Tamil News : பிப்ரவரி 14-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, வண்ணாரப்பேட்டையிலிருந்து விம்கோ நகர் வரை 9 கி.மீ முதலாம் கட்டம் விரிவாக்க திட்டம் திறக்கப்பட்ட பின்னர், பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் மதியம் 2 மணி முதல் இரவு 11 மணி வரை இலவச பயணம் செய்யலாம்.
விருதுநகர், சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
விபத்து குறித்து ட்விட்டரில் பிரதமர் மோடி, இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு, தலா 2 லட்சம் ரூபாய் பிரதமரின் நிவாரண நிதியும், படுகாயமடைந்தோருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியும் வழங்கப்படும், என பிரதமர் அறிவித்துள்ளார்.
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நிலை நன்றாக உள்ளதால், தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, பிரச்சாரத்தில் ஈடுபடுவார் எனக்கூறிய பிரேமலதா, இனி ஊடக விவாதங்களில் தேமுதிக நிர்வாகிகள் பங்கேற்பர் எனவும் தெரிவித்தார் . தேமுதிக தனித்து போட்டியிட்டால் , 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்ற பிரேமலதா விஜயகாந்த், சசிகலாவை சந்திக்கும் திட்டம் ஏதும் இல்லை எனவும் தெரிவித்தார்.
விநோத நோயால் பாதிக்கப்பட்ட 5 மாத குழந்தை டீரா மருந்துக்கான இறக்குமதி வரியை தள்ளுபடி செய்த மத்திய அரசு.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்பி தினேஷ் திரிவேதி ராஜினாமா. மேற்கு வங்கத்தில் நடைபெறும் வன்முறை காரணமாக பதவியை ராஜினாமா செய்வதாக மாநிலங்களவையில் அறிவிப்பு
Tamil News : சமூக வலைதளங்களில் வெறுப்புணர்வை தூண்டும் கருத்துக்களை தடுக்க கோரிய வழக்கில் டுவிட்டர் நிறுவனம் மற்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்தியா? 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Web Title:Tamil news live modi in chennai sathur fire accident valentins day admk dmk tamil news
நாட்டில் அனைத்து பயணியர் ரயில்களையும் இயக்குவது குறித்து இதுவரை முடிவெடுக்கவில்லை என்று ரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நாளை நான் சென்னையில் இருப்பேன். நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவது, நகர்ப்புற இணைப்பு, பாதுகாப்புத் துறையில் ஆத்மநிர்பார்தா ஆகியவை இந்தத் திட்டங்களின் மையமாக உள்ளது எனப் பிரதமர் நரேந்திர மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார்.
நடிகை ஓவியா பயன்படுத்திய #GoBackModi ஹேஷ்டேக் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டில் எஸ்சி பட்டியலில் உள்ள அருந்ததியர், தேவேந்திரகுல வேளாளர் என்ற இரு பிரிவுகளைச சேர்ந்த 14 சாதிகள் போக மற்ற 60 சாதிகளை ஆதிதிராவிடர் என்ற ஒரே பெயரில் அறிவிக்க திமுக தலைவர் அவர்கள் வாக்குறுதி அளிக்கவேண்டும் என விழுப்புரம் பாராளுமன்றத் தொகுதி உறுப்பினர் ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தொல்லியல் துறை சார்பில் சிவகங்கை மாவட்டம், கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மணலூர், கொந்தகை மற்றும் அகரம் ஆகிய இடங்களில் ஏழாம் கட்டமாக தமிழ்நாடு அரசின் தொல்லியல் அகழாய்வுப் பணிகளை காணொலிக் காட்சி மூலமாக முதல்வர் துவக்கி வைத்தார்.
மாணவர்களின் நலன் சார்ந்த விஷயத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அதன் பிடிவாதத்தைத் தளர்த்திக் கொண்டு உச்ச நீதிமன்றத்தை அணுகி கூடுதல் அவகாசம் பெற்று மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தமிழக அரசே உச்ச நீதிமன்றத்தை அணுகி கூடுதல் கால அவகாசம் பெற்று இரு எம்.டெக்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அடுத்த ஒரு மாதத்திற்குள் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்'' என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார்.
இருந்தும் தடுப்பூசி மருந்துகளை அனுப்பிய பிறகு, அந்தந்த மாநில அரசும், சுகாதரத்துறையும் அதன் தேவை முன்னுரிமை வாய்ப்புப்படி பயன்படுத்திடும் உரிமையை மத்திய அரசு அனுமதித்திருந்தால் இந்த13,190 தடுப்பூசிகள் - வீணாகியிருக்குமா? இதற்குக் காரணம் ஆட்சியாளரின் அணுகுமுறையில் உள்ள கோளாறுகளே!எங்களைப் போன்ற மூத்த குடி மக்கள் பலரும் பதிவு செய்து பல வாரங்கள் காத்திருப்பு ஒருபுறம் - வீணாகும் தடுப்பூசிகள் இன்னொருபுறம் என்பது நியாயந்தானா? இப்போதாவது விண்ணப்பித்த மூத்த குடியினருக்குக் கொரோனா தடுப்பூசி போடுவதை அனுமதித்து, தாமதிக்காமல் செயல்படுவது நல்லது; யோசிக்குமா அரசு?
விண்ணப்பித்த மூத்த குடியினருக்குக் கொரோனா தடுப்பூசி போடுவதை அனுமதித்து, தாமதிக்காமல் செயல்படுத்த வேண்டும் என்று திராவிட கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ' தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் இன்று ஒரு தகவலைக் கூறியிருக்கிறார். கொரோனா தடுப்பூசி என்பதை உடனடியாகப் பயன்படுத்தாவிட்டால் அது வீணாகி பயனற்றுப் போய் விடும் என்பது மருத்துவத்துறையும், ஆட்சியாளரும் அறிந்ததே! தமிழ்நாட்டில் 13,190 தடுப்பூசிகள் உடனடியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்குப் போடப்பட முடியாததால் இதுவரை பயனற்றுப் போய் உள்ளன என்பது மிகவும் அதிர்ச்சிக்கும், வருத்தத்திற்கும் உரியதல்லவா? மத்திய அரசிடம் வயதான மூத்தகுடி மக்களுக்குப் தடுப்பூசி போடுவதற்கு அனுமதி கேட்டுள்ளோம் என்று கூறியுள்ளார் சுகாதாரத்துறை செயலாளர். இந்தத் துறை Concurrent List என்ற ஒத்திசைவுப் பட்டியலில் மத்திய, மாநில அரசுகள் இரண்டுமே அதிகாரம் பெற்ற துறையாகும்.
வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை நீட்டிக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் திட்டத்தை நாளை பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருக்கிறார்.
ஆனால், மெட்ரோ ரயில் திட்டப் பணிகளில் குறிப்பாக, தண்டையார்பேட்டை காலரா மருத்துவமனை அருகில் எந்த வேலையும் நடைபெறவில்லை. தியாகராயா கல்லூரி முதல் தண்டையார்பேட்டை வரை பூமிக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் பாதைக்கு மேல்புறத்தில் எந்தவொரு பணிகளும் முழுமை அடையவில்லை.
மேலும், ரயில் நிலையங்களில் படிக்கட்டு வசதிகள் செய்வதில் 80 சதவிகிதப் பணிகள் முழுமை பெறவில்லை. மேலும், ராயபுரம், ஆர்.கே.நகர், திருவொற்றியூர் பகுதி மக்கள் மிகவும் பின்தங்கிய தினக் கூலி தொழிலாளர்கள். ஆகவே, ஐம்பது சதவிகித கட்டணச் சலுகை வழங்க வேண்டும். அப்படி வழங்கினால் மட்டுமே மெட்ரோ ரயிலில் பயணிக்க இயலும். இல்லாவிடில் மெட்ரோ ரயில் இந்தப் பகுதி மக்களின் பயணத்திற்கு உதவாமல் வெறும் காட்சிப் பொருளாகவே இருக்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.
சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உதவி கோரி விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ஒருங்கிணைந்த சிறப்பு வரன்முறைத் திட்டத்தின் கீழ், 9 பயனாளிகளுக்கு தமிழ்நிலம் இணைய முகப்பு வாயிலாக இணையவழி வீட்டுமனைப் பட்டாக்களை முதல்வர் வழங்கி, துவக்கி வைத்தார்.
கீழடியில் இன்று 7 ஆம் கட்ட அகழாய்வு தொடங்குகிறது. 6 ஆண்டுகளாக கீழடி யை பெரும்மக்கள் இயக்கமாக முன்னெடுத்துக் கொண்டிருக்கிறோம். எங்களின் பேரடையாளத்தை அழிக்க நினைக்கும் அரசியலுக்கு எதிரான அறச்சீற்றமே கீழடி அகழாய்வு இயக்கம். எத்தனை தடை வரினும் அவற்றினை உடைத்து முன்னெடுத்து செல்வோம் என மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்தார்.
ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு சீர்திருத்தத்தை மேற்கொண்டதால், பஞ்சாப் மாநிலத்திற்கு கூடுதலாக ரூ.1,516 கோடி கடன் பெற மத்திய அரசு ஒப்புதல்
சரக்கு போக்குவரத்து மூலமான ரயில்வே வருவாய், கடந்த நிதியாண்டை விட நடப்பு நிதியாண்டு பிப்ரவரி 12ஆம் தேதிக்குள்ளாகவே அதிகரித்துள்ளது, கோவிட் வேளையிலும் இந்த சாதனை எட்டப்பட்டுள்ளது என்று அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு Tab வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
சாத்தூர் அருகே அச்சன் குளத்தில் நடைபெற்ற பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பெண்கள் உட்பட 19 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்த 3 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு தற்போது பிரேத பரிசோதனை தொடங்கப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து உயிரிழந்த தொழிலாளர்களின் உறவினர்கள் கிராமப் பகுதியில் இருந்து சிவகாசி அரசு மருத்துவமனைக்கு படையெடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் சிவகாசி நகரின் முக்கிய சாலைகள் மற்றும் சிவகாசி அரசு மருத்துவமனை வளாகம் முழுவதும் பாதுகாப்புக்காக நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு நிதியமைச்சர் உரையில் எந்த பதிலும் இல்லை என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்
புதிய வேளாண் சட்டங்களால் பசி, வேலைவாய்ப்பின்மை, தற்கொலை போன்றவை அதிகரிக்கும் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூறியுள்ளார்.
சென்னையில் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 161 (231) ரன்களுக்கு ஆட்டமிழந்தார்
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: “தமிழகத்தில் நிதி வசூலிக்கும் ஒரே கட்சி மதிமுகதான். தமிழகத்தில் மற்ற கட்சிகளுக்கு நிதி தேவையில்லை, அவர்களிடம் பணம் குவிந்துள்ளது. சட்டமன்ற தேர்தலில் குறைந்த இடங்களே நமக்கு கிடைக்க கூடும், அதைபற்றி தொண்டர்கள் கவலைப்பட வேண்டாம். பொதுத்தேர்தல் முடிந்ததும் கட்சியின் பொதுக்குழுவை கூட்டி முக்கிய முடிவை அறிவிக்க இருக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான உயர் மட்டக் குழு, 2020ம் ஆண்டில் இயற்கை பேரிடர்களை சந்தித்த தமிழகம் உள்பட 5 மாநிலங்களுக்கு ரூ.3,113 கோடி பேரிடர் நிவாரணமாக அளிக்க சனிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
தென்மேற்கு பருவமழையின் போது ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்காக ஆந்திரா ரூ.280.78 கோடியும், பீகார் ரூ.1,255.27 கோடியும் பெறும்.
தமிழகம் ‘நிவர்’ புயல் பாதிப்புக்காக ரூ.63.14 கோடியும், ‘புரெவி’ புயல் பாதிப்புக்கு ரூ.223.77 கோடியும் பெறும். இதன் மூலம் தமிழகத்துக்கு மொத்தம் ரூ.286.91 கோடி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிவர் புயல் பாதிப்புக்காக புதுச்சேரி யூனியன் பிரதேசம் ரூ.9.91 கோடி பெறும்.
காரீப் பருவத்தில் பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்ட மத்திய பிரதேசம் ரூ.1,280.18 கோடி பெறும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 19 பேர் உயிரிழந்த சம்பவத்தில் பட்டாசு ஆலை குத்தகைதாரர் பொன்னுசாமியை போலீசார் கைது செய்தனர். மேலும், 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மநீம தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “அன்றாடம் செத்துப் பிழைக்கும் தொழிலாகத்தான் பட்டாசுத் தொழிலாளர்களின் வாழ்வு இருந்தது; தொழிலாளர்களின் பாதுகாப்பை நாம் எப்போது உறுதி செய்யப்போகிறோம்? உயிரிழந்தோ ஓலம் தேர்தல் பிரச்சார இரைச்சலில் அடங்கி விடக்கூடாது.” என்று தெரிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்: “தவறான தகவல்களைப் பரப்புவதையே ராகுல் காந்தி வழக்கமாகக் கொண்டுள்ளார். நாங்கள் முதலாளிகளுக்காக பணியாற்றவில்லை, மக்களுக்காக பணியாற்றுகிறோம்” என்று கூறினார்.
சென்னையில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றுவரும் 2வது டெஸ்ட் போட்டியில், ரோகித் சர்மா சதம் விளாசினார். 130 பந்துகளில் 14 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடித்து 100 ரன்களை கடந்தார்.
அமமுக - அதிமுக இணைப்பு அதிமுகவின் உட்கட்சி விவகாரம் - பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, “அமமுக - அதிமுக இணைப்பு என்பது அதிமுகவின் உட்கட்சி விவகாரம். பிரதமர் மோடி தமிழகம் வருவது அரசு நிகழ்ச்சிக்காக மட்டுமே, அதில் அரசியல் குறித்து பேசப்படாது. பிரதமர் மோடி ஆட்சியில், தமிழகத்தில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், நீங்கள் பாஜகவுக்கு ஒரு எம்.பி., எம்.எல்.ஏ., கூட கொடுக்கவில்லை; இது நியாயமா?” என்று கேள்வி எழுப்பினார்.
தஞ்சையில் இன்று 220 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அதில், 3 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 2 மணி நேரத்தில் மயக்கம் ஏற்பட்டுள்ளது. மயக்கம் அடைந்த 3 பேரும் உடனடியாக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 615 மையங்களில் 2-ம் கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. முதற்கட்ட பணிகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், இன்று முதல் 2-ம் கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
தேமுதிக கொடி நாளையொட்டி நேற்று ஊர்வலம் சென்ற 200-க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா விதிமுறை மீறல் எனற அடிப்படையில் காவல்துறையினர்நடவடிக்கை.
உலக வானொலி தினத்தையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைத்து வானொலி பயன்பாட்டாளர்கள் மற்றும் அதனை உயிர்ப்புடன் வைத்திருப்பவர்களுக்கு பாராட்டுகள் எனவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
விருதுநகர், சாத்தூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்து தொடர்பாக மேலும் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுல்லது. வெடிவிபத்து தொடர்பாக இதுவரை உரிமையாளர், குத்தகைதாரர்கள் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 64 காவலர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் : ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துல்ளது.
.16.34 லட்சம் விவசாயிகளின் ரூ.12,110 கோடி பயிர்க் கடன் தள்ளுபடி என சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்திருந்த நிலையில், பயிர்க் கடன் தள்ளுபடிக்கான ரசீதை விவசாயிகளுக்கு வழங்குவதை முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்