Latest Tamil News: 46 வாக்குச் சாவடிகளில் தவறு நடந்துள்ளது உண்மை தான் – சத்ய பிரதா சாஹூ

Latest Tamil News: இன்று அதிமுக, திமுக கட்சித் தலைவர்களின் பிரச்சார நிகழ்வுகளை இங்கே தெரிந்துக் கொள்ளலாம். 

Latest Tamil News: தமிழகத்தில் இன்று நடக்கும் அரசியல் நிகழ்வுகள் உள்ளிட்ட மற்ற விஷயங்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளுங்கள்.

வரும் 19-ம் தேதி நடக்கவிருக்கும் சட்ட மன்ற இடைத்தேர்தலுக்காக முக்கிய அரசியல் தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து தனது பரப்புரையை மேற்கொண்டார்.

இந்நிலையில் இன்று அதிமுக, திமுக கட்சித் தலைவர்களின் பிரச்சார நிகழ்வுகளை இங்கே தெரிந்துக் கொள்ளலாம்.

Live Blog

Latest Tamil News Live: To know latest Tamil nadu news today? இன்று தமிழகத்தின் முக்கிய செய்திகளை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

14:25 (IST)08 May 2019
மழை வேண்டி யாகம்

கோயில்களில் யாகம் செய்தவுடன் எந்தெந்த ஊர்களில் எவ்வளவு அளவு மழை பெய்தது ? - அறிக்கை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

14:23 (IST)08 May 2019
அதிமுக தயார்

தமிழகத்தில் வாக்குப்பதிவின்போது 46 பூத்களில் தவறு நடந்துள்ளது என தேர்தல் ஆணையர் ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து, மறுதேர்தல் நடத்தினால் அதனை எதிர்கொள்ள அதிமுக தயார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

14:22 (IST)08 May 2019
மறு தேர்தலுக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வாக்குப்பதிவின்போது 46 பூத்களில் தவறு நடந்துள்ளது தேனி உள்பட 46 பூத்களில் தவறு நடந்ததாக தகவலால், மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவு வர வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார். 

14:07 (IST)08 May 2019
திருநங்கையின் மனு தள்ளுபடி

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, திருநங்கை பாரதிகண்ணம்மா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

14:05 (IST)08 May 2019
ஆர்.எஸ்.பாரதியின் சந்தேகம்

தேனிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டது, இயந்திரங்களை மாற்றம் செய்ய திட்டமா என்ற சந்தேகம் ஏற்படுகிறது என திமுக-வின் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். 

14:04 (IST)08 May 2019
திமுக-வுக்கு பதில் அளிப்போம்

தவறுகள் நடைபெற்ற 46 வாக்குச்சாவடிகளில் பணியாற்றிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து, தேர்தல் ஆணையம் உரிய உத்தரவை பிறப்பிக்கும்.  இந்த வாக்குச்சாவடிகள் குறித்த விவரங்கள் தேர்தல் ஆணைய அனுமதிக்கு பின் தெரிவிக்கப்படும். வாக்கு இயந்திரங்கள் மாற்றப்பட்டது தொடர்பான திமுக புகாருக்கு, எழுத்துப்பூர்வமாக பதில் அளிப்போம்  எனத் தேர்தல் ஆணைய தலைவர் சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். 

14:01 (IST)08 May 2019
மீ டூ சின்மயி ஆர்ப்பாட்டம்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாடகி சின்மயி மனு கொடுத்துள்ளார். 

12:38 (IST)08 May 2019
காங்கிரஸ் நிதியுதவி

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழக சி.ஆர்.பி.எப் வீரர்கள் சுப்பிரமணியம், சிவசந்திரன் குடும்பங்களுக்கு காங்கிரஸ் அறக்கட்டளை சார்பில் தலா ரூபாய் 2 லட்சம் நிதியுதவி என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். 

12:02 (IST)08 May 2019
ஆலோசனை

இடைத்தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஒட்டப்பிடாரம் தொகுதியில், சிறப்பு டிஜிபி அசுதோஷ் சுக்லா தலைமையில் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை

11:21 (IST)08 May 2019
மதுரை நாடாளுமன்ற தேர்தலை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

அதிமுக வேட்பாளர் தேர்தல் வரம்புக்கு மீறி 70 கோடி ரூபாய்க்கு மேல் மதுரை மக்களவைத் தொகுதியில் செலவு செய்துள்ளதால் தேர்தலை ரத்து செய்ய கோரி மதுரை தொகுதி வேட்பாளர்களில் ஒருவரான ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

10:55 (IST)08 May 2019
உச்சநீதி மன்றத்தில் எம்.எல்.ஏ பிரபு மனு

சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபுவும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

10:40 (IST)08 May 2019
Latest News: கோயம்பேட்டில் தண்ணீர் கேன்கள் பறிமுதல்

கோயம்பேட்டில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் 150 தரமற்ற குடிநீர் கேன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

09:29 (IST)08 May 2019
இலங்கை தமிழர் விடுவிப்பு

நாகை மாவட்டம், நாலுவேதபதி கிராமத்தில் பணத்திற்காக ஓராண்டுக்கும் மேலாக பிணையாக வைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழர் ரமேஷ் மீட்கப்பட்டுள்ளார். இது சம்பந்தமாக பிரபாகரன், மகேஷ்வரன், வடிவேல் மற்றும் சிறுவன் உட்பட 4 பேரை பிடித்து கடலோர காவல்படை போலீசார் விசாரணை

09:04 (IST)08 May 2019
Today Tamil News: சென்னையில் தண்ணீர் பஞ்சம்

வீராணம் ஏரியிலிருந்து குடிநீர் தேவைக்காக சென்னைக்கு திறந்துவிடும் தண்ணீரின் அளவு 74 கன அடியிலிருந்து, 47 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறையால் தவித்து வரும் சென்னை மக்கள் இந்த கோடையில் இன்னும் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள். இந்நிலையில் திறந்துவிடும் நீரின் அளவு குறைக்கப்பட்டதால், பெரும் சோகத்தில் சூழ்ந்திருக்கிறார்கள். 

Latest Tamil News Live: தமிழக அரசியல், பொதுப் பிரச்னைகள், வழக்கு விசாரணைகள், அரசியல்வாதிகளின் பேட்டிகள், வெதர் அப்டேட் உள்ளிட்ட இன்றைய தமிழக செய்திகளை ஐ.இ தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளுங்கள்.

Web Title:

Tamil news latest headlines live

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close