பரபரப்பு வீடியோ : மது போதையில் போலீசாரை திட்டிய இளம்பெண்!

மொபைல் போனில் பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் தற்போது வெளியாகியுள்ளன.

tamil news chennai girl vulgar speech to chennai traffic police
tamil news chennai girl vulgar speech to chennai traffic police

tamil news chennai girl vulgar speech to chennai traffic police : சென்னையில் இளம்பெண் ஒருவர் குடிபோதையில் காவலர்களை ஒருகாமையில் திட்டி தகராறில் ஈடிப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

குடிபோதையில் வாகனத்தை ஓட்டி வந்ததற்காக இளைஞர் மீதும் இளம் பெண் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர். மேலும் விசாரணையில் வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர் அடையாறு பகுதியைச் சேர்ந்த 27 வயதான டோட்லா சேஷூ பிரசாத் என்பதும் உடன் வந்த இளம்பெண் அடையாறு பகுதியை சேர்ந்த காமினி என்பதும் தெரியவந்தது. மேலும் இளைஞர் மற்றும் அந்த இளம்பெண்ணின் உறவினர்களுக்கு கால் செய்து அவர்களை அழைத்துச் செல்லும்படி போலீசார் கூறியுள்ளனர்.

போக்குவரத்து போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து அவர்களை மிகவும் அருவருக்கத்தக்க வகையில் ஆபாசமாக பேசிய இளம்பெண் காமினி மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்து போலீசார் திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் போக்குவரத்து போலீசார் பணி நேரத்தில் தங்களது உடலில் பொருத்தப்பட்டிருந்த பாடி ஒன்(Body one) கேமரா மற்றும் மொபைல் போனில் பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் தற்போது வெளியாகியுள்ளன.

வீடியோவில் அந்தப் பெண் அளவுக்கு அதிகமான மது போதையில் தான் மீடியாவில் பணிபுரியும் பண் என்று, போலீசாரை ஒருமையில் பேசியும், மேலும் அருவருக்கத்தக்க வகையில் ஆபாசமாக பேசியும் போலீசாரை தாக்க முற்படுவது பதிவாகியுள்ளது. இந்தக் காட்சி பதிவுகளை வைத்து இளம்பெண் காமினி மீது ஆபாசமாக திட்டுதல், அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த திருவான்மியூர் போலீசார் காமினியிடம் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து போக்குவரத்துக்கு ஆய்வாளர் மாரியப்பனை ஆபாச வார்த்தையால் திட்டி, அவரை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கில் மதுபோதையில் கார் ஓட்டிய டோட்லா சச்சின் பிரசாத், காமினி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். காமினி திரைப்படத்துறையில் உதவி இயக்குநராக பணியாற்றி வருவதாகவும், டோட்லா சச்சின் பிரசாத் சாப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil news chennai girl vulgar speech to chennai traffic police video

Next Story
Tamil News Highlights : பேருந்துகளில் 100% இருக்கைகளில் பயணிக்க அனுமதி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com