Tamil News : மெல்போர்னில் நடைபெற்று வந்த இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் டெஸ்ட் தோல்விக்கு ஆஸ்திரேலியாவை பழி தீர்த்துள்ளது.
தமிழகத்தில் வரும் 2021-ம் ஆண்டு நடைபெறவுள்ள நட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதில் கடந்த வாரம் தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் பிரச்சாரத்தை தொடங்கி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று நாமக்கல் மாவட்டத்தில் தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு வரும் ஜனவரி 31-ந் தேதி வரை நீடிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசரிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், விவசாயத்தை தனியார்மயமாக்க மத்திய அரசு முயற்சித்து வருவதாக தி.மு.க இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம் நடத்த தீட்சிதர்கள் முடிவு செய்துள்ளனர். மேலும் நடராஜர் கோவிலில்இ-பாஸ் நடைமுறைக்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தஞ்சை பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள மக்கள் நீதிமய்ய கட்சி தலைவது கமல்ஹாசன் அரசுக்கு மதுக்கடைகள் திறக்கவே அதிக ஆர்வம் என தெரிவித்துள்ளார்.
Live Blog
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த நேரலையில் எங்களுடன் இணைந்திருங்கள்
பிராத ஸ்டுடியோ நிர்வாகத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கண்டனம் தெரிவத்தார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "இசைஞானி அறையின் பூட்டை உடைத்து உடைமைகளை அப்புறப்படுத்தியுள்ளனர். சமூகத்தில் அவருக்குள்ள நன்மதிப்பைக்கூட கணக்கில் கொள்ளாமல் அவரை அவமதித்திருப்பது அநாகரித்தின் உச்சம். இவரால்தான் அந்த ஸ்டுடியோவுக்குப் பெருமை என்பதை மறந்துசெய்த நன்றி கொன்ற இழிசெயல்" என்று தெரிவித்தார்.
ஒடிஸா மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும், அரசு ஊழியர்களும் வருடாந்திர சொத்துக்கணக்கை சமர்ப்பிப்பதை அம்மாநில அரசு கட்டாயமாக்கியுள்ளது.
முதலமைச்சர் திரு நவின்பட்நாயக் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.
Guruve, The decision you’ve taken is 100% right 🙏@rajinikanth pic.twitter.com/2FwLvELrTF
— Raghava Lawrence (@offl_Lawrence) December 29, 2020
குருவே, உங்களின் முடிவு 100% சரியான முடிவு என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்தார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் மத சுதந்திரம் தொடர்பான அவசர சட்டத்திற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு நரோத்தம் மிஸ்ரா, இந்த அவசர சட்டம் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறினார்.
I am aware of the severe unhappiness Rajini sir’s heart will be in right now. My whole hearted support to sir on his decision. @rajinikanth
— Arjunamurthy Ra (@RaArjunamurthy) December 29, 2020
ரஜினிகாந்த் அவர்களின் இதயம் இப்போது எவ்வாறு மகிழ்சியற்று இருக்கும் என்பதை நான் அறிவேன். அவரது முடிவினை முழு மனதுடன் வரவேற்கிறேன் என அர்ஜுன மூர்த்தி தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் கிராமத்தில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளி சாமுவேலுக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பை பா.ம.க. வரவேற்கிறது. தெய்வமாக பார்க்கப்பட வேண்டிய குழந்தையை சீரழித்து படுகொலை செய்தவன் மன்னிக்கப்படுவதற்கு தகுதி இல்லாதவன்; தூக்குத்தண்டனை கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு என்றாலும் இத்தகைய குற்றவாளிக்கு இதுவே சரியான தண்டனை; இதுவே சரியான நீதி என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.
கடந்த ஜூன் 30-ஆம் தேதி நடந்த இந்த குற்றம் தொடர்பான வழக்கை விரைந்து விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதியும், அவருக்கு துணை நின்ற வழக்கறிஞர்கள் மற்றும் காவல்துறையினரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். இத்தகைய வழக்குகளில் விரைவான தண்டனையே சரியான நீதி!
இந்தியத் திரையுலகின் சிறந்த திரைக்கலைஞர் ஐயா ரஜினிகாந்த் அவர்கள், தனது உடல்நலனைக் கருத்திற்கொண்டு எடுத்துள்ள முடிவை முழுமையாக வரவேற்கிறேன். அவர் முழு உடல்நலம் பெற்று, கலையுலகப் பயணத்தைத் தொடர எனது வாழ்த்துகளையும், பேரன்பையும் தெரிவிக்கின்றேன்!
ஆன்மிகத்தை விரும்புவார், அரசியலை விரும்பமாட்டார். 30 ஆண்டுகால கேள்விக்கு இன்று விடை கிடைத்துள்ளது ரஜினிகாந்த் விஷயத்தில் பாஜக மாபெரும் தோல்வியை தழுவியுள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
அஇஅதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக தொடர்ந்து நீடிப்பதாகவும் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் முடிவு செய்வார்கள் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
என் ரஜினி நலமாக இருக்க வேண்டும். எங்கிருந்தாலும் நலமாக வாழ வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவத்தார்.
#என்_ரஜினி நலமாக இருக்க வேண்டும்
எங்கிருந்தாலும் நலமாக வாழ வேண்டும் - @ikamalhaasan pic.twitter.com/UhfucjPijQ
— Sugashini Kandasamy (suகா) (@sugashinik) December 29, 2020
Tamil Just In :ரஜினியின் அரசியல் வாபஸ் குறித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கருத்துக்கள் நிலவி வரும் நிலையில், அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்கள் சந்திப்பில், நாங்கள் நல்லது செய்கிறோம், அதனால் அவரின் ஆதரவு எங்களுக்கு எப்போதும் உண்டு என தெரிவித்துள்ளார்.
Tamil News Live : ரஜினி அரசியல் கட்சி தொடங்கவில்லை என அதிரடி அறிவிப்பை வெளியிட்டதை தொடர்ந்து, தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 'ரஜினி கட்சி தொடங்கவில்லை என்பது இப்போதுதான் எனக்கே தெரியும்'' என அவரது சகோதரர் சத்ய நாராயணா தெரிவித்துள்ளார்.
Live News Tamil: ரஜினி தனது அரசியல் அறிவிப்பை வாபஸ் பெற்றதை தொடர்ந்து, அவரது முடிவுக்கு பல வகையில் கருத்துக்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், ரஜினி 1996-ல் இருந்தது போல் வாய்ஸ் அரசியலில் ஈடுபடுவார் என ஆடிட்டர் குருமூர்த்தி கருத்து தெரிவித்துள்ளார்.
Tamil Just Now : ரஜினிகாந்த தனது அரசியல் அறிவிப்பை வாபஸ் பெற்றதை தொடர்ந்து, தமிழகத்தில் பெரும் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ஆதாயம் தேடும் அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே ரஜினியின் முடிவு பிரச்சனை என்று மூத்த பத்திரிக்கையாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Tamil News Live : அரசியல் அறிவிப்பை வாபஸ் பெற்ற ரஜினிகாந்த, தனது அறிக்கையில், நான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது ஆண்டவன் எனக்கு கொடுத்த எச்சரிக்கையாகத்தான் பார்க்கிறேன். என்னை நம்பி வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.
today latest live news : இம்மாத இறுதியில் கட்சி தொடங்குவதாக அறிவித்த நடிகர் ரஜினிகாந்த, கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஹைதராபத் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது கட்சி தொடங்கவில்லை என அறிவித்து அரசியல் அறிவிப்பை வாபஸ் பெற்றுள்ளார்.
டெல்லியில் தேசிய பொது பயண அட்டையின் சேவையைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். அட்டையைக் கொண்டு விமான நிலைய மார்க்கத்தில் இயங்கும் மெட்ரோ ரயிலின் எக்ஸ்பிரஸ் சேவையைப் பயன்படுத்தலாம் . டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயண அட்டை மூலம் பிற மார்க்க மெட்ரோ ரயில்களிலும் பயணிகள் பயணிக்கலாம். வாகன நிறுத்த கட்டணம், மெட்ரோ ரயில் நிலைய கடைகளில் பொருள்களை வாங்கவும் பொது அட்டையைப் பயன்படுத்தலாம்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights