Advertisment

Chennai News Highlights: "குடியரசு தின அணிவகுப்பில் தமிழகம் இல்லை"- இபிஎஸ்

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தமிழக எம்.எல்.ஏக்களின் ஊதியம் இரண்டு மடங்காக உயர்வு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

சென்னை செய்திகள்

பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

Advertisment

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை தினமும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்,  இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு, ரூ101.23-க்கும், டீசல் விலை ரூ92.81-க்கும், கேஸ்.விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • Dec 23, 2024 03:11 IST
    மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் தவறி விழுந்து 3 பேர் மாயம்

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் தவறி விழுந்து 3 இளைஞர்கள் மாயமாகியுள்ளனர். கால்வாய் வெள்ளத்தில் தவறி விழுந்த அண்ணனை காப்பாற்ற, 2 தம்பிகளும் குதித்த நிலையில், 3 பேரும் மாயமாகினர்.



  • Dec 23, 2024 03:07 IST
    அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல் - தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கண்டனம்

    நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது நடத்தப்பட்ட கல்வீச்சு சம்பவத்துக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். திரையுலக பிரபலங்களின் வீடுகள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். சட்டம் - ஒழுங்கு விஷயத்தில் மாநில டி.ஜி.பி, நகர போலீஸ் கமிஷனர் கடுமையாக செயல்பட உத்தரவிடுகிறேன். இந்த விவகாரத்தில் மெத்தனப் போக்கை பொறுத்துக் கொள்ள முடியாது என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.



  • Advertisment
    Advertisement
  • Dec 23, 2024 03:04 IST
    தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பு என்பது வதந்தி - தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்

    "டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பு என்பது வதந்தி" என்று தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. 

    தமிழ்நாடு அலங்கார ஊர்திக்கு அனுமதி இல்லை என்பது  முற்றிலும் தவறான தகவல்; 2025ம் ஆண்டு அணிவகுப்பில் தமிழ்நாடு ஊர்தி பங்கேற்க இயலாது. டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பில் 15 மாநில, யூனியன் பிரதேசங்களின் அணிவகுப்பு அலங்கார ஊர்தி பங்கேற்க தேர்வு செய்யப்படும்; சுழற்சி முறையில் மட்டுமே அனுமதி. அனைத்து மாநிலங்களாலும் எல்லா ஆண்டுகளிலும் பங்கேற்க இயலாது. 2024 அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி பங்கேற்றது. இனி 2026ஆம் ஆண்டு அணிவகுப்பில் மட்டுமே பங்கேற்க இயலும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Dec 22, 2024 21:20 IST
    ‘புஷ்பா-2’ வெளியான தியேட்டரில் இருந்த அல்லு அர்ஜூன்; சிசிடிவி வீடியோ வெளியிட்ட ஐதராபாத் காவல்துறை 

    ‘புஷ்பா-2’ பட வெளியீட்டின்போது நடிகர் அல்லு அர்ஜூன் தியேட்டரில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஐதராபாத் காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண், நடிகர் அல்லு அர்ஜூனை பார்ப்பதற்காக திரையரங்க பால்கனிக்குச் சென்ற காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன.



  • Dec 22, 2024 21:08 IST
    சிலை கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது; ரூ25 கோடி மதிப்புள்ள முருகன் சிலை பறிமுதல்

    திருவண்ணாமலை அருகே கண்டியாங்குப்பத்தில் சிலை கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ. 25 கோடி மதிப்புள்ள நவபாஷாண முருகன் சிலையும், ரூ.30 லட்சம் மதிப்புள்ள யானை தந்தத்தால் ஆன கிருஷ்ணர் சிலையும் பறிமுதல் செய்யப்பட்டன.



  • Dec 22, 2024 20:43 IST
    சென்னை உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சி புறக்கணிப்பா? - தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கம் விளக்கம்

    சென்னை மெரினா உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக விமர்சித்த நிலையில்,  “சென்னை மெரினாவில் நடைபெற்று வரும்
    உணவு திருவிழாவில் மாட்டிறைச்சி புறக்கணிக்கப்படவில்லை; 17வது அரங்கில் பீப் வகை உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது” என்று தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கம் விளக்கம் அளித்துள்ளது.



  • Dec 22, 2024 20:39 IST
    போராட்டம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தால் மட்டுமே டங்க்ஸ்டன் திட்டம் ரத்தாகும் -  சு. வெங்கடேசன்

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரும் மதுரைத் தொகுதியின் எம்.பி-யுமான சு.வெங்கடேசன், “வேதாந்தா போன்ற பெரு நிறுவனங்களுக்கு கட்டுப்பட்டதுதான் மத்திய அரசு ; டங்ஸ்டன் தொடர்பாக மத்திய அரசு இப்போது வரை வாய் திறக்கவில்லை. போராட்டம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தால் மட்டுமே டங்க்ஸ்டன் திட்டம் ரத்தாகும்.” என்று தெரிவித்துள்ளார்.



  • Dec 22, 2024 19:07 IST
    மெரினா உணவு திருவிழாவில் மாட்டிறைச்சியை மட்டும் புறக்கணிக்க அவசியம் என்ன? - நீலம் பண்பாட்டு மையம்

    “சென்னை மெரினா உணவு திருவிழாவில் மாட்டிறைச்சியை மட்டும் புறக்கணிக்க அவசியம் என்ன? பெருமளவிலான மக்கள் மாட்டிறைச்சி உண்ணக்கூடியவர்கள்; ஆனால் திட்டமிட்டே ஓர் உணவை புறக்கணிப்பதை வண்மையாகக் கண்டிக்கிறோம்” என்று நீலம் பண்பாட்டு மையம் கண்டனம் தெரிவித்துள்ளது.



  • Dec 22, 2024 19:04 IST
    விடாமுயற்சி படப்பிடிப்பு நிறைவு: அஜித்திற்கு இயக்குநர் மகிழ்திருமேனி நன்றி

    விடாமுயற்சி படப்பிடிப்பு நிறைவு நாளில் நடிகர் அஜித்திற்கு இயக்குநர் மகிழ் திருமேனி நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். முதல் நாள் முதல் படப்பிடிப்பின் கடைசி நாளான இன்று வரை நீங்கள் அளித்த அன்பு பரிவு மற்றும் ஆதரவு அனைத்திற்கு நன்றி என்று இயக்குநர் மகிழ் திருமேனி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.



  • Dec 22, 2024 18:58 IST
    முக்கியமான அரசியலைப் பேசியுள்ளது விடுதலை 2 திரைப்படம் - திருமாவளவன்

    வி.சி.க தலைவர் திருமாவளவன்: “இயக்குநர் வெற்றிமாறனின் விடுதலை 2 திரைப்படம் முக்கியமான அரசியலைப் பேசியுள்ளது; இடதுசாரி அரசியலின் தேவையை உணர்ந்து விடுதலை 2 வெளியாகி இருக்கிறது தமிழ்த்தேசியம் என்பது உணர்வு மட்டுமல்ல; அது விரிவானது, ஆழமானது, வலுவானது, ஆதிக்கம், சுரண்டல், ஒடுக்குமுறை எந்த வடிவில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.



  • Dec 22, 2024 17:24 IST
    சென்னை- குமரி சிறப்பு ரயில்

    கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சென்னை தாம்பரத்தில் இருந்து குமரிக்கு சிறப்பு ரயில் தாம்பரத்தில் இருந்து டிசம்பர் 24,31 இரவு கோயம்புத்தூருக்கும் கன்னியாகுமரியில் இருந்து தாம்பரத்திற்கு டிசம்பர் 25, ஜனவரி 1 இல் சிறப்பு ரயில் மாலை 4.30 க்கும் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Dec 22, 2024 16:34 IST
    கிறிஸ்துமஸ்: பெங்களூரு-கொச்சுவேலி சிறப்பு ரயில்

    கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி டிசம்பர் 23யில் பெங்களூரு - கொச்சுவேலி, டிசம்பர் 24யில் பொச்சுவேலி - பெங்களூருவுக்கு இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Dec 22, 2024 16:29 IST
    அதிமுகவை விளாசிய ஸ்டாலின்

    “ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி குமாரசாமி போட்ட கணக்கையே மிஞ்சும் வகையில் வாக்கு சதவீத கணக்கை பழனிசாமி போடுகிறார்” என்று திமுக செயற்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.



  • Dec 22, 2024 16:13 IST
    இந்திய அரசியலமைப்பு சாட்சியாக திருமணம் செய்து கொண்ட மணமக்கள்!

    சத்தீஸ்கர் மாநிலம் கபு கிராமத்தில் அக்னிக்கு பதிலாக இந்திய அரசியலமைப்பு சாட்சியாக உறுதிமொழி ஏற்று மணமக்கள் திருமணம் செய்து கொண்டனர். எந்த வித திருமண சடங்குகளிலும் பங்கேற்ககூடாது என ஏற்கனவே முடிவு செய்திருந்த மணமக்கள் பிரதீமா மற்றும் ஏமன் அம்பேத்கர் புகைப்படத்தின் முன் உறுதி மொழி எடுத்து கொண்டனர். 

     



  • Dec 22, 2024 16:10 IST
    பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது

    குவைத் நாட்டின் மிக உயரிய விருதான ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர் விருதை அந்நாட்டு அரசு பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவித்துள்ளது.



  • Dec 22, 2024 15:51 IST
    திமுக அரசின் தோல்வியே மக்கள் தீர்மானம்- தமிழிசை

    திமுக அரசின் தோல்வியை மக்கள் தீர்மானமாக உணர்ந்துள்ளனர். மக்களை காக்காத திமுக அரசு 200க்கு 200 என பேசி மக்களை ஏமாற்றி தீர்மானம் போடுவதாகவும் இறுமாப்புடன் பேசி தீர்மானம் போடுபவர்களை தீர்மானமாக மக்களும் ஏமாற்றுவார்கள் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். 



  • Dec 22, 2024 15:26 IST
    சென்னையில் மழைக்கு வாய்ப்பு

    சென்னையின் ஒருசில இடங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Dec 22, 2024 14:44 IST
    “தவெகவில் பெண்களுக்கு மரியாதை இல்லை”

    நடிகர் விஜய்யின் தவெகவில் பெண்களுக்கு மரியாதை இல்லை எனக் கூறி ஏற்றிய தவெக கொடியை இறக்கிவிட்டு கட்சியில் இருந்து மகளிரணி நிர்வாகிகள் விலகினர். 



  • Dec 22, 2024 14:42 IST
    2 நாட்கள் கனமழை

    செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வரும் 24, 25ஆம் தேதிகளில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.



  • Dec 22, 2024 14:40 IST
    பிரதமரை எதிர்த்து பேசும் துணிவு எபிஎஸ்க்கு உள்ளதா? -ஸ்டாலின்

    டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிராக பாஜகவை கண்டித்தாரா பழனிசாமி? பிரதமர் மோடியை எதிர்த்து பேசுகிற துணிவு எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறதா? திமுக செயற்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.



  • Dec 22, 2024 13:58 IST
    "அரசுக்கு ஆதரவு அலை வீசுகிறது" - கனிமொழி 

    தமிழ்நாடு அரசுக்கு ஆதரவு அலை வீசுகிறது; 50% வாக்குகள் திமுக கூட்டணிக்கு கிடைக்கும் . வீடு வீடாக சென்று சாதனைகளை எடுத்துச் சொல்லும் பணிகளை மேற்கொள்ள மேண்டும்; நாட்டுக்கே வழிகாட்டும் இயக்கமாக திமுக மாறி இருப்பதாக செயற்குழுக் கூட்டத்தில் கனிமொழி எம்.பி பேசியுள்ளார். 



  • Dec 22, 2024 13:55 IST
    மருத்துவ கழிவுகளை அகற்றும் பணி தீவிரம்

    நெல்லையில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை கேரள அதிகாரிகள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கழிவுகளை அகற்றும் பணியை ஆய்வு செய்த பின் நெல்லை ஆட்சியர் செய்தியாளர் சந்திப்பில், "தமிழக அரசின் தொடர் நடவடிக்கைகளால் குப்பைகள் அகற்றம்; நெல்லையில் கழிவுகளை கொட்டிய விவகாரத்தில் 5 பேர் கைது; இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்; கழிவுகளை அப்புறப்படுத்த கூடுதல் லாரிகள் தேவைப்பட்டால் அதனை வழங்க நடவடிக்கை" என நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் கூறினார்.



  • Dec 22, 2024 13:52 IST
    "பாஜகவுக்கு ஜமுக்காள நீதி கூட கிடையாது" - சீமான்

    சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய பாஜக அரசு நடத்தும் என அண்ணாமலை சொல்லத்தயாரா என சீமான் கேள்வி எழுப்பி உள்ளார். பாஜகவுக்கு சமூக நீதி அல்ல், ஜமுக்காள நீதி கூட கிடையாது என்று விமர்சித்துள்ளார். 



  • Dec 22, 2024 13:48 IST
    உண்டியலில் வெடிகுண்டை போட்டால் அது எங்களுடையது என சொல்வார்களா? - சீமான் கேள்வி

    கோயில் உண்டியலில் விழுந்த செல்போனை வைத்து முருகன் யாரிடம் பேசப் போகிறார்? உண்டியலில் வெடிகுண்டை போட்டால் அது எங்களுடையது என சொல்வார்களா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.



  • Dec 22, 2024 13:24 IST
    சமூக வலைத்தளங்களில் திமுகவை பலப்படுத்த வேண்டும்

    சமூக வலைதளங்களில் திமுகவை பலப்படுத்த வேண்டும் என்றும் திமுகவுக்கு மகளிர் ஆதரவு அபிரிமிதமாக இருக்கிறது. 2026 இல் நாம் பெறும் வெற்றி தமிழ்நாட்டுக்கான வெற்றி மட்டுமில்லை; இந்தியாவுக்கான வெற்றி; 200 தொகுதிகளில் இல்லை, 200க்கும் மேல் வெற்றி பெறுவோம் என திமுக செயற்குழுக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

     



  • Dec 22, 2024 13:16 IST
    விஜய் அரசியல் - நடராஜன் விமர்சனம்

     "விஜய் நடித்துக் கொண்டே அரசியலுக்கு சென்றிருக்கலாம் நடிப்பை விட்டு விட்டு விஜய் அரசியலுக்கு செல்வதால் மன வருத்தம்"  என நடிகர் நடராஜன் பேட்டி அளித்துள்ளார்.



  • Dec 22, 2024 13:14 IST
    நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு!

    அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும்  துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.பிஸ்டல், நீண்ட ரேஞ்ச் துப்பாக்கியை காவலர்கள் பயன்படுத்த வேண்டும். நெல்லையில் நீதிமன்ற வாயில் முன்பு இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்டதை அடுத்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.



  • Dec 22, 2024 13:09 IST
    அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு அன்பில் பதில்

    தமிழ்நாட்டில் எந்த மாவட்ட கல்வி அலுவலகங்களிலும் இணைய தள இணைப்பு கட்டணம் நிலுவையில் இல்லை. பள்ளிக் கல்வித்துறைக்கு மத்திய அரசு கடந்த மார்ச் முதல் இதுவரை ரூ.2,151 கோடி வழங்கவில்லை. இருப்பினும் மாநில நிதியிலிருந்து ஆசிரியர்களின் ஊதியம் முதல் கட்டணங்கள் வரை அனைத்தையும் நிலுவை இல்லாமல் செலுத்தி இருக்கிறோம் என அமைச்சர் அன்பில் மகேஸ் பதில் அளித்துள்ளார். 



  • Dec 22, 2024 12:15 IST
    ராணிப்பேட்டையில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்ஆலை அமைக்க விண்ணப்பம்

    ராணிப்பேட்டையில் டாடா நிறுவனத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு, கட்டுமான பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதி கோரி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. முதற்கட்டமாக ரூ.914 கோடியில் தொழிற்சாலை அமைய உள்ளது - இதன்மூலம் 1,650 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்



  • Dec 22, 2024 11:39 IST
    பொங்கல் விழா நாட்களில் அறிவிக்கப்பட்ட ‘யுஜிசி - நெட்’ தேர்வுகளை மாற்ற அறிவுறுத்தல்!

    பொங்கல் விழா நாட்களில் அறிவிக்கப்பட்ட தேசிய தேர்வு முகமையின் ‘யுஜிசி - நெட்’ தேர்வுகளை வேறு தேதிகளுக்கு மாற்ற வேண்டும் என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்த எம்.பி சு.வெங்கடேசன் எம்.பி. வரியுறுத்தியதை தொடர்ந்து, உரிய மாற்றம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறியுள்ளதாக பதிவிட்டுள்ளார்.



  • Dec 22, 2024 11:37 IST
    ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கைவிட வலியுறுத்தி தி.மு.க செயற்குழுவில் தீர்மானம்

    திமுக செயற்குழுவில், அம்பேத்கரை அவதூறாகப் பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.



  • Dec 22, 2024 11:34 IST
    பாப்கார்னுக்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பது ஏன்? நிர்மலா சீதாராமன் விளக்கம்

    கேரமல் பாப்கார்னில் சர்க்கரை சேர்க்கப்படுவதால், இனிப்பு பண்டங்களுக்கு விதிக்கப்படும் வகையில் அவற்றுக்கு 18% GST விதிக்க முடிவு செய்யப்பட்டது. சாதாரண பாப்கார்ன், உப்பு வகை உணவுகளில் (Namkeen) வருவதால் 5% வரியும் அதுவே பேக்கேஜ் செய்யப்பட்டதாக இருந்தால் 12% GST வரியும் விதிக்கப்பட்டுள்ளது என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.



  • Dec 22, 2024 10:11 IST
    கலைஞரின் நூல்கள் அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப்பட்டு அரசாணை ஒப்படைப்பு

    முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நூல்கள் அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப்பட்டதற்கான அரசாணையை ராஜாத்தி அம்மாளிடம் ஒப்படைத்தார் அமைச்சர் மு.பெ.சாமிநாதன். நிதி எதுவும் பெற்றுக்கொள்ளாமல் கலைஞரின் நூல்கள் அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளதற்கு அவரது குடும்பத்தாருக்கு அரசின் சார்பில் நன்றியும் தெரிவித்துள்ளார்.



  • Dec 22, 2024 10:10 IST
    சென்னை பள்ளிக்கரணையில் கோர விபத்து: தலை துண்டித்து இளைஞர் மரணம்

    சென்னை பள்ளிக்கரணையில்,  இன்று அதிகாலை நடந்த கோர விபத்தில் இரு இளைஞர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.  மதுபோதையில் ஓட்டிவந்த இரு சக்கர வாகனம் சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளாதில், கேரளாவைச் சேர்ந்த விஷ்ணு (24) மார்புப் பகுதியில் பலமாக தாக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், சென்னை பம்பல் பகுதியைச் சேர்ந்த கோகுல் (24) தலை தனியே துண்டிக்கப்பட்டு உயரிழந்துள்ளார்.



  • Dec 22, 2024 10:06 IST
    மின் விபத்தால் உயிரிழப்போரின் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிவாரணத்தொகை உயர்வு

    பொது இடங்களில் மின் விபத்தால் உயிரிழப்போரின் குடும்பத்திற்கு,  மின்சார வாரியம் வழங்கும் நிவாரணை தொகை ரூ5 லட்சத்தில் இருந்து ரூ10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. முழு பார்வை பாதிப்பு, 2 கை கால் செயலிழிந்தால் வழங்கப்படும் நிவாரணத்தொகை ரூ3 லட்சமாகவும், 2 கை கால் செயலிழிந்தால் வழங்கப்படும் நிவாரணத்தொகை 1.5 லட்சமாகவும் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.



  • Dec 22, 2024 09:32 IST
    அரசின் நலத்திட்டங்கள் அடங்கிய புத்தகம்

    தி.மு.க செயற்குழுவில் பங்கேற்பவர்களுக்கு அரசின் துறை ரீதியிலான சாதனைகளை விளக்கும் விதமாக "திராவிட மாடல் அரசின் நலத்திட்டங்கள்" என புத்தகம் வழங்கப்படுகிறது.



  • Dec 22, 2024 09:13 IST
    பாலியல் தொல்லை விவகாரம் - ஜெயிலர் சஸ்பெண்ட்

    மதுரையில், பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில். மத்திய சிறை உதவி ஜெயிலர் பாலகுருசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மதுரை மத்திய சிறைத்துறை கண்காணிப்பாளர் இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.



  • Dec 22, 2024 08:37 IST
    தமிழகத்தில் இயல்பை காட்டிலும் அதிக மழை: வானிலை மையம் தகவல்!

    தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை, இயல்பை காட்டிலும் அதிக மழையை தந்துள்ளது. சராசரியாக 42 சென்டிமீட்டர் மழைப் பதிவாகும் சூழலில் நேற்று வரை 57 சென்டிமீட்டர் வரை மழைப்பதிவாகியுள்ளது. அக். 1 முதல் டிச. 21 வரை கணக்கீட்டின்படி, தமிழகத்தில் இயல்பை விட 34 சதவீதம் மழைப்பொழிவு அதிகம் என வானிலை மையம் அறிவித்துள்ளது.



  • Dec 22, 2024 08:09 IST
     மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,886 கன அடியாக சரிவு 

     மேட்டூர் அணைக்கு இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 119.22 அடியாக உயர்வு. நீர் இருப்பு 92.232 டி.எம்.சி.யாக உள்ளது. டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீரும் கிழக்கு, மேற்கு கால்வாய் மூலம் விநாடிக்கு 300 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.



  • Dec 22, 2024 08:08 IST
    பி.எஸ்.எல்.வி சி-60 ராக்கெட்டை வரும் டிசம்பர் 30-ந் தேதி விண்ணில் ஏவ இஸ்ரோ முடிவு

    பி.எஸ்.எல்.வி சி-60 ராக்கெட்டை வரும் டிசம்பர் 30-ந் தேதி விண்ணில் ஏவ இஸ்ரோ முடிவு செய்துள்ளது. எஸ்.டி.எக்ஸ் 1, எஸ்.டி.எக்ஸ் 2 தலா 220 கிலோ எடை கொண்ட, 2 சிறிய செயற்கைகோள்களை இந்த ராக்கெட் சுமந்து செல்கிறது.



  • Dec 22, 2024 08:04 IST
    சிறுமிக்கு பாலியல் தொல்லை: வீட்டை கொளுத்திய பெற்றோர், உறவினர்கள்

    தெலங்கானா மாநிலம் குடிஹத்னூரில் சிறுமியை வீட்டிற்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரால் அதிர்ச்சி அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், உறவினர்கள், இளைஞரின் வீட்டை தீ வைத்து கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



  • Dec 22, 2024 07:31 IST
    சென்னயைில் இருந்து கன்னியாகுமரி சென்ற ஆம்னி பேருந்து விபத்து

    சென்னையில் இருந்து கன்னியாகுமரி சென்ற, ஆம்னி பேருந்து கடலூர் மாவட்டம், ராமநத்தம் அருகே, சாலைத்தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 30-க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.



  • Dec 22, 2024 07:24 IST
    சென்னயைில் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க செயற்குழு கூட்டம்

    முதல்வர் ஸ்டாலின் தலைமையில், சென்னையில் இன்று தி.மு.க செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் 2026 சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • Dec 22, 2024 07:23 IST
    திமுக சார்பில் சென்னையில் கிறிஸ்துமஸ் விழா

    சென்னை பல்லாவரத்தில் திமுக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில், சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி 1,000 பேருக்கு புத்தாடை, கேக், பிரியாணி வழங்கி கொண்டாடினார்.



  • Dec 22, 2024 07:22 IST
    புயல் எச்சரிக்கை தளர்வு: வானிலை ஆய்வு மையம் தகவல்

    வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், வலுவிழந்ததை தொடர்ந்து 9 துறைமுகங்களில் ஏற்பட்ட 1ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டை இறக்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.  சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் மற்றும் தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் ஏற்றப்பட்ட 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டினை இறக்கிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது



Tamil News Live Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment