Advertisment

Tamil News Highlights: தமிழகத்தில் நாளை ரம்ஜான் கொண்டாட்டம்: அரசு தலைமை காஜி அறிவிப்பு

Tamil Nadu News Update Today- 9 April 2024- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ramzan

Tamil news live

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

  • Apr 09, 2024 21:47 IST
    ஆர்.எம்.வீ வீரப்பன் உடலுக்கு கமல்ஹாசன் அஞ்சலி

    ஆர்.எம்.வீ. உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு நடிகர் கமல்ஹாசன், “"எம்.ஜி.ஆரின் வலது கையாக வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து மறைந்தவர் ஆர்.எம்.வீரப்பன்" என புகழாரம் சூட்டினார்.

     



  • Apr 09, 2024 21:20 IST
    இந்தியாவின் அடுத்த பிரதமர் நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பார்; மு.க. ஸ்டாலின்

    இந்தியாவின் அடுத்த பிரதமர், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் பிரதமராக இருப்பார்; இடஒதுக்கீட்டுக்கு குரல் கொடுப்பார்.
    மேலும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு துணையாக இருப்பார். பிரதமர் நரேந்திர மோடி போல் இருக்க மாட்டார்" என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.



  • Apr 09, 2024 20:42 IST
    தமிழ்நாட்டில் ஏப்.11ஆம் தேதி ரமலான் பணடிகை; தலைமை காஜி அறிவிப்பு

    தலைமை காஜி சுல்தான் சலாஹுத்தீன் அய்யூப், “சென்னை மற்றும் பிற மாவட்டங்களிலும் பிறை தென்படாததால் நாளை மறுநாள் (ஏப். 11) ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.



  • Apr 09, 2024 20:39 IST
    டி.டி.வி தினகரன் நிறம் மாறுபவர்; எடப்பாடி பழனிசாமி

     

    தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பரப்புரை செய்தார்.
    அப்போது, “தேனி தொகுதியில் பல பேர் சவால் விட்டு வருகின்றனர்;
    ஒரிஜினல் அதிமுக வேட்பாளர் நாராயணசாமி தான். இரட்டை இலைக்கு துரோகம் செய்தவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள்.
    மக்கள் சேவையில் தொடர்ந்து செயல்படும் இயக்கம் அதிமுக. டிடிவி தினகரன் அடிக்கடி நிறம் மாறுபவர். பென்னிகுயிக்கிற்கு மணிமண்டபம் கட்டி அழகு பார்த்தவர் ஜெயலலிதா” என்றார்.



  • Apr 09, 2024 20:24 IST
    திருப்பரங்குன்றத்தில் விஜயகாந்த் மகன் பரப்புரை

    விருதுநகர் மக்களவை தொகுதியில் களம் காணும் விஜய பிரபாகரன் திருப்பரங்குன்றம் தொகுதியில் இன்று பரப்புரை செய்தார்.



  • Apr 09, 2024 19:49 IST
    ஆர்.எம். வீரப்பனை மறக்க முடியாது; ரஜினிகாந்த்

    ஆர்.எம்.வீரப்பன் எப்போதும் பணத்துக்கு பின்னால் போனதே இல்லை. அவரை  என் வாழ்நாளில் மறக்கவே முடியாது என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.



  • Apr 09, 2024 18:17 IST
    புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு காங். தலைவர் நாராயணசாமி சவால் 

    புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைப்பதை நான்தான் தடுக்கிறேன் என முதல்வர் ரங்கசாமி நிரூபித்தால் அரசியலைவிட்டு விலகுகிறேன் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி சவால் விடுத்துள்ளார்.



  • Apr 09, 2024 17:51 IST
    எம்.பி. பதவியை பயன்படுத்தி எனக்காக எதையும் செய்துகொள்ளவில்லை - திருமாவளவன்

    எம்.பி. பதவியை பயன்படுத்தி தனிப்பட்ட முறையில் எனக்காக எதையும் செய்துகொள்ளவில்லை என்று எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு சிதம்பரம் வி.சி.க வேட்பாளர் திருமாவளவன் பதில் அளித்துள்ளார்.



  • Apr 09, 2024 17:43 IST
    இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ரூ. 500-க்கு கேஸ் சிலிண்டர் - உதயநிதி பிரச்சாரம்

    சேலம் ஆத்தூரில் அமைச்சர் உதயநிதி பிரச்சாரம்: “இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ரூ. 500-க்கு கேஸ் சிலிண்டர் வழங்கப்படும். முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை பிற மாநிலங்களும் பின்பற்றுகின்றன; சேலம் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தால் 20 ஆயிரம் மாணவிகள் பயன்பெற்றுள்ளனர்” என்று  பேசினார்.



  • Apr 09, 2024 17:36 IST
    ஆர்.எம். வீரப்பன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி 

    அ.தி.முக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பனின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.



  • Apr 09, 2024 17:21 IST
    மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் உடல் நாளை தகனம்

    மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தி. நகரில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. இதையடுத்து,  ஆர்.எம்.வீரப்பன் உடல் நாளை (10.04.2024) சென்னை நுங்கம்பாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.



  • Apr 09, 2024 17:15 IST
    ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு பிரேமலதா விஜயகாந்த் இரங்கல்

    எம்.ஜி.ஆர். கழக நிறுவனர் ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.



  • Apr 09, 2024 17:12 IST
    ஊழலைப் பற்றி பேச தகுதி இல்லாத கட்சி பா.ஜ.க - பழனிவேல் தியாகராஜன் விமர்சனம்  

    மதுரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பரப்புரை: “ஊழலைப் பற்றி பேச தகுதி இல்லாத கட்சி பா.ஜ.க; PayTM என்பது போல PayPM என்ற திட்டத்தில் தேர்தல் பத்திரம் மூலம் பணம் செலுத்துகிறார்கள். தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தியது அ.தி.மு.க-தான்; 4 ஆண்டுகளாக அ.தி.மு.க ஆட்சியில் தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தி வைத்தனர்; தாலியும் வாங்கவில்லை, தங்கமும் வாங்கவில்லை” என்று பேசினார்.



  • Apr 09, 2024 16:39 IST
    ரூ 525 கோடி மோசடி - தேவநாதன் யாதவ் மீது இந்திய கம்யூனிஸ்ட் புகார்

    சென்னை மயிலாப்பூரில் உள்ள இந்து சாசுவத நிதி லிமிடட் நிறுவனத்தில் முதலீட்டாளர்களின் ரூ 525 கோடி மோசடி செய்துள்ளதாக எழுந்துள்ள புகாரால், அதன் தலைவராக உள்ள சிவகங்கை பா.ஜ.க கூட்டணி வேட்பாளர் தேவநாதன் யாதவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புகார் அளித்துள்ளது.



  • Apr 09, 2024 16:19 IST
    ஜோசியர்கள் அடுத்தடுத்து கைது

    தங்கர் பச்சானுக்கு ஜோசியம் பார்த்த செல்வராஜ் கைது செய்யப்பட்ட நிலையில் அதே பகுதியில் கிளி ஜோசியம் பார்த்த சீனுவாசன் என்பவரையும் வனத்துறையினர் கைது செய்துள்ளனர்



  • Apr 09, 2024 16:18 IST
    டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு - அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு தள்ளுபடி

    "டெல்லி மதுபானக் கொள்கை உருவாக்கத்தில் மனுதாரர் அரவிந்த் கெஜ்ரிவால் முக்கிய பங்காற்றியுள்ளார்; கெஜ்ரிவாலின் பங்கு இருப்பது, அமலாக்கத்துறை ஆதாரங்களில் இருந்து தெரியவருகிறது;

    காணொலியில் விசாரித்திருக்கலாம் என்ற வாதம் நிராகரிக்கப்படுகிறது; எப்படி விசாரிப்பதை குற்றம்சாட்டப்பட்ட நபர் முடிவு செய்ய முடியாது; முதலமைச்சர் என்பதால் தனிச்சலுகை அளிக்கை முடியாது" என்று டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார். 

    இந்நிலையில், டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. 



  • Apr 09, 2024 16:13 IST
    இ.பி.எஸ் விமர்சனத்திற்கு பதில்

    'பா.ம.க ஒவ்வொரு தேர்தலுக்கும் மாறும் கட்சி' மாறுவதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார். இந்நிலையில், “மக்களுக்கான அரசியல் களத்தில், அந்தந்த நேர அரசியல் என்பது ஒன்றுதான். மக்களுக்காக அரசியல் களத்தில் தலைமையேற்கவும் பாமக தயாராக உள்ளது” என்று எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு திண்டுக்கல் பா.ம.க வேட்பாளர் திலகபாமா பதிலளித்துள்ளார். 



  • Apr 09, 2024 15:37 IST
    பிரகலாத் ஜோஷிக்கு எதிராக களமிறங்கும் மடாதிபதி

    மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு எதிராக கர்நாடக மடாதிபதி தேர்தலில் களமிறங்குகிறார். மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியின் மோசமான நிர்வாகத்தால் வாக்காளர்கள் அவர் மீது கோபத்தில் உள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார். 



  • Apr 09, 2024 14:52 IST
    இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு

    அமலாக்கத்துறையின் கைதுக்கு எதிராக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீது, இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்குகிறது டெல்லி உயர்நீதிமன்றம்



  • Apr 09, 2024 14:52 IST
    வேட்பாளர்களுக்கு எச்சரிக்கை

    நெல்லை தொகுதி செலவின கணக்கு தாக்கல் செய்யாத வேட்பாளர்களுக்கு, கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

    இன்று மாலை 5 மணிக்குள் கணக்கை தாக்கல் செய்யாத நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - மாவட்ட தேர்தல் அதிகாரி



  • Apr 09, 2024 14:51 IST
    நயினார் நாகேந்திரனின் காரில் சோதனை

    அம்பை அருகே பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் பிரசார வாகனம், காரில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை



  • Apr 09, 2024 14:51 IST
    விவிபேடுகளை சரிபார்க்க கோரி மனு

    பதிவான வாக்குகளுடன் விவிபேடுகளை சரிபார்க்க கோரும் மனுக்கள் மீது ஏப்ரல் 16-ஆம் தேதி விசாரணை

    - உச்ச நீதிமன்றம்



  • Apr 09, 2024 14:49 IST
    ஆர்.எம்.வீரப்பன் (97) காலமானார்

    முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றிய ஆர்.எம்.வீரப்பன் (97) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.



  • Apr 09, 2024 14:48 IST
    கிளி ஜோசியம் பார்த்த மற்றொருவரும் கைது

    தங்கர் பச்சானுக்கு ஜோசியம் பார்த்த செல்வராஜ் கைது செய்யப்பட்ட நிலையில் அதே பகுதியில் கிளி ஜோசியம் பார்த்த சீனுவாசன் என்பவரையும் வனத்துறையினர் கைது செய்துள்ளனர்



  • Apr 09, 2024 14:27 IST
    எந்த கட்சியினரும் ஓட்டு கேட்டு வர வேண்டாம்

    திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே, மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள குழிப்பட்டி மலைக்கிராமத்தில் சாலை வசதி இல்லை என கூறப்படுகிறது

    இந்நிலையில் மலைவாழ் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்படவே, அவரை தொட்டிலில் கட்டி மக்கள் தூக்கி சென்றுள்ளனர்

    அதனை வீடியோவாக பதிவிட்ட மலைவாழ் மக்கள், சாலை வசதி செய்து தராததால் எந்த கட்சியினரும் ஓட்டு கேட்டு மலைவாழ் கிராமத்திற்கு வர வேண்டாம் என ஆவேசமாக தெரிவித்துள்ளனர்



  • Apr 09, 2024 13:57 IST
    சீமான் பரப்புரை

    100 நாள் வேலை திட்டத்தை கேரள அரசு நல்ல முறையில் பயன்படுத்துகிறது;

    சும்மா இருப்பதற்கு, சம்பளம் கொடுக்கும் நாடு வளராது

    - ஈரோடு மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்மேகனை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை



  • Apr 09, 2024 13:56 IST
    கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை

    மக்களவைத் தேர்தலையொட்டி ஏப்ரல் 18,19 ஆகிய தேதிகளில் கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை விடுவது என கோயம்பேடு சிறு மொத்த காய்கறி வியாபாரிகள் நல சங்கம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றம்



  • Apr 09, 2024 13:37 IST
    Z பிரிவு பாதுகாப்பு

    இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது

    உளவு அமைப்பினர் அளித்த தகவலை தொடர்ந்து மத்திய அரசு நடவடிக்கை



  • Apr 09, 2024 13:36 IST
    வெற்றி, தோல்வி பற்றி எனக்கு கவலை இல்லை- அன்புமணி ராமதாஸ்

    நான் ஓட்டுக்காக வரவில்லை, உங்களுடைய வாழ்க்கையை மேம்படுத்த வந்துள்ளேன்

    வெற்றி, தோல்வி பற்றி எனக்கு கவலை இல்லை

    இரண்டு கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்து கொண்டிருக்கின்றன

    பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில், 2 அரசு கலை கல்லூரிகளை கொண்டு வந்தது பாமக தான்

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்



  • Apr 09, 2024 13:35 IST
    கடலூரில் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்தவர் கைது

    கடலூர் தென்னம்பாக்கம் பகுதியில், 2 நாட்களுக்கு முன் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, தங்கர் பச்சான் கிளி ஜோசியம் பார்த்தார்

    கிளி ஜோசியத்தில், அழகுமுத்து அய்யனார் படம் வந்ததால், வெற்றி பெறுவீர்கள் என கூறிய கிளி ஜோசியக்காரர்

    தங்கர் பச்சான் கிளி ஜோசியம் பார்த்த வீடியோ வைரலான நிலையில், ஜோசியரை கைது செய்த வனத்துறை

    கிளியை கூண்டில் அடைத்து வைத்து ஜோசியம் பார்ப்பது சட்டப்படி குற்றம் - வனத்துறை



  • Apr 09, 2024 13:11 IST
    காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகள்

    உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அணி 21 தொகுதிகளில் போட்டி

    மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகள் ஒதுக்கீடு

    சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் அணி 10 தொகுதிகளில் போட்டி



  • Apr 09, 2024 13:11 IST
    விஷ்ணு பிரசாத் தேர்தல் பரப்புரை

    கடந்த 10 ஆண்டுகளில் மோடியின் ஆட்சியில் நம் நாடு எவ்வளவு சீரழிந்தது என்பது உங்களுக்கே தெரியும். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கதான் இந்தியா கூட்டணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டமைத்தார்

    கடலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளார் விஷ்ணு பிரசாத் தேர்தல் பரப்புரை



  • Apr 09, 2024 13:11 IST
    சீதாராம் யெச்சூரி பேச்சு

    பிரதமர் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போகிறார் என்றால் முதலில் அவர் கடந்த 10 ஆண்டுகளில் என்ன செய்தார்கள் என்பதை மக்களுக்குச் சொல்ல வேண்டும்

    -டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பேச்சு



  • Apr 09, 2024 13:11 IST
    ஜோதிமணியை ஆதரித்து அன்பில் மகேஷ் பரப்புரை

    படிப்புதான் முக்கியம் என்று சொன்னவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டுள்ள முதலமைச்சரின் திட்டங்களை எடுத்துக்கூறி திருச்சி மணப்பாறையில் கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பரப்புரை



  • Apr 09, 2024 12:58 IST
    துரும்பு அளவுகூட தவறு செய்யாத மோடி: ராமதாஸ் பிரச்சாரம்

    விழுப்புரம் தொகுதி பாமக வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பிரசாரம். துரும்பு அளவுகூட தவறு செய்யாத மோடி, பரிசுத்தமானவர், அன்பிற்கு இலக்கணமானவர் என்று புகழாரம். 



  • Apr 09, 2024 12:57 IST
    விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அரசிதழில் வெளியீடு

    விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி காலியானதாக அரசிதழில் வெளியீடு. விக்கிரவாண்டி தொகுதி காலியானது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது - சத்யபிரதா சாகு 



  • Apr 09, 2024 12:39 IST
    அமீரை மீண்டும் விசாரணைக்கு அழைத்த என்.சி.பி

    இயக்குனர் அமீரை மீண்டும் விசாரணைக்கு அழைத்த மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு

    2020ஆம் ஆண்டு முதல் 2023 வரை அமீர் பெயரில் வாங்கப்பட்டுள்ள சொத்துக்கள், வங்கி கணக்கு ஆவணங்கள் கேட்பு

     ஜாபர் சாதிக்குடன் தொழில் பார்ட்னராக இணைந்தது எப்படி? என்ற விவரங்களும் கேட்கப்பட்டுள்ளது

    பதிலளிக்க கால அவகாசம் கேட்டு என்சிபி அதிகாரிகளுக்கு அமீர் கடிதம்

    ஏற்கனவே 11 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், மீண்டும் விசாரணைக்கு அழைப்பு

    சென்னையில் ஜாபர் சாதிக் மற்றும் அமீருக்கு தொடர்புடைய 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது



  • Apr 09, 2024 12:26 IST
    சென்னையில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

    மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, சென்னையில் ஏப்ரல் 17, 18, 19 மற்றும் ஜூன் 4ம் தேதி என 4 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை -சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு



  • Apr 09, 2024 12:25 IST
    அன்புமணிக்கு இ.பி.எஸ் கேள்வி

    திராவிடக் கட்சிகளால் எந்தப் பயனும் இல்லையென்றால், அன்புமணி ஏன் மாறிமாறிக் கூட்டணி வைத்தார் என ஈபிஎஸ் கேள்வி. நிலையான கொள்கை இல்லாத கட்சி பாமக என்றும் சாடல்



  • Apr 09, 2024 12:24 IST
    சீமான் பரப்புரை

    ஒரு டன் எடையுள்ள கார் தயாரிக்க 4.5 லட்சம் லிட்டர் நீர் தேவைப்படுகிறது. வெளிநாட்டு நிறுவனங்கள், நம் நாட்டிற்கு கார் தயாரிக்க வருகின்றன. 

    நீர் மேலாண்மை திட்டத்தில் சீனா தெளிவாக உள்ளது. வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தடையற்ற மின்சாரம் உள்ளது, விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறதா?.

    விவசாயிகளுக்கு 2 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வழங்கப்படுகிறது. தண்ணீர் பயிரை சென்றடைவதற்குள் மின்சாரம் போய்விடும். தடையில்லா மின்சாரத்தை வழங்கிவிட்டு, இலவசம் பற்றி பேசுங்கள். தென்கொரிய நிறுவனங்கள் தெளிவாக இந்தியா வந்து ஆலைகளை தொடங்குகின்றன - நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்



  • Apr 09, 2024 12:23 IST
    மயிலை: ஒரு வாரமாக போக்கு காட்டி வரும் சிறுத்தை

    மயிலாடுதுறையில் ஒரு வாரமாக வனத்துறைக்கு போக்கு காட்டி வரும் சிறுத்தை. மயிலாடுதுறை மாவட்ட எல்லையான காஞ்சிவாய், பேராவூர் பகுதிகளில் சிறுத்தை தென்பட்டதாக தகவல்.

    தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு பணி தீவிரம். சிறுத்தை தென்படுவதாக கூறப்படும் பகுதிகளில் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை.



  • Apr 09, 2024 12:22 IST
    முரணான ஆவணங்கள்: ரூ.74.5 லட்சம் பறிமுதல்

    ராணிப்பேட்டையில் காரில் எடுத்து செல்லப்பட்ட ரூ.74.5 லட்சம் பறக்கும் படையினரால் பறிமுதல். ரூ.74.5 லட்சம் பணத்தை ரூ.1 கோடிக்கான ஆவணங்களுடன் எடுத்து சென்றதால் குழப்பம். 

    தனியார் ஏடிஎம்மில் நிரப்ப, இண்டிகா காரில் பணம் எடுத்து செல்லப்பட்டதாக தகவல். காரில் இருந்த பணத்தை விட, அதிக பணத்திற்கு ஆவணங்கள் இருந்ததால் பறிமுதல்.  



  • Apr 09, 2024 12:22 IST
    முரணான ஆவணங்கள்: ரூ.74.5 லட்சம் பறிமுதல்

    ராணிப்பேட்டையில் காரில் எடுத்து செல்லப்பட்ட ரூ.74.5 லட்சம் பறக்கும் படையினரால் பறிமுதல். ரூ.74.5 லட்சம் பணத்தை ரூ.1 கோடிக்கான ஆவணங்களுடன் எடுத்து சென்றதால் குழப்பம். 

    தனியார் ஏடிஎம்மில் நிரப்ப, இண்டிகா காரில் பணம் எடுத்து செல்லப்பட்டதாக தகவல். காரில் இருந்த பணத்தை விட, அதிக பணத்திற்கு ஆவணங்கள் இருந்ததால் பறிமுதல்.  



  • Apr 09, 2024 11:31 IST
    எழும்பூர்- நெல்லை: சிறப்பு ரயில் அறிவிப்பு

    கோடைக் கால விடுமுறையை ஒட்டி சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு வாராந்திர சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே.

    ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சென்னை எழும்பூரில் இருந்து வியாழக்கிழமைகளில் மாலை 6.45க்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 8.30க்கு திருநெல்வேலி சென்றடையும். 

    மறுமார்க்கத்தில் வெள்ளிக்கிழமைகளில் மதியம் 3 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 7 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

    எழும்பூரில் இருந்து விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர் வழியாக இந்த ரயில் நெல்லை சென்றடையும்.

     



  • Apr 09, 2024 10:45 IST
    விசிக தேர்தல் அறிக்கை வெளியீடு

    மக்களவை தேர்தலுக்கான விசிக தேர்தல் அறிக்கை வெளியீடு தேர்தல் அறிக்கையை விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டார் ஜனநாயகத்திற்கு எதிரான சனாதான சக்திகள் அகற்றப்படும். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தேர்தல் ஆணையர் நியமன திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு இலங்கை உடனான வெளியுறவு கொள்கையில் தமிழக நலன் பாதுகாக்கப்படும் . வி.சி.க. தேர்தல் அறிக்கை தேர்தல் ஆணையர் நியமன சட்டம் ரத்து உள்ளிட்ட வாக்குறுதிகளுடன் 62 பக்க தேர்தல் அறிக்கையை வெளியிட்ட வி.சி.க. 



  • Apr 09, 2024 10:44 IST
    மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

    ராமேஸ்வரம் மீனவர்களின் விசைப்படகை மோதி சேதப்படுத்திய இலங்கை கடற்படை இரும்பு கம்பியால் தாக்கியதில் நான்கு மீனவர்கள் படுகாயம் =அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தாக்குதல் காயமடைந்த மீனவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்தும், தாக்கியும் வருவதால் மீனவர்கள் வேதனை. 



  • Apr 09, 2024 10:12 IST
    நெல்லையில் 4 நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு

    பொள்ளாச்சியில் தனியார் கோழிப்பண்ணை அலுவலகம், உரிமையாளர்களின் வீடுகளில் 2வது நாளாக சோதனை . நெல்லையில் 4 நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு . சென்னை வண்ணாரப்பேட்டையில் 2 தொழிலதிபர்கள் வீட்டில் வருமான வரித்துறை சோதனை. 



  • Apr 09, 2024 09:27 IST
    "தமிழகத்தில் 35 இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்

    "திமுக ஒரு கார்பரேட் கம்பெனி, நான் தலைவன் அல்ல, தொண்டன்" "அதிமுகவில் ஒரு தொண்டன் தலைமை பதவிக்கு வர முடியும், திமுகவில் வர முடியுமா?" "தலைமை பதவிக்கு வாரிசாக வருவது தான் வாரிசு அரசியல்" "எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் என்று இருப்பது வாரிசு அரசியல் அல்ல" "மிக்ஜாம் புயல் முதற்கொண்டு அனைத்திலுமே பொய் சொல்லி வருகிறார் முதல்வர்" "நான் என்ன பொய் சொல்கிறேன் என்று அவர்கள் கூறட்டும், விளக்கம் அளிக்கிறேன்" "520 வாக்குறுதிகளில் 98 சதவீதம் நிறைவேற்றியதாக பொய் சொல்கிறார் முதல்வர்" "தமிழகத்தில் 35 இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்" - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி



  • Apr 09, 2024 09:26 IST
    சென்னை சேத்துப்பட்டில் உள்ள இயக்குனர் அமீர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

    தி.நகர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் சோதனையை தொடர்ந்து, சேத்துப்பட்டு முக்தார் கார்டனில் சோதனை முக்தார் கார்டன் இல்லத்தை 2 வருடங்களுக்கு முன் அமீர் வாங்கியதாக தகவல் வீடு பூட்டியிருந்ததால், 10 நிமிடங்கள் காத்திருந்து பிறகு சோதனையில் ஈடுபட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை 7 மணி முதல் சென்னை முழுவதும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை ரூ.2000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கைதான நிலையில், அமலாக்கத்துறை சோதனை



  • Apr 09, 2024 08:50 IST
    சென்னையில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

    சென்னையில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை ஜாபர் சாதிக் தொடர்புடைய போதைப்பொருள் வழக்கில் அதிரடி சோதனை கொடுங்கையூர், நீலாங்கரை உள்ளிட்ட பகுதிகளிலும் சோதனை



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment