரம்
-
Mar 11, 2024 14:08 IST
பிரேத பரிசோதனை அறிக்கை ஒப்படைப்பு
புதுச்சேரியில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை விசாரணை அதிகாரி எஸ்.பி லட்சுமி சௌஜன்யாவிடம் ஒப்படைப்பு;
சீல்வைக்கப்பட்ட அறிக்கையை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல ஆவணங்கள் தயார் செய்யும் போலீசார்;
இன்று மாலை 4 மணிக்கு சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட உள்ளது
-
Mar 11, 2024 13:52 IST
அங்கித் திவாரி வழக்கு- விசாரணை ஒத்திவைப்பு
லஞ்சம் பெற்ற வழக்கில் ஜாமின் கோரிய அங்கித் திவாரின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமின் மனுவுக்கு தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
-
Mar 11, 2024 13:50 IST
காங்கிரஸில் இணைந்த பா,ஜ.க எம்.பி
#அரசியல்Post | பாஜகவில் இருந்து விலகி, காங்கிரஸில் இணைந்த எம்.பி. ராகுல் கஸ்வான்!#SunNews | #RahulKaswan | #Congress | #BJP | #Elections2024 pic.twitter.com/l5cktFP0gd
— Sun News (@sunnewstamil) March 11, 2024Credit: Sun News
-
Mar 11, 2024 13:48 IST
சரத்குமார் பேட்டி
NDA கூட்டணியில் பயணிக்கிறோம் என அறிவித்த பிறகு மரியாதை நிமித்தமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து பேசினேன்;
நாளை மறுநாள் தொகுதி பங்கீடு, மற்றும் விருப்பமான இடங்கள் குறித்து ஆலோசித்த பிறகு சமகவிற்கு எந்தெந்த தொகுதிகள் என்பதை அறிவிப்போம்;
நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்ற முறையில் பாஜகவுடன் இணைந்து இந்த தேர்தலில் போட்டியிடுகிறோம்
- சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேட்டி
-
Mar 11, 2024 13:48 IST
பாஜகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ராஜலட்சுமி, பாஜகவில் இணைந்தார்
-
Mar 11, 2024 13:22 IST
ராமநாதபுரம் நீதிமன்றத்தில் சரணடைந்தார் நடிகர் பவர் ஸ்டார்
செக் மோசடி வழக்கில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் சரண்
ஜனவரி மாதம் ஆஜராகாத நிலையில் தற்போது ஆஜராகி உள்ளார் நடிகர் பவர் ஸ்டார்
ராமநாதபுரத்தை சேர்ந்த உப்பளம், இறால் பண்ணை உரிமையாளர் முனியசாமியிடம் 15 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததாக வழக்கு
-
Mar 11, 2024 13:20 IST
மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன்- சரத்குமார் பேட்டி
தற்போது மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன். தொகுதிப் பங்கீடு தொடர்பான இறுதி அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்படும்
பாஜக உடனான கூட்டணி பேச்சு வார்த்தைக்கு பிறகு சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பேட்டி
-
Mar 11, 2024 12:58 IST
தேர்தல் ஆணையர் நியமனம் - காங்கிரஸ் வழக்கு
தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் வழக்கு
"புதிய தேர்தல் ஆணைய சட்டத்தின் படி தேர்தல் ஆணையர்களை நியமிக்க மத்திய அரசுக்கு தடை விதிக்க வேண்டும்" - உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெயா தாகுர் மனு தாக்கல்
தேர்தல் ஆணையர் அருண் கோயல், தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் வழக்கு
இந்திய தேர்தல் ஆணையத்தில் தற்போது 2 தேர்தல் ஆணையர்கள் பதவி காலியாக உள்ளது. புதிய தேர்தல் ஆணையரை நியமிக்க மத்திய அரசு திட்டமிடும் சூழலில் காங்கிரஸ் சார்பாக வழக்கு
-
Mar 11, 2024 12:45 IST
பா.ஜ.க அலுவலகம் வந்த சரத்குமார்
மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த பாஜக அலுவலகம் சென்றார் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்.
-
Mar 11, 2024 12:23 IST
உச்ச நீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ செய்த வாதம்
தேர்தல் பத்திரங்களை யார் வாங்கினார்கள் என்பது குறித்த தகவலை வெளியிட 3 வார கால அவகாசம் போதும். ஆனால் தேர்தல் பத்திரங்களை எந்த அரசியல் கட்சிக்கு நன்கொடையாக கொடுத்தார்கள் என்பது குறித்த தகவலை சரிபார்த்து வெளியிட 3 மாதத்திற்கு மேல் அவகாசம் தேவை - உச்ச நீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ செய்த வாதம்
-
Mar 11, 2024 12:19 IST
எஸ்.பி.ஐக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை
எஸ்.பி.ஐ நாளைக்குள் தேர்தல் பத்திர விவரங்களை வழங்கவில்லை எனில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை.
-
Mar 11, 2024 12:16 IST
எஸ்.பி.ஐ வங்கி மனு தள்ளுபடி
தேர்தல் பத்திர விவரங்களை அளிக்க கால நீட்டிப்பு கோரி எஸ்.பி.ஐ வங்கி தரப்பு தாக்கல் செய்த மனு தள்ளுபடி
மார்ச் 12ஆம் தேதிக்குள் தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திற்கு வழங்க வேண்டும்
தேர்தல் பத்திர விவரங்களை மார்ச் 15ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணைய இணைய தளத்தில் வெளியிட வேண்டும்- உச்சநீதிமன்றம் உத்தரவு
-
Mar 11, 2024 12:08 IST
நாளை மாலைக்குள் வெளியிட எஸ்.பி.ஐக்கு உத்தரவு
தேர்தல் பத்திர விவரங்களை நாளை மாலைக்குள் எஸ்.பி.ஐ வெளியிட வேண்டும் - உச்சநீதிமன்றம் அதிரடி
-
Mar 11, 2024 12:07 IST
எஸ்.பி.ஐ-க்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி
நாட்டில் ஒரே ஒரு வங்கித்தான் இந்த வேலையைச் செய்கிறது என்ற போது அதை நீங்கள் சரிவரச் செய்திருக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் தரவுகள் தாக்கல் செய்யப்படும் போது நன்கொடையாளர்கள் வங்கிக்கு எதிராகப் புகார் அளிப்பார்கள் என்பது ஏற்புடையதல்ல" - எஸ்.பி.ஐக்கு எதிரான தேர்தல் பத்திர வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு சரமாரி கேள்வி
-
Mar 11, 2024 11:31 IST
பிரதமர் வருவது சுற்றுப் பயணம் அல்ல; வெற்றுப் பயணம்
பிரதமர் வருவது சுற்றுப் பயணம் அல்ல; வெற்றுப் பயணம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
பிரதமர் அடிக்கடி தமிழ்நாடு வருவது சுற்றுப் பயணம் அல்ல; வெற்றுப் பயணம். இயற்கைப் பேரிடர்களின் போது வராத பிரதமர் மோடி தேர்தல் வருவதால் தமிழ்நாட்டிற்கு வருகிறார்-முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
Mar 11, 2024 10:38 IST
புதுச்சேரி 9 வயது சிறுமி கொலை: முக்கிய குற்றவாளி தற்கொலை முயற்சி
புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான விவேகானந்தம் தற்கொலை முயற்சி தனி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், தான் அணிந்திருந்த சட்டை மூலம் தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
Mar 11, 2024 09:38 IST
சமத்துவ மக்கள் கட்சி எத்தனை இடங்களில் போட்டி: நாளை அறிவிப்பு வெளியாகும்
சமத்துவ மக்கள் கட்சி எத்தனை இடங்களில் போட்டி, எங்கெல்லாம் போட்டி, நாளை அறிவிக்கிறார் சரத்குமார்
-
Mar 11, 2024 09:30 IST
வார் இஸ் ஓவர் திரைப்படம்
சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை "வார் இஸ் ஓவர்" வென்றது
-
Mar 11, 2024 09:29 IST
சாலையில் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
விருதுநகர்: ராஜபாளையம் அருகே திருவள்ளுவர் நகர் பகுதியில் கடந்த 6 மாதங்களாக முறையான குடிநீர் வழங்காததை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலையில் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
-
Mar 11, 2024 09:23 IST
விமானத்தில் வாக்கு சேகரித்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகி
2026 சட்டமன்ற தேர்தல் மதுரை to தேனி சென்ற விமானத்தில் வாக்கு சேகரித்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகி.
-
Mar 11, 2024 08:00 IST
சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது ஓப்பன்ஹெய்மர்
சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது ஓப்பன்ஹெய்மர்.
-
Mar 11, 2024 07:59 IST
சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றார் எம்மா ஸ்டோன்
சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றார் எம்மா ஸ்டோன்.
-
Mar 11, 2024 07:53 IST
சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை
ஓப்பன்ஹெய்மர் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றார் ராபர்ட் டௌனி ஜூனியர்! The Holdovers படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதைப் பெற்றார் டாவின் ஜாய் ரண்டோல்ஃப்.
-
Mar 11, 2024 07:52 IST
சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர் விருதை பெற்ற சிலியன் மர்ஃபி, கிறிஸ்டோஃபர் நோலன்
சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை வென்றார் கிறிஸ்டோஃபர் நோலன்.சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார் சிலியன் மர்ஃபி.
-
Mar 11, 2024 07:51 IST
விருதுகளை குவித்த ஓப்பன்ஹெய்மர்
சிறந்த துணை நடிகர், எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவுக்காக 'ஓப்பன்ஹெய்மர்' படத்திற்கு ஆஸ்கர் விருது. ஓப்பன்ஹெய்மரில் சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை ராபர்ட் டௌனி ஜூனியர், பெற்றார்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.