News Highlights: துரைக்கண்ணு குடும்பத்தினருக்கு அதிமுக நெருக்கடி- ஸ்டாலின் புகார்

மீண்டும் பைடனுடன் பணியாற்றுவதை எதிர்நோக்கி ஆவலுடன் காத்துக்கொண்டிருப்பதாக மோடி கூறினார்.

News In Tamil : அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடனுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். ஜோ பைடன் துணை அதிபராக இருந்த காலத்தில், இந்திய-அமெரிக்கா உறவு வலுப்பெற்றது என்றும் மீண்டும் பைடனுடன் பணியாற்றுவதை எதிர்நோக்கி ஆவலுடன் காத்துக்கொண்டிருப்பதாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு பெண் துணை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தமிழ் நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் தற்போது நடைபெற்ற அமெரிக்கத் தேர்தலில் துணை அதிபராகத் தேர்வாகியுள்ளார். இத்தகைய வெற்றியைத் தொடர்ந்து, தான் ஒரு முதல் பெண் துணை அதிபராக இருக்கலாம், ஆனால், கடைசி அல்ல என்றும் ஒரு பெண்ணை துணை அதிபராக நியமிக்க பைடனுக்கு துணிச்சல் அதிகம் என்றும் தன் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கமலா ஹாரிஸ்.

வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குப் பயணிப்பவர்களுக்கு, 72 மணி நேரத்திற்குள் ஆர்டி-பிசிஆர் நடத்தப்படும் சோதனையிலிருந்து கோவிட் 19 நெகட்டிவ் சான்றிதழைச் சமர்ப்பித்துத் தனிமைப்படுத்த வேண்டிய அவசியத்தைச் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் நீக்கியிருக்கிறது. கடந்த வியாழக்கிழமை மத்திய அரசு வெளியிட்ட சர்வதேச வருகைக்கான புதிய வழிகாட்டுதலின் ஒரு பகுதியாக இது இணைந்திருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக உறுதி செய்யப்பட்ட பாதிப்புகளின் எண்ணிக்கையில் ஒரு புதிய உச்சத்தை பதிவு செய்ததோடு ( 7,128 பாதிப்புகள்) மட்டுமல்லாமல், நான்கு மாதங்களுக்கு பிறகு, முதன்முறையாக தேசத்தின் தினசரி கொரோனா பாதிப்பில் அதிகப்படியான பங்களிப்பை டெல்லி  தலைநகர் பதிவு செய்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Live Blog

Tamil News Today : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.


22:42 (IST)08 Nov 2020

ஹைதராபாத் அணி 4 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள்

டெல்லி vs ஹைதராபாத் அணி:  190 ரன் இலக்கை நோக்கி விளையாடும் ஹைதராபாத் அணி 4 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்துள்ளது   

20:53 (IST)08 Nov 2020

சசிகாந்த் செந்தில் (ஐஏஎஸ்) நாளை காங்கிரஸ் கட்சியில் இணைகிறார்

தட்சிணா கன்னட துணை ஆணையர் பதவியில் இருந்து விலகிய சசிகாந்த் செந்தில் (ஐஏஎஸ்) நாளை காங்கிரஸ் கட்சியில் இணைகிறார்.

20:51 (IST)08 Nov 2020

ஆலைகளை விரிவுபடுத்தும் கோரிக்கை மனுக்களுக்குத் தடை விதிக்க வேண்டும் – தமிழச்சி தங்கபாண்டியன் (3/ n)

ஆலைகளை விரிவுபடுத்தும் கோரிக்கை மனுக்களுக்குத் தடை விதிக்க வேண்டும். விதிகளை மீறும் ஆலைகள் மீதும், விதிமீறல்களைக் கண்டுகொள்ளாத மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மீதும், உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.

20:50 (IST)08 Nov 2020

ஆலைகளை விரிவுபடுத்தும் கோரிக்கை மனுக்களுக்குத் தடை விதிக்க வேண்டும் – தமிழச்சி தங்கபாண்டியன் (2/ n)

அதைத் தடுக்க வேண்டிய, கட்டுப்படுத்தக் கூடிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கண்டுகொள்ளாமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மேலும் ஹைட்ரஜன் புளூரைடு வாயு வெளியேற்றத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டாலோ, முன்னெச்சரிக்கை கட்டமைப்பு இயங்கவில்லை என்றாலோ மிகப் பெரிய அளவிலான ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே மத்திய, மாநில அரசுகள், தொழிற்சாலைகளால் மாசுபட்டு வரும் மணலி, எண்ணூர் பகுதிகளில் இதற்கு மேல் புதிய ஆலை நிறுவனங்களுக்கான அனுமதியினை இரத்து செய்ய வேண்டும்.

20:49 (IST)08 Nov 2020

தமிழச்சி தங்கபாண்டியன் அறிக்கை (1/ n)

எண்ணூர் மற்றும் மணலி பகுதியில் இயங்கி வரும் வடசென்னை அனல்மின் நிலையம், வல்லூர் அனல்மின் நிலையம், சிபிசிஎல், தமிழ்நாடு பெட்ரோ புராடக்ட்ஸ், மணலி பெட்ரோ கெமிக்கல்ஸ், மெட்ராஸ் பெர்ட்டிலைசர் உள்ளிட்ட பெரிய தொழிற்சாலைகள் ஏற்படுத்தும் காற்று மாசு தொடர்பாக சென்னை காலநிலை செயல்பாட்டுக் குழு சார்பில் ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது. அந்த ஆய்வின் மூலம் பல தொழிற்சாலைகள் 60 சதவீத நேரங்களில், விதிகளை மீறிப் புகையை வெளியேற்றுவதால், காற்று மாசடைவதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தகவல் கிடைத்துள்ளது.

20:42 (IST)08 Nov 2020

வெற்றிவேல் யாத்திரை- ஹெச். ராஜா அறிவிப்பு

நாளை 9.11.2020 காஞ்சிபுரத்திலும், 10.11.2020 அன்று கிருஷ்ணகிரியிலும் வெற்றிவேல் யாத்திரையில் கலந்து கொள்வதாக ஹெச். ராஜா தெரிவித்தார்.   

20:41 (IST)08 Nov 2020

மனுஸ்மிருதியை யாரும் தடை செய்ய முடியாது – இல.கணேசன்

மனுஸ்மிருதியை யாரும் தடை செய்ய முடியாது. ஆங்கிலேயர் மொழிபெயர்த்த மனுஸ்மிருதியையும், கி.வீரமணி சொல்லிய மனு ஸ்மிருதியையும் வேண்டுமானால் தடை செய்யலாம்!

அதைத்தான் திருமாவளவன் விரும்புகிறாரா? என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்தார்.  

20:40 (IST)08 Nov 2020

கார்கில் பகுதி தலைமை நிர்வாக ஆலோசகர் ஃபெரோஸ் அகமத் கான் கருத்து

லடாக் யூனியன் பிரதேசத்தில் தரமான கல்வியை வழங்கும் வகையில் கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதே அரசின் முக்கிய நோக்கம் என்று கார்கில் பகுதி தலைமை நிர்வாக ஆலோசகர் ஃபெரோஸ் அகமத் கான் தெரிவித்துள்ளார்.

19:36 (IST)08 Nov 2020

தமிழகத்தில் 2,386 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 2,386 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை, தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 7,13,584 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றினால் 20 பேர் உயிரிழந்தனர்.கொரோனா தொற்றால் மாநிலத்தின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11,344 ஆக அதிகரித்துள்ளது

19:30 (IST)08 Nov 2020

பணமதிப்பிழப்பு நடவடிக்கை கருப்பு பணத்தை குறைத்து, வரித்தாக்கல் மற்றும் முறைப்படுத்துதலை அதிகரித்துள்ளது – மோடி

‘‘பணமதிப்பிழப்பு நடவடிக்கை கருப்பு பணத்தை குறைத்து, வரித்தாக்கல் மற்றும் முறைப்படுத்துதலை அதிகரித்துள்ளது மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு ஊக்குவிப்பை அளித்துள்ளது’’ என பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.

19:28 (IST)08 Nov 2020

கடந்த ஆண்டை விட 19.92 % அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது

காரீப் சந்தைக் காலத்தில் நவம்பர் 7-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் கடந்த ஆண்டை விட 19.92 % அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நடப்பு காரீப் சந்தைக் காலத்தில் (2020-21), காரீப் பயிர்களை, விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அரசு தொடர்ந்து கொள்முதல் செய்து வருகிறது என்று மத்திய அரசு தெரிவித்தது.  

19:07 (IST)08 Nov 2020

சீமானுக்கு சேரன் பிறந்தநாள் வாழ்த்து

ஆகச்சிறந்த அரசியல் போராளிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. நீங்கள் எவ்வழியோ அவ்வழியே உங்களின் அனைத்து தம்பிகளும்.. சரியான வழியை உருவாக்கி தருவது உங்களின் கடமை.. தீயவற்றை வேரறுத்து தேவையானதை தூக்கி பிடியுங்கள்.. வெல்லட்டும் போர்க்குணம் என்று இயக்குனர் சேரன் தெரிவித்தார் 

19:06 (IST)08 Nov 2020

டெல்லி அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்துள்ளது

இன்று நடக்கும் ஐ.பி.எல் போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட் செய்கிறது.

17:45 (IST)08 Nov 2020

வீட்டிலிருந்தே கல்வி பயில்வது குறித்த மாணவர்களின் மனநிலை அறியப்படும் : செங்கோட்டையன்

வீட்டிலிருந்தே கல்வி பயில்வது குறித்த மாணவர்களின் மனநிலையை அறிந்து அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மதுரையில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்

17:38 (IST)08 Nov 2020

துரைக்கண்ணு குடும்பத்தினருக்கு நெருக்கடி தரப்பட்டதா ? மு. க ஸ்டாலின் கேள்வி

மறைந்த முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணு மரணப்படுக்கையில் இருந்த போது அவரது குடும்பத்தினருக்கு நெருக்கடி தரப்பட்டதா? அவரிடமிருந்த பல கோடி ரூபாய்களை மீட்கத்தான் மர்மக் கைதுகளா? பா.ஜ.க அரசு வேடிக்கை பார்ப்பது ஏன்? என்று திமுக தலைவர் மு. க ஸ்டாலின் வினவியுள்ளார். 

 

17:15 (IST)08 Nov 2020

அமெரிக்க அதிபராக வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு வைகோ வாழ்த்து

அமெரிக்க தேர்தலில் அமெரிக்க அதிபராக வெற்றி பெற்றுள்ள ஜோ பைடனுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார். “அமெரிக்க அதிபராக தேர்வான ஜோ பைடனுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்; கடந்த காலங்களை போல இந்தியாவுடன் நட்புறவு தொடரும் என்று நம்புகிறேன்; இந்திய இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற விதிக்கப்பட்ட தடை இனி தளரும்” என்று வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

15:32 (IST)08 Nov 2020

பொது ஊரடங்கு அவசியமில்லை – தலைமை செயலாளர் சண்முகம் பேட்டி

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம், “பொது ஊரடங்கு அவசியமில்லை; கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளில் உள்ளூர் அளவில் கட்டுப்பாடு; கொரோனா தடுப்பூசி எப்போது வரும் என்பதை சொல்ல முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

15:15 (IST)08 Nov 2020

விருத்தாசலம் கிளை சிறையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் கிளை சிறையில் செல்வமுருகன் என்பவர் உயிரிழந்த வழக்கில் கிளை சிறையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். சிபிசிஐடி ஆய்வாளர் தீபா தலைமையில் 5 பேர் கொண்ட சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

14:16 (IST)08 Nov 2020

தடையை மீறி 2வது நாள் வேல் யாத்திரை; எல்.முருகன் கைது

சென்னையில் 2வது நாளாக தடையை மீறி வேல் யாத்திரை தொடங்கவிருந்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கைது செய்யப்பட்டார். அவருடன் பாஜக மூத்த தலைவர் இல.கணேசனும் கைது செய்யப்பட்டார். சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் இருந்து 2வது நாளாக வேல் யாத்திரையை தொடரவிருந்த பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.

14:07 (IST)08 Nov 2020

வேல் யாத்திரை முடியும்போது தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும் – அண்ணாமலை

பாஜக மாநில துணை தலைவரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை, 2021 அரசியல் மாற்றத்திற்கு வேல் யாத்திரை மிகப்பெரிய பங்கு வகிக்கும். வேல் யாத்திரை முடியும்போது தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும் என்று கூறினார்.

13:57 (IST)08 Nov 2020

காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் முன்னாள் ஐஏஎஸ் சசிகாந்த்

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில் காங்கிரஸ் கட்சியில் இணைவதாக அறிவித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த சசிகாந்த் செந்தில் சிஏஏ சட்டத்துக்கு அதிருப்தி தெரிவித்து ராஜினாமா செய்தார். சிஏஏஎ போராட்டங்களில் கலந்துகொண்ட முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் காங்கிரஸ் இணைவதாக தெரிவித்துள்ளார்.

13:43 (IST)08 Nov 2020

திமுக-காங்கிரஸ் கூட்டணி சுதந்திர கூட்டணி – கே.எஸ்.அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “அதிமுக – பாஜகவைப் போல, திமுக – காங்கிரஸ் அடிமை கூட்டணி அல்ல, சுதந்திரக் கூட்டணி. திமுக – காங்கிரஸ் கூட்டணீ ஜனநாயக ரீதியான கூட்டணி என்பதால் சுதந்திரமாக கருத்துகளை சொல்கிறோம்” என்று கூறினார்.

13:10 (IST)08 Nov 2020

மத்திய கப்பல் போக்குவரத்துறை பெயர் மாற்றம்

மத்திய கப்பல் போக்குவரத்துறையின் பெயர், ‘துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம்’ என்று மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

12:42 (IST)08 Nov 2020

ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் காங்கிரஸ் கட்சியில் சேரப்போகிறார்

சமீப காலமாக ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவியில் இருந்தவர்கள் அரசியல் காட்சிகளில் இணைந்து வருகின்றனர். அந்த வரிசையில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில், காங்கிரஸ் கட்சியில் நாளை இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது.

11:49 (IST)08 Nov 2020

கமலாவின் பூர்வீக கிராம மக்கள் ரங்கோலி கோலமிட்டு வாழ்த்து

தற்போது அமெரிக்கத் தேர்தலில் வெற்றிபெற்று, அமெரிக்காவின் முதல் பெண் துணைப் பிரதமர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான கமலா ஹாரிஸ், தமிழகத்திலுள்ள திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த துளசேந்திபுரம் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டிருப்பவர். கமலாவின் வெற்றியைத் தொடர்ந்து துளசேந்திபுரம் கிராம மக்கள் ரங்கோலி கோலமிட்டு கமலா ஹாரிஸூக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

11:26 (IST)08 Nov 2020

தன் நண்பன் ஜோ பைடனுக்கு வாழ்த்து தெரிவித்த மிச்சல் ஒபாமா

“என் நண்பர் ஜோ பைடன் மற்றும் அமெரிக்காவின் முதல் கருப்பு மற்றும் இந்திய-அமெரிக்க பெண் துணைத் தலைவர் கமலா ஹாரிஸ் இருவரும் வெள்ளை மாளிகையில் சில கண்ணியம், திறமை ஆகியவற்றைக் காக்கத் தலைமை தாங்குகின்றனர். நம் நாட்டுக்கு அது மிகவும் தேவை” என்று தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் மிச்சல் ஒபாமா.

11:05 (IST)08 Nov 2020

ஜோ பைடனுக்கு ப.சிதம்பரம் வாழ்த்து!

“அமெரிக்க மக்களுக்கு நேற்று இரவு 9.56 மணிக்கு தீபாவளி தொடங்கியது

ஜனநாயகம் என்பது யாரும் நமக்கு அளித்த பிச்சையல்ல. மகாத்மா காந்தி தலைமையில் நாம் போராடி வென்றது. அந்த “வாராது போல் வந்த மாமணியை” ஒவ்வொரு நாளும் போராடிக் காப்பாற்ற வேண்டும்” என்று ப.சிதம்பரம் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

10:48 (IST)08 Nov 2020

ஜோ பைடன், கமலா ஹாரிஸுக்கு ஸ்டாலின் வாழ்த்து

அமெரிக்க அதிபராகவுள்ள ஜோ பைடன் மற்றும் துணை அதிபராகவுள்ள கமலா ஹாரிஸுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸை துணை அதிபராக அமெரிக்க மக்கள் தேர்வு செய்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

10:29 (IST)08 Nov 2020

பைடன், கமலா ஹாரிஸுக்கு ராகுல் காந்தி வாழ்த்து

“அமெரிக்காவை ஜோ பைடன் ஒருங்கிணைப்பார்” என்று கூறி அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடனுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். “கமலா ஹாரிஸ் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டிருப்பது இந்தியர்களைப் பெருமைப்படுத்துவதாக இருக்கிறது” என்று துணை அதிபராகப் பதவியேற்க உள்ள கமலா ஹாரிஸுக்கும் ராகுல் காந்தி வாழ்த்துக் கூறினார்.

10:12 (IST)08 Nov 2020

ஜோ பைடனுக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் வாழ்த்து

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கமலா ஹாரிஸுக்கும் தன் வாழ்த்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Latest Tamil News : தமிழக அரசின் தடையை மீறி வேல் யாத்திரையை தொடங்க முற்பட்டஎல்.முருகன் உட்பட 500-க்கும் மேற்பட்ட பா.ஜ.க-வினரை தமிழக காவல்துறை கைது செய்தது. இந்நிலையில், தங்களின் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு விதித்த தடையை நீக்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாராணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இருதரப்பு வாதங்கையும் கேட்ட நீதிபதிபதிகள், வழக்கை  வரும் பத்தாம் தேதிக்கு ஒத்திவைப்பதாக தெரிவித்தனர்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil news live today america election joe biden kamal harris modi eps stalin vel yathirai

Next Story
மற்ற மாநில்ஙளை விட குணமடைவோர் எண்ணிக்கை தமிழகத்தில் குறைந்து வருகிறதுtamil nadu daily coronavirus report,
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express