இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைககு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 200 நாட்களுக்கு மேலாக மாற்றம் இல்லாத பெட்ரோல் டீசல் விலை இன்றும் மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ100.90-க்கும் டீசல் ரூ92.49-க்கும், கேஸ், ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்: 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீரிருப்பு 2401 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீரிருப்பு 113 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீரிருப்பு 303 மில்லியன் கன அடியாக உள்ளது.
-
Nov 14, 2024 22:02 ISTவிழுப்புரத்தில் சிக்கிய யானை தந்தத்தால் செய்யப்பட்ட 4 சிலைகள்; 12 பேர் கைது
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே இருந்த லாட்ஜில் யானை தந்தத்தால் செய்யப்பட்ட 4 சிலைகள் சிக்கின. தஞ்சாவூரில் இருந்து ரூ. 6 கோடி மதிப்புள்ள 4 யானை சிலைகளை விற்க காரில் கொண்டு வந்தபோது சிலைகள் பறிமுதல் செயப்பட்டது. இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். யானை தந்தத்தால் செய்யப்பட்ட 4 சிலைகளை பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து, 12 பேரை கைது செய்தனர்.
-
Nov 14, 2024 21:21 ISTசர்வாதிகாரம் இல்லாமல் எந்த ஒரு செயலையும் சரி செய்ய முடியாது - சீமான்
நெல்லையில் நாம் தமிழர் கட்சிக் கூட்டத்தில் பேச அனுமதி மறுத்ததாக நிர்வாகிகள் கூறியது குறித்த கேள்விக்கு நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சிமான் கூறுகையில், “சர்வாதிகாரம் இல்லாமல் எந்த ஒரு செயலையும் சரி செய்ய முடியாது ; கட்சி என்றால் ஒரு விதிமுறை உள்ளது; அதற்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும்” என்று கூறினார்.
-
Nov 14, 2024 21:11 ISTகுன்றத்தூர் அருகே வீட்டில் எலி மருந்து நேடி பரவி 2 குழந்தைகள் பலி - பெஸ்ட் கண்ட்ரோல் ஊழியர் கைது
சென்னை குன்றத்தூர் அருகே எலி மருந்தின் நெடி வீட்டினுள் பரவி 2 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் தனியார் பெஸ்ட் கண்ட்ரோல் (Pest Control) நிறுவனத்தின் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
Nov 14, 2024 21:09 ISTவிழுப்புரத்தில் சிக்கிய யானை தந்தத்தால் செய்யப்பட்ட 4 பொம்மைகள் - 12 பேரிடம் வனத்துறையினர் விசாரணை
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே இருந்த லாட்ஜில் யானை தந்தத்தால் செய்யப்பட்ட 4 பொம்மைகள் சிக்கின. இது குறித்து 12 பேரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.பொம்மைகளை பேரம் பேசி விற்கும் போது பிடிபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
Nov 14, 2024 20:42 ISTபேரிடரில் சிக்கிய வயநாட்டு மக்களுக்கு உதவ பா.ஜ.க மறுப்பு - பிரியங்கா காந்தி
காங்கிரஸ் பொதுச் செயலாளர்பிரியங்கா காந்தி: “பேரிடரில் சிக்கிய வயநாட்டு மக்களுக்கு நிதியுதவி அளிக்க பா.ஜ.க அரசு மறுக்கிறது; நிலச்சரிவு பாதிப்புகளைப் பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்தும் நிவாரண உதவி தர மறுக்கிறார்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
-
Nov 14, 2024 20:03 ISTதமிழகத்தில் 32 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 32 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Nov 14, 2024 19:15 ISTஆம்பூரில் பிரசவத்திற்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு
ஆம்பூரில் பிரசவத்திற்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்தார். இதனால், மருத்துவமனையில் முறையான மருத்துவம் அளிக்கவில்லை என உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
-
Nov 14, 2024 19:11 ISTகரூரில் பேருந்து கூண்டு கட்டும் நிறுவனத்தில் தீ விபத்து; ஒருவர் பலி
கரூரில் பேருந்து கூண்டு கட்டும் நிறுவனத்தில், புதியதாக கூண்டு கட்டி முடிக்கப்பட்ட ஒரு பேருந்தின் இறுதிக்கட்டப் பணியின்போது பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார்.
-
Nov 14, 2024 18:37 ISTமருத்துவமனைகளில் தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை; டி.ஜி.பி உத்தரவு
மருத்துவமனைகளில் தாக்குதல் சம்பவம் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கவும், இரவு நேர பாதுகாப்பை அதிகரிக்கவும் தமிழக டி.ஜி.பி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்
-
Nov 14, 2024 18:28 ISTவிடுதலை பாகம் 2 முதல் பாடல் வரும் 17ம் தேதி வெளியாகும்
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை பாகம் 2 திரைப்படத்தின் முதல் பாடல் வரும் 17ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது
-
Nov 14, 2024 17:44 ISTமது அருந்திய விவகாரம் -சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்
சென்னையில் கைதிகளை அழைத்துச் செல்லும் போது போலீஸ் வாகனத்தில் அமர்ந்து மது அருந்திய விவகாரத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் லிங்கேஸ்வரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்
இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
Nov 14, 2024 17:42 ISTதிருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
திருவண்ணமலையில் நாளை பெளர்ணமியை ஒட்டி பக்தர்கள் வசதிக்காக பல்வேறு இடங்களில் இருந்து 400 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து 250 சிறப்பு பேருந்துகளும், புதுச்சேரி, விழுப்புரம், சிதம்பரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து 150 சிறப்பு பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்பட உள்ளது.
-
Nov 14, 2024 17:40 ISTஎலி மருந்தால் 2 பேர் பலி
சென்னை குன்றத்தூரில் வீட்டில் எலித் தொல்லையை கட்டுப்படுத்த அடிக்கப்பட்ட மருந்து காற்றில் பரவி, தூங்கிக்கொண்டிருந்த 2 குழந்தைகள் உயிரிழநதுள்ளனர். கணவன் - மனைவி இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளனர்
மருந்து அடிக்கப்பட்ட அறையில் நேற்றிரவு ஏ.சி. போட்டுக்கொண்டு தூங்கிய கணவர் கிரிதரன் (34) மனைவி பவித்ரா (31), மகள் வைஷ்ணவி (6) மற்றும் மகன் சாய் சுதர்சன் (1) நால்வரும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சிவன் மற்றும் சிறுமி இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழநதுள்ளனர்.
-
Nov 14, 2024 15:08 ISTபழங்குடிகளை அவமதிக்கும் பாஜக - ராகுல் காந்தி
மகராஷ்ட்ராவில் தேர்தல் பரப்புரையில் பேசிய ராகுல் காந்தி, பழங்குடியினரை ஆதிவாசி என்று குறிப்பிடாமல் வனவாசி என்று கூறி பா.ஜ.கவினர் அவமதிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
-
Nov 14, 2024 14:49 ISTசென்னையில் போலீஸ் வாகனத்தில் மது அருந்திய எஸ்.எஸ்.ஐ. சஸ்பெண்ட்
சென்னை பரங்கிமலை ஆயுதப்படையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரியும் லிங்கேஸ்வரன், சீருடை அணியாமல் காவல் வாகனத்திலேயே மது அருந்தும் வீடியோ வெளியானதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
-
Nov 14, 2024 14:35 ISTபுதுச்சேரியில் நெல் பயிரிட்டு அறுவடை செய்தால் அரசு மானியமாக நிதி வழங்குகிறது.
புதுச்சேரி விவசாயிகள் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பயிர் உற்பத்தி திட்டத்தின் கீழ் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2024-25 ஆம் ஆண்டில் காரைக்கால் பகுதியில் குறுவை பருவத்தில் நெல் சாகுபடி செய்த 794 விவசாயிகளுக்கும் அட்டவணை பிரிவை சார்ந்த 121 விவசாயிகளுக்கும் மானியம் வழங்கப்பட்டது. இது விவசாயிகளின் உற்பத்தி திறனை ஊக்குவிப்பதற்காக வழங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர் -
Nov 14, 2024 14:19 ISTமகளிர் உரிமைத்தொகை - உதயநிதி உறுதி
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் உள்ள குறைகள் சரி செய்யப்பட்டு தகுதி உள்ள அனைத்து மகளிருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் நிச்சயம் வழங்கப்படும் என துணை முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
-
Nov 14, 2024 14:15 ISTபாஜகவுடன் கூட்டணி இல்லை - இபிஎஸ்
ஒத்த கருத்துடைய கட்சிகளை ஒன்றிணைத்து 2026 சட்டமன்ற தேர்தலுக்கு அதிமுக மெகா கூட்டணி அமைக்கும் என்றும் பாஜகவுடன் கூட்டணி இல்லை எனவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.
-
Nov 14, 2024 13:58 ISTசிதம்பரம் கோயிலில் புதிய கொடிமரம்
சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலில் புதிய கொடிமரம் மட்டுமே அமைக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை உறுதி அளித்துள்ளது.
-
Nov 14, 2024 13:55 ISTமருத்துவர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் - மா.சுப்பிரமணியன்
சென்னை கிண்டியில் மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களின் கோரிக்கைகள் நவம்பர் 29 ஆம் தேதிக்குள் நிறைவேற்றப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
Nov 14, 2024 13:48 ISTஸ்க்விட் கேம் சீசன் 2 தேதி வெளியீடு
பிரபல வெப் சீரியஸ் ஆன ஸ்க்விட் கேம் சீசன் 2 டிசம்பர் 26 ஆம் தேதி நெட்ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது
-
Nov 14, 2024 13:45 ISTஉதயநிதி டீ சர்ட் வழக்கு - தலைமை நீதிபதி கேள்வி
அரசு நிகழ்ச்சிகளில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தி.மு.க சின்னம் பொறித்த டீ சர்ட் அணிவது தொடர்பான விவகாரத்தில் எத்தனை வழக்குகள் தாக்கல் செய்யப்படும் என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பி உள்ளது.
-
Nov 14, 2024 13:14 ISTபாம்பன் புதிய பாலத்தில் ஆய்வு
பாம்பன் புதிய செங்குத்து தூக்கு பாலத்தை மேலே தூக்கியும், ரயில்களை வேகமாக இயக்கியும் சோதனை நடைபெற்றது. மேலும் குழுவுடன் பாலத்தின் மேல் நின்று ரயில்வே முதன்மை பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி ஆய்வு செய்தார்.
-
Nov 14, 2024 13:10 ISTதமிழ்நாட்டின் பங்களிப்பு அளப்பரியது - யுசிஜி தலைவர்
'புதிய கல்விக் கொள்கையை ஏற்றால் கல்வித்துறையில் தமிழகத்தின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும்' என யுசிஜி தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
-
Nov 14, 2024 13:07 IST2 தனிப்படைகள் அமைப்பு!
தெலுங்கு மக்கள் குறித்து அவதூராக பேசிய நடிகை கஸ்தூரி தலைமறைவாக உள்ள நிலையில் அவரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
-
Nov 14, 2024 12:52 ISTமருத்துவர்கள் போராட்டத்திற்கு பிரேமலதா விஜயகாந்த் ஆதரவு
மருத்துவர்களின் போராட்டத்திற்கு தே.மு.தி.க சார்பில் பிரேமலதா விஜயகாந்த் ஆதரவு அளித்துள்ளார். சென்னை, கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர்களுடன் சேர்ந்து அவரும், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
-
Nov 14, 2024 12:36 ISTதமிழகத்தில் 2 நாள்கள் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இரண்டு நாள்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று மற்றும் நாளை கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Nov 14, 2024 12:22 ISTஅனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காவல் பூத்
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காவல் பூத் அமைக்கப்படுமென சென்னை காவல்துறை அறிவித்துள்ளது. சென்னையில் உள்ள 19 அரசு மருத்துவமனைகளில் 9 இடங்களில் காவல் நிலையங்கள் மற்றும் பூத்துகள் உள்ளன. மீதமுள்ள 10 மருத்துவமனைகளிலும் காவல் நிலைய பூத்துகள் அமைக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Nov 14, 2024 12:03 ISTதுப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு
சென்னை, கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
Nov 14, 2024 11:55 ISTஆதவ் அர்ஜூனா வீட்டில் 5 மணி நேரமாக தொடரும் சோதனை
விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா வீட்டில் சுமார் 5 மணி நேரமாக அமலாக்கத்துறை தொடர்ந்து சோதனை செய்து வருகிறது. சென்னை மற்றும் கோவையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கடந்தாண்டு லாட்டரி அதிபர் மார்ட்டின், அவரது மருமகன் ஆதவ் அர்ஜூனாவிற்கு சொந்தமான இடங்களில் ED சோதனை நடைபெற்றது. லாட்டரி அதிபர் மார்ட்டின் விதிகளை மீறி ரூ.910 கோடி வருவாய் ஈட்டியதாக வருமானவரித்துறை ஏற்கனவே சோதனை செய்தது. மார்ட்டினுக்கு தொடர்புடைய ரூ.451 கோடி மதிப்புடைய சொத்துக்களை அமலாக்கத்துறை ஏற்கனவே முடக்கியுள்ளது.
-
Nov 14, 2024 11:43 ISTமருத்துவர் பாலாஜியின் விருப்பம்
மருத்துவர் பாலாஜி ஓய்வு பெற இன்னும் 5 ஆண்டுகள் உள்ள நிலையில், அதுவரை கலைஞர் மருத்துவமனையிலேயே தொடர்ந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்திருப்பதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கோரிக்கையையும் அவர், முதலமைச்சர் ஸ்டாலினிடம் முன்வைத்துள்ளதாக மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
Nov 14, 2024 11:23 IST"மருத்துவர் பாலாஜி நலமுடன் இருக்கிறார், நேரில் சந்தித்து விசாரித்தேன்": மா. சுப்பிரமணியன்
மருத்துவர் பாலாஜி நலமுடன் இருக்கிறார் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் பாலாஜியை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதைத் தொடர்ந்து, இன்று மதியத்திற்கு பிறகு ஐசியூவில் இருந்து சாதாரண தனியறைக்கு அவர் மாற்றப்படுவார் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
-
Nov 14, 2024 10:44 ISTவைகோ மருத்துவமனையில் அனுமதி
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வலது தோள்பட்டையில் ஏற்கனவே எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அறுவை சிகிச்சையின் போது வைக்கப்பட்ட பிளைட்டை அகற்ற அப்பல்லோ மருத்துவமனையில் வைகோ அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
Nov 14, 2024 10:42 ISTநடிகை கஸ்தூரிக்கு முன் ஜாமின் வழங்க மறுப்பு
நடிகை கஸ்தூரியின் முன் ஜாமின் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன் ஜாமின் கோரி கஸ்தூரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
-
Nov 14, 2024 10:38 ISTடிஜிட்டல் முறை மதுபான விற்பனை தள்ளிவைப்பு
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று முதல் செயல்படுத்தப்பட இருந்த டிஜிட்டல் முறை மதுபான விற்பனை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக்கில் இருப்பில் உள்ள பழைய மதுபானங்கள் விற்றுத் தீர்ந்த பின்னர், நாளை முதல் டிஜிட்டல் முறையை தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
Nov 14, 2024 09:46 ISTமருத்துவர்கள் போராட்டம் எதிரொலி: நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் அவதி
சென்னையில் அரசு மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவத்தின் எதிரொலியாக காஞ்சிபுரம், போடி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வரும் நிலையில், புறநோயாளிகள் பிரிவில் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
-
Nov 14, 2024 09:22 ISTதமிழகத்தில் இறங்கிய இ.டி: லாட்டரி மார்ட்டின், ஆதவ் அர்ஜூன் தொடர்புடைய இடங்கில் ரெய்டு
சென்னை மற்றும் கோவையில், லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், வி.சி.க துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
-
Nov 14, 2024 09:02 ISTதமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்று முதல் 16-ந் தேதி வரை பல இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Nov 14, 2024 08:10 ISTபெண்ணின் திருமண வயதை 21-ஆக உயர்த்த நாடாளுமன்றத்தில் விவாதம்
இந்தியாவில் ஆண்களை போலவே பெண்களின் திருமண வயதையும் 21-ஆக உயர்த்துவது குறித்து, வரும் 22-ந் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற நிலைக்குழுவில் விவாதிக்கப்பட உள்ளது. இரு பாலருக்கும் திருமண வயது 21-ஆக உயர்த்தி கடந்த 2021-ம் ஆண்டு தாக்கல் செய்த மசோதா காலாவதியாகிவிட்ட நிலையில், தற்போது நாடாளுமன்ற நிலைக்குழு விவாதிக்க உள்ளது.
-
Nov 14, 2024 08:08 ISTடாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் பரிவர்த்தனை: இன்று முதல் தொடக்கம்
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 220 டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் டிஜிட்டல் முறையில் மதுபானங்கள் விற்பனை தொடங்கியுள்ள நிலையில் க்யூஆர் கோட் பயன்படுத்தி பணம் செலுத்தும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. மதுபாட்டில்களில் இருக்கும் விலையை விட கூடுதலாக 10-40 வரை வசூலிப்பதாக புகார் எழுந்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
-
Nov 14, 2024 08:05 ISTமருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட சம்பவம்: தமிழ்நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் இந்திய மருத்துவர் சங்கத்தினர் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 7900 மருத்துவமனைகள், 45,000 மருத்துவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்று உள்ளதாக இந்திய மருத்துவர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு இன்று நிறுத்தப்பட்டுள்ளது. அவசர சிகிச்சை பிரிவு மட்டும் வழக்கம் போல் செயல்படுகிறது.
-
Nov 14, 2024 08:03 ISTதமிழிசைக்கு பக்குவம் இல்லை: மநீம மாநிலச் செயலாளர் பதிலடி
"உலகநாயகன் பட்டத்தை துறந்தது, தன்னை ஈடுபடுத்திக்கொண்ட கலைத்துறையில் முழுமை பெற்ற ஞானத்தின் வெளிப்பாடு. அது சாதித்த மனிதனின் பக்குவத்தின் வெளிப்பாடு. இதை புரிந்து கொள்ளும் பக்குவம் தமிழிசைக்கு இல்லை என்பது வருத்தத்திற்குரியது என்று, மநீம மாநிலச் செயலாளர் முரளி அப்பாஸ், கூறியுள்ளார்.
-
Nov 14, 2024 08:02 ISTதிருச்சி நாமக்கல் சாலையில் விபத்து: 2 சிறுமிகள் மரணம்
திருச்சி நாமக்கல் சாலையில், இரு சக்கரவாகனத்தில் சென்றபோது வாகனம் சாலையின் தடுப்பு சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானதில், 2 சிறுமிகள் உயிரிழந்த நிலையில், ஒரு சிறுமி படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.