Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.110. 85 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 100.94 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
வங்கக் கடலில் உருவாகிறது புயல்!
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை நாளை புயலாக வலுப்பெறும். இது ஆந்திரா- ஒடிசா இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
IPL 2022: மும்பை அணி திரில் வெற்றி!
ஐ.பி.எல் போட்டியில் நேற்று, குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. முதலில் ஆடிய மும்பை அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. 178 ரன்கள் இலக்குடன் ஆடிய குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 172 ரன்கள் மட்டுமே எடுத்து , வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
Tamil Nadu news live update
சமையல் எரிவாயு விலை உயர்ந்தது!
வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு விலை ரூ. 50 உயர்ந்து ரூ.1,015க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் ரூ. 50 அதிகரித்த நிலையில் மீண்டும் விலை உயர்வு சாமானிய மக்களை துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
விக்னேஷ் கொலை.. 2 காவலர்கள் கைது!
சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் கொலை வழக்கில், தலைமை செயலக காலனி நிலைய எழுத்தர் முனாஃப், காவலர் பவுன்ராஜ் ஆகியோரை சிபிசிஐடி போலீஸ் கைது செய்தது.
இலங்கையில் அவசரகால சட்டம் அமல்!
இலங்கையில் வெள்ளிக்கிழமை இரவு நள்ளிரவு முதல் அவசரகால சட்டம் அமல்படுத்தி, அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். பொருளாதார நெருக்கடியை கண்டித்து தொடரும் மக்கள் போராட்டத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
திமுகவின் ஓயாத உழைப்பின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நாளை முதல் மே 22 வரை நடைபெறும். முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆத்தூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். 234 தொகுதிகளிலும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றுகின்றனர் என திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர்கள் அறிவித்துள்ளனர்
தருமபுரம் பட்டினப் பிரவேச விவகாரத்தில் கோரிக்கைகளை ஆவன செய்வேன் என முதல்வர் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சுமுகமான முடிவு எட்டப்படும் என்று நம்புகிறோம் என முதல்வர் உடனான சந்திப்பிற்கு பின் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தெரிவித்துள்ளார்
திமுக அரசின் ஓராண்டு நிறைவை ஒட்டி வாழ்த்து தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்
சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் மரண வழக்கில் கைதான 6 காவலர்களும் நீதிபதி பரமசிவம் முன் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்
ஐபிஎல் போட்டிகளின் இன்றைய ஆட்டத்தில், பஞ்சாப் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வீழ்த்தியது. 190 ரன்கள் இலக்கை 19.4 ஓவர்களில் கடந்து ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது
நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 2 மற்றும் 5 ஆவது யூனிட்களில் மொத்தமாக 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது
ஆளுநரோ, அரசியல் தலைமைகளோ வெறுப்புணர்வை விதைக்கும் பேச்சுகளை கைவிட்டு, தமிழகத்தை அமைதிப் பூமியாக வாழவிடுங்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் அதிகாரத்திற்கு வருபவர்கள், மக்களுக்கு எதிராகவே செயல்படுவது வேதனைக்குரியது என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்
ஆளுநர் ஆர்.என்.ரவி வைத்த குற்றச்சாட்டு அபாயகரமானது. தன்னுடைய பேச்சை ஆளுநர் திரும்பப் பெற வேண்டும் என பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தின் தலைவர் முகமது ஷேக் அன்சாரி தெரிவித்துள்ளார்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது குடும்பத்தினருடன் சந்தித்தார். நேற்று ரஹ்மானின் மகளின் திருமணம் முடிந்த நிலையில், இன்று முதல்வரைச் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர்
சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்துவதில் பாஜக அரசு படுதோல்வி அடைந்துள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப வேட்டைக்கு உதவ, பாஜக அரசு மக்களுக்கு துரோகம் இழைக்கிறது என சிபிஐ கட்சியின் முத்தரசன் தெரிவித்துள்ளார்
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சட்ட சிக்கல் குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது என நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்
சென்னை, தூத்துக்குடி, நாகப்பட்டினம், பாம்பன் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தெற்கு அந்தமானில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சென்னை, மெரினா கடற்கரையில் 'திராவிட மாடல்' என்ற தலைப்பில் அமைக்கப்பட்டுள்ள மணற்சிற்பத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த மணற்சிற்பம் பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது
பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா இயக்கம் குறித்து ஆளுநர் தெரிவித்த கருத்துகள் அதிர்ச்சி அளிக்கின்றன. இது நாகாலாந்து அல்ல. ஆரியத்தை எதிர்த்துப் போர் செய்து வென்ற வீரம் செறிந்த தமிழ்நாடு என்பதை நினைவூட்டுகிறோம் என சீமான் தெரிவித்துள்ளார்
ஐபிஎல் போட்டிகளின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணிக்கு 190 ரன்களை பஞ்சாப் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் சேர்த்துள்ளது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக ஜானி பேர்ஸ்டோவ் – 56, ஜித்தேஷ் – 38 ரன்கள் எடுத்தனர்
தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்
செங்கல்பட்டு, தனியார் மருத்துவக் கல்லூரியில் மேலும் 42 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்ட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 72ஆக உயர்ந்துள்ளதாக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த வழக்கில் காவலர் குமார், ஊர்க்காவல் படை வீரர் தீபக், ஆயுதப்படை காவலர்கள் 2 பேர் என பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே 2 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால் தற்போது கைது செய்யப்பட்டுள்ள காவலர்களின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது. இவர்கள் அனைவரும் எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் 6 காவலர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை நீட்டிப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்
அதிகார அத்துமீறலுக்கு எதிரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உறுதி, பிற மாநில மக்களையும் எழுச்சி கொள்ள செய்துள்ளது. பழைய ஓய்வூதிய திட்டம் போன்ற தொழிலாளர் நலன் நடவடிக்கைகளிலும் திமுக அரசு சாதனை படைக்கும் என்ற நம்பிக்கை இழையோடி நிற்கிறது. மக்கள் ஆதரவு அடித்தளத்தில் அமைந்துள்ள அரசு பல்லாண்டு தொடர்ந்திட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
உழைத்தால் வாய்ப்பு கிடைக்கும்; இல்லையெனில், பல வருட அனுபவங்களை மட்டும் வைத்து வாய்ப்பு வழங்கப்படாது. கள நிலவரத்தின்படி மட்டுமே வாய்ப்புகள் வழங்கப்படும் என தெலங்கானா காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியுள்ளார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ராமநத்ததில் மருந்தகத்தில் கருக்கலைப்பு செய்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் மரணமடைந்துள்ளார்.
நீதிமன்ற தீர்ப்புகள் மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் தலைமையும், அதிகாரிகளும் சரியாக அமையவில்லை என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்
கவுஹாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுதான்ஷு தூலியா குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.பர்திவாலா உள்ளிட்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கொலீஜியம் பரிந்துரையை ஏற்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
முதுநிலை நீட் தேர்வு ஜூலை 9ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரவும் தகவல் போலியானது என்றும் முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான வேலை நேரத்தை மாற்ற பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ள நிலையில்,காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளதால் நேரத்தை மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெற்கு அந்தமானில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். நாளை புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிசாவில் கரையை கடக்கக்கூடும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
பிரபல கன்னட நடிகர் மோகன் ஜுனேஜா உடல்நல குறைவால் காலமானார். சுமார் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர் சமீபத்தில் வெளியான கே.ஜி.எஃப் – 2 ல் நடித்திருந்தார்.
திமுக அரசின் ஓராண்டு சாதனைகளை வரவேற்று வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி . பதவியை பொறுப்பாக பார்க்க வேண்டும் என கருணாநிதி கூறியுள்ளார் . உங்களில் ஒருவனாக இருந்து கடமையாற்றுவேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் நேரில் ஆறுதல். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ25 ஆயிரம் நிவாரணம் வழங்கினார்.
10 ஆண்டு சாதனைகளை ஓரே ஆண்டில் திமுக அரசு நிகழ்த்தி காட்டியுள்ளது. தலை நிமிர்ந்த தமிழகமாக மாற்றுகிற முயற்சியில் வெற்றி பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வாழ்த்துகிறேன் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
பாஜக அரசின் முகவராக ஆர்எஸ்எஸ், சங் பரிவாரங்களின் குரலை ஆளுநர் எதிரொலிக்கிறார். மாநிலத்தின் ஆளுநர் என்பவர் எந்த தத்துவத்தின் சாயலும் தம் மீது பட இடம் தரக்கூடாது. பொறுப்பு வாய்ந்த ஆளுநர் சிறுபான்மை அமைப்பின் மீது வலிந்து குற்றஞ்சாட்டுவது பதவிக்கு அழகல்ல என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
தாய்மொழியை ஊக்கப்படுத்த வேண்டும். தாய் மொழியை கற்று இன்னொரு மொழியை கற்று கொள்ளுங்கள். ஆங்கிலம் கலக்காத தமிழைப் பேசி பழகுவது நல்லது என ஆளுநர் தமிழிசை செளந்தராஜன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் ஷவர்மா, கோழிக்கறி விற்பனை கடை உள்ளிட்ட 47 கடைகளிலிருந்து கெட்டுப்போன 138 கிலோ அசைவ உணவுகள் அழிப்பு. மிக மோசமான அசைவ உணவுகள் இருந்த 4 கடைகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தகவல்
சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ216 அதிகரித்து, ரூ39,016க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ4,877க்கு விற்பனை.
டெல்லியை போன்று தமிழகத்திலும் “தகைசால் பள்ளிகள்” உருவாக்கப்படும். 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து திட்டம் .180 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிகள் மேம்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
திமுக அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கும் 12 புத்தகங்களை சென்னை தலைமை செயலகத்தில் வைத்து முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
இந்தியாவில் மேலும் 3,805 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 22 பேர் உயிரிழந்தனர். மேலும் கொரோனாவில் இருந்து 3,168 பேர் குணமடைந்தனர்.
திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதையடுத்து, சென்னை, மெரினாவில் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மரியாதை செலுத்தினார்.
திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவையொட்டி கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் வாழ்த்து!
முதலமைச்சே!பிறையில் முழுநிலாஉறைவது போலஉன்ஓராண்டு ஆட்சியில்நூறாண்டுச் சாதனைகள்என்றாலும் எதிர்ப்புகொம்புள்ள யானையும்கொள்கையுள்ள தலைவனுமேகுறிவைக்கப்படுகிறார்கள்கொம்பு மட்டுமாதிராவிடக் காடுகாக்கும்தெம்புள்ள யானை நீபேனாவோடுபுதைக்கப்பட்ட கலைஞர்உனக்கொரு கவி வரைவார் pic.twitter.com/G9A9ktBU1H
— வைரமுத்து (@Vairamuthu) May 7, 2022
திமுக அரசு பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு ஆன நிலையில், சென்னை, ஆர்.கே.சாலையில் அரசுப் பேருந்தில், பொது மக்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் செய்தார். அப்போது இலவச பேருந்து திட்டம் குறித்து பெண் பயணிகளிடம் கேட்டறிந்தார்.

நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்த நிலையில், இவர்களது திருமணம், ஜூன் 9 ஆம் தேதி, திருப்பதி கோயிலில் வைத்து நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறும் நிலையில், சென்னை, கோபாலபுரத்தில் தாயார் தயாளு அம்மாள், அண்டை வீட்டினரிடம் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து பெற்றார்.
தமிழகத்துக்கு படகில் வர முயன்ற 14 இலங்கை தமிழர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.
மக்களுக்கு பயன் தராத துன்பங்கள் நிறைந்த துயரமான ஆட்சி, திமுகவின் ஓராண்டு ஆட்சி. முக்கிய வாக்குறுதிகள் எதையும் திமுக நிறைவேற்றவில்லை. பெட்ரோல் – டீசல் விலை, 7 பேர் விடுதலை, பூரண மதுவிலக்கு குறித்து தற்போது பேசாதிருப்பது ஏன்? என ஓபிஎஸ் விமர்சித்துள்ளார்.
தமிழகத்துக்கு வர முயன்ற 14 இலங்கை தமிழர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.
டெல்லி, பீகார், ஆந்திர மாநில உயர்நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் நியமனம் செய்ய தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
திமுக அரசு பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறும் நிலையில், முக்கிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.