Advertisment

Tamil News Highlights: கலைஞர் மகளிர் உரிமை திட்டம் நிராகரிக்கப்பட்டவர்கள் மேல் முறையீடு செய்யலாம்

Tamil News LIVE, Kerala Nipah virus, Asia cup 2023, Cauvery water issue– 13 September 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
udpates

updates

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

Tamil news updates

நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவி தற்கொலை

ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த ஜார்கண்டை சேர்ந்த 16 வயது மாணவி தற்கொலை.

நடப்பாண்டில் மட்டும் அங்கு தற்கொலை செய்த மாணவர்களின் எண்ணிக்கை 25ஐ நெருங்கியுள்ளது.

தங்கம் விலை        

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.43,840-க்கு விற்பனையாகிறது.

குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது

வடமேற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது.

அடுத்த 24 மணிநேரத்தில், இது மேலும் வலுவடைந்து தெற்கு ஒடிசா, வடக்கு ஆந்திரா, தெற்கு சட்டீஸ்கர் கடற்கரையை நோக்கி நகரக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் செல்வோர்களுக்காக ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.

ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் மற்றும் முன்பதிவு மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை

புதுக்கோட்டை: மணல் ஒப்பந்ததாரரான எஸ்.ராமச்சந்திரன் சம்பந்தப்பட்ட இடங்களில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை தொடர்கிறது.

நிஜாம் காலனி பகுதியில் உள்ள அலுவலகம், முகத்துப்பட்டிணத்தில் உள்ள அவரது வீடு, கே.எல்.கே எஸ் நகரில் உள்ள ஆடிட்டர் முருகேசனின் அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனை தொடர்கிறது.

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் சோதனை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில், சென்னை தியாகராய நகர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யாவின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை வடபழனியில் உள்ள அவரின் வீட்டில் இன்று காலை 6.30 மணி முதல் சோதனை நடைபெற்று வருகிறது.

இதேபோல் சென்னை தண்டையார்பேட்டையில், வட சென்னை வடகிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்

மத்திய அமைச்சரவை கூட்டம்

டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டம்

இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரின் டெல்லி இல்லத்தில் இன்று நடைபெறுகிறது.

காங்கிரஸ் கட்சி சார்பில் கே.சி. வேணுகோபால், தி.மு.க.சார்பில் டி.ஆர்.பாலு, திரிணமூல் காங்கிரஸ் கட்சிலிருந்து அபிஷேக் பானர்ஜி, சிவசேனா- உத்தவ் பிரிவில் இருந்து சஞ்சய் ராவுத்,ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கின்றனர்.

கேரளாவில் நிபா வைரஸ்- தமிழ்நாட்டில் கண்காணிப்பு தீவிரம்

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் வைரஸ் பரவுவதைத் தடுக்க எல்லையோர மாவட்டங்களின் சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது.

கேரளாவில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் முழுமையான காய்ச்சல் மற்றும் இதர அறிகுறிகள் ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தமிழ்நாட்டுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும்.

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் 24 x 7 சுழற்சி அடிப்படையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்- அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் பொதுச் சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் உத்தரவு

மு.க.ஸ்டாலின் தலைமையில் அடுத்த மாதம் மாநாடு

மு.க.ஸ்டாலின் தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை, வனத்துறை அதிகாரிகள் பங்கேற்கும் மாநாடு அடுத்த மாதம் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை

தமிழ்நாட்டில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை. கேரள எல்லையில் உள்ள 6 மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  கேரளாவில் இருந்து காய்ச்சல் அறிகுறிகளுடன் வருவோரை பரிசோதனை செய்ய ஏற்பாடு- அமைச்சர் மா.சுப்பிரமணியன் 

அதிமுக தி.நகர் சத்யா தொடர்புடைய இடங்களில் சோதனை

ஆரம்பாக்கத்தில் தி.நகர் சத்யாவின் நண்பர் திலீப்குமார் அலுவலகத்தில் ரெய்டு 8 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் காலை 7 மணி முதல் சோதனை.

திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் தமிழரசி தலைமையிலான 8 பேர் கொண்ட குழு சோதனை. முக்கிய ஆவணங்கள் சிக்க வாய்ப்புள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தகவல். அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா தொடர்புடைய 18 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

சோதனை அடிப்படையில் குறுஞ்செய்தி

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு சோதனை அடிப்படையில் குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடக்கம். பயனாளிகளின் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்ற தகவல் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படுகிறது. 

பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1 செலுத்தி நேரடியாக வரவு வைக்கப்படுகிறதா என்பது குறித்தும் சோதிக்கப்படுகிறது. விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட தகவலும் ஒரு சில விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

உண்மைக் காரணத்தை கண்டறிந்து நடவடிக்கை

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி குளறுபடி விவகாரம் - காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,  உண்மைக் காரணத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் உதயநிதி

ரத்தினம் வீட்டில் 2-வது நாளாக சோதனை

திண்டுக்கல்லில் தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை.எடை கருவியுடன் வங்கி அதிகாரி மற்றும் நகை மதிப்பீட்டாளர் வருகை துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் சோதனை

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

சென்னை, திருவல்லிக்கேணியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதியில் முகாம் மருத்துவ முகாமை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார். 

ஏ.ஆர்.ரஹ்மான்- 400 பேருக்கு பணம் திருப்பி அளிப்பு 

இசை நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் திரும்பியவர்களில் இதுவரை 400 ரசிகர்களுக்கு பணத்தை ஏ.ஆர்.ரஹ்மான் திருப்பி கொடுத்துள்ளார். டிக்கெட் நகலை 4000 பேர் மின்னஞ்சலில் அனுப்பிய் நிலையில் இதுவரை  400 பேருக்கு பணம் திரும்பி அளிக்கப்பட்டுள்ளது. 

விநாயகர் சிலை ஊர்வலங்களால் மக்களுக்கு என்ன பயன்?

விநாயகர் சிலை ஊர்வல கொண்டாட்டங்களால் மக்களுக்கு என்ன பயன். சிலை வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்ல கடவுளே கேட்காத நிலையில் ஊர்வலத்தால் என்ன பயன்?. விநாயகரை வைத்து அரசியல் செய்யப்படுகிறது- உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

காவல்துறையின் தோல்வியே காரணம்- இ.பி.எஸ்

மதுரை அதிமுக மாநாடு போல், ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சிக்கும் முறையான பாதுகாப்பு வழங்கப்படவில்லை. ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காவல்துறையின் தோல்வியே காரணம் என்றும் ஈபிஎஸ் குற்றச்சாட்டு

பாஜக திசைதிருப்பிக் கொண்டு இருக்கிறது

சனாதனத்தைப் பற்றி பேசி ஊழலை பாஜக திசைதிருப்பிக் கொண்டு இருக்கிறது- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை 

மீட்கப்பட்ட கருப்புப்பணத்தை இந்திய மக்களுக்கு வழங்கினாரா? 

2014-ல் ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி தேர்தலுக்கு முன்னால் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்ட கருப்புப் பணத்தை முழுமையாக மீட்பேன் என்றார். மீட்டாரா? இல்லை . மீட்கப்பட்ட கருப்புப்பணத்தை இந்திய மக்கள் அனைவருக்கும் ரூ.15 லட்சம் தருவேன் என்றார், தந்தாரா? இல்லை - முதல்வர். 

கோவையில் ஒரே நாளில் 150 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த காவல்துறை போலியான நம்பர் ப்ளேட், போலி ஆவணங்களில் வாகனம் ஒட்டியது அம்பலம் செயின் பறிப்பு , வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை

நாட்டையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே இலக்கு

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதன் மூலம், நாட்டையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே இலக்கு. நடந்து முடிந்த இடைத்தேர்தல்களில் 'இந்தியா' கூட்டணி கட்சிகள் மகத்தான வெற்றியை பெற்றுள்ளார்கள். அர்ப்பணிப்போடு செயல்படுவோம், எந்த கவனச் சிதறலுக்கும் இடமளித்துவிடக் கூடாது - முதல்வர் ஸ்டாலின்

 காவிரி விவகாரம்:  கடைசி வாய்ப்பு உச்சநீதிமன்றத்தை அணுகுவது

காவிரி விவகாரத்தில் கடைசி வாய்ப்பு உச்சநீதிமன்றத்தை அணுகுவது தான். தேவைப்பட்டால் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவோம்"- அமைச்சர் துரைமுருகன்

 தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்குகள். தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம் - ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் .சட்டம் கொண்டு வர தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது. தற்கொலைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆராய்ந்த பிறகே சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது - தமிழக அரசு. ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்குகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்

சிவசங்கர் பாபா மீதான வழக்கு - சிபிசிஐடிக்கு உத்தரவு

மாணவிகளுக்கு க்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் சிவசங்கர் பாபா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

நாடாளுமன்ற சிறப்பு கூட்டம்

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை முன்னிட்டு செப்டம்பர் 17ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம். நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் சிங் ஜோஷி அழைப்பு 

ரூ.600 கோடியை தாண்டியது ஜவான் வசூல்

அட்லி இயக்கத்தில் ஷாருக் கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் 6 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.621 கோடி வசூல் செய்டதுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

பா.ஜ.க-வின் அரசியல் திட்டத்தை ஆளுநர் ரவிதான் முன்னெடுத்து செல்கிறார் - கபில் சிபல் குற்றச்சாட்டு

மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல், “தமிழ்நாட்டில் மத மோதலை ஏற்படுத்தவே ஆளுநர் ஆர்.என். ரவியை பா.ஜ.க அனுப்பியுள்ளது; தமிழ்நாட்டில் ஆர்.என். ரவி என்ன செய்கிறார் என்பது பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு நன்றாகத் தெரியும் பா.ஜ.க-வின் அரசியல் திட்டத்தை ஆளுநர் ரவிதான் முன்னெடுத்து செல்கிறார்” என்று கடுமையாகச் சாடியுள்ளார்.

புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலால் 2 பேர் உயிரிழப்பு

புதுச்சேரியில் இன்று (செப்டம்பர் 13) ஒரே நாளில் டெங்கு காய்ச்சலால் 2 பேர் உயிரிழந்தனர். இன்று காலையில் காயத்ரி (19) கல்லூரி மணவி உயிரிழந்த நிலையில், தற்போது ரோஷினி (28) என்ற பெண்ணும் உயிரிழந்தார்.

சென்னை வேளச்சேரியில் பயங்கர தீ விபத்து 

சென்னை வேளச்சேரியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 8 அடுக்கு கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின்கசிவு காரணமாக கட்டடத்தில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: ராணுவ அதிகாரி வீரமரணம்



ஜம்மு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக்கில் பயங்கரவாதிகளுடன் நடந்த என்கவுன்டரில் ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவுக்கு தலைமை தாங்கும் இந்திய ராணுவ கர்னல் மற்றும் மேஜர் ஒருவரும் உயிரிழந்தனர்.

மகளிர் உரிமைத் தொகை: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதில், “மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு மேல்முறையீடு செய்ய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு 18ம் தேதி முதல் அனுப்பி வைக்கப்படும்.

ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட 30 நாட்களுக்கு மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீடு செய்யப்படும் விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரத்தில் மின் தடை: பொதுமக்கள் கடும் பாதிப்பு

சென்னையை அடுத்த தாம்பரம், சேலையூர், செம்பாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்தூர், முடிச்சூர், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில்  மழை பெய்து வருகிறது.

தொடர்ந்து, மாடம்பாக்கம், சேலையூர், கிழக்கு தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் மின்சார நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

பென் ஸ்டோக்ஸ் அதிரடி சதம்

நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் அதிரடி சதம் அடித்துள்ளார். அவர் 124 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 15 பவுண்டரிகளுடன் 182 ரன்கள் குவித்துள்ளார்.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் தலைமை தேர்தல் ஆணைய நியமன மசோதா?

தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையங்களுக்கான நியமன செயல்முறையை ஒழுங்குபடுத்தும் மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையங்களுக்கான நியமன செயல்முறைகளை தேர்ந்தெடுக்கும் குழுவில் இருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை விலக்க இந்த மசோதா முன்மொழிகிறது.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் தலைமை தேர்தல் ஆணைய நியமன மசோதா

தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையங்களுக்கான நியமன செயல்முறையை ஒழுங்குபடுத்தும் மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இது, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையங்களுக்கான நியமன செயல்முறைகளை தேர்ந்தெடுக்கும் குழுவில் இருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை விலக்க இந்த மசோதா முன்மொழிகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamilnadu India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment