Advertisment

Tamil News Highlights: தமிழ்நாட்டில் தி.மு.க, அ.தி.மு.க இடையே தான் போட்டி: கே.பி. முனுசாமி

Tamil Nadu Live News Update Today: 23-03-2024- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
AIADMK KP Munusamy on alliance with BJP ahead of poll

தமிழ்நாடு செய்தி நேரலை

Tamil Nadu Chennai Live News Update

Advertisment

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Tamil news updates

கெஜ்ரிவாலுக்கு வரும் 28ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வரும் 28ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் விதித்து ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்திருந்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

  • Mar 23, 2024 23:51 IST
    திருவள்ளூர் மக்களவை தொகுதி; காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு

    திருவள்ளூர் மக்களவை தனித்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக சசிகாந்த் செந்தில் அறிவிக்கப்பட்டுள்ளார்.



  • Mar 23, 2024 20:17 IST
    த.மா.கா தூத்துக்குடி வேட்பாளர் அறிவிப்பு


    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி வேட்பாளராக எஸ்ஆர்.டி விஜயசீலன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
    மக்களவை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் த.மா.கா 3 இடங்களில் போட்டியிடுகிறது.



  • Mar 23, 2024 20:02 IST
    தமிழச்சி தங்க பாண்டியனுக்கு ஜவாஹிருல்லா வாழ்த்து


    தமிழச்சி தங்க பாண்டியனுக்கு ஜவாஹிருல்லா வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “இன்று தென் சென்னை தொகுதியில் இந்தியா கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன் தலைமையகத்திற்கு வருகை தந்தார். மீண்டும் அவர் வெற்றி பெற வாழ்த்தினோம்” எனத் தெரிவித்துள்ளார்.



  • Mar 23, 2024 19:00 IST
    அ.ம.மு.க வேட்பாளர்கள் நாளை அறிவிப்பு

    மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ள அ.ம.மு.க வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் நாளை அறிவிக்கிறார். பா.ஜ.க கூட்டணியில் திருச்சி மற்றும் தேனி ஆகிய தொகுதிகளில் அ.ம.மு.க போட்டியிட உள்ளது 



  • Mar 23, 2024 19:00 IST
    அ.ம.மு.க வேட்பாளர்கள் நாளை அறிவிப்பு

    மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ள அ.ம.மு.க வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் நாளை அறிவிக்கிறார். பா.ஜ.க கூட்டணியில் திருச்சி மற்றும் தேனி ஆகிய தொகுதிகளில் அ.ம.மு.க போட்டியிட உள்ளது 



  • Mar 23, 2024 18:29 IST
    டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு; கைதுக்கு எதிராக கெஜ்ரிவால் மனு

    டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தனது கைதுக்கு எதிராக கெஜ்ரிவால் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தனக்கு அமலாக்கத்துறை காவல் விதிக்கப்பட்டதற்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்துள்ளார். கைதான கெஜ்ரிவால் தற்போது அமலாக்கத்துறை காவலில் உள்ளார், அவரை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது



  • Mar 23, 2024 18:07 IST
    நெல்லை அ.தி.மு.க வேட்பாளர் சிம்லா முத்துச்சோழன் மாற்றம்

    நெல்லை அ.தி.மு.க வேட்பாளர் சிம்லா முத்துச்சோழன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திசையன்விளை பேரூராட்சி தலைவர் ஜான்சிராணி புதிய வேட்பாளாராக அறிவிக்கப்பட்டுள்ளார்



  • Mar 23, 2024 17:52 IST
    ஒரே மேடையில் 40 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் சீமான்

    மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் 40 வேட்பாளர்களையும், துரைப்பாக்கத்தில் இன்று நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் வைத்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்துகிறார் 



  • Mar 23, 2024 17:28 IST
    தென்காசி அருகே திருவேங்கடம் பகுதியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து

    தென்காசி அருகே திருவேங்கடம் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் அதிகமானோர் சிக்கியிருக்கலாம் என்ற அச்சத்தால், ஆம்புலன்ஸ் வாகனங்கள் குவிக்கப்பட்டுள்ளது



  • Mar 23, 2024 17:11 IST
    சென்னையில் கார் ஓட்டுநர் உயிரிழப்பு - தலைமை காவலர் கைது

    சென்னை மதுரவாயல் அருகே போலீசார் தாக்கியதால் கார் ஓட்டுநர் பலியான வழக்கில் தலைமை காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு, கால் டாக்ஸி ஓட்டுநர் ராஜ்குமாரை, மதுரவாயல் காவல் நிலைய தலைமை காவலர் ரிஸ்வான் தாக்கியதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக காவல் உயர் அதிகாரிகள் துறை ரீதியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்



  • Mar 23, 2024 15:35 IST
    தேர்தல் ஆணையத்துக்கு ஜெயக்குமார் வலியுறுத்தல் 

    "மக்களவைத் தேர்தல் சுதந்திரமாக நடைபெற தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தினோம். ஆளும் கட்சியினரின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு இடம் கொடுக்கக் கூடாது. தேர்தல் விதிமுறைகளை மீறுவோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று சென்னையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 



  • Mar 23, 2024 15:29 IST
    'வேடந்தாங்கல் பறவை போல அடிக்கடி கூட்டணி மாறுகிறது பா.ம.க': இ.பி.எஸ் கடும் தாக்கு  

     

    "வேடந்தாங்கல் பறவை மாதிரி அடிக்கடி கூட்டணி மாறுகிறவர் அன்புமணி ராமதாஸ்.வேடந்தாங்கல் பறவைகள், ஏரியில் தண்ணீர் நிரம்பி இருக்கும்போது வரும். தண்ணீர் வற்றினால் போயிடும். அது மாதிரிதான் அவர்" என்று அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். 



  • Mar 23, 2024 14:30 IST
    “எனது கணவரை நீண்ட நாட்கள் காவலில் வைக்க முடியாது” - அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா 

     

    “நம் முன்னே பெரிய சக்தி ஒன்று இருக்கிறது அதை நாம் அனைவரும் ஒன்றிணைந்து  வீழ்த்த வேண்டும் என கெஜ்ரிவால் கூறி இருக்கிறார்; இவர்களால் எனது கணவரை நீண்ட நாட்கள் காவலில் வைக்க முடியாது. நான் விரைவில் வெளியே வந்து பணிகளை தொடர்வேன் என எனது கணவர் தெரிவித்துள்ளார்; 

    டெல்லி மக்கள் அனைவரும் எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என அரவிந்த் ஜெக்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். என்னுடைய கைது நடவடிக்கையால் பாஜக தொண்டர்களிடம் விரோதம் செய்து கொள்ள வேண்டாம் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். பாஜக தொண்டர்களும் நம் சகோதர, சகோதரிகள் தான்" என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா காணொலி வாயிலாக கூறியுள்ளார். 



  • Mar 23, 2024 14:28 IST
    விற்று தீர்ந்த  சென்னை - குஜராத் ஐ.பி.எல் டிக்கெட்

    சென்னை - குஜராத் ஐபிஎல் டிக்கெட் விற்று தீர்ந்தது. 26ம் தேதி நடைபெறவுள்ள சென்னை - குஜராத் ஐபிஎல் போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் முழுவதுமாக விற்றுத் தீர்ந்தது



  • Mar 23, 2024 13:48 IST
    5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்

    5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்- சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

    மார்ச் 27ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும்.

    மார்ச் 29ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்" அதிக வெப்பநிலையால் அசௌகரியம் ஏற்படலாம் 



  • Mar 23, 2024 13:38 IST
    சேலையூர் எஸ்.எஸ்.ஐ. கைது - திடுக்கிடும் தகவல்கள்

    வங்கதேச எல்லையில் கைதான சேலையூர் எஸ்.எஸ்.ஐ 7,500 அமெரிக்க டாலர்களுடன் பிடிபட்டுள்ளார் கட்டுக்கட்டாக இந்திய பணமும் வைத்து இருந்ததாக தகவல் போதைப் பொருட்கள் கடத்தல், தங்கம் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை பல பிரச்சினைகளில் சிக்கி 10 ஆண்டுகள் பணியில் இல்லாமல் மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார் எஸ்.எஸ்.ஐ ஜான் செல்வராஜ் தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் ஆலோசனை



  • Mar 23, 2024 13:36 IST
    கவிதாவுக்கு மேலும் 3 நாட்கள் காவல் நீட்டிப்பு

    தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திர கேகர ராவின் மகள் கவிதாவுக்கு மேலும் 3 நாட்கள் இ.டி காவல் நீட்டிப்பு. டெல்லி மதுபானக் கொள்ளை முறைகேடு வழக்கல் கைதான கவிதாவை  மேலும் 3 நாட்கள் விசாரிக்க அனுமதி. 

    அமலாக்கத் துறை ஏற்கனவே 7 நாள் விசாரித்த நிலையில் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கவிதா ஆஜர். அமலாக்கத் துறை 5 நாள் காவல் கோரிய நிலையில் 3 நாள் வழங்கி நீதிமன்றம் உத்தரவு 



  • Mar 23, 2024 13:28 IST
    விரைவில் வெளியே வந்து வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்: கெஜ்ரிவால்

    விரைவில் வெளியே வந்து வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன். சிறையில் இருந்து விரைவில் வெளியே வந்து வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்.

    டெல்லி மதுபான கொள்கை முறைகேடு புகார் வழக்கில் அமலாக்கத்துறையால் கைதான அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு. எந்த ஒரு சிறையும் என்னை உள்ளே வைத்திருக்க முடியாது. அரவிந்த் கெஜ்ரிவால் கருத்தை வீடியோவாக வெளியிட்டார் அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால்

    அமலாக்கத்துறை காவலில் இருக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்



  • Mar 23, 2024 13:24 IST
    பா.ம.க வேட்பாளர்களில் 30% மகளிர்: ராமதாஸ் 

    பா.ம.க வேட்பாளர்களில் 30% மகளிர், 20% பட்டியலினம்  இதுதான் நாங்கள் விரும்பும் சமூக  நீதி. தமிழகத்தில் வேறு எந்த கட்சியும் மகளிருக்கு இந்த அளவு பிரதிநிதித்துவம் அளிக்கவில்லை- ராமதாஸ் 



  • Mar 23, 2024 13:08 IST
    கொள்ளையர்களை அடித்து விரட்டிய தாய், மகள்

    தெலங்கானா மாநிலம் பேகம்பேட்டைக்கு அருகே வீட்டிற்குள் ஆயுதங்களுடன் நுழைந்த கொள்ளையர்களைத் தாயும் மகளும் சேர்ந்து விரட்டியடித்துள்ளனர்

    பைகா காலனியில் வீட்டிற்குள் நாட்டுத்துப்பாக்கி, கத்தி ஆகியவற்றுடன் ஹெல்மெட் அணிந்து நுழைந்த 2 கொள்ளையர்கள் ஆயுதங்களைக் காட்டி மிரட்டி கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்

    மேலும் தாக்குதல் நடத்த முயன்ற போது வீட்டில் இருந்த தாயும் மகளும் கொள்ளையர்களை தைரியமாக அடித்தே விரட்டியுள்ளனர்

    இரு திருடர்களும் கைது செய்யப்பட்ட நிலையில், இச்சம்பவம் பதிவான பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன



  • Mar 23, 2024 12:32 IST
    விஜயபாஸ்கர் வழக்கு: நீதிமன்றத்தில் இ.டி மனு

    அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கின் விவரங்களை கேட்டு அமலாக்கத்துறை மனு. வருமானத்துக்கு அதிகமாக விஜயபாஸ்கர் ரூ.38 கோடி சொத்து சேர்த்ததாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு

    வழக்கின் விவரங்களையும் குற்றப்பத்திரிகை நகலையும் கோரி, புதுக்கோட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மனு

    நேற்று முன்தினம் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது

    தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஆவணங்களையும் கேட்டுள்ளது அமலாக்கத்துறை



  • Mar 23, 2024 12:31 IST
    அரசியல் கட்சிகளுடன் சத்யபிரதா சாகு ஆலோசனை

    கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி தலைவர்களுடன் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை

    அங்கீகரிக்கப்பட்டுள்ள 10 அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பு. தேர்தல் முன்னேற்பாடுகள், பிரசாரத்தின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி ஆலோசனை. இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்குவது குறித்தும் ஆலோசனை. 

    பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ள சத்யபிரதா சாகு

    அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி, தேமுதிக, பகுஜன் சமாஜ் பங்கேற்பு



  • Mar 23, 2024 12:27 IST
    அ.தி.மு.க தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

    நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அதிமுக சார்பில் தொகுதி வாரியாக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

    அதிமுக தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு



  • Mar 23, 2024 11:58 IST
    பழனி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

    பழனி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு

    பழனி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக காவல்துறை அலுவலகத்திற்கு வந்த இ-மெயில்

    50க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ரயில் நிலையத்தில் சோதனை

    மோப்பநாய் உதவியுடன் பழனி ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை

    பழனியில் பங்குனி உற்சவ திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வந்தவண்ணம் உள்ள நிலையில், வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு



  • Mar 23, 2024 11:37 IST
    5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு

    தமிழகத்தில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு. கட்டண உயர்வு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது- இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவிப்பு 

    மணகெதி, கல்லக்குடி, வல்லம், இனம்கரியாந்தல், தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் அதிகரிப்பு. ஒருமுறை பயணம் செய்வது, ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.5 முதல் 20 ரூபாய் வரை உயர்வு

    மாதாந்திர கட்டணம் 100 முதல் 400 ரூபாய் வரை அதிகரிப்பு



  • Mar 23, 2024 11:37 IST
     ராசிபுரத்தில் 29 கிலோ தங்க நகைகள் பறிமுதல்

    ராசிபுரம் அருகே ரூ.6.2 கோடி மதிப்பிலான 29 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை

    உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்டதால் தங்க நகைகள் பறிமுதல்

    பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைப்பு

    தனியார் நிதி நிறுவனத்தினர் எடுத்துச் சென்ற நகைகள் பறிமுதல்



  • Mar 23, 2024 10:50 IST
    இ.டி., ஐ.டி. சோதனையில் சிக்கிய 41 நிறுவனங்களிடம் இருந்து ரூ.2,471 கோடி நன்கொடை பெற்ற பா.ஜ.க- பிரசாந்த் பூஷன்

    தேர்தல் பத்திரத் திட்டத்தை எதிர்த்த மனுதாரர்களில் ஒருவரான உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், சிபிஐ, இடி மற்றும் ஐடி துறையால் விசாரணையை எதிர்கொண்டுள்ள 41 நிறுவனங்கள் பாஜகவுக்கு ரூ.2,471 கோடியை பத்திரங்கள் மூலம் நன்கொடையாக வழங்கியதாக வெள்ளிக்கிழமை குற்றம் சாட்டினார்.

    மேலும் இதுகுறித்து விசாரணைக்கு அழைப்பு விடுத்தார்.      

    இ.டி., ஐ.டி. சோதனையில் சிக்கிய 41 நிறுவனங்களிடம் இருந்து ரூ.2,471 கோடி நன்கொடை பெற்ற பா.ஜ.க- பிரசாந்த் பூஷன்

     



  • Mar 23, 2024 10:40 IST
    பாடகர் டிஎம் கிருஷ்ணாவிற்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து



  • Mar 23, 2024 10:38 IST
    அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் மீது வழக்குப் பதிவு

    தென் சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் மற்றும் தனியார் திருமண மண்டப உரிமையாளர் பாலாஜி மீது, தேர்தல் பறக்கும் படையினர் கொடுத்த புகாரின் பேரில் தரமணி போலீசார் வழக்குப்பதிவு!

    விதிமுறைகளை மீறி வேளச்சேரியில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தை நடத்தியதாக புகார்!



  • Mar 23, 2024 10:07 IST
    ரஷ்யா இசைக் கச்சேரி தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு

    ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள கிரோகஸ் சிட்டி அரங்கில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.  100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

    ரஷ்யா இசைக் கச்சேரி தாக்குதலில் 60 பேர் பலி; 145 பேர் காயம்- தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு



  • Mar 23, 2024 10:07 IST
    ரஷ்யா இசைக் கச்சேரி தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு

    ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள கிரோகஸ் சிட்டி அரங்கில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.  100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

    ரஷ்யா இசைக் கச்சேரி தாக்குதலில் 60 பேர் பலி; 145 பேர் காயம்- தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு



  • Mar 23, 2024 10:00 IST
    செல்வப்பெருந்தகையின் X தள பதிவு



  • Mar 23, 2024 09:36 IST
    முதல்வர் ஸ்டாலின் தஞ்சை மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பு



  • Mar 23, 2024 08:35 IST
    புதுச்சேரி எம்.பி. வைத்திலிங்கம் பேட்டி

    மது வருவாயை மட்டுமே நம்பி இருக்கவேண்டிய நிலையில் புதுச்சேரி அரசு உள்ளது.. இதை மாற்றுவோம்

    மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மீண்டும் களமிறங்கும் புதுச்சேரி எம்.பி. வைத்திலிங்கம் பேட்டி



  • Mar 23, 2024 08:34 IST
    ஐபிஎல்- இன்று 2 போட்டிகள்

    ஐபிஎல் கிரிக்கெட் - பிற்பகல் 3.30 மணிக்கு டெல்லி, பஞ்சாப் அணிகள் மோதல்

    ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா, ஹைதராபாத் அணிகள் இரவு 7.30க்கு பலப்பரீட்சை 



  • Mar 23, 2024 08:17 IST
    மாஸ்கோ துப்பாக்கிச்சூடு- பிரதமர் மோடி கண்டனம்

    “ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த கொடூரமான தீவிரவாத தாக்குதலை இந்தியா வன்மையாக கண்டிக்கிறது

    எங்களின் எண்ணங்களும், பிரார்த்தனைகளும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் உள்ளன;

    இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய மக்களுக்கும், அரசாங்கத்திற்கும் இந்தியா துணையாக நிற்கும்

    - பிரதமர் நரேந்திர மோடி X தளத்தில் பதிவு



  • Mar 23, 2024 07:44 IST
    மிதமான மழைக்கு வாய்ப்பு

    நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது

    சென்னை வானிலை ஆய்வு மையம்



  • Mar 23, 2024 07:34 IST
    மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்

    இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவிப்பு;

    இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், விசைப்படகுகளையும் மீட்டுத் தரக்கோரி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்;

    மீனவர்களை மீட்காத பட்சத்தில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டைகளை  ஒப்படைத்து மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க முடிவு



  • Mar 23, 2024 07:34 IST
    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ‘ஏணி’ சின்னம் ஒதுக்கீடு

    மக்களவைத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியில் ஏணிசின்னம் ஒதுக்கீடு செய்தது இந்திய தேர்தல் ஆணையம்

    ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நவாஸ் கனி போட்டி.



  • Mar 23, 2024 07:34 IST
    டி20 போட்டிகளில் 12 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீரர்

    டி20 போட்டிகளில் 12 ஆயிரம் ரன்களை விராட் கோலி கடந்துள்ளார்

    சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 6 ரன்களை எடுத்தபோது கோலி இந்த மைல்கல்லை எட்டினார்

    டி20 போட்டிகளில் 12 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் கோலி படைத்துள்ளார்

    கெயில், சோயிப் மாலிக், பொலார்டு , ஹேல்ஸ், வார்னருக்கு பிறகு 12 ஆயிரம் ரன்களை கடந்த 6வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள கோலி, சென்னை அணிக்கு எதிராக ஆயிரம் ரன்களையும் கடந்துள்ளார்



  • Mar 23, 2024 07:33 IST
    பாமக வேட்பாளர் மாற்றம்- தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி

    தருமபுரி மக்களைத் தொகுதியின் பாமக வேட்பாளர் அரசாங்கம் என்பவருக்கு பதில் சௌமியா அன்புமணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தருமபுரி தொகுதியில் பாமக தலைவர் அன்புமணி போட்டியிட்டு தோல்வியடைந்தார்.



  • Mar 23, 2024 07:33 IST
    காஞ்சிபுரம் பாமக வேட்பாளர் யார்?

    மக்களவைத் தேர்தலில் பாமக சார்பில் காஞ்சிபுரம் தனித் தொகுதியில் ஜோதி வெங்கடேசன் போட்டி



  • Mar 23, 2024 07:33 IST
    நான் ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டேன்- அண்ணாமலை

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  40 நாட்கள் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டாலும் பாஜக தான் கோவையில் வெற்றி பெறும். தமிழ்நாட்டின் அரசியல் மாற்றம் கோவையிலிருந்து ஆரம்பமாக வேண்டும்;

    டெல்லி அரசியலை விட தமிழ்நாட்டின் அரசியலை தான் விரும்புகிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் விருப்பத்தின் பேரில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறேன்;

    தேர்தலில் எனது சண்டை ஆதிக்க சக்திகளோடும், தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுத்தவர்களோடும். நான் ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டேன்

    கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு



  • Mar 23, 2024 07:32 IST
    சிஎஸ்கே அணி அபார வெற்றி

    ஐபிஎல் 2024 : ஆர்சிபிக்கு எதிரான முதல் போட்டியில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது சிஎஸ்கே அணி.

    முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி இருபது ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களை குவித்தது.

    174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, 176 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சிறப்பாக பந்துவீசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ரஹ்மான் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.



  • Mar 23, 2024 07:32 IST
    புதுச்சேரி ஆளுநராக பதவியேற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்

    தெலங்கானா மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பு, ஜார்கண்ட் மாநில ஆளுநராக உள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியில் அவர் இன்று பதவியேற்றுக்கொண்டார்

    சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப் பிரமானம் செய்து வைத்தார்



Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment