/tamil-ie/media/media_files/uploads/2020/12/kamal-haasan.jpg)
Tamil news : மதுரை பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. போட்டியானது காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிவரை நடைபெறுகிறது ஜல்லிக்கட்டு போட்டியில் 800 காளைகள், 651 காளையர்கள் பங்கேற்பு
நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை நாகை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு.
பொங்கல் பண்டிகையின் இரண்டாவது நாளான இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.வேளாண்மைக்கு முக்கியமான சூரிய பகவானை வழிபடும் விதமாக தை முதல் நாளில் தைப் பொங்கல் வைத்து கொண்டாடுகின்றனர்.
பொங்கல் பண்டிகையின் இரண்டாவது நாள் மாட்டுப் பொங்கல் விழாவாக கொண்டாடப்படும்.வேளாண்மை தொழிலில் விவசாயிகளுக்கு உறுதுணையாக இருப்பவை கால் நடைகள். அவ்வகையில் தங்கள் தொழிலுக்கும் வாழ்க்கைக்கும் உதவும் கால்நடைகளைசிறப்பித்து வழிபாடு செய்யும் விதமாக, மாட்டுப் பொங்கல் இன்று விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போரால் கொண்டாடப்படுகிறது
Live Blog
Tamil News Updates : அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த நேரலையில் எங்களுடன் இணைந்திருங்கள்.
ஜெயலலிதாவிற்காக கட்டப்பட்ட கோவில் ,அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்பு வழிபாடு.
கேரளாவில் மேலும் 5,490 பேருக்கு கொரோனா, 3 பேருக்கு உருமாறிய கொரோனா தமிழகத்தில் மேலும் 665 பேருக்கு கொரோனா,பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்தது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது குடும்பத்துடன் மாட்டு பொங்கல் விழாவை கொண்டாடினார்.
ஞானதேசிகன் அவர்களின் மறைவு அவர் குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினருக்கும் பேரிழப்பாகும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்தார்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசன் தனது ட்விட்டர் குறிப்பில், " மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளிபாய்ச்ச போராடிய மார்ட்டின் லூதர் கிங்கின் பிறந்தநாளில் இது நிகழ்ந்திருக்கிறது " எனத் தெரிவித்தார்.
தலைநகர் தில்லியில் விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே இன்று நடைபெற்ற 9வது சுற்று பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு
தமிழர்களின் சிறப்புமிக்க நாளான திருவள்ளுவர் தினத்தில் அறம்,பொருள், இன்பமோடு மனித வாழ்வியலை கூறும் உலகப் பொதுமறையாம் திருக்குறளை அருளிய வள்ளுவப் பெருந்தகை திருவள்ளுவரை போற்றி வணங்கி, அவர் காட்டிய அறவழியினைப் பின்பற்றுவோம் என துணை முதல்வர் ஒ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கியதன் வாயிலாக போக்குவரத்து கழகங்களுக்கு 5 கோடியே 46 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவள்ளுவர் தினத்தில் புகழ்பெற்ற திருவள்ளுவருக்கு எனது அஞ்சலி. சமூகம், அரசியல், தத்துவம், ஆன்மீகம் ஆகியவற்றில் காலந்தொட்டு பலதரப்பட்ட மக்களை அவர் கருத்தால் கவர்ந்துள்ளார். நமது தமிழ் இலக்கியத்திற்கு திருவள்ளுவர் செய்த பங்களிப்புக்காக அவர் என்றென்றும் நினைவு கூறப்படுவார்.
இந்திய ராணுவ தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்திய ராணுவ வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்
தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திரு ஞானதேசிகன் காலமானார் என்ற செய்தியறிந்து துயருற்றேன். பழகுவதற்கு இனிய பண்பாளர். கண்ணியமான அரசியல் தலைவரென எல்லோராலும் பாராட்டப்பட்டவர். அவரது மறைவு தமிழ்நாட்டுக்கு இழப்பு. அவருக்கு என் அஞ்சலி
வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசுக்கும் விவசாயிகள் சங்க பிரநிதிகளுக்கும் இடையிலான ஒன்பதாவது சுற்று பேச்சுவார்த்தை தற்போது புது தில்லியில் நடைபெற்று வருகிறது.
த.மா.கா துணை தலைவரும் கலைஞரின் நெருங்கிய நண்பருமான ஞானதேசிகன் அவர்கள் மறைவெய்தியதை அறிந்து மிகுந்த மனவேதனைக்குள்ளானேன்.
இந்திய, தமிழக அரசியலில் பெரும்பங்காற்றிய அவர் நம் நெஞ்சங்களில் என்றும் நீங்கா இடம் கொண்டவர்.
அவரை பிரிந்து வாடும் உற்றார் உறவினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.
தஞ்சையில் தொடர் மழையால் கம்மாய் உடைந்ததில், விவசாய நிலங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் நாசமாகின.
41 திரிணாமுல் எம்எல்ஏக்கள் பாஜகவில் சேர ரெடியாக உள்ளதாகவும், இதனால் மம்தா ஆட்சி கவிழும் எனவும் - மேற்குவங்க பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.
மதுரை பாலமேட்டில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டி அரை மணி நேரம் நீட்டிக்கப்பட்டு மாலை 4.30 மணி வரை நடைபெறும் என அறிவிப்பு
தலைவர்கள் தவறான முடிவு எடுக்கும்போது இது சரிவராது என தைரியமாக கூறியவர் ஞானதேசிகன் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இரங்கல்
யாருடைய மனதும் புண்படாமல் பேசும் பண்பாளர் ஞானதேசிகன் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் இரங்கல்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் மறைவுக்கு த.மா.க. தலைவர் ஜி.கே.வாசன் இரங்கல்
தியேட்டர்களில் "50% இருக்கை அளவை மீறினால் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என " காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
"ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரருக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்க பரிசீலனை"செய்யப்படும் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தகவல் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவராக இருந்தவரும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பி.எஸ் ஞானதேசிகன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவராக இருந்தவரும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பி.எஸ் ஞானதேசிகன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.
வைத்திலிங்கம் எம்.பி தஞ்சை வரகூரில் பேருந்து மீது மின்சாரம் பாய்ந்து பலியான 4 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.5 லட்சம் நிதிக்கான காசோலையை வழங்கினார்.
'கொங்கு மண்டலத்தில் ஆர்டர்கள் இருந்தும், போதிய தொழிலாளர்கள் இன்றி தொழில்துறையினர் தவித்து வரும் நிலையில், 'ஊரடங்கால் வெளியேறிய வட மாநில தொழிலாளர்களை மீண்டும் அழைத்து வர அரசு உதவ வேண்டும்' என நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன்
சீன ஆன்லைன் கந்துவட்டி செயலி விவகாரத்தில், சீனா தப்பி சென்றவரை பிடிக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்அவுட் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ள நிலையில், இந்த முறைகேட்டில் மூளையாக செயல்பட்ட ஹாங்க், சிங்கப்பூர் வழியாக சீனா தப்பியதாக தகவல் தகவல் வெளியாகியுள்ளது.
இளைஞர்கள் அனைவரும் திருக்குறளை படிக்க வேண்டும் என குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தள்ளார்.
உலக புகழ்ப்பெற்ற நாகை நாகூர் தர்காவின் 464-ஆம் ஆண்டு கந்தூரிவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிராத்தனைகள் மற்றும் வழிப்பாட்டலுடன் தொடங்கியது.
தமிழக கடலோரப் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மழைக்கு வாய்ப்பு. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என அறிவிப்பு.
ஆஸி.க்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி நடராஜன் அபாரம். ஆஸ்திரேலியாவின் மேத்யூ வேட், லபுஷேன் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி வீரர்களின் பாராட்டுக்களை பெற்றார்.
மாட்டுப்பொங்கல் திருநாளில் உழவு செழிக்கட்டும், உழவர் மகிழட்டும் என தமிழக மக்களுக்கு முதல்வர் பழனிசாமி ட்வீட்.
தமிழ்நாடு வட்டத்திற்குட்பட்ட அஞ்சல் அலுவலக தேர்வுகளை தமிழிலும் எழுதலாம் எம்.பி. சு.வெங்கடேசன் கேள்விக்கு மத்திய அரசு பதில் . அதே போல் தமிழில் "ரயில் தபால் சேவை கணக்கர் தேர்வும் தமிழிலும் நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதிலும் வாழும் இளைஞர்கள் திருக்குறளை படிக்க வேண்டும் - பிரதமர் மோடி தமிழில் ட்வீட்
பொங்கலுக்கு பிறகு மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்துள்ளார்கள் அதிமுக - பாமக. வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் அரசு என்ன முடிவெடுக்கப்போகிறது என்பது தெரியவில்லை. அதைப்பொறுத்தே அடுத்த கட்ட பேச்சுவார்த்தை அமையும். அதன் பிறகே அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணி உடன்பாடு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.