ஹரி நாடாரை தட்டித் தூக்கிய கர்நாடக போலீஸ்: 4 கிலோ தங்கம், ரூ8 லட்சம் பறிமுதல்

Hari Nadar Arrested : தொழிலதிபர்களிடம் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு்ளள ஹரி நாடார் குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் நடமாடும் நகைக்கடை என்ற அடையாளத்தை பெற்ற ஹரி நாடார், குறைந்த வட்டி விகிதத்தில் 360 கோடி தொழில் வாங்கி தருவதாக கூறி தொழிலதிபர் ஒருவரிடம், 7.2 கோடி மோசடி செய்ததாக மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹரி கோபாலகிருஷ்ணா நாடார் என்று பெயர்கொண்ட இவர், தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தை செர்ந்தவர். இவருடைய உதவியாளர்கள், பெரும் தொழிலதிபர்களை குறி வைத்து, குறைந்த வட்டி விகிதத்தில் தொழில் கடன் வாங்கி தருவதாக கூறுவார்கள். இதற்கு தொழிலதிபர்கள் சம்மதம் தெரிவித்த உடன், ஹரி நாடார் ஒரு நிதி நிறுவனத்தின் உரிமையாளராக நடித்து அந்த தொழிலதிபரை ஒரு நட்சத்திர ஹோட்டலில் சந்தித்து பேசுவார்.

இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, ஹரி நாடார் அந்த தொழிலதிபருக்கு கடன் கடன் கொடுப்பதாக உறுதியளிப்பார். தொடர்ந்து இந்த கடன் தொகைக்கு சேவை மற்றும் கமிஷன் கட்டணமாக ஒரு குறிப்பிட்ட தொகை தொழிலதிபரிடம் இருந்து பெற்றுக்கொள்வ்வார்கள் என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதே முறையை பயன்படுத்தி பெங்களூரைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரை ஹரி நாடார் மற்றும் அவரது உதவியாளர்கள் அணுகி, அவருடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளனர். இதன் முடிவில் ஹரி நாடார், அந்த தொழிலதிபருக்கு ரூ 360 கோடி கடன் கொடுப்பதாக கூறி, ஒரு போலி டிடியை வழங்கியுள்ளார். மேலும் இந்த கடன் தொகைக்கு சேவை கட்டணமாக ரூ7.2 கோடியை செலுத்தும்படி கட்டாயப்படுத்தினார். இந்த தொகை வங்கி பரிமாற்றம், பணம் மற்றும் தங்கம் மூலம் தவணைகளில் செலுத்தப்பட்டது.

ஆனால் பல நாட்கள் ஆகியும் தனக்கு கடன் வழங்கப்படாததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தொழிலதிபர் ஹரி நாடாரை தேடிச்சென்றுள்ளார். ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் இவருக்கு கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து தொழிலதிபர் தான் ஏமாற்றப்பட்ட விபரம் குறித்து  கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கபன் பார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் ஹரி, நாடார் மற்றும் அவரது ஆறு உதவியாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு பின்னர் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து கடந்த , ஏப்ரல் 7 ஆம் தேதி ஹரி நாடரின் கூட்டாளிகளில் ஒருவரான ரஞ்சித் பனிகரை காவல்துறையினர் கைது செய்தார். அவரிடமிருந்து 10 லட்சம் மதிப்புள்ள தங்க மதிப்புமிக்க பொருட்களையும், 96,000 ரொக்கப்பணம் மற்றும் வங்கி கணக்கில் டெப்பாசிட் செய்யப்பட்ட 38.8 லட்சம் ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து மே 4 ம் தேதி (நேற்று முன்தினம்) கேரளாவில் பதுங்கியிருந்த நாடாரை போலீசார் கைது செய்தனபு.

அவரிடமிருந்து 3,893 கிராம் தங்க மதிப்புமிக்க 2 கோடி ரூபாய் மற்றும் 7 8.7 லட்சம் பணத்தை மீட்டனர். மேலும் இவர் தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் பல தொழிலதிபர்களை ஏமாற்றியுள்ளதாக  இதுவரை விசாரணையில் தெரியவந்துள்ளது. கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மற்றும் குஜராத். “நாங்கள் அவருடைய வங்கி கணக்கு பரிவர்த்தனைகளை சரிபார்க்கிறோம். அவரது நெட்வொர்க் மற்றும் பயனாளிகளை விசாரிக்கிறோம்” என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil news hari nadar arrested for dupied businessman in bangalore

Next Story
கே.என்.நேரு, எ.வ.வேலு, பொன்முடி, அன்பில் மகேஷ்… யார் யாருக்கு முக்கிய இலாகா?ministers list, mk stalin, important departments, kn nehru, ev velu, ponmudi, anbil mahesh, senthil balaji, அமைச்சர்கள் பட்டியல், கேஎன் நேரு, எவ வேலு, பொன்முடி, அன்பில் மகேஷ் முக்கிய இலாக்காக்கள், திமுக, dmk, important portfolios,
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com