Advertisment

Tamil Nadu News Updates: கெஜ்ரிவாலுக்கு வரும் 28ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல்- நீதிமன்றம் உத்தரவு

Tamil Nadu Breaking News Live in Tamil: 22-03-2024: இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Delhi CM Arvind Kejriwal

Tamil Nadu

Tamil Nadu Chennai Live News Update: பெட்ரோல் – டீசல் விலை

Advertisment

 சென்னையில் 6- வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75க்கு, ஒரு லிட்டர் டீசல் ரூ.92.34க்கு விற்பனை.

கெஜ்ரிவாலுக்கு வரும் 28ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல்-

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வரும் 28ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் விதித்து ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்திருந்தது.

 • Mar 22, 2024 20:43 IST
  புதுச்சேரி ஆளுநராக சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்பு

  புதுச்சேரியின் பொறுப்பு துணை நிலை ஆளுநராக சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று பொறுப்பேற்றார்.
  அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் வி கங்கா பூர்வாலா பதவி பிரமாணம் மற்றும் இரகசிய காப்பு பிரமாணம் செய்துவைத்தார். • Mar 22, 2024 20:00 IST
  ரூ.1 வசூலித்துவிட்டு 25 பைசா கொடுப்பது நியாயமா? மு.க. ஸ்டாலின் கேள்வி

  தமிழ்நாட்டு மக்களை இழிவுப்படுத்தி பேசுவது பாஜகவின் வாடிக்கையாக உள்ளது; ரூ.1 வசூலித்துவிட்டு ரூ.25 பைசாவை திருப்பி தருவது நியாயமா?
  தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்யாமல், தமிழ் மொழி தான் மூத்த மொழி என பிரதமர் நரேந்திர மோடி நீலி கண்ணீர் வடிக்கிறார்; பாஜக செய்த துரோகங்களுக்கு அதிமுக துணை போனது” என மு.க. ஸ்டாலின் கூறினார். • Mar 22, 2024 19:18 IST
  தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற டி.டி.வி தினகரன் வாழ்த்து

  தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற டி.டி.வி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) சார்பில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கி ஒருங்கிணைந்து செயல்பட்டு அவர்களின் வெற்றியை உறுதி செய்திட வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அனைத்து நிலையிலான நிர்வாகிகளையும் உடன்பிறப்புகளையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

  நாட்டின் பிரதமராக மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களை மூன்றாவது முறையாக அரியணையில் ஏற்றுவதோடு, தமிழகத்தில் நடைபெற்றுவரும் மக்கள் விரோத ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக இந்த நாடாளுமன்ற தேர்தல் களம் அமையட்டும்” எனத் தெரிவித்துள்ளார். • Mar 22, 2024 18:10 IST
  செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு ஏப்ரல் 1-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

  முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனுவை ஏபரல் 1-ம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது.  சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில்பாலாஜியை கடந்த ஆண்டு அமலாக்கத்துறை கைது செய்தது. செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. • Mar 22, 2024 18:07 IST
  மதுரையில் சிறுமி கொலை: வெளியான அதிர்ச்சி தகவல்

  மதுரையில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது, பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு போக்சோ மற்றும் கொலை வழக்காக மாற்றப்படும் என்று மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தெரிவித்தார். குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார் என போலீசார் உறுதி அளித்துள்ளனர். • Mar 22, 2024 18:05 IST
  அமைச்சர் ஷோபா மீதான வழக்கில் இடைக்கால தடை - கர்நாடக ஐகோர்ட் உத்தரவு

  பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழ்நாட்டை தொடர்புபடுத்தி பேசிய அமைச்சர் ஷோபா மீது வழக்குப்பதியப்பட்டது. மத்திய இணையமைச்சர் ஷோபா மீதான வழக்கின் விசாரணை இடைக்கால தடை விதித்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. • Mar 22, 2024 17:43 IST
  ஸ்டாலின் எடுத்த சட்ட நடவடிக்கைக்கு நன்றி - பொன்முடி

  மீண்டும் அமைச்சராகப் பதவியேற்ற பொன்முடி மெரினாவில் அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பொன்முடி: “முதல்வர் மு.க. ஸ்டாலின் எடுத்த சட்ட நடவடிக்கையால் மீண்டும் அமைச்சர் பொருப்பு கிடைத்துள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் நடவடிக்கைக்கு நன்றி” என்று கூறினார். • Mar 22, 2024 16:59 IST
  சிறையில் இருந்தாலும் தேசத்திற்கு சேவை செய்வேன் - அரவிந்த் கெஜ்ரிவால்

  நீதிமன்றத்திற்கு அமலாக்கத்துறை அழைத்து சென்றபோது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி: “சிறைக்கு போனாலும் சேவை செய்வேன். சிறையில் இருந்தாலும் தேசத்திற்கு சேவை செய்வேன்; என் வாழ்க்கை நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.  • Mar 22, 2024 16:56 IST
  ஜனநாயகத்தை காப்பாற்றிய உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி: மு.க. ஸ்டாலின்

  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “ஜனநாயகத்தை காப்பாற்றிய உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி; கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் ஜனநாயகம் சிதைந்து கூட்டாட்சி வறண்டதை மக்கள் கண்டனர். பாசிச சதிகளின் அதிகார துஷ்பிரயோகத்தை தடுக்க கடுமையாகப் பாடுபடுவோம்; 2024 மக்களவைத் தேர்தல் ஜனநாயகத்தைக் காப்பாற்றவும் அரசமைப்பை நிலைநிறுத்தவும் முக்கியமானது.” என்று தெரிவித்துள்ளார். • Mar 22, 2024 16:08 IST
  அமைச்சர் பொன்முடிக்கு உயர்கல்வித்துறை ஒதுக்கீடு

  அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்த பொன்முடிக்கு உயர்கல்வித்துறை மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. உயர் கல்வித்துறையை ராஜ கண்ணப்பன் கூடுதலாக கவனித்து வந்த நிலையில் பொன்முடி வசம் ஒப்படைக்கப்பட்டது. அமைச்சர் காந்தியின் பொறுப்பில் இருந்த கதர் கிராம தொழில்கள் வாரியம் ராஜ கண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. • Mar 22, 2024 15:58 IST
  அமைச்சராக பதவியேற்றார் பொன்முடி

  அமைச்சராக மீண்டும் பதவியேற்றார் பொன்முடி. ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பதவி பிரமாண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். இந்த விழாவில் பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அமைச்சராக பதவியேற்ற பொன்முடிக்கு மீண்டும் உயர்கல்வித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  • Mar 22, 2024 15:49 IST
  மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்கிறார் பொன்முடி


  மீண்டும் உயர்கல்வித்துறை அமைச்சராக சற்று நேரத்தில் பதவியேற்கிறார் பொன்முடி. அமைச்சர் காந்தியின் பொறுப்பில் உள்ள கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியம், அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  • Mar 22, 2024 15:49 IST
  மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்கிறார் பொன்முடி


  மீண்டும் உயர்கல்வித்துறை அமைச்சராக சற்று நேரத்தில் பதவியேற்கிறார் பொன்முடி. அமைச்சர் காந்தியின் பொறுப்பில் உள்ள கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியம், அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  • Mar 22, 2024 15:32 IST
  அ.தி.மு.க கூட்டணி - பூவை ஜெகன் மூர்த்தி

  "ஒரு தொகுதி கிடைக்கும் என நம்பிக்கை இருந்தது. ஏமாற்றம் அளித்துள்ளதாக நிர்வாகிகள் கவலை தெரிவித்துள்ளார்கள். அ.தி.மு.க கூட்டணியில் தொடர்வோமா என்பது குறித்து இரண்டு, மூன்று நாட்களில் அறிவிக்கப்படும்" பூவை ஜெகன் மூர்த்தி கூறியுள்ளார். 

    • Mar 22, 2024 15:31 IST
  பங்குனி உத்திரம் - நெல்லை, தென்காசியில் உள்ளூர் விடுமுறை

  பங்குனி உத்திர நாளை முன்னிட்டு வரும் 25ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நெல்லை மாவட்டத்திலும் ஏற்கனவே அதே நாளில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  • Mar 22, 2024 15:31 IST
  டெல்லி கோர்ட்டில் கெஜ்ரிவால் ஆஜர் 

  மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் நேற்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அமலாக்கத்துறை 10 நாட்கள் விசாரணைக்காவல் கோரியது.  • Mar 22, 2024 15:07 IST
  பா.ம.க வேட்பாளர் தங்கர் பச்சான் பதிவு

  “கடலூர் மக்களவை தொகுதி பாமக சார்பில் வேட்பாளராக போட்டியிடும் நான், போட்டியிட மறுப்பதாக வெளியான பொய் செய்தியை வன்மையாக கண்டிக்கிறேன்; இவ்வாறான பொய்ச்செய்தியை வெளியிட்டவர்கள் யார் என கண்டறிந்து, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன்” என்று  கடலூர் மக்களவைத் தொகுதி பா.ம.க வேட்பாளர் தங்கர் பச்சான் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.  • Mar 22, 2024 15:05 IST
  வி.ஐ.பி தொகுதியாகும் விருதுநகர் 

  விருதுநகரில் தே.மு.தி.க சார்பில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் வேட்பாளராக களமிறங்கும் நிலையில், பா.ஜ.க சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார்.  • Mar 22, 2024 14:48 IST
  கெஜ்ரிவால் முதல்வராக தொடர முடியுமா?

  மதுபான கொள்கை மோசடி வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை நேற்று அமலாக்கத்துறை கைது செய்தது. 

  கெஜ்ரிவால் சிறை சென்றாலும் முதல்வராக நீடிப்பார், சிறையிலிருந்து பணிகளை தொடர்வார் என ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. சிறையில் இருந்தபடி முதல்வராக தொடர முடியாது என்றும், முக்கிய முடிவுகளை எடுக்கும்போது அமைச்சரவை கூட்டத்தை கூட்டியாக வேண்டும். சிறையில் இருந்து அமைச்சரவை கூட்டத்தை  கூட்ட முடியாது, ரகசிய கோப்புகளில் கையெழுத்திட முடியாது என்றும்  சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

  சிறை விதிகளின் படி கெஜ்ரிவாலுக்கு போகும் ஒவ்வொரு பொருளும் சிறை அதிகாரிகளால் சோதனை இடப்படும். அமலாக்கத்துறை காவலில் இருக்கும் கெஜ்ரிவாலின் முதல் ஜாமின் மனு விசாரணைக்கு வரும் வரை முதல்வராக தொடர வாய்ப்புள்ளது. • Mar 22, 2024 14:46 IST
  பா.ஜ.க தமிழக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

  விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் நந்தினி போட்டியிடுகிறார்.  • Mar 22, 2024 14:44 IST
  தே.மு.தி.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

  மத்திய சென்னை - பார்த்தசாரதி

  திருவள்ளூர் - நல்லதம்பி

  கடலூர் - சிவக்கொழுந்து

  தஞ்சை - சிவநேசன்

  விருதுநகர் - விஜயபிரபாகரன் • Mar 22, 2024 14:02 IST
  'நீதிமன்ற உத்தரவுக்கு பணிந்தார் ஆளுநர்' - தி.மு.க வழக்கறிஞர் வில்சன்

  "ஆளுநர் ஆர்.என்.ரவி உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பணிந்தார். அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் செயல்படுகிறார் ஆளுநர். உச்சநீதிமன்ற கண்டனத்திற்கு பிறகு ஆளுநர் தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளார். மன்னிப்பு கோரும் வகையில் ஆளுநர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்" என்று  திமுக வழக்கறிஞர் வில்சன்கூறியுள்ளார்.  • Mar 22, 2024 13:29 IST
  வழக்கை தொடர்ந்து நடத்துவோம்

  நிலுவையில் உள்ள இரட்டை இலை சின்னம் வழக்கை தொடர்ந்து நடத்துவோம்

  - ஓ.பன்னீர்செல்வம் • Mar 22, 2024 13:19 IST
  திமுக வேட்பாளர் அருண் நேரு வேட்புமனு

    • Mar 22, 2024 13:18 IST
  அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

  அதிமுக வேட்பாளர்கள் வரும் 25ஆம் தேதி வேட்பு மனு தாக்கல்

  ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர்களுக்கு இபிஎஸ் உத்தரவு • Mar 22, 2024 13:08 IST
  மு.க.ஸ்டாலின் X தளத்தில் பதிவு

  "நமது நாட்டின் தலைநகரில் ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள, கொடூரமான தாக்குதலை திமுக வன்மையாகக் கண்டிக்கிறது"

  - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் X தளத்தில் பதிவு • Mar 22, 2024 13:07 IST
  பொன்முடிக்கு மீண்டும் உயர்கல்வித்துறை ஒதுக்கீடு

  மீண்டும் அமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள பொன்முடிக்கு உயர்கல்வித்துறை ஒதுக்கீடு

  அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் ஒப்படைக்கப்பட்ட உயர்கல்வித்துறை மீண்டும் பொன்முடிக்கு வழங்கப்படுகிறது;

  பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக ராஜகண்ணப்பன் நிடிப்பார் எனவும் அறிவிப்பு  • Mar 22, 2024 12:52 IST
  கனிமொழி மார்ச் 26ம் தேதி வேட்புமனு தாக்கல்

  மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி மார்ச் 26ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார் • Mar 22, 2024 12:52 IST
  ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்டார்

  தமது செயலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்டதாக அட்டார்னி ஜெனரல் வெங்கட்ரமணி உச்ச நீதிமன்றத்தில் தகவல்! • Mar 22, 2024 12:29 IST
  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

  மக்களவைத் தேர்தலில், பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவித்தார் ஜி.கே.வாசன்!

  ஈரோடு - விஜயகுமார்                                 

  ஸ்ரீபெரும்புதூர் - வேணுகோபால்

  நாளை மறுதினம் தூத்துக்குடி வேட்பாளர் அறிவிக்கப்படும் என தகவல் • Mar 22, 2024 12:28 IST
  நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னம்

  நாம் தமிழர் கட்சிக்கு மைக்சின்னம் ஒதுக்கியது இந்திய தேர்தல் ஆணையம் • Mar 22, 2024 12:28 IST
  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

  மக்களவைத் தேர்தலில், பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவித்தார் ஜி.கே.வாசன்

  ஈரோடு - விஜயகுமார்                                 

  ஸ்ரீபெரும்புதூர் - வேணுகோபால்

  நாளை மறுதினம் தூத்துக்குடி வேட்பாளர் அறிவிக்கப்படும் என தகவல் • Mar 22, 2024 12:27 IST
  மத்திய காங்கிரஸ் தேர்தல் குழு ஆலோசனை.

  தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியலை இறுதி செய்வது தொடர்பாக மத்திய காங்கிரஸ் தேர்தல் குழு ஆலோசனை.

  9 தொகுதிகளில் போட்டியிட உள்ள நிலையில், முதற்கட்டமாக 4 வேட்பாளர்களை இன்று அறிவிக்கிறது. மீதமுள்ள 5 வேட்பாளர்களின் பட்டியல் வரும் 27ம் தேதி வெளியாகும் என தகவல். • Mar 22, 2024 12:02 IST
  மீண்டும் அமைச்சராகிறார் பொன்முடி

  மீண்டும் அமைச்சராக பதவியேற்க பொன்முடிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு

  இன்று பிற்பகல் 3:30 மணிக்கு அமைச்சராக  பதவியேற்க பொன்முடிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார்;

  பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துவைக்க ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் 24 மணிநேரம் கெடு விதித்திருந்தது • Mar 22, 2024 11:59 IST
  அதிமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

  சாயப்பட்டறை கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்

  100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்த வலியுறுத்தப்படும்

   தமிழ்நாட்டில் புதிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் விரிவாக்கப்படும்

  வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க நலவாரியம்

  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் இடம் பெற நடவடிக்கை

  இரு சக்கர வாகனங்களுக்கு தனிப்பாதை அமைக்க நடவடிக்கை

  மேகதாது திட்டத்தை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம் • Mar 22, 2024 11:46 IST
  சென்னையில் திமுக போராட்டம்! • Mar 22, 2024 11:29 IST
  அ.தி.மு.க தேர்தல் அறிக்கை வெளியீடு

  ஆளுநரை நியமிக்கும் போது முதலமைச்சரின் ஆலோசனை பெற்று ஒப்புதல் பெற வேண்டும்

  உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வலியுறுத்தப்படும்

  குற்ற வழக்குச் சட்டங்களின் பெயர் மாற்றத்தை கைவிட வலியுறுத்தப்படும்

  தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை

  தமிழ்நாட்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையம் அமைக்கப்படும்

   சிலிண்டர் விலையைக் குறைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்

  பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசே நிர்ணயம் செய்ய வலியுறுத்வோம்

  நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சென்னையில் நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம் • Mar 22, 2024 11:29 IST
  அ.தி.மு.க தேர்தல் அறிக்கை வெளியீடு

  மகளிருக்கு உரிமை தொகை மாதம் 3,000 ரூபாய் வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம்

  சுங்கச்சாவடிகள் முற்றிலும் அகற்றப்படும்

  நீட் தேர்வுக்கு மாற்றாக 12ம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மாணவர் சேர்க்கை

  -எடப்பாடி பழனிச்சாமி • Mar 22, 2024 11:21 IST
  அதிமுகவின் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

  ஆளுநரை நியமிக்கும் போது முதலமைச்சரின் ஆலோசனை பெற்று ஒப்புதல் பெற வேண்டும் ✦ உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வலியுறுத்தப்படும் ✦ குற்ற வழக்குச் சட்டங்களின் பெயர் மாற்றத்தை கைவிட வலியுறுத்தப்படும் ✦ தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை ✦ தமிழ்நாட்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையம் அமைக்கப்படும் ✦ சிலிண்டர் விலையைக் குறைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம் ✦ பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசே நிர்ணயம் செய்ய வலியுறுத்வோம் ✦ நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சென்னையில் நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம் • Mar 22, 2024 11:07 IST
  பூடான் சென்றடைந்தார் பிரதமர் மோடி

  2 நாட்கள் அரசு முறை பயணமாக பூடான் சென்றடைந்தார் பிரதமர் மோடி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்றார் பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே.  • Mar 22, 2024 11:07 IST
  2ஜி முறைகேடு வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி

  2ஜி முறைகேடு வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி சிபிஐ மேல்முறையீட்டு மனு மீது மே மாதம் முதல் விசாரணை தொடங்கும் - டெல்லி உயர்நீதிமன்றம் • Mar 22, 2024 10:13 IST
  தே.மு.தி.க-வின் வேட்பாளர் பட்டியல்: பிற்பகல் 12:30 மணிக்கு வெளியாகும்

  இன்று பிற்பகல் 12:30 மணியளவில் தே.மு.தி.க-வின் வேட்பாளர் பட்டியலை, அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவிக்க உள்ளதாக தகவல் • Mar 22, 2024 10:12 IST
  பா.ஜ.க கூட்டணிக்கு வெற்றி உறுதியானதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பதற்றம் தெரிகிறது

  "2024 நாடாளுமன்றத் தேர்தல் களம் பாஜக – தி.மு.க இடையிலான போர்க்களமாக மாறிவிட்டது; பா.ஜ.க கூட்டணிக்கு வெற்றி உறுதியானதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பதற்றம் தெரிகிறது; இனி தமிழ்நாட்டு மக்கள் பிரதமர் மோடி பக்கமே" - பா.ஜ.க எம்எல்ஏ வானதி சீனிவாசன் அறிக்கை • Mar 22, 2024 10:11 IST
  பா.ம.க முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல்

  திண்டுக்கல் - ம.திலகபாமா

   

  அரக்கோணம் - கே.பாலு

   

  ஆரணி - கணேஷ்குமார்

   

  கடலூர் - தங்கர் பச்சான்

   

  மயிலாடுதுறை - ம.க.ஸ்டாலின்

   

  கள்ளக்குறிச்சி - தேவதாஸ் உடையார்

   

  தருமபுரி - அரசாங்கம்

   

  சேலம் - அண்ணாதுரை

   

  விழுப்புரம் - முரளி சங்கர் • Mar 22, 2024 09:48 IST
  அரவிந்த் கெஜ்ரிவால் குடும்பத்தினரை இன்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி சந்திக்க உள்ளார்

  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குடும்பத்தினரை இன்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி சந்திக்கவுள்ளதாக தகவல் • Mar 22, 2024 09:22 IST
  அ.தி.மு.க தேர்தல் அறிக்கையை இன்று வெளியாகும்

  அ.தி.மு.க தேர்தல் அறிக்கையை இன்று வெளியிடுகிறார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  • Mar 22, 2024 09:01 IST
  புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்துக்கு தொலைபேசியில் நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து

  பாஜக கூட்டணியில் வேலூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்துக்கு தொலைபேசியில் நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து • Mar 22, 2024 08:12 IST
  4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

  நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.  • Mar 22, 2024 08:11 IST
  பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் கோயிலுக்கு வைக்கப்பட்ட சீல்

  விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் கோயிலுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றம் நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள் நடவடிக்கை- 9 மாதங்களுக்குப்பிறகு கோயில் திறப்பு இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை தினமும் ஒருகால பூஜை நடைபெறும் பொதுமக்கள் கோயிலில் வழிபடுவதற்கு அனுமதி மறுப்பு- போலீஸ் குவிப்பால் பரபரப்பு • Mar 22, 2024 08:10 IST
  2 நாள் அரசுமுறைப் பயணமாக பூடான் புறப்பட்டார் பிரதமர் மோடி

  டெல்லி: 2 நாள் அரசுமுறைப் பயணமாக பூடான் புறப்பட்டார் பிரதமர் மோடிAdvertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment