Tamil News Highlights: தமிழகத்தில் 2,783 பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து போடப்பட்டது

News In Tamil : முக்கியச் செய்திகள் தொடர்பான தமிழ் லைவ் பிளாக் இது. இதில் தமிழகம், இந்தியா, உலகம் சார்ந்த முக்கிய செய்திகளின் அப்டேட்டை உடனுக்குடன் தமிழில் காணலாம்.

Tamil news : இன்றைய முக்கியச் செய்திகள் தொடர்பான தமிழ் லைவ் பிளாக் இது. இதில் தமிழகம், இந்தியா, உலகம் சார்ந்த முக்கிய செய்திகளின் அப்டேட்டை உடனுக்குடன் தமிழில் காணலாம்.

உலகப் புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 800 காளைகள் பங்கேற்றன. அவற்றை அடக்க 655 மாடுபிடி வீரர்கள் களத்தில் குதித்தனர். ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தனர்.

தமிழகம் முழுவதும் 166 மையங்களில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்படுகின்றன. தடுப்பூசி போடும் திட்டத்தை மதுரையில் முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார், தமிழகத்தில் முதற்கட்டமாக 5.36 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தொடர்ந்து தோல்வியில் முடிந்து வருகிறது. வரும் 19ஆம் தேதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Live Blog

Today Tamil News : இன்றைய முக்கியச் செய்திகள் தொடர்பான தமிழ் லைவ் பிளாக் இது. இதில் தமிழகம், இந்தியா, உலகம் சார்ந்த முக்கிய செய்திகளின் அப்டேட்டை உடனுக்குடன் தமிழில் காணலாம்.


21:05 (IST)16 Jan 2021

இன்று 1,91,181 பயனாளிகள் கொரோனா  தடுப்பூசியை போட்டுக் கொண்டனர்

நாடு தழுவிய மாபெரும் தடுப்பூசி இயக்கத்தின் முதல் நாளான இன்று 1,91,181 பயனாளிகள் கொரோனா  தடுப்பூசியை போட்டுக்கொண்டதாக மத்திய அரசு தெரிவித்தது.

19:26 (IST)16 Jan 2021

தமிழகத்தில் இன்று 2,783 பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து போடப்பட்டது

தமிழகத்தில் கோவிட்_19 தடுப்பூசி முதல்நாளான இன்று 2,783 பேருக்கு செலுத்தப்பட்டதாக மாநில சுகாதாரத்  துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இன்று தடுப்பூசி போட்டுக் கொண்ட யாருக்கும் பக்க விளைவு ஏதும் ஏற்படவில்லை என்றும் கூறினார்.

18:06 (IST)16 Jan 2021

அலகாபாத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவ உத்தரப்பிரதேச பாஜக அரசிடம் வலியுறுத்துவார்களா? – ரவிக்குமார்

உத்தரப்பிரதேசத்திலுள்ள பாஷா சங்கம் அலகாபாத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவ முதல்வர் ஆதித்ய நாத்திடம் கோரிக்கை விடுத்து பல ஆண்டுகளாகக் காத்திருக்கிறது. வள்ளுவரை வைத்து தமிழ்நாட்டில் அரசியல் செய்ய விரும்புவோர் உத்தரப்பிரதேச பாஜக அரசிடம் வலியுறுத்துவார்களா? என விழுப்புரம் எம். பி ரவிக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்   

17:14 (IST)16 Jan 2021

ஐஐடியில் சமஸ்கிருத மொழியைப் புகுத்தி நடவடிக்கை – கே. எஸ் அழகிரி கண்டனம்

இந்தியத் தொழில்நுட்ப கழகங்கள் எதற்காகத் தொடங்கப்பட்டதோ, அந்த நோக்கத்தை முற்றிலும் சிதைக்கிற வகையில் மத்திய பாஜக அரசு சமஸ்கிருத மொழியைப் புகுத்தி நடவடிக்கை எடுத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே. எஸ் அழகிரி தெரிவித்தார். 

இதுதொடர்பாக வெளியிட்ட செய்திக் குறிப்பில், “இந்தியாவில் சமஸ்கிருத மொழியைப் பரப்புவதற்காகக் கடந்த மூன்றாண்டுகளில் ரூ.643.83 கோடியை பாஜக அரசு செலவழித்திருக்கிறது. செம்மொழி தகுதி பெற்றுள்ள தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய ஐந்து மொழிகளுக்கு மொத்தமாக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.29 கோடி மட்டும்தான். இந்தி, சமஸ்கிருதத் திணிப்பையும், இதற்காக மத்திய அரசு நிதியை வாரி வழங்குவதையும், தமிழ் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட மொழிகளைப் புறக்கணிப்பதையும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். இத்தகைய போக்கு தொடருமேயானால் மத்திய பாஜக அரசு கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும் என எச்சரிக்கிறேன்” எனத் தெரிவித்தார்.    

17:10 (IST)16 Jan 2021

பருவம் தவறி பெய்த மார்கழி மழை, ஏக்கருக்கு ரூ.30000 வழங்க வேண்டும் – மு. க ஸ்டாலின் கோரிக்கை

பருவம் தவறி பெய்த மார்கழி மழையில் பயிர்கள் மூழ்கி விவசாயிகள் பெருந்துயர் அடைந்திருக்கிறார்கள். நிவர் புயல் நிவாரணம் ரூ.600 கோடி என்ன ஆனது என்ற மர்மமே விலகாத சூழலில், இனிமேல்தான் மழை பாதிப்பை கணக்கெடுக்கிறோம் என காலம் தாழ்த்தாமல், நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.30000 வழங்க வேண்டும் என மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.   

16:13 (IST)16 Jan 2021

கொரோனா தடுப்பூசி போடுவது ஒரு சவால் – சுகாதாரத்துறை செயலர்

கொரோனா தடுப்பூசி போடுவது ஒரு சவால்தான்; தோல்வியில்லை என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

14:34 (IST)16 Jan 2021

தமிழுக்கு ரூ.22 கோடி, சமஸ்கிருதத்துக்கு ரூ.643 கோடியா? – கேஎஸ். அழகிரி

தமிழுக்கு ரூ.22 கோடி, சமஸ்கிருதத்துக்கு ரூ.643 கோடியா? என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, விமர்சித்துள்ளார்.

14:18 (IST)16 Jan 2021

ராமர் கோவிலுக்கு யோகி ஆதித்யநாத் நன்கொடை

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ரூ.2 லட்சம் நன்கொடை வழங்கினார். 

13:39 (IST)16 Jan 2021

தடுப்பூசியை நானும் போட்டுக்கொள்வேன் – முதலமைச்சர் பழனிசாமி

மக்கள் அனைவரும் தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ள முதலமைச்சர் பழனிச்சாமி கொரோனா தடுப்பூசியை நானும் போட்டுக்கொள்வேன் என தெரிவித்துள்ளார்.

13:38 (IST)16 Jan 2021

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட அப்போலோ மருத்துவமனை தலைவர்

அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி ரெட்டி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் தொடர்ந்து, மருத்துவமனையின் மூத்த மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்

13:36 (IST)16 Jan 2021

ஞானதேசிகன் உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அஞ்சலி

சென்னை ஆழ்வார்பேட்டையில் ஞானதேசிகன் உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்

12:29 (IST)16 Jan 2021

டிடிவி தினகரன் பதிலடி

கங்கை நீர் எது, சாக்கடை நீர் எது என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என ஆடிட்டர் குரு மூர்த்தியின் விமர்சனத்திற்கு அமமுக நிறுவனர் டிடிவி தினகரன் பதிலடி

12:19 (IST)16 Jan 2021

உ.பி.-யின் முன்னாள் எம்.எல்.ஏ ராமர் கோவில் கட்ட நன்கொடை

உ.பி.-யின் முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.1,11,11,111 நன்கொடை வழங்கியுள்ளார்.

12:18 (IST)16 Jan 2021

முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

நாட்டை பாதுகாக்க அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

12:17 (IST)16 Jan 2021

நடிகர் விஜய்சேதுபதி வருத்தம்

பட்டாக் கத்தியால் கேக் வெட்டிய விவகாரம் விவகாரத்தில் நடிகர் விஜய்சேதுபதி வருத்தம் தெரிவித்துள்ளார். 

12:12 (IST)16 Jan 2021

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கல்லூரி முதல்வர்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று முதல் தொடங்கியுள்ள நிலையில், ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில், மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி அவர்கள் முன்னிலையில்  முன்கள பணியாளர்கள் 100 பேருக்கு  கொரோனா தடுப்பூசி போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

11:40 (IST)16 Jan 2021

புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி

புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார் 

11:37 (IST)16 Jan 2021

இந்தியாவின் திறமை மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது – பிரதமர் மோடி

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 2 தடுப்பூசிகள் குறைவான காலக்கட்டத்தில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு அனுமதி கிடைத்துள்ளதால் இந்தியாவின் திறமை மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

11:34 (IST)16 Jan 2021

தமிழகத்தில் தடுப்பூசி திட்டம்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி மதுரையில் தொடங்கி வைத்தார்

10:04 (IST)16 Jan 2021

சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் பேட்டி

மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் கோவாக்சின் தடுப்பூசியை நான் செலுத்திக்கொள்ள இருக்கிறேன் என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

09:40 (IST)16 Jan 2021

தடுப்பூசி போடும் பணி

நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைக்கிறார் பிரதமர்

09:40 (IST)16 Jan 2021

கடற்கரைகளில் காவல் துறை கண்காணிப்பு

காணும் பொங்கல் கொண்டாட கட்டுப்பாடுகள் விதி்கப்பட்டுள்ளதால், கடற்கரைகளில் காவல் துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

09:36 (IST)16 Jan 2021

ஆஸ்திரேலியா 369 ரன்கள் குவிப்பு

பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 369 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. தமிழக வீரர்களான நடராஜன், சுந்தர், தாகூர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

09:34 (IST)16 Jan 2021

அலங்காநல்லூரில் முதல்வர் இபிஎஸ் புகழாரம்

‘ஜல்லிக்கட்டு நாயகன்’ ஓபிஎஸ் என்று அலங்காநல்லூரில் முதல்வர் இபிஎஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

09:33 (IST)16 Jan 2021

தமிழக ஆளுநர் பன்வாரிலால் தகவல்

மாட்டுக்கோமியத்தால் புற்றுநோய் குணமடையுமா’ என ஆய்வு நடைபெற்று வருவதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் தெரிவித்துள்ளார்.

09:20 (IST)16 Jan 2021

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் கோயில் காளைக்கு மரியாதை செலுத்தினர்

09:20 (IST)16 Jan 2021

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடல்நலக்குறைவால், வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tamil News : மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் வென்றவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரிசு வழங்கி கவுரவித்தார். சிறந்த மாடுபிடி வீரர்களாக தேர்வான திருநாவுக்கரசு, விஜய் மற்றும் காளையின் உரிமையாளருக்கு முதலமைச்சர் பழனிசாமி பரிசு வழங்கினார்

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் திருக்குறள் குறித்து விரிவாக ஆய்வு செய்ய தனி இருக்கை ஏற்படுத்தப்படும் என துணைவேந்தர் பார்த்தசாரதி அறிவித்தார். இதற்கு தமிழ் ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil news live tamil nadu news in tamil alanganalllur jallikattu

Next Story
ரிலீஸ் ஆகும் சசிகலா தங்குவது எங்கே? தயாராகும் போயஸ் கார்டன்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com