Tamil News: நட்சத்திர ஓட்டல்களான ஐ.டி.சி கிராண்ட் சோழா மற்றும் லீலா பேலஸ் ஆகியவற்றில் சென்னை கார்ப்பரேஷன் அதிகாரிகள் கோவிட் -19 சோதனை நடத்தினார்கள். அங்கு வேலை செய்யும் சமையல்காரர்கள் பணியாளர்கள், பாதுகாப்பாளர்கள் என மொத்தம் 320 நபர்களின் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அதில் 20 நபர்களுக்கு கொரோனா (பாசிட்டிவ்) உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜனவரி 10ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ள செய்யது முஸ்டாக் அலி கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கும் வீரர்கள் மற்றும் நடுவர்கள் இங்கு தங்கியுள்ளனர் . இவர்கள் டிசம்பர் 25 -ம் தேதி முதல் இங்கு தனிமைப்படுத்தி வைக்கப்பட்டும் உள்ளனர். இந்த இரு நட்சத்திர ஓட்டல்களிலும் தொற்று உறுதி செய்யப்பட்டதால், பி.சி.சி.ஐ மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம், வீரர்கள் மற்றும் நடுவர்களை மிக உன்னிப்பாக கண்காணித்து வருகின்றது.
இந்த இரு ஓட்டல்களிலும் சேர்த்து மொத்தம் 80 நபர்கள் உள்ளனர். அதில் 60 நபர்கள் மணிப்பூர், மேகாலயா மற்றும் மிசோரம் ஆகிய மூன்று மாநிலத்தை சேர்ந்த வீரர்கள். இவர்களுக்கு உணவு தயாரிப்பதற்கென தனி குழு ஒன்றும், கண்காணிக்க மருத்துவ குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. மற்றும் வீரர்களுக்கென கொரோனா தடுப்பு உயிர் பாதுகாப்பு நடைமுறை ஏற்பாடு செய்யப்பட்டடுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"