Advertisment

Tamil News Today: தென் கொரியாவில் இருந்து இதுவரை 6 லட்சம் பி.சி.ஆர். கருவிகள் வாங்கிய தமிழகம்: கூடுதல் பரிசோதனை நடத்த ஏற்பாடு

News Today : பிசிஆர் கருவிகள் தென் கொரியாவில் இருந்து தமிழகம் வந்துள்ளன

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil News Live Today

Tamil News Live Today : பி.சி.ஆர் கருவிகள்

Tamil News Live Today :தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 38,716 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனா பரிசோதனைக்காக கூடுதலாக ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் தென் கொரியாவில் இருந்து தமிழகம் வந்துள்ளன. இதுவரை மொத்தம் 6 லட்சத்து 27 ஆயிரம் கருவிகள் வந்துள்ளதாக, தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisment

கடந்த வாரம் முழுவதும் பின் கத்திரியால் சுட்டெரித்த சென்னை இன்று ஜில்லென்று மாறியது.இன்று அதிகாலை முழுவதும் சென்னையில் தரமணி, மயிலாப்பூர், சென்ட்ரல், கீழ்ப்பாக்கம், நுங்கம்பாக்கம், புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்தது.

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அடுத்த இலவச அறிவிப்பு மாஸ்க்!

சேலத்தில் ரூ.441 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட ஈரடுக்கு மேம்பாலத்தை முதல்வர் பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார். சேலம் லீபஜார் பகுதியில் கட்டப்பட்டுள்ள ரூ.46,35 கோடி மதிப்பிலான மேம்பாலத்தையும் முதல்வர் காணொளி காட்சி மூலம் இன்று திறக்கிறார்.

Tamil News Today : காலை ஹைலைட்ஸ்!

தமிழகம் முழுவதும் உள்ள ஊர்ப் பெயர்களைத் தமிழில் உள்ளது போலவே ஆங்கிலத்தில் உச்சரிக்கவும், எழுதவும் அரசாணை வெளியிடப்பட்ட நிலையில் அதிலும் ஒருசில தவறுகள் இருப்பதாக ட்விட்டர்வாசிகள் இணையத்தில் கருத்து தெரிவித்து புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். அதே சமயம், தமிழகம் முழுவதும் உள்ள ஊர்ப் பெயர்களை தமிழில் உள்ளது போலவே ஆங்கிலத்தில் உச்சரிக்கவும், எழுதவும் அரசாணை வெளியிடப்பட்டதற்கு தொல் திருமாவளவன் வரவேற்றுள்ளார்.

ககன்யான் திட்டத்தின் முன்னோட்டமாக ஆளில்லா விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்

Live Blog

Tamil News Today : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    22:24 (IST)11 Jun 2020

    விஜய் வேண்டுகோள்

    கொரோனா தாக்கம் வீரியமாக அதிகமாகி வரும் நிலையில் பொதுமக்கள் ரசிகர்கள் நலன் கருதி ஜீன் 22 அண்ணனின் பிறந்த நாளை முன்னிட்டு எந்த ஒரு கொண்டாட்டாங்கள், நலத்திட்டங்கள் மற்றும் செய்திதாள் வாழ்த்து விளம்பரங்கள் என எந்தவித செயல்களிலும் ஈடுபடாமல் பாதுகாப்பாக சமூக விலகலை கடைபிடித்து குடும்பத்தை பார்த்துக்கொள்ளும்படி மக்கள் இயக்க மாநில பொறுப்பாளர் புஸ்ஸி.N.ஆனந்து Ex.MLA மூலமாக அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

    22:11 (IST)11 Jun 2020

    சுற்றுச்சூழல் அமைச்சகம் நிராகரிப்பு

    தூத்துக்குடியில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, பெட்ரோலிய கெமிக்கல் ஆலைகள் கொண்ட தொழிற்பூங்கா அமைக்க சிப்காட் விண்ணப்பம் - சுற்றுச்சூழல் அமைச்சகம் நிராகரிப்பு

    21:42 (IST)11 Jun 2020

    ஒடிசாவில் செமஸ்டர் தேர்வு ரத்து

    கொரோனா பரவல் காரணமாக நிலுவையில் உள்ள அனைத்து இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளையும் (UG & PG) ரத்து செய்தது ஒடிசா அரசு!

    UGC பரிந்துரைத்த மதிப்பீட்டு முறையின்படி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிப்பு..

    21:03 (IST)11 Jun 2020

    1,877 பேருக்கு கொரோனா

    டெல்லியில் இன்று ஒரே நாளில் 1,877 பேருக்கு கொரோனா உறுதியானது..

    கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 65 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்..

    மொத்த பாதிப்பு - 34,687

    உயிரிழப்புகள் - 1,085

    குணமடைந்தவர்கள் - 12,731

    20:36 (IST)11 Jun 2020

    மகாராஷ்டிராவில் இன்று 152 பேர் பலி

    இதுவரை இல்லாத அளவாக மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 152 பேர் உயிரிழப்பு;

    புதிதாக 3,607 பேர் தொற்றால் பாதிப்பு

    மொத்த பாதிப்பு 97,648 ஆக உயர்வு

    பலி எண்ணிக்கை 3,590 ஆக அதிகரிப்பு..

    20:17 (IST)11 Jun 2020

    பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் போக்கை கைவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்

    ஊரடங்கு தொடக்கத்தில் ரூ.72.28 இருந்த பெட்ரோல் இன்று ரூ.77.96; ரூ.65.71 இருந்த டீசல் ரூ.70.64

    ஏழை - எளிய, நடுத்தர மக்களை கடுமையாகப் பாதித்து விலைவாசி, பேருந்துக் கட்டண உயர்வுக்கும் வழி வகுக்கும் #FuelPriceHike-ஐ உயர்த்தும் போக்கை மத்திய - மாநில அரசுகள் கைவிட வேண்டும்!

    - மு.க.ஸ்டாலின்

    19:56 (IST)11 Jun 2020

    கூடுதலாக ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள்

    கொரோனா பரிசோதனைக்காக தென் கொரியாவில் இருந்து கூடுதலாக ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வருகை

    * வாரம் 1 லட்சம் என்ற அளவில் இதுவரை 6 லட்சத்து 27 ஆயிரம் கருவிகள் தமிழகம் வந்துள்ளன

    19:30 (IST)11 Jun 2020

    14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்

    இனிவரும் காலங்களில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பரிசோதனை மையங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொண்டால் தனிநபர் மற்றும் அவரது குடும்பத்தினர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்

    - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

    19:27 (IST)11 Jun 2020

    தின்பண்டம் என நினைத்து ஜெலட்டின் குச்சியை கடித்த சிறுவன்

    திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே அலகரைப் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி. இவரது மகன் 6 வயதான விஷ்ணுதேவ். பூபதியின் அண்ணன் கங்காதரன் வீட்டிற்குச் சென்ற விஷ்னுதேவ், அங்கிருந்த ஜெலட்டின் குச்சியை தின்பண்டம் என்று நினைத்து எடுத்துக் கடித்துள்ளார்.

    ஜெலட்டின் குச்சியை சிறுவன் கடித்ததும், அது வெடித்து சிதறியுள்ளது. இதில் சிறுவனின் வாய் சிதறி ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார்.

    சத்தம் கேட்டு ஓடிச் சென்ற பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள், ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுவனை மீட்டு, தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்தார்.

    19:02 (IST)11 Jun 2020

    திமுக சார்பில் வழக்கு

    'முதுநிலை மருத்துவ படிப்புகளில் இடஒதுக்கீடு கோரி திமுக சார்பில் வழக்கு'

    முதுநிலை மருத்துவ, பல் மருத்துவ படிப்புகளில் 50% இடங்களை ஓ.பி.சி பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யக்கோரி திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு

    18:48 (IST)11 Jun 2020

    16,829 பேருக்கு கொரோனா பரிசோதனை

    தமிழகத்தில் ஒரே நாளில் 16,829 பேருக்கு கொரோனா பரிசோதனை

    இதுவரை 6.55 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது - தமிழக சுகாதாரத்துறை

    18:39 (IST)11 Jun 2020

    சென்னையில் 1,407 பேருக்கு தொற்று

    சென்னையில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 27,398 ஆக உயர்வு;

    இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 1,407 பேர் தொற்றால் பாதிப்பு!

    18:37 (IST)11 Jun 2020

    1,372 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

    இன்று ஒரே நாளில் 1372 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

    தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 20,705 ஆக அதிகரிப்பு

    - தமிழக சுகாதாரத்துறை

    18:37 (IST)11 Jun 2020

    23 பேர் உயிரிழப்பு

    தமிழகத்தில் இன்று மட்டும் 23 பேர் உயிரிழப்பு

    * இதுவரை தமிழகத்தில் மட்டும் - 349 பேர் உயிரிழப்பு

    * கடந்த 6 நாட்களில் 117 பேர் உயிரிழப்பு

    * இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்ட கொரோனா உயிரிழப்பு

    18:20 (IST)11 Jun 2020

    1,875 பேருக்கு கொரோனா

    தமிழகத்தில் ஒரே நாளில் 1,875 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 38,716ஆக உயர்வு

    18:08 (IST)11 Jun 2020

    தாராவியில் 2,000ஐ நெருங்கும் பாதிப்பு

    மும்பை தாராவி குடிசைப்பகுதியில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் பலி; மேலும் 20 பேர் நோய்த்தொற்றால் பாதிப்பு.

    அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,984ஆகவும்; பலி எண்ணிக்கை 75 ஆகவும் உயர்வு.

    18:07 (IST)11 Jun 2020

    குழந்தைகள் நல ஆணையம் கடிதம்

    ஊரடங்கிற்கு பின் பள்ளிகள் தொடங்குவது குறித்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன?

    குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக எழுந்துள்ள சந்தேகங்களை போக்க வேண்டும்; பெற்றோர், பிரநிதிகளிடம் முறையாக கருத்து கேட்க வேண்டும்!

    மாநில அரசுகளுக்கு தேசிய குழந்தைகள் நல ஆணையம் கடிதம்.

    17:54 (IST)11 Jun 2020

    உயர்நீதிமன்றத்தில் வழக்கு

    ஊரடங்கு காலத்தில் மின் அளவு கணக்கீடு குறித்த மின்வாரிய உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு - விரைவில் விசாரணை

    17:34 (IST)11 Jun 2020

    போலி இ-பாஸ்

    புதுச்சேரி: காரைக்காலில் போலியாக இ-பாஸ் தயாரித்து வழங்கிய இணையதள கடைக்கு அதிகாரிகள் சீல்

    அச்சடித்து வைத்திருந்த போலி இ-பாஸ்கள், அவற்றை தயாரிக்கப் பயன்படுத்திய கருவிகளும் பறிமுதல்

    17:10 (IST)11 Jun 2020

    360 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

    கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் 360 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

    * அதிகபட்சமாக ராயபுரத்தில் 78 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

    - சென்னை மாநகராட்சி

    16:57 (IST)11 Jun 2020

    இந்தியாவின் இருப்பு விகிதம் 0.59/1 லட்சம் அளவில் உள்ளது - ஐ.சி.எம்.ஆர்

    இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு உலக நாடுகளை ஒப்பிடுகையில் மிகவும் குறைவாக உள்ளது. ஒரு லட்சம் மக்களும் 0.59 பேர் என்ற கணக்கில் தான் உயிரிழப்பு உள்ளது.   

    16:40 (IST)11 Jun 2020

    இந்தியாவில் கொரோன நோய் தொற்று சமூக பரவல் நிலையை அடையவில்லை - ஐ.சி.எம்.ஆர்

    இந்தியாவில் கொரோன நோய் தொற்று சமூக பரவல் நிலையை (COmmunity Transmission) அடையவில்லை என்றும், பொது முடக்கநிலை காரணமாக நோய்  தொற்று கட்டுப்படுத்தப்பட்டதாகவும் ஐ.சி.எம்ஆர் தெரிவித்தது.       

    16:37 (IST)11 Jun 2020

    சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்தினால் முழு ஆதரவு- வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தகவல்

    சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்தினால் வியாபாரிகள் தரப்பில் முழு ஆதரவு தரப்படும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.  

    16:20 (IST)11 Jun 2020

    ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை - உச்சநீதிமன்றம்

    முதுநிலை மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது. தமிழகம் தொடர்பான இட ஒதுக்கீட்டிற்கு சென்னை உயர்நீதிமன்றத்தை நாடவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

    16:16 (IST)11 Jun 2020

    சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த தயார் - அமைச்சர் ஜெயக்குமார்

    மருத்துவ வல்லுநர் குழு அறிக்கை அளித்தால் சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த தயார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.   

    16:09 (IST)11 Jun 2020

    செங்குன்றத்தில் வாரத்தில் மூன்று நாள் கடைகள் அடைப்பு

    சென்னை மாநகராட்சியின் ஒரு பகுதியான செங்குன்றத்தில்  கொரோனா நோய் தொற்று ஏற்படாமல் இருக்க, வாரத்தில் வெள்ளிக்கிழமை திங்கட்கிழமை, புதன்கிழமை ஆகிய மூன்று நாட்களும் அனைத்து கடைகளும் மூடப்படும் என்று செங்குன்றம் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தெரிவித்தது.

    15:17 (IST)11 Jun 2020

    கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜீ முகக்கவசம் வழங்கினார்

    மதுரை மாநகராட்சி கொரோனா தடுப்பு பணியாக ஸ்டான்லி அலுமினி டிரஸ்ட் சார்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகள், முகக்கவசங்களை மாவட்ட ஆட்சியர் வினய் தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் விசாகன் முன்னிலையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜீ அவர்களிடம் இன்று வழங்கினர்.

    15:16 (IST)11 Jun 2020

    கடந்த 24 மணி நேரத்தில் 191 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா

    சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 191  கர்ப்பிணி பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.    

    15:05 (IST)11 Jun 2020

    வரும் கல்வி ஆண்டில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள்- இடைக்கால அறிக்கை தாக்கல்

    கொரோனா ஊரடங்கால் இழந்த நேரத்தை ஈடுசெய்யும் பொருட்டு, வரும் கல்வி ஆண்டில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்த இடைக்கால அறிக்கையை கல்வி ஆணையர் தமிழக அரசிடம் தாக்கல் செய்துள்ளார்.

    பாடத்திட்டம் குறைப்பு, பள்ளிகளில் கடைபிடிக்க வேண்டிய சமூகவிலகல் நெறிமுறைகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து பரிந்துரைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    14:06 (IST)11 Jun 2020

    நிரூபணமானால் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்

    கடலூர், கோவை, விருதுநகர் மாவட்டங்களில் தனியார் பள்ளிகள் விதிமீறல்கள் நடந்து வருவதாக வந்த அறிக்கையைத் தொடர்ந்து, புகார் நிரூபணமானால் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் அறிவித்தது.  

    13:48 (IST)11 Jun 2020

    வட தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

    வட தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. கடந்த 24 மணி நேரத்தில் கரூரில் அதிகபட்சமாக 5 செ.மீ. மழை பதிவானது.

    13:46 (IST)11 Jun 2020

    பத்தாம் வகுப்பு தேர்வு தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைப்பு- சென்னை உயர்நீதிமன்றம்

    பத்தாம் வகுப்பு தேர்வு தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.தேர்வை ரத்து செய்து பிறப்பித்த அரசாணையை தமிழக அரசு தாக்கல் செய்ததை அடுத்து வழக்குகள் முடித்து வைப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது.  

    13:27 (IST)11 Jun 2020

    சென்னையில் கொரோனா பாதிப்பு!

    சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விபரம்  வெளியிடப்பட்டுள்ளது. இந்த புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ராயபுரம் மண்டலத்தில் 4405 பேருக்கு கொரோனா

    தண்டையார்பேட்டை - 3405, தேனாம்பேட்டை - 3069, கோடம்பாக்கம் - 2805, திரு வி.க.நகர் - 2456, அண்ணாநகர் - 2362 * அடையாறில் 1481, வளசரவாக்கத்தில் 1170 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    13:13 (IST)11 Jun 2020

    ஆர்.எஸ்.பாரதி ஜாமீன் வழக்கு!

    வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதிக்கு ஜாமீன் வழங்கப்பட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் உயர்நீதிமன்றத்தை அணுக மனுதாரருக்கு உத்தரவிட்டுள்ளனர். 

    12:48 (IST)11 Jun 2020

    மோடி உரை!

    இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பில் பிரதமர் மோடி, காணொளி காட்சி மூலம் இன்று உரையாற்றினார். அதில் அவர் பேசியதாவது, “கொரோனா வைரஸுக்கு எதிராக ஒட்டு மொத்த உலகமும் போராடி வருகிறது. கொரோனா மட்டுமின்றி, வெட்டுக்கிளி தாக்குதல், புயல் போன்ற சவால்களையும் இந்தியா சந்தித்து வருகிறது.

    இது போன்ற பேரிடர்களை வெற்றிகரமாக சமாளிக்கும் அனுபவம் நமக்கு புதிய நம்பிக்கையை தருகிறது. பல்வேறு சவால்களுக்கு இடையில் பணியாற்றுபவர்கள் புதிய வாய்ப்புகளை பெறுகிறார்கள்.  நமக்கு ஒற்றுமையும், வலிமையும் தான் அந்த சவால்களை சந்திப்பதற்கான உற்சாக மருந்து. இந்தியாவே ஒருசேர இணைந்து இந்த யுத்தத்தில் வெற்றி கண்டு வருகிறோம்” என்று கூறினார். 

    12:28 (IST)11 Jun 2020

    இடஒதுக்கீடு வழக்கு!

    மருத்துவ படிப்பில் தமிழகத்தில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீட்டை அமல்படுத்தக்கோரி  அதிமுக, திமுக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.  இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ”இடஒதுக்கீடு உரிமை என்பது அடிப்படை உரிமை ஆகாது” என்று கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை நாட மனுதாரர்களுக்கு அறிவுருத்தியுள்ளது. 

    12:03 (IST)11 Jun 2020

    காப்பக குழந்தைகளின் நிலை என்ன?

    தமிழகத்தில் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு கொரோனா பரவுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பதை விரிவாக  தமிழக அரசு பதில்தர உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ராயபுரம் காப்பகத்தில் 35 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, தமிழக அரசு நடவடிக்கை குறித்து அறிக்கையை சமர்பிக்க உத்தரவு பிற்பிக்கப்பட்டுள்ளது. 

    11:54 (IST)11 Jun 2020

    முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரை!

    கொரோனா உயிரிழப்பு விவகாரத்தில் எதையும் மறைக்கவில்லை; மறைக்கவும் முடியாது, என்று முதல்வர் எடப்பாடி தெரிவித்துள்ளார்.  இந்தியாவிலேயே இறப்பு விகிதம் தமிழகத்தில்தான் குறைவாக உள்ளது என கூறிய அவர்,  புள்ளி விவரங்களின் அடிப்படையிலேயே கொரோனா உயிரிழப்புகள் வெளிப்படையாக அறிவிக்கப்படுகின்றன என்றார். தமிழகத்தில் இப்போது வரை  கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை என்று முதல்வர் தெரிவித்துள்ளார். 

    11:44 (IST)11 Jun 2020

    சேலத்தில் ஈரடுக்கு மேம்பாலம்!

    சேலத்தில் ரூ.441 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட ஈரடுக்கு மேம்பாலத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். சேலம் வணிகப்பகுதியான லீ பஜாரில் கட்டப்பட்ட ரூ.46.35 ரூ.46,35 கோடி மதிப்பிலான ரயில்வே மேம்பாலத்தையும் காணொளி காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். 

    10:18 (IST)11 Jun 2020

    காவிரி நீர் மேலாண்மை உத்தரவு!

    பருவமழை தொடங்கியுள்ள நிலையில், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கு தமிழகத்திற்கு திறக்க வேண்டிய 40.43 டிஎம்சி நீரை திறக்கு கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.2019-20 நீர்ப்பாசன ஆண்டில் கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு 275 டிஎம்சி நீர் திறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    10:02 (IST)11 Jun 2020

    இந்தியாவில் கொரோனா!

    இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 2,76,583லிருந்து 2,86,579 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,745லிருந்து 8,102 ஆக அதிகரித்துள்ளதும் மேலும், குணமடைந்தோர் 1,35,206லிருந்து 1,41,029 ஆக உயர்வு.  இந்தியாவில் 24 மணி நேரத்தில் 9,996 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த  24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 357 பேர் உயிரிழந்துள்ளனர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

    09:59 (IST)11 Jun 2020

    மூடப்பட்ட காவல் நிலையம்!

    பொன்னேரி காவல் நிலைய ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் காவல் நிலையம் மூடப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி காவல் நிலைய ஆய்வாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் காவல் நிலையம் மூடப்பட்டது. 

    09:39 (IST)11 Jun 2020

    பெண் கைதிக்கு கொரோனா!

    மதுரை மத்திய சிறையில் பெண் கைதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனை செய்ததாக மதுரையில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். விசாரணை கைதியான இவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    News Today : ஹெச்.ஐ.வி வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டல் உயிரிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது.சென்னையில் கொரோனா அறிகுறி இருந்தால் தொடர்புகொள்ள மண்டல வாரியாக தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.கொரோனா பாதிப்பு பகுதிகளைச் சுட்டிக்காட்டும் புதிய அப்டேட்டை கூகுள் மேப்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.

    மாதத்தின் 2ம் சனிக்கிழமையில் அரசு அலுவலகங்களை மூட தமிழக அரசு உத்தரவு பிற்பித்துள்ளது. அரசு அலுவலகங்களை சுத்தப்படுத்த ஏதுவாக மாதத்தின் 2ம் சனிக்கிழமையில் அரசு அலுவலகங்களை மூட தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

    12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு : முடிவுகள் வெளியாவது எப்போது?

    தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு, எவ்வித நோய் அறிகுறியும் இல்லாதவர்களின் உயிரிழப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழகத்தில் சரியான பாதையில் செல்கிறது கொரோனா சிகிச்சை செல்கிறது என்றும், இந்தியாவிலேயே அதிகஅளவு கொரோனா பரிசோதனை தமிழகத்தில் செய்யப்பட்டுள்ளது,தமிழகத்தில் கொரோனா தடுப்பில் மருத்துவர்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

    Tamilnadu Dmk Corona Coronavirus
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment