தமிழகத்தின் தென் பகுதியான விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சன்குளத்தில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலையில் தொழிலாளர்கள் அறைகளில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பட்டாசுகளுக்கு மருந்து செலுத்தும்பணியின்போது உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த அறையில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியது.
இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள அங்கும் இங்குமாக ஓடினர். இதில் 11 தொழிலாளர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 34 பேர் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி 4 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணைக்கை 15 ஆக உயர்ந்து உள்ளது. வெடிவிபத்து தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் உள்பட 3பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக அரசியல் தலைவர்கள் பலர் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தின் விருதுநகர் தீவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ 2 லட்சம் கருணைத் தொகை வழங்க ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது. தீவிர காயமடைந்தவர்களுக்கு ரூ 50, 000 வழங்கப்படும்.
— PMO India (@PMOIndia) February 12, 2021
விருதுநகர்- அச்சன்குளத்தில் பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் 11 பேர் உயிரிழந்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன்.
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1லட்சமும் வழங்க உத்தரவிட்டுள்ளேன். pic.twitter.com/x5Auj5h2q4
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) February 12, 2021
சாத்தூர் - அச்சங்குளம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பள்ளி மாணவி உட்பட 11 பேர் பலியான செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். ஆழ்ந்த இரங்கல்!
இதுபோன்ற விபத்துகள் @CMOTamilNadu-வின் ஆட்சியில் சாதாரணமாகி விட்டது!
உயிரிழப்புக்கு போதிய நிவாரணமும், விபத்துகள் தொடராமல் தடுப்பதும் அவசியம்!
— M.K.Stalin (@mkstalin) February 12, 2021
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். pic.twitter.com/4hlV53xp51
— Vijayakant (@iVijayakant) February 12, 2021
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சன்குளம் பட்டாசு ஆலை விபத்தில் 12 பேர் பலியாகி இருக்கும் நிகழ்வு பெரும் வேதனையளிக்கிறது. உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். (1/3)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) February 12, 2021
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள அச்சன்குளம் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 11 பேர் உயிரிழந்து விட்டதாகவும், 35 க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர் எனவும் வெளிவந்த செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெரும் மனவேதனையும் அடைந்தேன்.
(1/3) pic.twitter.com/dusSbMcivE
— சீமான் (@SeemanOfficial) February 12, 2021
Heartfelt condolences to the victims of the firecracker factory fire in Virudhunagar, Tamil Nadu.
It’s heart wrenching to think of those still trapped inside.
I appeal to the state government to provide immediate rescue, support & relief.
— Rahul Gandhi (@RahulGandhi) February 12, 2021
இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டவிட்டர் பதிவில், தமிழ்நாடு விருதுநகரில் பட்டாசு தொழிற்சாலை தீ விபத்தில் பலியானவர்களுக்கு ஆழ்நத இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விபத்தில், இன்னும் உள்ளே சிக்கியிருப்பவர்களைப் பற்றி நினைப்பது மனம் வருந்துகிறேன். உடனடியாக மீட்பு, ஆதரவு மற்றும் நிவாரணம் வழங்க மாநில அரசிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன் என பதிவிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.