News Highlights: குஷ்புவுக்கு இன்று தமிழக பாஜக வரவேற்பு; சென்னையில் பிரஸ்மீட்

தமிழக பாஜக தலைமை அலுவலகம்கமலாலயத்தில் பாஜகவின் மூத்த தலைவர்களை சந்திக்கிறார்.

Actresses who made their political entry
Actresses who made their political entry

Tamil News Today:

நடிகை குஷ்பு நேற்று டெல்லியில், ஜே.பி நட்டா முன்னிலையில் பாஜக-வில் இணைந்தார். இதனைத்தொடர்ந்து, இன்று காலை 11 மணியளவில் டெல்லியிலிருந்து சென்னைக்கு வருகின்ற குஷ்புக்கு மாவட்டத்தின் சார்பாக சென்னை விமான நிலையத்தில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.

தொடர்ந்து 11.45 மணி அளவில் குஷ்புசுந்தர்சென்னை தமிழக பாஜக தலைமை அலுவலகம்கமலாலயத்தில் பாஜகவின் மூத்த தலைவர்களை சந்திக்கிறார்.அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்.

நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜக-வில் இணைவதாக செய்திகள் வெளியானதிலிருந்து அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது, “கட்சியின் உயர் பதவியில் இருப்பவர்கள், கள நிலவரம் அறியாதவர்கள் என்னை அடக்கி வைத்தனர். மக்களால் அங்கீகரிக்கப்படாத தலைவர்கள் சிலர், என்னைப் போன்றவர்களை அடக்கி, ஒடுக்குகிறார்கள். அதனால் மிகவும் ஆழ்ந்து யோசித்து, காங்கிரஸ் உடனான எனது இணைப்பை முடித்துக் கொள்ள முடிவெடுத்திருக்கிறேன். இதனை எனது பணி விடுப்பு கடிதமாக ஏற்றுக் கொள்ளவும்” என்று குறிப்பிட்டு ராஜினாமா கடிதம் ஒன்றை சோனியா காந்திக்கு எழுதியிருக்கிறார் குஷ்பூ.

மேலும், காங்கிரஸ் கட்சியிலிருந்து குஷ்பு நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனை அடுத்து டெல்லி பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை இன்று சந்தித்து அக்கட்சியில் குஷ்பூ இணைய இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. குஷ்பூவோடு கணவர் சுந்தர் சி-யும் டெல்லி சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் அடுத்து 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்க அமைக்கப்பட்ட குழுவை ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளார்.

இந்த குழுவில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, திமுக துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், துணை பொதுச் செயலார் ஆர்.ராசா, துணை பொதுச் செயலார் அந்தியூர் ப.செல்வராஜ், கனிமொழி எம்.பி, திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி, திமுக செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், பேராசிரியர் அ.ராமசாமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66,732-ஆகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71,20,538-ஆக உயர்ந்திருக்கிறது. அவர்களில் 61,49,535 பேர் வீடு திரும்பியிருக்கின்றனர். பலியானோர் எண்ணிக்கை 1,09,150-ஆக உயர்ந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Live Blog

Tamil News Today : அரசியல், சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல், விளையாட்டு உள்ளிட்ட அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.


22:02 (IST)12 Oct 2020

இஷாந்த் சர்மா  ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார்

காயம் காரணமாக டெல்லி வீரர் இஷாந்த் சர்மா  ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார்.   

21:28 (IST)12 Oct 2020

நாளை சென்னையில் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார் குஷ்பு

நாளை டெல்லியிலிருந்து சென்னைக்கு வருகின்ற  குஷ்பூசுந்தர் அவர்களுக்கு மாவட்டத்தின் சார்பாக சென்னை விமான நிலையத்தில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.

அது தொடர்ந்து 11.45 மணி அளவில் குஷ்பூசுந்தர் சென்னை தமிழக பாஜக தலைமை அலுவலகம் கமலாலயத்தில் பாஜகவின் மூத்த தலைவர்களை சந்திக்கிறார்.

அதைத் தொடர்ந்து 12 மணி அளவில் குஷ்பூசுந்தர் அவர்கள் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார் என்று தமிழக பாஜக வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.      

20:11 (IST)12 Oct 2020

அண்ணா பல்கலைக்கழகத்தின் பெருமையைக் காக்க போராட தயங்க மாட்டோம் – உதயநிதி ஸ்டாலின்

அண்ணா பல்கலைக்கழகத்தின் பெருமையைக் காக்க தலைவரின் உத்தரவை ஏற்று இளைஞரணி- மாணவரணி சார்பில் மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்து அரசுக்கு நெருக்கடி தர தயங்கமாட்டோம் என இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறோம் என்று உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டரில் தெரிவித்தார்.   

19:52 (IST)12 Oct 2020

மக்கள் நீதி மய்யம் ட்வீட்

19:48 (IST)12 Oct 2020

எடப்பாடி பழனிசாமியை நடிகர் சூரி சந்தித்தார்

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் சூரி சந்தித்தார். 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அஇஅதிமுக-வின் முதலமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.   

19:46 (IST)12 Oct 2020

இன்று எத்தனை நபர்களுக்கு கொரோனா தொற்று!

தென் மாவட்டங்களில் கட்டுக்குள் நிற்கும் கொரோனா எண்ணிக்கை:  மதுரை (88), தேனி (60), திண்டுக்கல் (34),  சிவகங்கை (25), விருதுநகர் (42), திருநெல்வேலி (62), ராமநாதபுரம் (16) 

19:16 (IST)12 Oct 2020

உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 10,314-ஆக அதிகரித்துள்ளது

உயிரிழப்பு விவரம்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று ஒரே நாளில் தனியார் மருத்துவமனைகளில் 29, அரசு மருத்துவமனைகளில் 33 என மொத்தம் 62 பேர் உயிரிழந்தனர். மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 10,314-ஆக அதிகரித்துள்ளது.

19:14 (IST)12 Oct 2020

தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,879 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,61,264 ஆக அதிகரித்துள்ளது. 

18:24 (IST)12 Oct 2020

இந்தியா – சீனா ராணுவ ரீதியிலான பேச்சுவார்த்தை

இந்தியா – சீனா இடையேயான எல்லைப்பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்கும் மற்றொரு முயற்சியாக இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ ரீதியிலான ஏழாவது சுற்று பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.
எல்லைக்கோடு அருகே இந்திய பகுதியில் உள்ள சுசூல் என்ற இடத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

18:21 (IST)12 Oct 2020

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர்  சூரப்பாவை ‘டிஸ்மிஸ்’ செய்ய வேண்டும் – மு. க ஸ்டாலின்

”மாநில இடஒதுக்கீட்டிற்கும், நிதியுரிமைக்கும் விரோதமாக மத்திய அரசுக்கு தன்னிச்சையாகக் கடிதம் எழுதியுள்ள துணைவேந்தர்  சூரப்பாவை ‘டிஸ்மிஸ்’ செய்ய வேண்டுமென தமிழக ஆளுநர் அவர்களுக்கு முதலமைச்சர்  . பழனிசாமி உடனே பரிந்துரை செய்ய வேண்டும்” என்று திமுக தலைவர் மு. க ஸ்டாலின் தெரிவித்தார். 

 

18:04 (IST)12 Oct 2020

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார்

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த துணை ஜனாதிபதி வெங்கியா நாயுடு தொற்றில் இருந்து குணமடைந்ததால் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

18:01 (IST)12 Oct 2020

பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் பயணிக்க வசதி செய்து கொடுக்காதது ஏன்? ஐகோர்ட் கேள்வி

2017-க்குப் பிறகு வாங்கப்பட்ட 4,381 பேருந்துகளில் ஒரு பேருந்தில் கூட மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி இல்லை என தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 15 ஆண்டுகளாக பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயணம்
செய்வதற்கான வசதிகள் செய்து கொடுக்காதது
ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், இது குறித்து டிசம்பர் 10 ஆம் தேதி காணொலி காட்சி மூலம்
ஆஜராகி விளக்கமளிக்க தலைமை செயலாளர்,
போக்குவரத்து துறை செயலாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

17:27 (IST)12 Oct 2020

திமுக கூட்டணியை அசைக்க முடியாது – மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “கற்பனைக் கருத்துகளால் திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தலாம் என எத்தனிப்பவர்கள், கலகலத்துப் போவார்கள். திமுக கூட்டணியை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது. கூட்டணியின் பாதையும் பயணமும், தெளிவும் திட்பமும் வாய்ந்தவை” என்று தெரிவித்துள்ளார்.

17:22 (IST)12 Oct 2020

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வாயிலில் மன்னம்பந்தல் பஞ்சாயத்து தலைவர் பிரியா பெரியசாமி தர்ணா

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வாயிலில் மன்னம்பந்தல் பஞ்சாயத்து தலைவர் பிரியா பெரியசாமி தர்ணா போராட்டம் செய்துவருகிறார். 23 வயது பிரியா பெரியசாமி பட்டியலின
சமூகத்தை சேர்ந்தவர். தாழ்த்தப்பட்ட சமூக பெண்ணுக்கு நாற்காலி தேவையா? என ஊராட்சி மன்றத் துணைத் தலைவரின் கணவர் ராஜகோபால் விமர்சித்ததாக புகார் தெரிவித்துள்ளார். மேலும், ஊராட்சிக்கான நிதியை பெற கையெழுத்திட துணை தலைவர் மறுப்பதாகவும் குற்றச்சாட்டியுள்ளார்.

16:25 (IST)12 Oct 2020

குஷ்பு காங்கிரஸில் இருந்து விலகுவதால் காங்கிரசுக்கு எந்த இழப்பும் இல்லை – கே.எஸ்.அழகிரி ட்வீட்

நடிகை குஷ்பு காங்கிரஸில் இருந்து விலகி இன்று பாஜகவில் இணைந்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “குஷ்பு காங்கிரஸில் இருந்து விலகுவதால் காங்கிரசுக்கு எந்த இழப்பும் இல்லை; குஷ்புவை பாஜகவினர் யாரும் அழைக்கவில்லை, அவரே தான் பாஜகவுக்கு செல்கிறார்; குஷ்பு கட்சியில் இருந்த போதும் கொள்கை பிடிப்புடன் செயல்படவில்லை” என்று ட்வீட் செய்துள்ளார்.

16:12 (IST)12 Oct 2020

நீட் தேர்வு முடிவுகள் அக்டோபர் 16ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு

மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு முடிவுகள் அக்டோபர் 16ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

15:50 (IST)12 Oct 2020

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பால் மில்கிரோம், ராபர்ட் வில்சன் இருவருக்கும் கூட்டாக அறிவிப்பு

2020ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு, பொருளியலாளர்கள், பால் மில்கிரோம், ராபர்ட் வில்சன் ஆகிய இருவருக்கும் புதிய ஏல முறையை வடிவமைத்ததற்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

15:17 (IST)12 Oct 2020

மத்திய அரசு ஊழியர்களுக்கு பண்டிகை முன்பணமாக ரூ.10,000 – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன், “மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு பண்டிகை முன்பணமாக ரூ.10,000 வழங்கப்படும். ரூபே கார்டு மூலம் வழங்கப்படும் பணத்தை நிதியாண்டின் இறுதிவரை அரசு ஊழியர்கள் பெற்றுக்கொள்ளலாம். ரூ.10,000 முன்பணம் மாதந்தோறும் ரூ.1,000 என்ற அடிப்படையில் 10 மாதங்களில் பிடித்துக்கொள்ளப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

14:54 (IST)12 Oct 2020

பாஜகவில் இணைவது முன்கூட்டியே எடுக்கப்பட்ட முடிவு – நடிகை குஷ்பு

பாஜகவில் இணைந்தபின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பு, “எதிர்க்கட்சியில் இருக்கும் போது ஆளுங்கட்சியை விமர்சிப்பது இயல்பு. கட்சியில் இருக்கும் வரை அவர்களுக்கு சாதகமாக பேசுவது கடமை. காங்கிரஸில் இருந்தபோது பலமுறை பாஜகவின் திட்டங்களை ஆதரித்திருக்கிறேன்” என்று கூறினார்.

14:45 (IST)12 Oct 2020

தலைவரைக் கண்டுபிடிக்க முடியாத காங்கிரஸால் நாட்டை எப்படி காப்பாற்ற முடியும்: குஷ்பு கேள்வி

காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தபின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பு, “பிரதமர் மோடி நாட்டை சரியான வழியில் நடத்தி செல்கிறார். பாஜகவில் இணைந்தது மகிழ்ச்சியை அளிக்கிறது. மாற்றம் என்பது மனிதர்களின் இயல்பு; தலைவரை கண்டுபிடிக்க முடியாத காங்கிரசால் நாட்டை எப்படி காப்பாற்ற முடியும்.” என்று கேள்வி எழுப்பினார்.

14:00 (IST)12 Oct 2020

அதிகாரப்பூர்வமாக பாஜக-வில் இணைந்த குஷ்பு

காங்கிரசிலிருந்து முழுவதுமாக விலகி பாஜக தேசிய தலைவர் நட்டா மற்றும் மாநில தலைவர் எல்.முருகன் முன்னிலையில் இன்று மதியம் பாஜகவில் இணைந்தார் குஷ்பு. டெல்லியில் பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குஷ்புவுக்கு பாஜக உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.

13:36 (IST)12 Oct 2020

சுந்தர் சியின் நிர்ப்பந்தமே காரணம் – கே.எஸ்.அழகிரி கருத்து

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து இன்னும் சற்று நேரத்தில் பாஜகவில் இணையவிருக்கிறார் குஷ்பு. இந்நிலையில், குஷ்புவுக்கு மூளைச் சலவை செய்யப்பட்டிருக்கிறது என்றும் தன் கணவர் சுந்தர் சியின் நிர்ப்பந்தத்தால்தான் குஷ்பு பாஜகவில் இணைகிறார் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

13:10 (IST)12 Oct 2020

நான்கு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் – உச்சநீதிமன்றம்

தமிழ்நாட்டில் வேளாண் மசோதாவுக்கு எதிராகத் திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடுக்கப்பட்ட வழக்கில், நான்கு வாரங்களில் பதிலளிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

13:06 (IST)12 Oct 2020

தலைமைச் செயலகத்தில் இபிஎஸ் உரை!

நாடெங்கிலும் கொரோன பரவல் அதிகரித்து வரும் நிலையில், அரசின் அறிவிப்புகளைப் பொதுமக்கள் நிச்சயமாகப் பின்பற்ற வேண்டும் என்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே நோய் பரவுதலைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் இன்று தலைமைச் செயலகத்தில் பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.

12:39 (IST)12 Oct 2020

மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணனுக்கு கொரொனா தொற்று

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக பாலகிருஷ்ணன் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளன.

Tamil News Today :  ஆசிரியர்களின் நேரடி வேலை வாய்ப்பின் அதிகபட்ச வயது வரம்பைப் பள்ளிக் கல்வித்துறை குறைத்திருக்கிறது. ஆசிரியர்களை நேரடியாக ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகபட்ச வயது வரம்பு பொதுப் பிரிவில் 57 வயதிலிருந்து 40 வயதாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. ஒதுக்கப்பட்ட பிரிவுகளுக்கு 57 வயதிலிருந்து 45 வயதாகக் குறைத்துள்ளது. அப்போதைய பள்ளிக் கல்விச் செயலாளர் பிரதீப் யாதவின் ஜனவரி மாத அறிவிப்பின்படி, இரண்டாம் நிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு இதுபோன்ற மாற்றங்கள் பொருந்தும். ஆனால், இந்த முடிவு பல ஆசிரியர்களுக்கு திருப்தியளிக்கவில்லை. இதனால் TET-க்கு (ஆசிரியர் தகுதித் தேர்வு) தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் உட்பட லட்சக்கணக்கான ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தமிழக ஆசிரியர் சங்கத் தலைவர் பி.கே.இளமாறன் தெரிவித்தார். “ஒவ்வொரு ஆண்டும் 40,000 மாணவர்கள் பி.எட் கல்லூரிகளிலிருந்து வெளியே வருகிறார்கள். அதே நேரத்தில் அரசாங்கம் 1,000-2,000 பேரை மட்டுமே சேர்த்துக் கொள்கிறது. அதுவும் நிரந்தரமாக இல்லை. இந்த நடவடிக்கையை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்”என்றார்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil news live bjp kushboo congress admk dmk covid 19 bigg boss politics

Next Story
பெரியாரிஸ்ட் டூ பாஜக: குஷ்பு பயணித்த அரசியல்Khushbu Sundar Political Journey dmk to bjp
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com