தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை நடத்த இன்று தொடங்கிய அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இபிஎஸ், ஒபிஎஸ் ஆதரவாளர்கள் கோஷத்தால் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த 16-வது சட்டமன்ற தேர்தலில் ஹாட்ரிக் வெற்றியை நோக்கி களமிறங்கிய அதிமுக பெரும் அதிர்ச்சியாக படுதோல்வியை சந்திக்க நேர்ந்த்து. இதில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 159 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்துள்ள நிலையில், அதிமுக கூட்டணி 75 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதில் அதிமுக தனித்து 66 இடங்களில் வெற்றி வாகை சூடியுள்ளது.
இந்த வெற்றியில் ஒபிஎஸ் தலைமையிலான தமிழகத்தில் தென் மாவட்ட தொகுதிகளில் அதிமுக படுதோல்வியை சந்தித்த நிலையில், இபிஎஸ் தலைமையிலான கொங்கு மண்டலங்களில் அதிமக குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த தேர்தலில் தோல்வி அடைந்த்தர்கான காரணம் குறித்து ஆலோசனை நடத்த இன்று மாலை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த கூட்டத்திற்கான அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் தொண்டர்கள் முழுவீச்சில் தயாராகி வந்தனர். மேலும் இந்த ஆலோசனை அதிமுக கொறாடா தேர்வு நடைபெறுவதாக இருந்தது. மேலும் எதிர்கட்சி தலைவர் தேர்வும் நடைபெற இருந்தது. ஆனால் எதிர்கட்சி தலைவர் பதவிக்கு இபிஎஸ் ஒபிஎஸ் இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், தற்போது அதிமுக கூட்டம் தொடங்கிய உடனே இபிஎஸ் மற்றும் ஒபிஎஸ் ஆதரவாளர்கள் தங்கள் தலைவருக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
கட்சியில் ஒற்றை தலைமை வேண்டும் என்று இபிஎஸ் ஒபிஎஸ் ஆதரவாளகர்கள் கோஷங்கள் எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அதிமுக தலைமையில் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், எதிர்கட்சி தலைவர் யார் என்பதை திங்கள் கிழமை (மே 10) அன்று முடிவு செய்யப்படும் என்று அதிமுக தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil