டிடிவி கட்சியை போட்டி போட்டு உடைக்கிறாங்க… 3 மா.செ.க்கள் அதிமுகவில் ஐக்கியம்!

Tamil News Update : அமமுக கட்சியை சேர்ந்த 3 மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளனர்.

Ammk Administrators To Join Admk : கடந்த சில வாரங்களாக டிடிவி தினகரனின் அமமுக கட்சியில் இருந்து நிர்வாகிகள் வெளியேறும் படலம் தொடர்ந்து வரும் நிலையில், இன்று மேலும் 3 மாவட்ட செயலாளர்கள் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளனர்.

அதிமுகவில் இருந்து விலகிய டிடிவி தினகரன் கடந்த 2018-ம் ஆண்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கினார். இதனையடுத்து அதிமுகவில் இருந்து குறிப்பிட்ட சில நிர்வாகிகள் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அக்கட்சியில் இணைந்தனர். இதனைத் தொடாந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியியான ஆர்கே நகரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட டிடிவி தினகரன் வெற்றி பெற்று எம்எல்ஏவானார்.

இதனையடுத்து நாடாளும்ன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட அமமுக அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவிய நிலையில், தேமுதிக கூட்டணியுடன் கடந்த சட்டமன்ற தேர்தலில் களமிறங்கியது. ஆனால் இந்த தேர்தலிலும் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும்  அமமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தோல்வியை தழுவியது. இதனால் அதிப்தியடைந்த அமமுக நிர்வாகளில் கடந்த சில வாரங்களாக கட்சியில் இருந்து வெளியேறி வருகின்றனர்.

இதில் கடந்த வாரம் முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்களான ஜெயந்தி பத்மநாபன், மாரியப்பன் கென்னடி ஆகிய 2 பேர் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த நிலையில், தற்போது மேலும் 3 அமமுக மாவட்ட செயலாளர்கள் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். தற்போது தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்தில் தங்கியுள்ள எடப்பாடி பழனிச்சாமியை, மத்திய சென்னை மத்திய அமமுக மாவட்டச் செயலாளர் சந்தானகிருஷ்ணன், வடசென்னை மத்திய மாவட்டச் செயலாளர் லட்சுமி நாராயணன் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அமமுக செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான பொன். ராஜா,ஆகியோர் சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பின்போது அவர்கள் மூவரும், எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில், அதிமுகவில் இணைந்தனர். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர்கள், “எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் கொள்கைக்கு எதிராக செயல்படும் அமமுகவுக்கு மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் செல்வாக்கு குறைந்துவருகிறது;  தலைமை சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாக உள்ளதால் தற்போது மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளோம். மேலும் மாவட்டச் செயலாளர்கள், மாநில மாவட்ட நிர்வாகிகள் என பலரும், விரைவில் தாய்க் கழகமான அதிமுகவில் தங்களை இணைத்துக் கொள்வார்கள். அதற்கான பணிகளை நாங்கள் செய்வோம்” என்று கூறியுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil news ammk party three administrators to rejoin admk

Next Story
மதுரை குழந்தைகள் கடத்தல் விவகாரத்தில் 2 குழந்தைகள் மீட்பு; காப்பக உரிமையாளருக்கு போலீஸ் வலை வீச்சுTamil Nadu news in tamil: Madurai child trafficking case; Police rescue two children
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X