பழைய போட்டோ வைத்து விமர்சனம் : நெட்டிசன்களிடம் சிக்கிய பாஜக பிரமுகர்

Tamil News Update : திமுக அரசின் புதிய திட்டம் என்று கூறி புகைப்படத்தை ரீட்விட் செய்த பாஜக பிரமுகர் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

Tamilnadu News Update : திமுக அரசின் புதிய திட்டம் என்று கூறி பழைய புகைப்படத்தை ஷேர் செய்த பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி தற்போது நெட்டிசன்களின் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்வி சேகர் நேற்று முன்தினம் தனது ட்விட்டர் பதிவில், ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில், சாலையில் மழைநீரால் நிரம்பிய ஒரு பள்ளத்தில் அம்பாசிட்டர் கார் ஒன்று கவிழ்ந்துள்ளது. இது தொடர்பாக பதிவிட்ட எஸ்வி சேகர் வாகனங்களின் என்ஜின் சூடு குறைப்பதற்கு சாலைகளில் ஆங்காங்கே வசதி, பொதுமக்கள் பயன்படுத்துமாறு நெடுஞ்சாலை துறையினரால் கேட்கப்படுகிறது என்று எஸ். வி சேகர் கிண்டலாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகைப்படம் வேகமாக பரவிய நிலையில், இதனை பார்த்த மற்றொரு பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி, தற்போதைய தமிழக அரசை விமர்சிக்கும் வகையில், திமுக அரசின் புதிய திட்டம் என்று கூறி ரீட்விட் செய்திருந்தார். ஆனால் இந்த புகைப்படம் கடந்த 2017-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று கண்டுபிடித்த நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.  மேலும் ஏன் இப்படி வேண்டுமென்றே தவறான தகவலை பரப்புகிறீர்கள் என்று கடுமையான கேள்விக்கனைகளை தொடுத்து வருகின்றனர்.

இது 4 வருடத்திற்கும் முன் எடுக்கப்பட்ட புகைப்படம். இதை தேவையின்றி பரப்பி வருகிறார்கள். உண்மையான படம் மும்பையில் எடுக்கப்பட்டது என்றும், இந்த புகைப்படம் எடுக்கப்பட்ட 2017-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வந்தது என்றும் ஆதாரத்துடன் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil news bjp narayanan tirupathy shared old photo

Next Story
முதல்வர் தனிப்பிரிவுக்கு திடீரென வந்த மு.க ஸ்டாலின்; பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்!cm mk stalin, cm mk stalin visits cm cell, முதலமைச்சர் முக ஸ்டாலின், முதல்வர் தனிப்பிரிவு, திமுக, tamil nadu, chennai, mk stalin, dmk
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express

X