Tamil Nadu | Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil news updates
நயினார் நாகேந்திரன் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக கொண்டு செல்ல முயன்ற ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது.
தாம்பரம் ரயில் நிலையத்தில் ஏப்ரல் 6ம் தேதி ரூ 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Apr 27, 2024 22:44 ISTகொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்க தடை
முதலமைச்சர் ஸ்டாலின் வருகையையொட்டி, ஏப்ரல் 29 முதல் மே 4 ஆம் தேதி கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்க தடைவிதிக்கபட்டுள்ளது
-
Apr 27, 2024 21:05 ISTநீலகிரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சிசிடிவி காட்சிகள் திடீரென துண்டிப்பு
நீலகிரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கட்சி பிரமுகர்கள் காண கூடிய அறையில் சிசிடிவி காட்சிகளில் திடீரென துண்டிப்பு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. கட்சி முகவர்கள் அமரும் அறையில், சிசிடிவி பதிவுகளை காண கூடிய காட்சி திரையில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து, தொழில்நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது
-
Apr 27, 2024 20:38 ISTவாகனங்களில் தேவையற்ற ஸ்டிக்கர்கள் ஒட்டக் கூடாது - காவல்துறை எச்சரிக்கை
வாகனங்களில் தேவையற்ற ஸ்டிக்கர்கள் எதையும் ஒட்டக் கூடாது. மீறினால் மே 2ம் தேதி முதல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது
-
Apr 27, 2024 20:01 ISTவிதிகளை மீறி இயக்கி நிலக்கரி ஏற்றி வந்த 21 லாரிகள்; அபராதம் விதித்து எச்சரிக்கை
காரைக்காலில் சாலைகளில் கொட்டிய நிலக்கரி துகள்களில் சறுக்கி இரு சக்கர வாகனங்கள் விழுந்த விவகாரத்தில், விதிகளை மீறி இயக்கி நிலக்கரி ஏற்றி வந்த 21 லாரிகளுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்தனர். அதானி துறைமுகத்தில் நிலக்கரி ஏற்றியிருந்த சரக்கு லாரிகளை ஆய்வு செய்த போலீசார், லாரிகள் முழுமையாக தார்ப்பாய் கொண்டு கட்டப்பட்டுள்ளதா என்று சோதனை செய்து ஓட்டுனர்களுக்கு அறிவுரை வழங்கினர். மேலும் விதிமுறைகளை மீறினால் லாரிகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.
-
Apr 27, 2024 19:45 ISTபாலியல் வழக்கு; ராஜேஷ் சிங் சிறையில் அடைப்பு
பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டு வந்த நிலையில், துபாயில் இருந்து சென்னை திரும்பிய ராஜேஷ் சிங்கை கைது செய்த சி.பி.சி.ஐ.டி போலீசார், நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். துபாயில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்த ராஜேஷ் சிங், ரகசியமாக சென்னையில் தங்க திட்டமிட்டிருந்த நிலையில் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
-
Apr 27, 2024 19:10 ISTகன்னியாகுமரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு
கன்னியாகுமரியில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
Apr 27, 2024 18:33 ISTதமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது; வஞ்சிக்கும் மத்திய பா.ஜ.க அரசு - ஸ்டாலின்
தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் மத்திய பா.ஜ.க அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்! என முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்
-
Apr 27, 2024 18:16 ISTபாலியல் வன்கொடுமை வழக்கு : துபாயில் இருந்து சென்னை திரும்பிய ராஜேஷ் சிங் கைது
பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ராஜேஷ் சிங், தலைமறைவாய இருந்து துபாயில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்த நிலையில், இன்று துபாயில் இருந்து சென்னை திரும்பிய ராஜேஷ் சிங்கை கைது செய்த சிபிசிஐடி போலீசார் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனது. ரகசியமாக சென்னையில் தங்க திட்டமிட்டிருந்த நிலையில் சுற்றி வளைத்து பிடித்த போலீசார்
-
Apr 27, 2024 16:51 ISTவானில் ஒரே இடத்தில் வட்டமிட்ட விமானம் : பொதுமக்கள் அச்சம்
தென்காசி அடுத்த குத்துக்கல்வலசை பகுதியில் வானில் ஒரே இடத்தில் 10 முறைக்கும் விமானம் சுற்றி வந்ததால், பொதுமக்கள் அச்சத்துடன் பார்த்த நிலையில், வானில் வட்டமடித்தது பயிற்சி விமானம் என தகவல் வெளியானதை தொடர்ந்து பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
-
Apr 27, 2024 16:48 ISTகுற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை : அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம்
"மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் அளித்துள்ளார்.
-
Apr 27, 2024 15:43 ISTஅதிகரிக்கும் வெயில் தாக்கம் : ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்தரவு
தமிழகம் முழுவதும் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் பொது இடங்களில் ஓஆர்எஸ் பாக்கெட்டுகளை விநியோகம் செய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகளுக்கு, பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. கடும் வெப்பம் காரணமாக மக்களுக்கு உடல் சார்ந்த பாதிப்புகள் ஏற்படக் கூடும். உடலின் நீர் சமநிலையை மேம்படுத்த மாவட்டம் தோறும் பல்வேறு பகுதிகளில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என கூறி ஜூன் 30ஆம் தேதி வரை மாவட்ட வாரியாக பொதுமக்களுக்கான மறுநீரேற்று மையங்களை அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது
-
Apr 27, 2024 15:40 ISTபேருந்து நிலைய ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அகற்ற உத்தரவு
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்தில் ஆய்வு பேருந்து மேற்கொண்ட கோட்டாட்சியர் அபிநயா பேருந்து நிலைய ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டுள்ளார். "நடைபாதைகளில் ஆக்கிரமிப்பு செய்திருந்தால் பொதுமக்கள் எப்படி செல்வார்கள்?" மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
Apr 27, 2024 15:02 ISTதெலுங்கு தேசம் கட்சியின் பிரசார வாகனத்திற்கு தீவைத்து எரிப்பு
ஆந்திர மாநிலம் சித்தபர்த்தி அருகே தெலுங்கு தேசம் கட்சியின் பிரச்சார வாகனத்தை தீவைத்து எரித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள், பிரசார வாகனத்திற்கு பெட்ரோல் ஊற்றி தீவைத்துவிட்டு தப்பியோடியுள்ளனர். அந்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
-
Apr 27, 2024 14:23 ISTதமிழகத்தில் குடிநீர் விநியோகம் - ஸ்டாலின் அறிவுறுத்தல்
"தென்மேற்கு பருவமழை காலத்திலும், மழையளவு எதிர்பார்ப்பதை விட குறைவாகவே இருக்க கூடும் என இந்திய வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. தற்போது அணைகளில் உள்ள நீரை சிக்கனமாக பயன்படுத்தி, அடுத்த 2 மாதங்களுக்கு குடிநீர் தேவையை நிறைவு செய்ய வேண்டிய சூழ்நிலையில் நாம் உள்ளோம்.
குடிநீர் பிரச்சனை நிலவக்கூடிய அனைத்து பகுதிகளுக்கும் சென்று, பிரச்சனைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும். கூட்டுக் குடிநீர் திட்டங்களின் செயல்பாட்டை தொடர்ந்து கண்காணித்து, தடைகளின்றி பராமரித்திட வேண்டும். கூட்டுக் குடிநீர் திட்டங்கள், நீரேற்று நிலையங்களுக்கு மின்சாரம் தடை இன்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஊராட்சிப் பகுதிகளில், சிறிய குடிநீர் திட்டங்கள் மூலம் பயன்பெறக்கூடிய பல கிராமங்களில், ஆழ்துளை கிணறுகள் வறண்டு இருக்கின்றன" - என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறார்.
-
Apr 27, 2024 13:39 ISTநீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்?
மணல் குவாரி முறைகேடு வழக்கு தொடர்பாக நீர்வளத்துறை, கனிம வளத்துறை அதிகாரிகளின் பட்டியலை அமலாக்கத்துறை திரட்டியது. விரைவில் சம்மன் கொடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.
மணல் குவாரி முறைகேடு வழக்கு தொடர்பாக, நேற்று முன் தினம் 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகினர். திருச்சி, கரூர், தஞ்சாவூர், அரியலூர், வேலூர் மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகினர். மாவட்ட ஆட்சியர்களிடம் சுமார் 10 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்
-
Apr 27, 2024 13:22 ISTபுயல், வெள்ளம் - தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு
தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழ்நாட்டிற்கு மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.115.49 கோடியும், கடந்தாண்டு டிசம்பரில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணமாக ரூ.160.61 கோடியும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு புயல் மழை வெள்ள பாதிப்பு நிதியாக ரூ.276 கோடி ஒதுக்கீடு செய்துள்ள மத்திய அரசு, கர்நாடகாவிற்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ. 3,454 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
-
Apr 27, 2024 13:14 ISTமே 2-ல் மழைக்கு வாய்ப்பு
மே 2ம் தேதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு.
ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மே 3-ம் தேதி மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
-
Apr 27, 2024 13:12 ISTமே 2ல் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
மே 2ம் தேதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு என்றும், ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது.
மேலும், தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மே 3 ஆம் தேதி மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
-
Apr 27, 2024 12:51 ISTகுடிநீர் விநியோகம் - முதலமைச்சர் ஆலோசனை
கோடைக் காலத்தில் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பாக ஆலோசனை. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி பங்கேற்பு
-
Apr 27, 2024 12:50 ISTகோவை தேர்தல் முடிவை அறிவிக்க தடை கோரி மனு
கோவை மக்களவைத் தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதிக்கக் கோரி வழக்கு
அதுவரை கோவை வாக்குப்பதிவு முடிவை அறிவிக்க தடை விதிக்கவும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
கடந்த 2019, 2021 தேர்தல்களில் வாக்களித்த நிலையில், முறையான விசாரணையின்றி பெயர் நீக்கப்பட்டுள்ளதாக மனுவில் தகவல்
ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணியாற்றி வரும், கோவையைச் சேர்ந்த சுதந்திர கண்ணன் தாக்கல் செய்த மனு மீது விரைவில் விசாரணை
-
Apr 27, 2024 12:37 ISTஸ்டாலினுடன் ப.சிதம்பரம் சந்திப்பு
மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு நிறைவடைந்ததையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சந்தித்துப் பேசினார்.
-
Apr 27, 2024 12:28 ISTஆதினத்தை மிரட்டிய வழக்கு - ஜாமின் மனு தள்ளுபடி
மயிலாடுதுறை, தருமபுரம் ஆதினத்தை மிரட்டி பணம் பறித்த வழக்கில் 2 பேரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி
விக்னேஷ், வினோத் ஆகியோரின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்தது மாவட்ட அமர்வு நீதிமன்றம்
-
Apr 27, 2024 12:25 ISTபேருந்துகளை ஆய்வு செய்ய உத்தரவு
தமிழகத்தில் உள்ள அனைத்து பேருந்துகளையும் அடுத்த 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவு
அனைத்து பேருந்துகளையும் ஆய்வு செய்து பாதிப்புக்களை அடுத்த 48 மணி நேரத்திற்குள் சரி செய்யவும் அறிவுறுத்தல்
போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் நேற்று தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்திய நிலையில் உத்தரவு
-
Apr 27, 2024 11:42 ISTதேசிய கட்சிகளால் ஒரு பிரயோஜனமும் இல்லை: ஜெயக்குமார்
தேசிய கட்சிகளால் தமிழகத்திற்கு ஒரு பிரயோஜனமும் இல்லை. யானைப் பசிக்கு சோளப்பொரி போல மத்திய அரசு தமிழகத்திற்கு நிவாரண நிதியை ஒதுக்கி உள்ளது. தமிழகத்திற்கு மத்திய அரசு ஓரவஞ்சனை உடன் பார்க்கிறது. நிதி பகிர்வு சீராக இருக்க வேண்டும். மத்தியில் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க இருந்தாலும் தமிழகத்திற்கு நிதி தருவதில்லை- அதிமுக ஜெயக்குமார்
-
Apr 27, 2024 10:56 ISTதமிழர்கள் வசிக்கும் கம்பமலையில் 78.3% வாக்குப்பதிவு
கேரள மாநிலம், வயநாட்டில் தமிழர்கள் வசிக்கும் கம்பமலை பகுதியில் மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தலையும் மீறி, காவல் துறையினரின் பாதுகாப்புடன் பொதுமக்கள் வாக்களித்தனர்.
அங்கு 78.3 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
-
Apr 27, 2024 10:52 ISTஅதிமுக சார்பில் நீர்மோர் பந்தல்
சேலம்: எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொங்கணாபுரத்தில், அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர்மோர் பந்தலை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார் .
#JustNow | சேலம்: எடப்பாடி பேருந்து நிலையம் அருகே அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி#SunNews | #EdappadiPalanisamy | #ADMK | #Salem pic.twitter.com/UXCX4xjOOJ
— Sun News (@sunnewstamil) April 27, 2024 -
Apr 27, 2024 10:29 ISTதங்கம் விலை உயர்வு
சென்னையில் இன்று காலை நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்தது.
ஒரு கிராம் தங்கம் ரூ.6,770க்கும், ஒரு சவரன் ரூ.54,160க்கும் விற்பனையாகிறது.
-
Apr 27, 2024 10:09 ISTஇன்று முதல் ஒருவழிப்பாதையாக மாற்றம்
கோடை சீசனை ஒட்டி உதகை - மேட்டுப்பாளையம் சாலை இன்று முதல் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரும் அனைத்து வாகனங்களும் குன்னூர் வழியாக ஊட்டிக்கும் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து வாகனங்களும் கோத்தகிரி வழியாகவும் செல்ல வேண்டும்.
-
Apr 27, 2024 10:04 ISTதமிழகத்திற்கு ரூ.276 கோடி நிவாரணம்
மிக்ஜாம் புயல் மற்றும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ரூ.276 கோடி நிவாரணமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ரூ.115.49 கோடியும், டிசம்பர் மழை, வெள்ள பாதிப்புக்காக ரூ.160.61 கோடியும் நிவாரணமாக மத்திய அரசு அறிவித்துள்ளது
-
Apr 27, 2024 09:57 ISTமணிப்பூர் தாக்குதல்- 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலி
மணிப்பூரின் பிஷ்னுப்பூரில் குக்கி சமூகத்தைச் சேர்ந்த ஆயுதம் ஏந்திய குழு நடத்திய தாக்குதலில் 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர்.
படுகாயம் அடைந்த மேலும் 3 பாதுகாப்பு படை வீரர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
Apr 27, 2024 09:10 ISTரயில் விபத்து- அமைச்சர் கூறிய தகவலில் எந்த உண்மையும் இல்லை.
ஆந்திராவில் கடந்தாண்டு அக்டோபரில் நடந்த ரயில் விபத்துக்கு, ஓட்டுநர்கள் போனில் கிரிக்கெட் போட்டி பார்த்துக் கொண்டிருந்ததே காரணம் என மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் கூறிய தகவலில் எந்த உண்மையும் இல்லை.
விபத்தில் உயிரிழந்த லோகா பைலட்களின் மொபைல் சிக்னல்களை ஆய்வு செய்ததில் அமைச்சர் கூறியது பொய் என தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் இரு லோகா பைலட்கள் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
ரயில்வே பாதுகாப்பு ஆணையம் நடத்திய விசாரணையில் தகவல்
-
Apr 27, 2024 08:47 ISTசென்னை வந்த ஹைதராபாத் அணி!
கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, நாளை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது. இதில், விளையாடுவதற்காக அந்த அணி வீரர்கள் ஹைதராபத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.
கடந்த 25 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில், பெங்களூரு அணியிடம் ஹைதராபாத் அணி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது
-
Apr 27, 2024 08:43 ISTதெப்ப உற்சவம் விழா கோலாகலம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுர ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீ சட்டைநாதர் சுவாமி கோயிலில் நேற்று தெப்ப உற்சவம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி அம்பாளை தரிசனம் செய்தனர்.
-
Apr 27, 2024 08:01 ISTஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்த விபத்து
உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
நாகர்கோவிலிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற பேருந்து ஆசனூர் பகுதியில் கவிழ்ந்தது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Apr 27, 2024 07:35 ISTதமிழ்நாட்டில் நேற்று அதிகபட்சமாக வெப்பநிலை பதிவான இடங்கள்!
ஈரோடு - 108°F
திருப்பத்தூர் - 107°F
சேலம் - 106°F
தருமபுரி - 106°F
கரூர் பரமத்தி - 106°F
திருத்தணி - 105°F
வேலூர் - 105°F
திருச்சி - 104°F
நாமக்கல் - 104°F
கோவை - 103°F
மதுரை விமான நிலையம் - 103°F
மதுரை நகரம் - 102°F
தஞ்சாவூர் - 102°F
பாளையங்கோட்டை - 100°F
-
Apr 27, 2024 07:31 ISTபஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி
ஐபிஎல்: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 261 என்ற இமாலய இலக்கை எட்டி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றது பஞ்சாப் கிங்ஸ் அணி. இதன் மூலம் ஒட்டுமொத்த டி20 வரலாற்றில் அதிகபட்ச ரன்களை சேஸ் செய்த அணி என்ற வரலாற்று சிறப்பை பெற்றது.
கடந்த 2020ல் பஞ்சாப் அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணி 226 ரன்களை சேஸ் செய்ததே இதுவரை அதிகபட்ச சாதனையாக இருந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.