புத்துணர்வு முகாமில் யானை மீது தாக்குதல் : பாகன்கள் இருவர் பணி இடைநீக்கம்

Elephant Attack : கோயம்புத்தூர் தேக்கம்பட்டியில் நடைபெற்று வரும் யானைகள் முகாமில் ஒரு யானை பாகன்களால் தாக்கப்பட்ட சம்பவம் வைலாகி வருகிறது.

Elephant Attack In Refreshment Camp : ஆண்டுதோறும் ஜனவரி மாதங்களில் கோவை மாவட்டம் தேக்கம் பட்டியில் யானைகள் நல்வாழ்வு முகாம் நடத்தப்படுவது வழக்கம் கடந்த 2003-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் இந்த முகாம் கடந்த 8-ந் தேதி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் தொடங்கியது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து வரும் யானைகளுக்கு இந்த முகாமில் நன்றாக உணவு கொடுத்தல், உடற்பயிற்சி மேற்கொள்ளுதல், நடைப்பயிற்சி ஆகியவை சிறந்த முறையில் அளிக்கப்பட்டு வருகிறது.

யானைகளை நன்றாக பராமரிக்கும் இந்த முகாமில் அவ்வப்போது யானைகளை துன்புறுத்தும்நிகழ்வும் நடத்தப்ப்படுவதுண்டு. அந்த வகையில்,  இந்த புத்துணர்வு முகாமில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் யானை ஜெயமல்யதாவை இரண்டு பாகன்கள் கடுமையாக தாக்கும் காட்சி வெளியாகியுள்ள நிலையில், இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் யானையை சங்கிலியால் கட்டி இரண்டு பாகன்கள் யானையின் பின் கால்களில் சரமாரியாக தாக்குகின்றனர்.

இதில் யானை வலியால் பிளிறிய சத்தம் மனதை சோகத்தில் ஆழ்த்துகிறது.  இதுகுறித்து பாகன்களிடம் விசாரித்தபோது,  நாங்கள் இந்த யானையை குழந்தை போன்று வளர்க்கிறோம். சொல் பேச்சை கேட்டாகததால், இப்படி அடிக்க நேர்ந்தது என்று கூறியதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன. எப்படி இருந்தாலும் அவர்கள் தாக்கியது மிகவும் கொடூரமாக இருந்தது. அதனால் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் சார்பில் வலைதளங்களில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிரடி நடவடிக்கை எடுத்துள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் நிர்வாகம்  யானையை தாக்கிய பாகன் வினில் குமார் மற்றும் பாகனுக்கு உதவியாக இருந்த சிவபிராகசம்  ஆகிய இருவரும், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil news in coimbatore elephant attack in refreshment camp

Next Story
பாலியல் தொல்லையால் ஆத்திரம்: கணவரை விஷம் வைத்துக் கொன்ற கர்ப்பிணி மனைவி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com