Advertisment

Tamil New Today : அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 7 மணிக்கு தொடங்கியது

Tamil news updates: அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
 Trichy Jallikattu Competitions

IE Tamil Updates

Tamil news updates: பெட்ரோல், டீசல் விலை 

Advertisment

சென்னையில் 604-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

 சிறந்த காளைக்கு கார் பரிசு

மதுரை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் ஜி.ஆர்.கார்த்திக் என்பவரின் காளைக்கு சிறந்த காளைக்கான கார் பரிசு வழங்கப்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil 

  • Jan 16, 2024 22:24 IST
    ஜனவரி 19-ம் தேதி சென்னை வருகிறார் மோடி

    பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக ஜனவரி 19-ம் தேதி சென்னை வருகிறார். ஜனவரி 19-ம் தேதி கேலோ இந்தியா விளையாட்டு போட்டியைத் தொடங்கி வைக்கிறார். ஜனவரி 20-ம் தேதி திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார். திருச்சியிலிருந்து மதுரை செல்லும் பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் செல்கிறார்.



  • Jan 16, 2024 21:19 IST
    புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் எக்ஸ் சமூகவலைதள பக்கம் முடக்கம்

     


    புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் எக்ஸ் சமூகவலைதள பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி ஆளுநரின் எக்ஸ் பக்கத்தை மீட்கும் முயற்சியில் ஆளுநர் மாலீகை தொழில்நுட்பப் பிரிவு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.



  • Jan 16, 2024 20:32 IST
    ‘ஊழல் செய்வோர் மீது நடவடிக்கை எடுப்பதில் மத்திய அரசு முன்னுரிமை’ - மோடி 

    பிரதமர் மோடி: “ஊழலுக்கு எதிராகப் போராடுவதும், ஊழல் செய்வோர் மீது நடவடிக்கை எடுப்பதிலும் மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது. சீர்திருத்தங்களால் நாட்டில் தற்போது வரிவசூல் சாதனை படைத்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் வரி முறையில் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. அரசு தொடர்ந்து போதுமான வருவாய் பெறுவதில் மக்களுக்கு பங்குள்ளது. எந்த வகையில் வசூலித்தாலும் அத்தொகையை பல்வேறு விதமாக அரசு மக்களுக்கு திருப்பித் தந்து வருகிறது” என்று பேசியுள்ளார்.



  • Jan 16, 2024 19:49 IST
    கோவை வால்பாறையில் 2 அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

    கோவை, வால்பாறையில் 2 அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. பிரேக் செயலிழப்பால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மற்றொரு அரசுப் பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.



  • Jan 16, 2024 19:38 IST
    இலங்கை கடற்படையினரால் ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் கைது

     

    எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர். 2 படகை பறிமுதல் செய்து 23 மீனவர்களையும் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.



  • Jan 16, 2024 19:34 IST
    சென்னை பூந்தமல்லியில் பயங்கர தீ விபத்து

    சென்னை, பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் புதிய வாகனங்களுக்கு பாடி கட்டும் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 புதிய வாகனங்கள் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது.



  • Jan 16, 2024 18:48 IST
    முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு விருது

    உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு அசாம் மாநிலத்தின் உயரிய விருதான பைபவ் விருது வழங்கப்பட உள்ளதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். பிப்ரவரி 10-ம் தேதி நடைபெறும் விழாவில், அசாம் மாநில ஆளுநர் விருதை வழங்க உள்ளார்.



  • Jan 16, 2024 18:42 IST
    அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க விராட் கோலிக்கு அழைப்பு

    அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வருகிற 22-ம் தேதி அயோத்தி ராமர் கோவில் திறக்கப்படவுள்ளது. ஏற்கனவே, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தோனிக்கு ராமர் கோவில் திறப்பு விழா அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.



  • Jan 16, 2024 18:41 IST
    பெரியார் பல்கலை பதிவாளர் மீது ஆசிரியர் கூட்டமைப்பு புகார்

     

    பெரியார் பல்கலை பதிவாளர் விதிமீறலில் ஈடுபட்டதாக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு புகார் தெரிவித்துள்ளது.



  • Jan 16, 2024 18:06 IST
    பன்னாட்டு புத்தக கண்காட்சி; மு.க. ஸ்டாலின் அழைப்பு

    பன்னாட்டு கண்காட்சி குறித்து மு.க. ஸ்டாலின் ட்விட்டரில், “தமிழ்நாட்டில் நமது அரசு முன்னெடுக்கும் அறிவியக்கத்துக்கு அத்தாட்சியாக கடந்த ஆண்டு முதல் சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சியை நடத்தி வருகிறோம்.

    இந்த ஆண்டு சுமார் 40 உலக நாடுகள், 10 இந்திய மாநிலங்களின் பங்கேற்புடன் 50 மொழிகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளும் #CIBF2024 இன்று தொடங்கி 18-ஆம் தேதி வரை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற இருக்கிறது.

    தொழிற்கல்வி சார்ந்த 200 நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படவுள்ளன. பல்வேறு கருத்தரங்குகள், விவாதங்கள் நடைபெறுகின்றன. எழுத்தாளர்களுக்கும் வெளிநாட்டுப் பதிப்பு நிறுவனங்களுக்கும் இடையே பாலமாக 20 இலக்கிய முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழ்ப் படைப்பாளிகள் உலகெங்கும் சென்று சேரவும், உலக மொழிகளில் உள்ள அறிவுச் செல்வத்தைத் தமிழில் ஆக்கி அளிக்கவும் பெரும் பொருட்செலவில் நமது அரசு முன்னெடுக்கும் இந்த உலக அளவிலான அறிவுத்திருவிழாவில் அனைவரும் பங்கேற்றுப் பயன்பெறுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.



  • Jan 16, 2024 17:50 IST
    பழனி முருகன் கோவில்; பக்தர்களுக்கு ரூ.500 அபராதம்

    பழனி முருகன் கோவிலுக்குள் அனுமதியின்றி செல்போன் கொண்டு வந்ததாக பக்தர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. இது சமூக வலைதளங்களில் வரவேற்பு, எதிர்ப்பு என கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது.



  • Jan 16, 2024 17:27 IST
    இங்கிலாந்து பிரதமர் பொங்கல் வாழ்த்து

    இங்கிலாந்து நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் பொங்கல் வாழ்த்த தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்தில், “இங்கிலாந்தின் கல்வி, வர்த்தகம் மற்றும் சுகாதாரத்தில் அற்புதமான பங்களிப்பை அளித்துவரும் தமிழ் மக்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.



  • Jan 16, 2024 17:05 IST
    பாலமெடு ஜல்லிக்கட்டு; முதல் இடம் பிடித்த பிரபாகரன்

    பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில் 14 காளைகளை அடக்கி பிரபாகரன் என்பவர் முதல் இடம் பிடித்தார்.



  • Jan 16, 2024 16:22 IST
    மதுரை: மஞ்சுவிரட்டு காளை முட்டியதில் இளைஞர் மரணம்

    மதுரை திருபரங்குன்றம் தாலுகா உள்ள எலியார்பத்தியில் நடந்த மஞ்சுவிரட்டு போட்டியில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். வீட்டின் வாசலில் நின்றுக் கொண்டிருந்த இளைஞர் மீது மாடு மோதியதில் அவர் உயிரிழந்தார்.



  • Jan 16, 2024 15:30 IST
    ‘ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம்’ பஜனை பாடிய பிரதமர் மோடி

    ஆந்திர மாநிலம் லெபக்ஷியில் உள்ள வீரபத்ரா கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி ‘ஸ்ரீ ராம் ஜெய் ராம்’ பஜனை பாடினார்.



  • Jan 16, 2024 14:35 IST
    ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்துகொள்வது கடினம்; ராகுல் காந்தி

    “ஜன.22ஆம் தேதி நடைபெறும் ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்துகொள்வது கடினம்; பாரதிய ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் அதை தேர்தலுக்கு சாதகமாக பயன்படுத்துகின்றன” என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ நியாய் யாத்திரையின் 3வது நாளில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார்.



  • Jan 16, 2024 14:09 IST
    சீறி வந்த ஓ.பி.எஸ் காளை

     



  • Jan 16, 2024 14:07 IST
    24 பேர் காயம்

    பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 24 பேர் காயம்

    3 பேர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி



  • Jan 16, 2024 13:29 IST
    உறை பனி எச்சரிக்கை

    கோவை: நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் 🌃ஓரிரு இடங்களில் உறை பனி ஏற்பட வாய்ப்பு

    - சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் தகவல்



  • Jan 16, 2024 13:25 IST
    ஜல்லிக்கட்டு போட்டியை காண வருகை தந்த நடிகர் சூரி

     



  • Jan 16, 2024 13:12 IST
    உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

    கிருஷ்ண ஜென்ம பூமி விவகாரம் - மசூதி ஆய்வு தொடர்பான அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

    மதுராவில் உள்ள ஷாஹி மசூதியில் ஆய்வு நடத்த வழக்கறிஞர் ஆணையரை நியமித்த உத்தரவுக்கு தடை



  • Jan 16, 2024 12:30 IST
    ஐசிசியின் சிறந்த வீரர் விருது

    டிசம்பர் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர் விருதை வென்றார் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ்.



  • Jan 16, 2024 12:30 IST
    ஐசிசியின் சிறந்த வீரர் விருது

    டிசம்பர் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர் விருதை வென்றார் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ்.



  • Jan 16, 2024 12:30 IST
    ஐசிசியின் சிறந்த வீரர் விருது

    டிசம்பர் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர் விருதை வென்றார் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ்.



  • Jan 16, 2024 12:30 IST
    ஐசிசியின் சிறந்த வீரர் விருது

    டிசம்பர் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர் விருதை வென்றார் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ்.



  • Jan 16, 2024 12:09 IST
    2வது சென்னை சர்வதேச புத்தகக் காட்சி (CIBF)

    சென்னை: நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் 2வது சென்னை சர்வதேச புத்தகக் காட்சி தொடக்க விழா நடைபெற்றது;

    விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா மோ அன்பரசன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோர் பங்கேற்பு



  • Jan 16, 2024 12:09 IST
    2வது சென்னை சர்வதேச புத்தகக் காட்சி (CIBF)

    சென்னை: நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் 2வது சென்னை சர்வதேச புத்தகக் காட்சி தொடக்க விழா நடைபெற்றது;

    விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா மோ அன்பரசன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோர் பங்கேற்பு



  • Jan 16, 2024 12:01 IST
    வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது - மு.க.ஸ்டாலின்



  • Jan 16, 2024 12:00 IST
    சிறந்த கால்பந்து வீரர் விருது

    FIFAவின் 2023ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்றார் மெஸ்ஸி!



  • Jan 16, 2024 11:59 IST
    4ம் சுற்று நிறைவு!

    பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியின் 4ம் சுற்று நிறைவு

    இதுவரை 373 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன



  • Jan 16, 2024 11:59 IST
    தஞ்சை பெரியகோயில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு மகா நந்திக்கு சிறப்பு வழிபாடு

     



  • Jan 16, 2024 11:25 IST
    தங்கம் விலை

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 குறைவு தங்கம் ஒரு கிராம் ரூ.5,850க்கும், ஒரு சவரன் ரு.46,800க்கும் விற்பனை 



  • Jan 16, 2024 11:20 IST
    திருவள்ளுவர் தினத்தையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து



  • Jan 16, 2024 11:16 IST
    காவி உடையில் திருவள்ளுவர் இருப்பது போன்ற திருவள்ளுவர் தின வாழ்த்து கூறியுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி

    காவி உடையில் திருவள்ளுவர் இருப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து திருவள்ளுவர் தின வாழ்த்து கூறியுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன் - ஆளுநர் ஆர்.என்.ரவி அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்துக்கு வழிகாட்டியாகவும் உத்வேகத்தின் ஆதாரமாகவும் நீடிக்கிறது இந்த புனிதமான நாளில், அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் - ஆளுநர் ஆர்.என்.ரவி.



  • Jan 16, 2024 10:48 IST
    திருவள்ளுவர் தினத்தையொட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து



  • Jan 16, 2024 10:44 IST
    பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் 4வது சுற்று தொடங்கியது

    பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் 4வது சுற்று தொடங்கியது 4வது சுற்றில் பச்சை நிற சீருடையில் களமிறங்கியுள்ள வீரர்கள்



  • Jan 16, 2024 09:51 IST
    பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் 3வது சுற்று தொடங்கியது

    பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் 3வது சுற்று தொடங்கியது 3வது சுற்றில் பிங்க் நிற சீருடையில் களமிறங்கியுள்ள வீரர்கள்



  • Jan 16, 2024 09:27 IST
    பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 8 பேர் காயம்

    பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 8 பேர் காயம் ஒருவர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி



  • Jan 16, 2024 08:45 IST
    3 காளைகளை அடக்கி 3 வீர்ரகள் முன்னிலை

    பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியின் முதல் சுற்று முடிவில் தலா 3 காளைகளை அடக்கி 3 வீர்ரகள் முன்னிலையில் உள்ளனர்



  • Jan 16, 2024 08:44 IST
    பாலமேடு ஜல்லிக்கட்டு - 2வது சுற்று

     பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் 2வது சுற்று தொடங்கியது. 2வது சுற்றில் நீல நிற சீருடையில் களமிறங்கியுள்ள வீரர்கள்.



  • Jan 16, 2024 08:09 IST
    முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்

    புழல் ஏரியில் நீர்இருப்பு 2874 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து 96 கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீர் வெளியேற்றம். சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 791 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து 16 கனஅடியாக உள்ளது.கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 496 மில்லியன் கனஅடியாக உள்ளது



  • Jan 16, 2024 08:05 IST
    மாட்டுப் பொங்கல் : சிறப்பு அபிஷேகம்

    மாட்டுப் பொங்கலையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள நந்திக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு, பூ, பழங்கள், இனிப்புகள், காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.



  • Jan 16, 2024 08:01 IST
    பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது

    பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது, உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக தொடங்கியது அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment