Advertisment

Tamil News Today: இலங்கை நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த 19 தமிழக மீனவர்கள் கைது

07/02/2024: இன்றைய முக்கிய செய்திகள் அனைத்தையும், லேட்டஸ்ட் அப்டேட்களையும் உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள நமது 'இந்திய எக்ஸ்பிரஸ் தமிழ்' லைவ் பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sasa

IE Tamil Updates

பெட்ரோல் மற்றும் டீசல் விலை

Advertisment

சென்னையில் தொடர்ந்து 626 ஆவது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 சென்னை குடிநீர் ஏரிகளில் சராசரி நீர் இருப்பு - 82.89%

5 முக்கிய ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டிஎம்சியில் தற்போது 9.746 டிஎம்சி நீர்இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் - 83.92%, புழல் - 78.51% , பூண்டி - 87.74%, சோழவரம் - 71.23%, கண்ணன்கோட்டை - 98.2%. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • Feb 07, 2024 22:29 IST
    குடும்ப அட்டைதாரர்களின் விரல்ரேகை சரிபார்ப்பு : உணவுத்துறை விளக்கம்

    "ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களின் விரல்ரேகை சரிபார்ப்பு செய்யாதவர்கள் நீக்கம் செய்யப்படுவார்கள் என்பது தவறான தகவல். இதுவரை 63% குடும்ப அட்டைதாரர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. குடும்ப அட்டைதாரர்கள் அவரவர்கள் வசதிக்கேற்ப விவரங்களை புதுப்பித்துக் கொள்ளலாம் என தமிழ்நாடு உணவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.



  • Feb 07, 2024 21:28 IST
    விளையாட்டு வீரர்களுகாக களமிறங்குவது திராவிட மாடல் : உதயநிதி ஸ்டாலின்

    திருச்சியில் நடைபெற்ற கல்லூரி விழா ஒன்றில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் "விளையாட்டு வீரர்களுக்கு தேவை என்றால் உடனே களத்தில் இறங்கி உதவும் அரசுதான் நம்முடைய திராவிட மாடல் அரசு"  என கூறியுள்ளார்.



  • Feb 07, 2024 20:43 IST
    அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் விராத் கோலி விலகல்?


    இங்கிலாந்து அணிக்கு எதிரான அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் கோலி விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



  • Feb 07, 2024 20:39 IST
    மியான்மர் நாட்டின் வழியாக ஊடுருவலை தடுக்க நடவடிக்கை

     

    மியான்மர் நாட்டின் எல்லைப் பகுதியில் இருந்து ஊடுருவலைத் தடுக்கும் வகையில், அந்நாட்டினை ஒட்டிய இந்திய எல்லைப்பகுதி முழுவதும் வேலி அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிவிட்டுள்ளார்.



  • Feb 07, 2024 20:37 IST
    பொய் பரப்புவதில் மோடிக்கு உத்ரவாதம் தரலாம்; மல்லிகார்ஜூன கார்கே

    “பொய்களை பரப்புவதில் மோடிக்கு உத்தரவாதம் தரலாம்; பிரதமர் நரேந்திர மோடியின் அரசு அனைத்து புள்ளிவிவரங்களையும் மறைத்து பொய்களை பரப்புகிறது” என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றஞ்சாட்டியுள்ளார்.



  • Feb 07, 2024 20:35 IST
    ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வுக்கு ஜாமின் மறுப்பு

    டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்குக்கு ஜாமின் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.



  • Feb 07, 2024 20:35 IST
    ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வுக்கு ஜாமின் மறுப்பு

    டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்குக்கு ஜாமின் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.



  • Feb 07, 2024 19:58 IST
    10 நாள்களில் ரூ.3440 கோடி முதலீடு ஈர்ப்பு; மு.க. ஸ்டாலின் பெருமிதம்

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “பத்துநாள் #Spain பயணத்தில், 9 முன்னணி நிறுவனங்களின் ரூ. 3,440 கோடி முதலீடுகளை ஈர்த்து வந்திருக்கிறோம் என்பதை கழக உடன்பிறப்புகளிடமும் தமிழ்நாட்டு மக்களிடமும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
    மேலும், “சுற்றுப் பயணம் வெற்றிப் பயணமானது! இனி நாம் காண இருக்கும் தேர்தல் களத்திலும் அதே வெற்றியை ஈட்டுவோம்” எனவும் கூறியுள்ளார்.



  • Feb 07, 2024 19:32 IST
    சாட்டை துரைமுருகனிடம் 8 மணி நேர விசாரணை

    நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளான சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோலின் என்ஐஏ (NIA) அதிகாரிகள் சுமார் 8 மணி நேரம் நடத்திய விசாரணை நிறைவு பெற்றது.
    காலை 10 மணிக்கு தொடங்கிய விசாரணையானது மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றுள்ளது.



  • Feb 07, 2024 19:10 IST
    TANCET தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு

     

    அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும், முதுநிலை பட்டப் படிப்புக்கான TANCET தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் பிப்.12ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.



  • Feb 07, 2024 18:55 IST
    உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் மசோதா நிறைவேற்றம் 

    உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேறியது. முதல்வர் புஷ்கர் சிங் தாமி உரைக்கு பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. உத்தரகாண்ட் நாட்டிலேயே பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றிய முதல் மாநிலமானது.



  • Feb 07, 2024 18:24 IST
    பா.ஜ.க தேசியத் தலைவர் ஜெ.பி.  நட்டாவுடன் அண்ணாமலை சந்திப்பு

    டெல்லியில் பா.ஜ.க தேசியத் தலைவர் ஜெ.பி.  நட்டாவுடன் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சந்தித்தார். நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து, ஜெ. பி நட்டாவை சந்தித்துப் பேசியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



  • Feb 07, 2024 18:21 IST
    விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்யாத 1,000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை

    பொதுத் தேர்வில் விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்யாத 1,000 ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித் துறைக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் பரிந்துரை செய்துள்ளது. நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆசிரியர்களை இந்த ஆண்டு மதிப்பீடு பணியில் ஈடுபடுத்துவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.



  • Feb 07, 2024 18:18 IST
    பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் நாய் வீடியோ; ராகுல் காந்தியை தாக்கிய நிஷிகாந்த் துபே

    பா.ஜ.க தலைவர் நிஷிகாந்த் துபே புதன்கிழமை ராகுல் காந்தியை குறிவைத்து, பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் நாயுடன் வைரலான வீடியோவைக் குறிவைத்து, ஜார்கண்டில் உள்ள மக்களுக்கு நாய்களுக்கான பிஸ்கட்களை காங்கிரஸ் தலைவர் கொடுத்ததாகக் கூறினார். தனது கைகளில் இருந்து சாப்பிட மறுத்ததால், விலங்கிற்கு உணவளிக்க நாய் உரிமையாளருக்கு பிஸ்கட் கொடுத்ததாக ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை தெளிவுபடுத்தினார். நாய்கள் மீது பா.ஜ.க.வின் வெறுப்பு தனக்கு புரியவில்லை என்றும் அவர் கூறினார்.



  • Feb 07, 2024 17:38 IST
    போக்குவரத்து தொழிலாளர்களுடன் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை

    சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் போக்குவரத்து தொழிலாளர்களுடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை, மீண்டும் வரும் 21ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.



  • Feb 07, 2024 17:34 IST
    மண் சரிவால் பலி: ரூ.2 லட்சம் நிதியுதவி  - ஸ்டாலின் அறிவிப்பு

    நீலகிரி, உதகை அருகே மண் சரிந்து உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவியும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.



  • Feb 07, 2024 17:31 IST
    பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டிக்கு முன்ஜாமீன் - ஐகோர்ட் உத்தரவு

    பணம் கொடுக்கல் வாங்கலில் பா.ஜ.க பெண் நிர்வாகியைத் தாக்கியதாக அமர்பிரசாத் ரெட்டி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், பா.ஜ.க நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனையுடன் முஞாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோட்டூர்புரம் காவல் நிலையத்தில், 10 நாள்கள் கையெழுத்து போடாவிட்டால் முன்ஜாமீன்  சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.



  • Feb 07, 2024 17:23 IST
    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிப். 17-ம் தேதி ஆஜராக வேண்டும் - நீதிமன்றம் உத்தரவு

    டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் 5 முறை சம்மன் அனுப்பியும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்  ஆஜராகவில்லை எனக் குற்றம்சாட்டி அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்த நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிப். 17-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • Feb 07, 2024 17:15 IST
    முன்னாள் பிரதமர் நேரு முதலமைச்சர்களுக்கு எழுதிய கடிதத்தை ராஜ்ய சபாவில் படித்த மோடி

    ராஜ்யசபாவில், பிரதமர் நரேந்திர மோடி, அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, அப்போதைய முதல்வர்களுக்கு எழுதிய கடிதத்தை வாசித்தார்.

    "....நான் அதன் மொழிபெயர்ப்பைப் படித்து வருகிறேன் -- "எந்தவிதமான இட ஒதுக்கீடும், குறிப்பாக சேவைகளில் எனக்குப் பிடிக்கவில்லை. திறமையின்மை மற்றும் இரண்டாம் நிலை தரத்திற்கு வழிவகுக்கும் எதையும் நான் கடுமையாக எதிர்க்கிறேன்..," அதனால்தான் அவர்கள் பிறப்பால் அதற்கு (இடஒதுக்கீட்டிற்கு) எதிரானவர்கள் என்று சொல்கிறேன்...அப்போது அரசு ஆட்சேர்ப்பு செய்து, அவ்வப்போது பதவி உயர்வு அளித்திருந்தால், அவர்கள் இன்று இங்கு இருந்திருப்பார்கள்” என்று மோடி கூறினார்.



  • Feb 07, 2024 16:51 IST
    'பாபா சாகேப்பின் சிந்தனைகளை அழித்த காங்கிரஸ்': மோடி பேச்சு 

    "எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓ.பி.சி மக்களுக்கு அதிக பங்களிப்பை வழங்குவதில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு எப்போதும் சிரமம் இருக்கிறது. பாபா சாகேப்பின் சிந்தனைகளை அழிக்க அவர்கள் எந்தக் கல்லையும் விட்டு வைக்கவில்லை. அவருக்கு பாரத ரத்னா வழங்க அவர்கள் ஒருபோதும் ஏற்பாடு செய்யவில்லை. பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைத்தபோது பாபா சாகேபுக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டது." என்று  பிரதமர் நரேந்திர மோடி கூறினார். 



  • Feb 07, 2024 16:35 IST
    'மாநிலங்களின் வளர்ச்சியால் மட்டுமே நாட்டை முன்னேற்ற முடியும்' -  மோடி பேச்சு 

    ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேசுகையில், "மாநிலங்களின் வளர்ச்சியால் மட்டுமே நாட்டை முன்னேற்ற முடியும். நாம் அனைவரும் அந்த வழியைப் பின்பற்ற வேண்டும். இதில் எந்த சர்ச்சையும் இருக்க முடியாது. மாநிலம் ஒரு படி நடந்தால், இரண்டு படிகள் முன்னேறும் வலிமையை நாட்டிற்கு தருகிறது என்று நான் உறுதியளிக்கிறேன்." கூறினார். 

     



  • Feb 07, 2024 16:29 IST
    பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு

    "தனியாக களம் காண நிர்வாகிகள் விருப்பம். நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக தனியாக களம் காண நிர்வாகிகள் வலியுறுத்தினர். அதனால் அதிக இடங்களை ஒதுக்கும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி அமைப்போம்.

    14 மக்களவை தொகுதி மற்றும் 1 மாநிலங்களவை எம்.பி பதவி தரும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி அமைப்போம்" என்று மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். 



  • Feb 07, 2024 16:22 IST
    '70 ஆண்டுகளாக ஓ.பி.சி சமூக உரிமைகளை பறித்த காங்.,' - மாநிலங்களவையில் மோடி பேச்சு 

    ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேசுகையில், 7 தசாப்தங்களாக ஓ.பி.சி.யினரின் உரிமைகளை காங்கிரஸ் கட்சி பறித்ததாக குற்றம் சாட்டினார்.

    மேலும் பேசிய அவர் “ஓபிசிக்கு ஒருபோதும் முழுமையான இடஒதுக்கீடு வழங்காத காங்கிரஸ், பொதுப் பிரிவினரின் ஏழைகளுக்கு இடஒதுக்கீடு வழங்கவில்லை, பாபா சாகேப் பாரத ரத்னாவுக்கு தகுதியானவர் என்று கருதாத காங்கிரஸ், தனது குடும்பத்துக்கு மட்டும் பாரத ரத்னா வழங்கிக் கொண்டிருக்கிறது. சமூக நீதியின் பாடம். தலைவராக உத்தரவாதம் இல்லாதவர்கள் மோடியின் உத்தரவாதம் குறித்து கேள்வி எழுப்புகின்றனர்...." என்றார்.

     



  • Feb 07, 2024 15:40 IST
    பணிப்பெண் துன்புறுத்தல் - மகளிர் ஆணையம் விசாரணை

    சென்னையில் தி.மு.க எம்.எல்.ஏ மகன் வீட்டில் பணிப்பெண் துன்புறுத்தப்பட்ட விவகாரத்தில், பணிப்பெண்ணின் சொந்த ஊரில் இல்லத்திற்கு நேரடியாக சென்று மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி விசாரணை நடத்தினார். 

    பணிப்பெண் துன்புறுத்தப்பட்ட விவகாரத்தில் எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 



  • Feb 07, 2024 15:33 IST
    அமைச்சர் செந்தில் பாலாஜி மனு - பிப்.15ல் தீர்ப்பு

    சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது பிப்ரவரி 15ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

     



  • Feb 07, 2024 14:58 IST
    ரூ.22 லட்சத்திற்கு ஏலம் போன சாய் கிஷோர்

    டி.என்.பி.எல் போட்டிகளுக்கு ஆல்ரவுண்டர் சாய் கிஷோரை ரூ22 லட்சத்திற்கு திருப்பூர் அணி ஏலம். எடுத்தது வேகப்பந்து வீச்சாளர் நடராஜனை ரூ.11.25 லட்சத்திற்கு திருப்பூர் அணி வாங்கியது



  • Feb 07, 2024 14:47 IST
    என்னுடைய குரலை ஒருபோதும் எதிர்க்கட்சிகள் ஒடுக்க முடியாது - மோடி

    என்னுடைய குரலை ஒருபோதும் எதிர்க்கட்சிகள் ஒடுக்க முடியாது. காங்கிரஸ் 40 இடங்கள் கூட பெறுமா என்பது சந்தேகமாக உள்ளது என மேற்கு வங்கத்திலிருந்து ஒரு குரல் வந்தது. 40 இடங்களை ஆவது பெறுங்கள் என நான் காங்கிரசிற்கு வேண்டுகோள் விடுக்கிறேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார்



  • Feb 07, 2024 14:35 IST
    நிதி நிறுவன மோசடி தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்; ஐகோர்ட்

    நிதி நிறுவன மோசடிகளில் பொதுமக்கள் தொடர்ச்சியாக ஏமாறுவதால் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ரூ.4000 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஹிஜாவு நிறுவனத்தின் நிர்வாகிகளான கோவிந்தராஜ், சுஜாதா மற்றும் துரைராஜ் ஆகியோரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விசாரணை தற்போது முக்கிய கட்டத்தில் இருப்பதால் ஜாமின் வழங்க கூடாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது



  • Feb 07, 2024 14:26 IST
    கூட்டணி பேச்சுவார்த்தை; ஸ்டாலினை சந்திக்கும் கமல்ஹாசன்

    கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலினை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அமெரிக்காவில் உள்ள கமல்ஹாசன் சென்னை திரும்பியதும், முதல்வரை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு, வரும் 12ஆம் தேதி கமல்ஹாசன் சென்னை திரும்புகிறார். திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் 2 தொகுதிகளை கேட்பதாக கூறப்படுகிறது. இதுவரை அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறாத நிலையில், 12ஆம் தேதிக்கு பின் பேச்சுவார்த்தை நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன



  • Feb 07, 2024 14:14 IST
    அ.தி.மு.க கூட்டணியில் இணைய தே.மு.தி.க நிர்வாகிகள் விருப்பம்

    நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க இடம் பெற வேண்டும் என தே.மு.தி.க மாவட்ட செயலாளர்கள் பலர் பிரேமலதா விஜயகாந்திடம் முறையிட்டுள்ளனர்



  • Feb 07, 2024 13:58 IST
    உதகையில் கட்டுமான பணியின் போது ஏற்பட்ட மண் சரிவில் 5 பேர் மரணம்

    உதகை அருகே லவ்டேல் பகுதியில் கட்டுமான பணியின் போது ஏற்பட்ட மண் சரிவில், 5 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பெண்கள் உட்பட 7 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்



  • Feb 07, 2024 13:56 IST
    தேர்தல் அறிக்கை தொடர்பான மக்களின் கருத்துகள், முதல்வரிடம் அறிக்கையாக சமர்ப்பிக்கப்படும்; கனிமொழி எம்.பி

    தேர்தல் அறிக்கை தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமும் கருத்து கேட்கப்பட்டுள்ளது, மக்களின் கருத்துகள், முதல்வரிடம் அறிக்கையாக சமர்ப்பிக்கப்படும். ஜி.எஸ்.டி வரியின் சிக்கல்கள் குறித்து பலர் கருத்து கூறினர். சட்டமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை தி.மு.க நிறைவேற்றியுள்ளது என கனிமொழி எம்.பி பேட்டி அளித்துள்ளார்



  • Feb 07, 2024 13:37 IST
    சென்னையில் 10ம் தேதி முதல் மலர்க் கண்காட்சி

    சென்னையில் வரும் 10ம் தேதி முதல் மலர்க் கண்காட்சி தொடங்குகிறது. செம்மொழி பூங்காவில் நடைபெறும் இந்த மலர் கண்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.



  • Feb 07, 2024 13:09 IST
    சேலம் நீதிமன்றத்தில் சீமான் இன்று ஆஜர்

    இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக 2017ம் ஆண்டு சீமான் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்காக சேலம் நீதிமன்றத்தில் அவர் இன்று ஆஜரானார். "நெய்தல் படை அமைத்து அதன் மூலம் 15,000 பேருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி கொடுப்பேன்" என அப்போது பேசியிருந்ததற்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது



  • Feb 07, 2024 12:54 IST
    பிரதமர் மோடியை ஏற்பவர்கள் கூட்டணியில் சேரலாம்- அண்ணாமலை

    "பிரதமர் மோடியை ஏற்பவர்கள் கூட்டணியில் சேரலாம்". "பிரதமர் மோடியை ஏற்பவர்களுக்கு, கூட்டணி கதவு திறந்திருப்பதாக அமித்ஷா கூறியுள்ளார்".

     "பாஜக கூட்டணி கதவு, எல்லோருக்கும் திறந்திருப்பதாக அமித்ஷா கூறியுள்ளார்" -தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை



  • Feb 07, 2024 12:43 IST
    பேருந்துகளை முழுமையாக பரிசோதித்து இயக்க உத்தரவு

    "அனைத்து மாநகர பேருந்துகளையும் முழுமையாக பரிசோதித்த பின் இயக்க வேண்டும்"- போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அதிரடி உத்தரவு

    மிக மோசமான நிலையில் உள்ள அரசு பேருந்துகளை முழுமையாக நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்

    "சென்னையில் இயக்கப்படும் 3000-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் மேற்கூரை, பாகங்களை சரியாக பரிசோதித்து இயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்"

    சென்னையில் நேற்று மாநகர பேருந்தில் இருக்கைக்கு கீழே இருந்த பலகை உடைந்து பெண் பயணி கீழே விழுந்த சம்பவத்தையடுத்து உத்தரவு



  • Feb 07, 2024 12:40 IST
    அமித்ஷாவின் பெருந்தன்மையை காட்டுகிறது- ஓபிஎஸ்

     "அமித்ஷாவின் பெருந்தன்மையை காட்டுகிறது". கூட்டணி கதவு திறந்தே இருப்பதாக, அமித்ஷா கூறியிருப்பது அவரின் பெருந்தன்மையை காட்டுகிறது - ஓபிஎஸ்



  • Feb 07, 2024 12:34 IST
    பாஜகவுடன் எப்போதும் கூட்டணி கிடையாது- ஜெயக்குமார்

    "பாஜகவுடன் எப்போதும் கூட்டணி கிடையாது"

    "முன்வைத்த காலை பின்வைக்க மாட்டோம்"

    அதிமுக கூட்டணிக்காக பாஜகவின் கதவுகள் திறந்தே இருப்பதாக அமித்ஷா கூறியிருந்த நிலையில், ஜெயக்குமார் திட்டவட்டம்



  • Feb 07, 2024 12:17 IST
    பாஜகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்

    அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 14 பேர் உட்பட 18 பேர் பாஜகவில் இணைந்தனர்

    டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில், அண்ணாமலை தலைமையில் பாஜகவில் இணைந்தனர்

    முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சேலஞ்சர் துரை, கு.வடிவேல், கந்தசாமி உள்ளிட்டோர் பாஜகவில் இணைந்தனர்



  • Feb 07, 2024 11:50 IST
    கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை: பிரேமலதா

    கூட்டணி குறித்து முடிவெடுக்க தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயாகாந்த்க்கு அதிகாரம். கூட்டணி தொடர்பாக எந்த கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை - பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக பொதுச்செயலாளர்



  • Feb 07, 2024 11:45 IST
    அரசியலுக்கு வருகிறேனா? - விஷால் விளக்கம்

    மக்கள் நல இயக்கத்தின் மூலம் நான் செய்து வரும் மக்கள் பணிகளை தொடர்ந்து செய்வேன். நான் எப்போதும் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்ததில்லை- நடிகர் விஷால் 



  • Feb 07, 2024 11:41 IST
    மயிலாப்பூர் கோயில் முன்பு போதை ஆசாமி அட்டகாசம்

    மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நள்ளிரவில் போதை ஆசாமி அட்டகாசம்

    கோயில் முன்பு பெட்ரோல் ஊற்றி தீ பற்ற வைத்த பரபரப்பு 



  • Feb 07, 2024 11:11 IST
    நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆஜர்

    சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் ஆஜர்

    கடந்த வாரம் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் இல்லங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்றது

    சோதனையின் போது, சாட்டை துரைமுருகன் வீட்டில் இல்லாததால் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது

    என்.ஐ.ஏ. சம்மனை அடுத்து, சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆஜர்



  • Feb 07, 2024 10:51 IST
    மக்களவை தேர்தல் ஏற்பாடு - 2வது நாளாக

    மக்களவை தேர்தல் ஏற்பாடு - 2வது நாளாக ஆலோசனை நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடு தொடர்பாக 2வது நாளாக ஆலோசனை துணை தேர்தல் ஆணையர் அஜய் பதூ தலைமையில் நடைபெறும் கூட்டம் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் ஆணையர்கள் காணொலி மூலம் பங்கேற்பு நாடாளுமன்றத் தேர்தலை நியாயமாக, சுதந்திரமாக நடத்துவதற்கான ஏற்பாடு குறித்து ஆலோசனை வாக்குச்சாவடி, வாக்கு எண்ணிக்கை மையங்கள் தொடர்பாகவும் ஆலோசனை பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடுவது குறித்தும் ஆலோசனை



  • Feb 07, 2024 10:40 IST
    மதிவாணன், சாட்டை துரைமுருகன் இருவரும் அக்கட்சி வழக்கறிஞருடன் அலுவலகத்தில் ஆ

    நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தென்காசி இசை மதிவாணன், சாட்டை துரைமுருகன் இருவரும் அக்கட்சி வழக்கறிஞருடன் சென்னை தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்தில் ஆஜர்!



  • Feb 07, 2024 10:14 IST
    யாருடன் கூட்டணி? - தேமுதிக இன்று ஆலோசனை

     நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை சென்னை கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் இன்று கூடுகிறது மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில், கூட்டணி குறித்து முடிவெடுக்க தேமுதிக தலைமை திட்டம் விஜயகாந்த் இல்லாமல் முதல்முறையாக தேர்தலை சந்திக்கும் தேமுதிக சரிவில் இருந்து மீண்டு, மீண்டும் மாநில கட்சி அங்கீகாரத்தை பெற முனைப்பு காட்டும் தேமுதிக



  • Feb 07, 2024 10:13 IST
    அ.தி.மு.க.வுக்காக கூட்டணி கதவு திறந்தே இருக்கும்

    அ.தி.மு.க.வுக்காக கூட்டணி கதவு திறந்தே இருக்கும். அ.தி.மு.க கூட்டணிக்காக பா.ஜ.கவின் கதவுகள் திறந்தே இருக்கும்" -தினத்தந்தி நாளிதழுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா பிரத்யேக பேட்டி



  • Feb 07, 2024 10:13 IST
    பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் தமிழ்நாட்டிற்கான நிறைய திட்டங்கள் இடம்பெறும்

    "பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் தமிழ்நாட்டிற்கான நிறைய திட்டங்கள் இடம்பெறும்/ சாதி, சமூகம், மொழி, மாநிலம் கடந்து, பிரதமர் மோடியின் தலைமைக்கு ஆதரவு உள்ளது -மத்திய அமைச்சர் அமித்ஷா



  • Feb 07, 2024 10:02 IST
    கோவையைச் சேர்ந்த பெண் ஓட்டுநர் ஷர்மிளா மீது சைபர் கிரைம்

     கோவையைச் சேர்ந்த பெண் ஓட்டுநர் ஷர்மிளா மீது சைபர் கிரைம் .போலீசார் வழக்குப்பதிவு கடந்த 2ம் தேதி சத்திரோடு சிக்னல் சந்திப்பில் போக்குவரத்து எஸ்.ஐ., ராஜேஸ்வரி பணியில் இருந்து போது, ஷர்மிளா போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் அதனை எஸ்.ஐ., கேட்டபோது வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் தவறாக பதிவிட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் வழக்குப்பதிவு.



  • Feb 07, 2024 09:44 IST
    மோடியின் நாடாளுமன்ற பேச்சை பார்த்தேன், ரசித்தேன், சிரித்தேன்

    பிரதமர் மோடியின் நாடாளுமன்ற பேச்சை பார்த்தேன், ரசித்தேன், சிரித்தேன். காங்கிரஸ்தான் ஆளுங்கட்சி போலவும், பாஜக எதிர்க்கட்சி போலவும் அவர் பேசியிருக்கிறார்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment