/tamil-ie/media/media_files/uploads/2021/02/surya.jpg)
Tamil News Live, Tamil Nadu Political- Crime News: முக்கிய செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் நீங்கள் காணலாம். தமிழ்நாடு, இந்தியா, உலக அளவிலான செய்திகள், அரசியல்- வானிலை- சமூகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த செய்திகளின் தொகுப்பாக இந்தத் தளம் அமையும்.
ஞாயிற்றுக் கிழமை காலைச் செய்திகள் சிலவற்றை இங்கே தருகிறோம்...
விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேறாமல் வீடு திரும்ப மாட்டோம் என டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் திக்காயட் தெரிவித்திருக்கிறார். விவசாயிகள் போராட்டம் ஒரு முடிவுக்கு வராமல், தொடர்ந்து நீடித்து வருகிறது.
திங்கட்கிழமை சசிகலா சென்னை திரும்புவதையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸார் மேற்கொள்கின்றனர். இன்னொரு அமைப்பு பெயரில் கலவரத்தை தூண்ட முயற்சிகள் நடைபெறுவதாக தகவல் கிடைத்திருக்கிறது. அப்படி நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சசிகலா தரப்புக்கு போலீஸார் மறைமுக எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
சசிகலா சென்னை திரும்பவிருக்கும் சூழ்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை இரவில் உயர்மட்ட நிர்வாகிகள் கூடி ஆலோசித்தனர். இதன்பிறகு இபிஎஸ் - ஓபிஎஸ் வெளியிட்ட கூட்டறிக்கையில், ‘ஜெயலலிதா கனவுப்படி அதிமுக ஆட்சி தொடர அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வேண்டும்’ என கேட்டுக்கொண்டனர். ஒற்றுமையோடு, விழிப்புடன் தேர்தல் பணியாற்றி வெற்றியை ஈட்டுவோம் என்றும் கூறியிருக்கிறார்கள்.
சென்னையில் பணிபுரிந்த கடற்படை அதிகாரி ஒருவர் கடத்தப்பட்டு, மகாராஷ்டிரா காட்டுப்பகுதியில் எரித்து கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Live Blog
Tamil Nadu News Today Live: அரசியல்- வானிலை- சமூகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த செய்திகளின் தொகுப்பாக இந்தத் தளம் அமையும்.
திமுக, அதிமுகவுக்கு மாற்றாக உருவான கட்சிதான் தேமுதிக. நிர்வாகிகளும், தொண்டர்களும்தான் கூட்டணி என்ற நிர்பந்தத்திற்குள் கொண்டு சென்றுவிட்டனர். கேப்டன் விஜயகாந்துக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை 'மன்னிப்பு', எனக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை 'கூட்டணி' என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளின் பூத் முகவர்கள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.
चमोली में ग्लेशियर फटने से बाढ़ त्रासदी बेहद दुखद है। मेरी संवेदनाएँ उत्तराखंड की जनता के साथ हैं।
राज्य सरकार सभी पीड़ितों को तुरंत सहायता दें। कांग्रेस साथी भी राहत कार्य में हाथ बटाएँ।
— Rahul Gandhi (@RahulGandhi) February 7, 2021
ராகுல் காந்தி தனது ட்விட்டரில், " உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள சமோலி மாவட்டம் ரெய்லி கிராமத்தில் நிகழ்ந்த பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ளபெருக்கு சம்பவம் மிகவும் துயரமானது. உத்தரகண்ட் மக்களுடன் எனது இரங்கல். பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் மாநில அரசு உடனடி உதவிகளை வழங்க வேண்டும். நிவாரணப் பணிகளில் காங்கிரஸ் சகாக்களும் கைகோர்க்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
While in Assam, PM @narendramodi reviewed the situation in Uttarakhand. He spoke to CM @tsrawatbjp and other top officials. He took stock of the rescue and relief work underway. Authorities are working to provide all possible support to the affected.
— PMO India (@PMOIndia) February 7, 2021
உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு சூழல்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாக பிரதமர் மோடி தனது ட்விட்டரில் பதிவிட்டார்.
இன்று அசாம் மாநிலத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட அவர், பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
ஒவ்வொரு மாநிலத்திலும் தாய்மொழியில் மருத்துவப்படிப்பை மேற்கொள்ள வேண்டும் என்பது தான் தன்னுடைய கனவு என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார். அசாம் மாநிலத்தில் நடைபெற்ற அசாம்மாலா என்ற திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்து இவ்வாறு பேசினார்.
Nanda Devi glacier broke off in Chamoli district of #Uttarakhand Sunday morning.Damaged a dam on Alaknanda river. Rise in water level in river. Reports of loss awaited. @IndianExpress pic.twitter.com/J0UoBoIJEe
— Lalmani Verma (@LalmaniVerma838) February 7, 2021
உத்தரகண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் ஜோஷிஷிமாத் பகுதியில் நந்தா தேவி பனிப்பாறை உருகியது. அலக்நந்தா ஆற்றில் கட்டப்பட்ட ரிஷிகங்கா அணை சேதமடைந்தது.
ரிஷிகங்கா மின் உற்பத்தி திட்டத்தில் பணிபுரிந்து வந்த 150 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று மாநில பேரிடர் டி.ஐ.ஜி ரிதிம் அகர்வால் செய்தி நிறுவனமான பி.டி.ஐ யிடம் தெரிவித்தார்.
கோவிட்-19க்கு எதிரான போரில் மருத்துவர்களும் முன்கள பணியாளர்களும் பல்வேறு சவால்களை சமாளித்தும் தங்களது உயிரை பணயம் வைத்தும் பணியாற்றி வருவதாகவும் அவர்களது தன்னலமற்ற சேவையை கண்டு பெருமிதம் கொள்வதாகவும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார். பெங்களூருவில் ராஜீவ் காந்தி மருத்துவ அறிவியல் பல்கலைகழகத்தில் இன்று நடைபெற்ற 23வது பட்டமளிப்பு விழாவில் பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
சென்னை எழும்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய தமாகா தலைவர் ஜி.கே.வாசன், “சசிகலா வருகை, அதிமுகவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். மாணவர்களின் கல்விக்கடனை மத்திய, மாநில அரசுகள் தள்ளுபடி செய்யவேண்டும். அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் பேரவைத் தேர்தலை நடத்த வேண்டும்” என்று கூறினார்.
சங்கரன்கோயிலில் திமுக கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், “ஆட்சியின் கடைசி நேரம் வரை நாடகமாடி வருகிறார் முதல்வர் பழனிசாமி. விவசாயிகள் படும் துன்பம் எல்லாம் இப்போதுதான் அவருக்கு தெரியவந்ததா? ஆட்சி முடியும் நேரத்தில் விவசாய கடனை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். விவசாயக் கடன்களை ரத்து செய்வதாக மட்டுமே அறிவித்துள்ளார். இன்னும் ரத்து செய்யப்படவில்லை” என்று விமர்சித்துப் பேசினார்.
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது மட்டுமே எங்கள் நோக்கம். ஆட்சி, அதிகாரத்தை பயன்படுத்தி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிக்கிறார்கள்”என்று கூறினார்.
தென்காசியில் பேசிய மு.க.ஸ்டாலின், “3 மாதத்தில் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியை சந்திக்கும். திமுக ஆட்சிக்கு வந்ததும் மக்களிடம் பெற்றுள்ள கோரிக்கை மனுக்களுக்குத் தீர்வு காணப்படும். கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனி ஒப்புகைச் சீட்டுடன் கோட்டைக்கு வந்து என்னை சந்திக்கலாம்.” என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 578 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி சார்பில் பும்ரா - 3 விக்கெட்டுகளும், இஷாந்த் சர்மா, நதீம், அஸ்வின் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளனர். இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் - 218 ரன்கள், டாம் சிப்லி - 87 ரன்கள் ஸ்டோக்ஸ் - 82 ரன்களும் எடுத்தனர்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சென்னையில் பிப்ரவரி 21ம் தேதி மநீம மாநாடு நடைபெறும் என்று அறிவித்துள்ளார். மநீம 4ம் ஆண்டு தொடக்க விழா சென்னையில் பிப்ரவரி 21ம் தேதி மாநாடு நடைபெறும் என்று அறிவித்துள்ளார். மண்ணையும் மொழியையும் மக்களையும் காப்பாற்ற தொண்டர்கள் அணி திரள வேண்டும் என்று கடிதம் மூலம் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை போரூர் சந்திப்பில் தேர்தல் பரப்புரை செய்த முதல்வர் பழனிசாமி: “ஸ்டாலின் சொல்வதை நான் செய்யவில்லை. நான் சொல்வதைத்தான் ஸ்டாலின் சொல்கிறார். திமுக ஆட்சியில் எந்த திட்டமும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. திருவள்ளூர் மாவட்டத்தில் அதிமுக அரசு ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியுள்ளது” என்று கூறினார்.
திங்கட்கிழமை சசிகலா சென்னை திரும்புவதையொட்டி அவருக்கு வரவேற்பு பேரணி நடத்த அமமுக முடிவு செய்திருக்கிறது. சென்னை கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடத்திற்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பதால் சசிகலா அங்கு செல்ல வாய்ப்பு குறைவு.
இதற்கிடையே சசிகலா பேரணியாக அதிமுக தலைமை அலுவலகம் செல்வார் என சமூக வலைதளங்களில் சிலர் கருத்து கூறி வருகின்றனர். இந்தப் பின்னணியில் சனிக்கிழமை இரவு முதல் சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
அதிமுக பெயரைப் பயன்படுத்தி சசிகலா, தினகரன் ஆகியோர் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிப்பதாக அமைச்சர்கள் தங்கமணி, ஜெயகுமார், சி.வி.சண்முகம் ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினர். அதேபோல அமைச்சர்கள் கலவரத்திற்கு முயற்சிப்பதாக டிடிவி தினகரனும் குற்றம் சாட்டியிருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights