பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில், அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சித்திரை மாதம் முதல் நாள் தமிழ் புத்தாண்டாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் தமிழ் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். “ தமிழ் கலாச்சாரத்தின் துடிப்பான மரபுகள் மற்றும் ஆழமான பாரம்பரியத்தின் வெளிப்பாடாக திகழும் புத்தாண்டு வாழ்த்துகள். வரும் ஆண்டு அமைதி, ஆரோக்கியம் மற்றும் செழிப்பைக் கொண்டு வரட்டும். இந்த ஆண்டு அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, வெற்றி மற்றும் நிறைவைக் கொண்டு வரட்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.