Chennai News Highlights: தி.மு.கவினர் தேர்தல் வாக்குறுதிகளை சொன்னார்கள்...செய்தார்களா? - இ.பி.எஸ்

Tamil Nadu News Update: செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamil Nadu News Update: செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Eps

Latest News Update in Tamil: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • Jul 24, 2025 21:27 IST

    நாளை எம்.பி-யாக பதவியேற்க உள்ள நிலையில் டெல்லி சென்றார் கமல்

    நாளை ராஜ்யசபா எம்.பி ஆக கமல்ஹாசன் பதவி ஏற்க உள்ள நிலையில் இன்று டெல்லி சென்றார். நாடாளுமன்ற வளாகத்தில் தி.மு.க எம்.பி.க்கள் திருச்சி சிவா, வில்சன் மற்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோருடன் இணைந்து எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.



  • Jul 24, 2025 20:44 IST

    முதுகலை ஆசிரியர் உள்ளிட்ட தேர்வுகள் ஒத்திவைப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

    தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை 1, மற்றும் கணினி பயிற்றுநர் நிலை 1 ஆகிய பதவிகளுக்கான தேர்வுத் தேதியை ஒத்திவைத்துள்ளது.

    இந்த தேர்வு ஒத்திவைப்பிற்கான காரணம், ஜூலை 28-ம் தேதி டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு நடைபெறுவதால்தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜூலை 28 ஆம் தேதி நடைபெறவிருந்த இந்த போட்டித் தேர்வு, தற்போது ஆகஸ்ட் 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



  • Advertisment
  • Jul 24, 2025 20:31 IST

    ஆதவ் அர்ஜுனாவின் தேர்தல் வியூகம் அலுவலகத்திற்கு வருகை தந்த த.வெ.க தலைவர் விஜய்

    தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆஃப் காமன் தேர்தல் வியூகம் அலுவலகத்திற்கு வருகை தந்தார். விஜய் வருகையை அறிந்ததும், அந்த அலுவலகம் அமைந்துள்ள கட்டிடத்தில் பணிபுரியும் மற்ற நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் கூடினர். அவரது வருகை, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.



  • Jul 24, 2025 20:27 IST

    காரைக்காலில் ரூ.4.5 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்; இலங்கை நாட்டவர் 2 பேர் உட்பட 5 பேர் கைது

    காரைக்காலில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த சுமார் ரூ.4.5 கோடி மதிப்புள்ள 300 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் இலங்கை நாட்டைச் சேர்ந்த 2 பேர் உட்பட மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவுடன், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு சொகுசு கார் மற்றும் லாரிகள் ஆகியவற்றையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.



  • Advertisment
    Advertisements
  • Jul 24, 2025 19:40 IST

    அமித்ஷா வீட்டுக் கதவைத் திருட்டுத்தனமாகத் தட்டவில்லை - இ.பி.எஸ் விமர்சனத்துக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி

    தி.மு.க-வின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ திட்டம் குறித்து எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்கையில், “உங்களைப் போல அமித்ஷா வீட்டுக் கதவையோ, கமலாலயத்தின் கதவையோ திருட்டுத்தனமாகத் தட்டவில்லை; அரசுத் திட்டங்களை எடுத்துக்கூறி தைரியமாக மக்களைச் சந்தித்து வருகிறோம்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.



  • Jul 24, 2025 19:33 IST

    அஜித்குமார் கொலை வழக்கு: நிகிதாவிடம் விசாரணை நிறைவு

    திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக நிகிதா மற்றும் அவரது தாயாரிடம் 3 மணி நேரமாக நடந்த சி.பி.ஐ விசாரணை நிறைவடைந்தது.



  • Jul 24, 2025 19:13 IST

    வரவேற்கவும், வழியனுப்பவும் அனுமதி கிடைத்தால் பாக்கியம் - மோடிக்கு  ஓ.பி.எஸ் கடிதம்

    முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “எனது தொகுதியுடன் தொடர்புடைய மதுரை - போடிநாயக்கனூர் ரயில் பாதையின் மின்மயமாக்கல் உட்பட பல முக்கிய திட்டங்களை தொடங்கி வைக்க தூத்துக்குடிக்கு வருவீர்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் தூத்துக்குடி விமான நிலையத்தில் உங்களை வரவேற்கவும், வழியனுப்பவும் எனக்கு அனுமதி கிடைத்தால் அது  தனி மரியாதை மற்றும் பாக்கியம்” என்று கூறியுள்ளார்.



  • Jul 24, 2025 18:48 IST

    பெண்களுக்கு பாஜகவில் மகுடம் சூட்டப்படுகிறது - குஷ்பு

    தமிழக பாஜக-வில் பெண்களை சுதந்திரமாக அரசியல் செய்ய விடுகிறார்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த குஷ்பு, ஜெயலலிதா இருக்கும் வரை, அதிமுகவில் அவர் மட்டும்தான் இருந்தார். அதன்பிறகு யார் ? கருணாநிதியின் மகள் என்பதால் தான் திமுகவில் கனிமொழிக்கு எம்பி பதவியெல்லாம் கிடைக்கிறது. எத்தனை பெண்களுக்கு திமுகவில் பதவி இருக்கிறது? எத்தனை பெண்கள் ஸ்டாலின் உட்காரும் வரிசையில் அமர்கிறார்கள்? ஆனால், பாஜகவில் திரவுபதி முர்மு, சுஷ்மா சுராஜ், நிர்மலா சீதாரமன், தமிழிசை, வானதி, ஸ்மிருதி இராணி என பாஜகவில் பிரதமர் உட்காரும் வரிசையில் அமர எத்தனையோ பெண் தலைவர்கள் இருக்கிறார்கள். பெண்களுக்கு பாஜகவில் மகுடம் சூட்டப்படுகிறது என்றார்.

     



  • Jul 24, 2025 18:23 IST

    சென்னை சென்ட்ரல் அருகே திடீரென தீ பிடித்த கார்

    சென்னை சென்ட்ரல் போக்குவரத்து சிக்னல் அருகே கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது காரின் எஞ்சின் பகுதியிலிருந்து திடீரென புகை வரத் தொடங்கியது. சில நொடிகளிலேயே, கார் சட்டென்று தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதுகுறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை முழுமையாக அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும், கார் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. இந்த தீ விபத்து காரணமாக, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

     



  • Jul 24, 2025 17:39 IST

    அதிமுக - பாஜக கூட்டணியை உடைப்பது தங்கள் நோக்கம் கிடையாது

    அதிமுக - பாஜக கூட்டணியை உடைப்பது தங்கள் நோக்கம் கிடையாது. அதிமுக சிதைந்து விடக் கூடாது என்ற நட்புணர்வுடன் எடுத்துக் கூறுகிறோம். விசிகவின் கொள்கை எதிரி தானே தவிர அதிமுக கிடையாது என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.



  • Jul 24, 2025 17:07 IST

    வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் - பிரதமர் மோடி

    பல ஆண்டுகளுக்கு பின் இந்தியா பிரிட்டன் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சி.  இந்தியா - பிரிட்டன் உறவில் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் இது என இருநாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தானது குறித்து பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.



  • Jul 24, 2025 16:45 IST

    இந்தியா - இங்கிலாந்து இடையே ஒப்பந்தம் கையெழுத்து

    இந்தியா - இங்கிலாந்து இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. தடையற்ற ஒப்பந்தத்தால் சிறு குறு தொழில்கள் ஊக்கமடையும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்



  • Jul 24, 2025 16:10 IST

    சேறும் சகதியுமாகக் காட்சி அளிக்கும் சாலை

    தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பம்பல் கலைஞர் நகரில் உள்ள சாலையில் பாதாளச் சாக்கடை பணிகள் நடந்த நிலையில் மீண்டும் சாலை அமைக்காததால் சேறும் சகதியுமாகக் காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஒட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்து உள்ளனர்.



  • Jul 24, 2025 16:08 IST

    நாளை திட்டமிட்டப்படி சுற்றுப்பயணம்- அன்புமணி

    ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நாளை திட்டமிட்டப்படி சுற்றுப்பயணத்தை தொடங்கும் என அன்புமணி அறிவித்துள்ளார்.



  • Jul 24, 2025 15:18 IST

    தர்பூசணிப் பழங்களில் ரசாயனம்- விவசாயிகளுக்கு இழப்பீடு?

    தர்பூசணிப் பழங்களில் ரசாயனம் செலுத்துவதாக உணவுப் பாதுகாப்புத் துறையினர் செய்த பரப்புரையால் விற்பனை பாதிக்கப்பட்டதாக உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பரிசீலிக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    தர்பூசணி பழங்களில் எந்த ரசாயனமும் செலுத்தப்படவில்லை என தோட்டக்கலைத்துறை சார்பில் உயர் நீதிமன்றத்தில் பதில் மனு அளிக்கப்பட்டது. 



  • Jul 24, 2025 13:57 IST

    கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு

    அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சோதனையின் போது கைப்பற்றப்பட்ட பொருட்களையும் திருப்பி ஒப்படைக்க ஆணையிடப்பட்டுள்ளது. கடந்த 2013-ஆம் ஆண்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடம் இருந்து ரூ. 30 கோடி கடன் பெற்ற சம்பவம் தொடர்பாக, ரவிச்சந்திரனுக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.



  • Jul 24, 2025 13:49 IST

    தமிழ் ஈழத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் வைகோ - தம்பிதுரை

    மாநிலங்களவையில் வைகோவின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், அவர் குறித்து பிரியாவிடை உரையை அ.தி.மு.க எம்.பி தம்பிதுரை நிகழ்த்தினார். அப்போது, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, தனக்கு மூத்த சகோதரர் போன்றவர் என்று தம்பிதுரை தெரிவித்தார். மேலும், பல சூழல்களில் தனக்கு உந்துசக்தியாக வைகோ திகழ்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் அங்கம் வகித்ததன் மூலமாக, வைகோ முதன்முதலாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தவிர தமிழ் ஈழத்திற்காக தனது வாழ்க்கையை வைகோ அர்ப்பணித்ததாக தம்பிதுரை புகழாரம் சூட்டியுள்ளார்.



  • Jul 24, 2025 13:04 IST

    ரஷ்யாவில் விமான விபத்து

    ரஷ்யாவின், அமூர் மாகாணத்தில் சுமார் 49 பயணிகளுடன் சென்ற விமானம், திண்டா விமான நிலையம் அருகே தொடர்பை இழந்து கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. திண்டா பகுதியில் இருந்து 15 கி.மீ தொலைவில், உடைந்த விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.



  • Jul 24, 2025 12:45 IST

    நயினார் நாகேந்திரன் தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை - சுப்ரீம் கோர்ட்

    நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் மீது பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தொடர்ந்த, தேர்தல் வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, ராபர்ட் புரூஸ் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் நயினார் நாகேந்திரன் வழக்கு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தேர்தல் வழக்கு தொடர்பாக அசல் ஆவணங்களை தாக்கல் செய்ய நயினார் நாகேந்திரனுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், ராபர்ட் புரூஸின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



  • Jul 24, 2025 12:26 IST

    இந்திய குடியுரிமை கேட்டு மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் விண்ணப்பம்!!

    இந்திய குடியுரிமை கேட்டு மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் விண்ணப்பம் அளித்துள்ளனர். 30 ஆண்டுகளாக மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின் விண்ணப்பங்கள் ஒன்றிய அரசின் பரிசீலனைக்கு அனுப்பப்படும்.



  • Jul 24, 2025 12:03 IST

    ஓய்வுபெறும் தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பி.க்களுக்கு மாநிலங்களவையில் பாராட்டு..!!

    ஓய்வுபெறும் தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பி.க்களுக்கு மாநிலங்களவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓய்வுபெறும் மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு வழியனுப்பும் நிகழ்வு இன்று நடைபெற்றது. அதில், கூட்டாட்சி, மொழி உரிமை, சமூகநீதி உள்ளிட்டவற்றுக்கு வைகோ குரல் கொடுத்தார் என துணைத்தலைவர் புகழாரம் சூட்டினார். மேலும், ஓய்வுபெறும் எம்.பி.க்கள் நாட்டுக்கு ஆற்றிய சேவைக்காக மாநிலங்களவை சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் தெரிவித்தார். திருச்சி சிவா, வைகோ, முகமது அப்துல்லா உள்ளிட்ட மாநிலங்களவை எம்.பி.க்கள் இன்று ஓய்வு பெறுகின்றனர்.



  • Jul 24, 2025 12:02 IST

    ஈழத்தமிழருக்காக 13 முறை கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளேன்: வைகோ

    ஓய்வுபெறும் நாளில் மாநிலங்களவையில் வைகோ உரையாற்றினார். அதில், “என்னை முதன்முதலாக மாநிலங்களவை அனுப்பிய கலைஞருக்கு நன்றி. ஈழத்தமிழருக்காக 13 முறை கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளேன். தமிழ் ஈழ விடுதலைக்காக குரல் கொடுப்பதை ஒருபோதும் நிறுத்தமாட்டேன்,”இவ்வாறு தெரிவித்தார்.



  • Jul 24, 2025 12:02 IST

    முதல்வருக்கு ஆஞ்சியோ பரிசோதனை

    முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஆஞ்சியோ பரிசோதனைக்குப் பிறகு முதல்வர். நலமுடன் இருக்கிறார்  என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 



  • Jul 24, 2025 12:01 IST

    மாநிலங்களவைக்கு என்னை மீண்டும் அனுப்பும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி : திமுக எம்.பி.வில்சன்

    மாநிலங்களவையில் திமுக எம்.பி. வில்சன் உரையாற்றினார். அதில்,”மாநிலங்களவைக்கு என்னை மீண்டும் அனுப்பும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. அடித்தட்டு மக்களுக்காக உழைக்கும் வாய்ப்பு கிடைத்தது, “இவ்வாறு தெரிவித்தார்.



  • Jul 24, 2025 11:23 IST

    எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கத்தால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு!!

    எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கத்தால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மக்களவையில் தொடர்ந்து 4வது நாளாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டு வருகின்றனர். பீகார் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக மக்களவையின் மைய பகுதிக்கு சென்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனர்.



  • Jul 24, 2025 11:02 IST

    பாமக தலைமையகம் சென்னையில் இருந்து தைலாபுரத்துக்கு மாற்றப்பட்டு விட்டது: ராமதாஸ் திட்டவட்டம்

    பாமக தலைமையகம் சென்னையில் இருந்து தைலாபுரத்துக்கு மாற்றப்பட்டு விட்டது; சென்னையிலோ வேறு எங்குமோ பாமக தலைமையகம் இல்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது; பனையூரில் பாமக தலைமையகம் இருப்பதாக சொல்வது சட்டவிரோதம். தலைவர் என்று கூறிக் கொண்டால் நடவடிக்கை எடுக்கப்படும். பாமகவில் அன்புமணி செயல் தலைவராக தொடர்வார் என அவர் கூறினார்.



  • Jul 24, 2025 10:54 IST

    இந்தியாவுடன் பேச்சு நடத்த பாகிஸ்தான் விருப்பம்

    இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் கூறியுள்ளார். அனைத்து பிரச்சனைகள் தொடர்பாக அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றும் ஷாபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளது.



  • Jul 24, 2025 10:54 IST

    படத்தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம்: அமலாக்கத்துறைக்கு ஐகோர்ட் கண்டனம்

    கோர்ட் உத்தரவை மீறி, படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில், அமலாக்கத்துறை நடவடிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், விருப்பப்பட்டால் ஆகாஷ் பாஸ்கரன் தரப்பில் கோர்ட் அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்யலாம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.



  • Jul 24, 2025 10:34 IST

    சென்னையில் சட்டவிரோதமாக தங்கி இருந்த இலங்கை தொழிலதிபர் திருப்பி அனுப்பப்பட்டார்!!

    சென்னையில் சட்டவிரோதமாக தங்கி இருந்த இலங்கை தொழிலதிபர் திருப்பி அனுப்பப்பட்டார். சட்டவிரோதமாக 6 ஆண்டுகள் குடும்பத்துடன் தங்கி இருந்த முகமது அர்ஷத்(46) பிடிபட்டார். சென்னை ஓட்டேரியில் தங்கி இருந்த அவரை உளவுத்துறை போலீசார் இலங்கைக்கு திருப்பி அனுப்பினர். போலி ஆவணம் மூலம் முகமது அர்ஷத் ஆதார் கார்டு பெற்று இந்திய பாஸ்போர்ட் வாங்கியுள்ளார். இலங்கையில் உயிருக்கு பயந்து தமிழ்நாட்டில் தங்கி இருந்ததாக முகமது அர்ஷத் வாக்குமூலம் அளித்தார். புளியந்தோப்பு மற்றும் ஓட்டேரியில் முகமது அர்ஷத் லாஜிஸ்டிக் நிறுவனங்களை நடத்தி வந்தது தெரியவந்தது.



  • Jul 24, 2025 10:31 IST

    மகளை கொலை செய்த தந்தை மீது மேலும் வழக்கு

    சென்னை, பரங்கிமலையில் 6 வயது குழந்தையை கழுத்தை அறுத்து கொலை செய்த தந்தை சதீஷ் குமார் மீது,மனைவி ரெபெக்கா ஓட்டேரி காவல் நிலையத்தில்கொடுத்திருந்த புகாரின் பேரில் சதீஷ் குமார், அவரது தாயார் மீது பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு செய்யப்பட்டுள்ளது. புகார் கொடுத்தவுடன் நடவடிக்கை எடுக்காததால் சிறுமி கொல்லப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு துறை ரீதியான விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,



  • Jul 24, 2025 09:52 IST

    முல்லை பெரியாறு ணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

    நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி அணைக்கு நீர் வரத்து, 921 கன அடியில் இருந்து 4000 கன அடியாக உயர்ந்துள்ளது. தமிழகத்திற்கு, 1867 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.



  • Jul 24, 2025 09:23 IST

    கமல்ஹாசன் டெல்லி பயணம்: மாநிலங்களவை எம்பியாகநாளை பதவியேற்பு

    மாநிலங்களவை எம்பியாக நாளை பதவியேற்க உள்ள நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டெல்லி புறப்பட்டுள்ளார்."இந்தியனாக எனக்கு கொடுக்கப்பட்ட கடமையை செய்ய உள்ளேன், பெருமையோடு இன்று டெல்லி செல்கிறேன் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.



  • Jul 24, 2025 09:21 IST

    வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி: வானிலை மையம் தகவல்

    வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புள்ளதாக கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், இது வடமேற்கு திசையில் வடக்கு ஒரிசா, அதனை ஒட்டிய மேற்குவங்கம் கடற்கரை பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 



  • Jul 24, 2025 08:26 IST

    முதலமைச்சர் கோப்பை விளையாட்டு: முன்பதிவு செய்ய ஆகஸ்ட் 16 கடைசி நாள்

    ரூ37 கோடி பரிசுத்தொகையுடன் நடைபெற உள்ள முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிக்கு, ஆகஸ்ட் 16-ந் தேதி வரை cmtrophy.sdat.in, http://sdat.tn.gov.in இந்த இணையதளங்களில் முன்பதிவு செய்யலாம் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது, ஆகஸ்ட் 22 முதல் அக்டோபர் 12 வரை நடத்தப்படும் இந்த விளையாட்டு போட்டிகள் ரூ87 கோடியில் 5 பிரிவுகளில் நடத்தப்பட உள்ளது



  • Jul 24, 2025 08:21 IST

    எலைட் செஸ் தொடர் ஃபைனலில் இந்திய வீராங்கனை

    செஸ் உலகக்கோப்பை மகளிர் பிரிவின் அரையிறுதி போட்டியில், இந்திய வீராங்கனை திவ்யா தேஸ்முக் அசத்தல் வெற்றி பெற்றார். இதன் மூலம் எலைட் செஸ் தொடர் ஒன்றில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை என்ற பெருமையும் பெற்றார்.



  • Jul 24, 2025 08:20 IST

    அன்புமணி `உரிமை மீட்பு பயணம்' - ராமதாஸ் எதிர்ப்பு

    அன்புமணி ராமதாஸ், நாளை முதல் `உரிமை மீட்பு பயணம்' என்ற பெயரில் கட்சி தொண்டர்களை சந்திக்கிறார். அன்புமணியின் உரிமை மீட்பு பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் டிஜிபியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது, எனது அனுமதி இன்றி அன்புமணி பாமக கொடி, நிர்வாகிகள் சந்திப்பு, பிரசாரம் மேற்கொள்வதை தடுத்து நிறுத்த வேண்டும் எனறு ராமதாஸ் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 



  • Jul 24, 2025 08:18 IST

    மான்செஸ்டர் டெஸ்ட் - ரிஷப் பண்ட் காயம்

    மான்செஸ்டர் டெஸ்ட்; முதல் நாளில் பேட்டிங் செய்த‌போது இந்திய வீர‌ர் 
    ரிஷப் பண்ட் வலது காலில் காயமடைந்து பாதியில் வெளியேறிய நிலையில், பிசிசிஐ மருத்துவக் குழு அவரது உடல்நிலை  குறித்து கண்காணித்து வருகிறது



  • Jul 24, 2025 07:15 IST

    ஆகஸ்ட் 2-ந் தேதி 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம்: அமைச்சர் தகவல்

    தமிழ்நாட்டில் வரவேற்பை பெற்றுள்ள உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை போலவே, ஆகஸ்ட் 2-ந் தேதி நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதுவரை தொடங்கிய மருத்துவ திட்டங்களிலேயே இந்த திட்டம் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். சென்னையில் மட்டும் 400 இடங்களில் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.



Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: