Tamil News Today: பீகார் சட்டப்பேரவையில் மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றதைத் தொடர்ந்து, சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்க இருக்கிறது. நான்குக்கும் அதிகமான கட்சிகள் களத்திலிருந்தாலும், ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவ் மகா கூட்டணிக்கும், நிதிஷ் குமார் தலைமையிலான பாஜக-விற்கும்தான் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை அடுத்து, பீகார் மாநிலம் மிகவும் பரபரப்பாகக் காணப்படுகிறது.
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பது குறித்து இன்று பெற்றோரிடம் கருத்துக் கேட்டு கூட்டம் நடைபெறுகிறது. கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட பிறகு, 7 மாதங்களுக்கு மேல் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில், அண்மையில் தமிழக அரசு நவம்பர் 16ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவித்தது. இதர்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், தமிழக அரசு, மீண்டும் பள்ளிகள் திறப்பது குறித்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமையில் பெற்றோர்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறும். அதன் பிறகே பள்ளிகள் திற்அப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி இன்று பெற்றோர்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறுகிறது.
தக்காளி விலை ஒரு கிலோ 1 ரூபாய்க்கு விற்பனையானதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்கிற பேச்சுக்கே இடமில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய, அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்கிற பேச்சுக்கே இடமில்லை. அதிமுக அறுதிப் பெரும்பான்மை பெறும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Tamil News Updates: ஒடிசா பூரி கடற்கரையில் சுதர்சன் பட்நாயக் என்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், அமெரிக்கா தேர்தலில் அதிபராக வெற்றி பெற்றுள்ள ஜோ படன் மறும் துணை அதிபராக வெற்றி பெற்றுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலாஹாரிஸ் மணல் சிற்பத்தை உருவாக்கி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Web Title:Tamil news live today schools reopen mk stalin cm palaniswami vel yathra
சிபிஐ அமைப்புக்கு வழங்கப்பட்ட பொது ஒப்புதலை ரத்து செய்வதாக பஞ்சாப் மாநிலம் தெரிவித்தது. ராஜஸ்தான், சத்தீஷ்கர், மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் முன்னதாக பொது ஒப்புதலை ரத்து செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜெர்மன் பயோஎன்டெக் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த, கொவிட்- 19க்கு எதிரான தடுப்பு மருந்து 90 சதவீதம் பயனளிப்பதாக பிஜெர் நிறுவனம் தெரிவித்தது.
ஆய்வு முடிவுகளின் படி, மனிதர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், வைரஸ் நுண்கிருமிக்கு எதிராக தங்களின் தடுப்பு மருந்து 90%க்கும் அதிக செயல்திறன் கொண்டவையாக விளங்கியது என்று அந்நிறுவனம் தெரிவித்தது.
என் கே சிங் தலைமையிலான பதினைந்தாவது நிதி ஆணையம், 2021-22-ஆம் ஆண்டு முதல் 2025-26-ஆம் ஆண்டு வரையிலான காலத்துக்கான, தனது அறிக்கையை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்திடம் இன்று சமர்ப்பித்தது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 2,257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை, தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 7,46,079 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
பட்டியல் சமூகத்தைச் சார்ந்த பஞ்சாயத்து தலைவரைப் பணியாற்ற விடாமல் தடுப்போர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறும்.இடைத்தேர்தல் வாக்குகளும் நாளை எண்ணப்படுகின்றன. பீகாரில் மொத்தமுள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
மசூதியில் பாங்கொலி கேட்டு பேச்சை நிறுத்திக்கொண்டு பாஜக தலைவர்கள் அமைதியாக நின்றனர்.
தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மோசஸ் கொலை செய்யப்பட்டிருப்பதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்கள் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளித்து செய்தி சேகரிக்கும் செய்தியாளர்களுக்கே இந்நிலை என்றால், சராசரி மக்களின் நிலை என்ன? என கேள்வி எழுப்பியிருக்கும் அவர், குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கேரள தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னாவை மேலும் 2 நாட்கள் காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு கொச்சி முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
பெரம்பலூர் அருகே 2000 டன் வெங்காயம் பதுக்கிய விவகாரத்தில் 4 பேர் மீது வழக்குப் பதிவு. கிராம நிர்வாக அலுவலர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிந்தது குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறை
நாளை தியேட்டர்கள் திறக்கப்படவுள்ள நிலையில் பழைய படங்களே வெளியீடு! தீபாவளி புதுப் படங்கள் வெளியாகாது என தயாரிப்பாளர்கள் அறிவித்த நிலையில், திருப்பூர் சுப்பிரமணியம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால், தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாவதோடு, தங்கள் படகுகள், வலைகளை இழந்து வருவது தொடர்கதையாகி வருகிறது!” என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ட்வீட் செய்துள்ளார்.
“தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால், தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாவதோடு, தங்கள் படகுகள், வலைகளை இழந்து வருவது தொடர்கதையாகி வருகிறது!” என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ட்வீட் செய்துள்ளார்.
VPF கட்டணம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் புதிய படங்கள் வெளியாகாது. பல கட்டங்களில் பேச்சுவார்த்தை நடத்தியும் சுமுகமான தீர்வு எட்டப்படவில்லை. நல்ல தீர்வு ஏற்படும் வரை புதிய படங்களை வெளியிட முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம் என இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் தடை உத்தரவை மீறி வேல்யாத்திரை செல்ல முயன்ற பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கைது. 3வது நாளாக வேல்யாத்திரை செல்ல முயன்ற பாஜகவினர் செங்கல்பட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நடிகர் சூரி அளித்த ரூ.2.70 கோடி மோசடி புகாரில் பதிவான வழக்கில், தனக்கு தர வேண்டிய பணத்தை கொடுத்தால் போதும் என நடிகர் சூரி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா முன் ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார்.
தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் நவம்பர் 12-ஆம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மனு ஸ்மிருதி சட்ட புத்தகம் இல்லை; அதன் மொழிபெயர்ப்பு சரியா? தவறா? என தெரியவில்லை மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். அரசியல் பிரச்னைகளுக்கு தீர்வுகாண நீதிமன்றத்தை பயன்படுத்தக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதையடுத்து மனு ஸ்மிருதி பற்றி அவதூறாக பேசியதாக விசிக தலைவர் திருமாவளவனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு வாபஸ் வாங்கப்பட்டது. உரிய சட்டப்பிரிவுகளை குறிப்பிட்டு புதிய வழக்காக தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதால் இந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
கல்லூரிகள் திறக்கப்படும்போது விடுதிகளில் ஒரு அறைக்கு ஒரு மாணவரை மட்டுமே தங்க வைக்க வேண்டும் என யூஜிசி அறிவுறுத்தியுள்ளது.
தெலுங்கு திரைப்பட நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களில் தன்னை சந்தித்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள சிரஞ்சீவி கோரிக்கை
கல்லூரிகள் திறப்பு குறித்து நவம்பர் 12-ஆம் தேதி முடிவு செய்யப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பது பற்றி சென்னை அசோக் நகரில் நடைபெற்ற பெற்றோர்கள் கருத்துக் கேட்பு கூட்டத்தை ஆய்வு செய்த பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், பள்ளி வாரியாக பெறப்பட்ட கருத்துக் கேட்பு படிவங்கள் இன்று மாலையே துறைக்கு அனுப்பிவைக்கப்படும். பெற்றோர் கருத்துகள் அடிப்படையில் பள்ளிகள் திறப்பது பற்றி முடிவெடுக்கப்படும் என்று கூறினார்.
டெல்லி, ஒடிசா மாநில அரசுகள் பட்டாசு வெடிக்க தடைவிதித்த நிலையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம், டெல்லி மற்றும் ஒடிசாவில் நவம்பர் 10ம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதி வரை பட்டாசுகளை வெடிக்கத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு 10% தீபாவளி போனஸ் அறிவித்தது. இந்த நிலையில், போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் போனஸ் குறைக்கப்பட்டதாக புகார் தெரிவித்து மதுரை மற்றும் சேலத்தில் போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்குள்ளான ஈரோடு நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோயம்பேடியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தமிழக தலைவர் எல்.முருகன், “வேல் யாத்திரை தொடரும். காஞ்சிபுரத்தில் ஹெச்.ராஜா தலைமையிலும், ராணிபேட்டையில் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையிலும் வேல் யாத்திரை நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.
ரயில் விபத்தில் கால்களை இழந்த சாயல்குடியைச் சேர்ந்த முத்தமிழ் செல்வன் என்ற இளைஞரின் மருத்துவ சிகிச்சைக்கு திமுக எம்.பி. செந்தில்குமார் ட்விட்டரில் ரூ.5 லட்சம் நிதி திரட்டியுள்ளார்.
தமிழக அரசு சார்பில் பள்ளிக் கல்வித்துறை நடத்தும் நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் மூலம் இன்று தொடங்குகிறது. e-box நிறுவனத்தின் மூலம் ஆன்லைனில் நீட் தேர்வு பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. நடப்பு ஆண்டில் நீட் தேர்வு இலவச பயிற்சி பெற 16,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பிக்காதவர்கள் இன்று விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு, நவம்பர் 16ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கபடும் என்று அறிவித்த நிலையில், பெற்றோர்களிடம் கருத்து கேட்ட பிறகு பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி, இன்று தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் பெற்றோர்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் தொடங்கியது. அரசுப் பள்ளிகளில் பெற்றோர்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது.