Latest Tamil News: தமிழகத்தில் இன்று நடக்கும் அரசியல் நிகழ்வுகள் உள்ளிட்ட மற்ற விஷயங்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளுங்கள்.
வரும் 19-ம் தேதி நடக்கவிருக்கும் சட்ட மன்ற இடைத்தேர்தலுக்காக முக்கிய அரசியல் தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து தனது பரப்புரையை மேற்கொண்டார்.
இந்நிலையில் இன்று அதிமுக, திமுக கட்சித் தலைவர்களின் பிரச்சார நிகழ்வுகளை இங்கே தெரிந்துக் கொள்ளலாம்.
Live Blog
Latest Tamil News Live: To know latest Tamil nadu news today?
இன்று தமிழகத்தின் முக்கிய செய்திகளை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.
தவறுகள் நடைபெற்ற 46 வாக்குச்சாவடிகளில் பணியாற்றிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து, தேர்தல் ஆணையம் உரிய உத்தரவை பிறப்பிக்கும். இந்த வாக்குச்சாவடிகள் குறித்த விவரங்கள் தேர்தல் ஆணைய அனுமதிக்கு பின் தெரிவிக்கப்படும். வாக்கு இயந்திரங்கள் மாற்றப்பட்டது தொடர்பான திமுக புகாருக்கு, எழுத்துப்பூர்வமாக பதில் அளிப்போம் எனத் தேர்தல் ஆணைய தலைவர் சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாடகி சின்மயி மனு கொடுத்துள்ளார்.
அதிமுக வேட்பாளர் தேர்தல் வரம்புக்கு மீறி 70 கோடி ரூபாய்க்கு மேல் மதுரை மக்களவைத் தொகுதியில் செலவு செய்துள்ளதால் தேர்தலை ரத்து செய்ய கோரி மதுரை தொகுதி வேட்பாளர்களில் ஒருவரான ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
வீராணம் ஏரியிலிருந்து குடிநீர் தேவைக்காக சென்னைக்கு திறந்துவிடும் தண்ணீரின் அளவு 74 கன அடியிலிருந்து, 47 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறையால் தவித்து வரும் சென்னை மக்கள் இந்த கோடையில் இன்னும் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள். இந்நிலையில் திறந்துவிடும் நீரின் அளவு குறைக்கப்பட்டதால், பெரும் சோகத்தில் சூழ்ந்திருக்கிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights