Tamil News today : மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்ற எல்.முருகனுக்கு தகவல் ஒளிபரப்பு துறை ஒதுக்கீடு

தமிழகத்தில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

Tamil News live today : முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜ குமாரமங்கலத்தின் மனைவியும், வழக்கறிஞருமான கிட்டி குமாரமங்கலம் (68) டெல்லியில் கொலை செய்யப்பட்டுள்ளார். தென்மேற்கு டெல்லியில் உள்ள வசந்த் விகார் பகுதியில் வசித்து வந்த நேற்று நள்ளிரவு அவருடைய வீட்டில் பணியாற்றும் பெண் உதவியுடன் மூன்று பேர் கொலை செய்துள்ளனர். அவருடைய வீட்டிற்கு அருகே பணியாற்றும் ராஜூ லக்கனன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தென்மேற்கு டெல்லியின் டி.சி.பி. இங்கித் பிரதாப் சிங் இது குறித்து பேசுகையில், “இரவு 11 மணி அளவில் அவருடைய வீட்டில் வேலை பார்க்கும் மஞ்சு என்பவர் அலைபேசியில் அழைப்பு விடுத்து இந்த கொலை குறித்து காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முழுமையான செய்திகளை படிக்க

பெட்ரோல் டீசல் விலை

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 31 காசுகள் அதிகரித்து 101.06க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 15 காசுகள் அதிகரித்து ரூ. 94.06க்கு விற்பனை செய்யப்படுகிறது.

திலீப் குமார் மரணம்

பாலிவுட் நடிகர் திலீப் குமார் உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். 98 வயதாகும் அவருக்கு மும்பை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தேவ்தாஸ், மதுமதி, நாயாதௌர், ராம் ஆர் ஷியாம், விதாட்டா, மொகல் – இ – அசாம் போன்ற இவருடைய படங்கள் இன்றும் பலரின் விருப்பமான படங்களாக உள்ளது. பாகிஸ்தானில் உள்ள பெஷாவரில் குய்ஸ்ஸா காவானி பசார் அருகே ஆய்ஷா பேகம் மற்றும் லாலா குலாம் சர்வார் கானுக்கும் மகனாக பிறந்தார் யூசஃப் கான் என்ற திலிப் குமார். 1949ம் ஆண்டு அவர் நடித்த அந்தாஸ் படம் அவரை புகழின் உச்சத்திற்கு அழைத்து சென்றது.

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மூச்சுத்திணறல் மணப்பாக்கம் பகுதியில் உள்ள மியாட் மருத்துவமனையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு செயற்கை சுவாசத்துடன் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Live Updates
10:49 (IST) 7 Jul 2021
எல்.முருகனுக்கு தகவல் ஒளிபரப்பு துறை ஒதுக்கீடு

த்திய இணை அமைச்சராக பொறுப்பேற்ற எல்.முருகனுக்கு தகவல் ஒளிபரப்பு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், மீன் வளம், பால்வளம் மற்றும் கால்நடைத் துறை ஆகியவற்றின் துணை அமைச்சராகவும் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

7:38 (IST) 7 Jul 2021
புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விபரம்

மணிப்பூரை சேர்ந்த ராஜ்குமார் ரஞ்சன் சிங் மத்திய அமைச்சராக பதவியேற்பு

மஹாராஷ்டிராவை சேர்ந்த பகவத் கிஷன் ராவ் காரத் மத்திய அமைச்சராக பதவியேற்பு

மேற்கு வங்கத்தை சேர்ந்த சுபாஷ் சர்கார் மத்திய அமைச்சராக பதவியேற்பு

திரிபுராவை சேர்ந்த சுஷ்ரி பிரதிமா பவுமிக் மத்திய அமைச்சராக பதவியேற்பு

மஹாராஷ்டிராவை சேர்ந்த கபில் மோரேஷ்வர் பாட்டீல் மத்திய அமைச்சராக பதவியேற்பு

கர்நாடகாவை சேர்ந்த பகவந்த் கூபா, மத்திய அமைச்சராக பதவியேற்பு

7:37 (IST) 7 Jul 2021
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மத்திய அமைச்சராக பதவியேற்பு

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மத்திய அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத்தலைவராக இருந்த அவர், தமிழக சட்டமன்ற தேர்தலில் தாராபுரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

7:24 (IST) 7 Jul 2021
புதிய மத்திய அமைச்சர்கள் பதவியேற்பு விபரங்கள்

குஜராத்தை சேர்ந்த சவுகான் தேவ்சிங் மத்திய அமைச்சராக பதவியேற்பு

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த அஜய் குமார் மத்திய அமைச்சராக பதவியேற்பு

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பி.எல்.வர்மா மத்திய அமைச்சராக பதவியேற்பு

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த அஜய் பட் மத்திய அமைச்சராக பதவியேற்பு

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த கவுஷல் கிஷோர் மத்திய அமைச்சராக பதவியேற்பு

கர்நாடகாவை சேர்ந்த நாராயணசாமி மத்திய அமைச்சராக பதவியேற்பு

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அன்னபூர்னா தேவி மத்திய அமைச்சராக பதவியேற்பு

டெல்லியை சேர்ந்த மீனாட்சி லேகி மத்திய அமைச்சராக பதவியேற்பு

குஜராத்தை சேர்ந்த தர்ஷான விக்ரம் ஜர்தோஷ் மத்திய அமைச்சராக பதவியேற்பு

ர்நாடகாவை சேர்ந்த ராஜீவ் சந்திரசேகர் மத்திய அமைச்சராக பதவியேற்பு

கர்நாடகாவை சேர்ந்த சுஷ்ரி ஷோபா கராண்டஜே மத்திய அமைச்சராக பதவியேற்பு

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பானு பிரதாப் சிங் வர்மா மத்திய அமைச்சராக பதவியேற்பு

7:21 (IST) 7 Jul 2021
புதிதாக பதவியேற்ற சில அமைச்சர்கள் விபரம்

ராஜஸ்தானை சேர்ந்த பூபேந்தர் யாதவ் மத்திய அமைச்சராக பதவியேற்பு

குஜராத்தை சேர்ந்த பர்ஷோத்தம் ருபாலா மத்திய அமைச்சராக பதவியேற்பு

தெலங்கானாவை சேர்ந்த கிஷன் ரெட்டி மத்திய அமைச்சராக பதவியேற்பு

இமாச்சலப்பிரதேசத்தை சேர்ந்த அனுராக் சிங் தாக்கூர் மத்திய அமைச்சராக பதவியேற்பு

இணை அமைச்சராக இருந்த அனுராக் சிங் தாக்கூர் தற்போது கேபினட் அமைச்சராகிறார்

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பங்கஜ் செளத்ரி மத்திய அமைச்சராக பதவியேற்பு

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த அனுப்பிரியா சிங் பட்டேல் மத்திய அமைச்சராக பதவியேற்பு

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சத்தியபால் சிங் பாகெல் மத்திய அமைச்சராக பதவியேற்பு

7:15 (IST) 7 Jul 2021
பிரதமர் மோடி மத்திய அமைச்சரவை விரிவாக்கம்: 43 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்பு

பிரதமர் மோடி மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் 43 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர்

* உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த அனுப்பிரியா சிங் பட்டேல் மத்திய அமைச்சராக பதவியேற்பு

* உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சத்தியபால் சிங் பாகெல் மத்திய அமைச்சராக பதவியேற்பு

இமாச்சலப்பிரதேசத்தை சேர்ந்த அனுராக் சிங் தாக்கூர் மத்திய அமைச்சராக பதவியேற்பு

* இணை அமைச்சராக இருந்த அனுராக் சிங் தாக்கூர் தற்போது கேபினட் அமைச்சராகிறார்

ராஜஸ்தானை சேர்ந்த பூபேந்தர் யாதவ் மத்திய அமைச்சராக பதவியேற்பு

* குஜராத்தை சேர்ந்த பர்ஷோத்தம் ருபாலா மத்திய அமைச்சராக பதவியேற்பு

* தெலங்கானாவை சேர்ந்த கிஷன் ரெட்டி மத்திய அமைச்சராக பதவியேற்பு

மத்திய அமைச்சராக பதவியேற்றார் பீகாரை சேர்ந்த ராஜ்குமார் சிங்

* பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹர்தீப் சிங் பூரி மத்திய அமைச்சராக பதவியேற்பு

* குஜராத்தை சேர்ந்த மன்ஷுக் மாண்டவ்யா

மத்திய அமைச்சராக பதவியேற்பு

6:57 (IST) 7 Jul 2021
புதிய மத்திய அமைச்சர்கள் பதவியேற்பு

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பங்கஜ் செளத்ரி மத்திய அமைச்சராக பதவியேற்பு

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த அனுப்பிரியா சிங் பட்டேல் மத்திய அமைச்சராக பதவியேற்பு

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சத்தியபால் சிங் பாகெல் மத்திய அமைச்சராக பதவியேற்பு

இமாச்சலப்பிரதேசத்தை சேர்ந்த அனுராக் சிங் தாக்கூர் மத்திய அமைச்சராக பதவியேற்பு

இணை அமைச்சராக இருந்த அனுராக் சிங் தாக்கூர் தற்போது கேபினட் அமைச்சராகிறார்

ராஜஸ்தானை சேர்ந்த பூபேந்தர் யாதவ் மத்திய அமைச்சராக பதவியேற்பு

குஜராத்தை சேர்ந்த பர்ஷோத்தம் ருபாலா மத்திய அமைச்சராக பதவியேற்பு

தெலங்கானாவை சேர்ந்த கிஷன் ரெட்டி மத்திய அமைச்சராக பதவியேற்பு

மத்திய அமைச்சராக பதவியேற்றார் பீகாரை சேர்ந்த ராஜ்குமார் சிங்

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹர்தீப் சிங் பூரி மத்திய அமைச்சராக பதவியேற்பு

குஜராத்தை சேர்ந்த மன்ஷுக் மாண்டவ்யா மத்திய அமைச்சராக பதவியேற்பு

6:43 (IST) 7 Jul 2021
பீகாரை சேர்ந்த ராஜ்குமார் சிங் மத்திய அமைச்சராக பதவியேற்பு

பிரதமர் மோடியின் அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற்று வரும் நிலையில், புதிய மத்திய அமைச்சர்கள் பதவியேற்று வருகினறனர். அந்த வகையில் தற்போது மத்திய அமைச்சராக பீகாரை சேர்ந்த ராஜ்குமார் சிங் பதவியேற்றார்.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹர்தீப் சிங் பூரி மத்திய அமைச்சராக பதவியேற்பு

குஜராத்தை சேர்ந்த மன்ஷுக் மாண்டவ்யா மத்திய அமைச்சராக பதவியேற்பு

6:38 (IST) 7 Jul 2021
பிரதமர் மோடி அமைச்சரவை விரிவாக்கம்: மத்திய அமைச்சர்கள் பதவியேற்பு

பிரதமர் மோடி அமைச்சரவை விரிவாக்கம் செய்வதால், புதிய மத்திய அமைச்சர்கள் பதவியேற்று வருகிறார்கள்.

* நாராயண் டாட்டூ ரானே மத்திய அமைச்சராக பதவியேற்பு

* சர்பானந்த சோனோவால் மத்திய அமைச்சராக பதவியேற்பு

* வீரேந்திர குமார் மத்திய அமைச்சராக பதவியேற்பு

*மத்திய அமைச்சராக பதவியேற்றார் ஜோதிராதித்ய சிந்தியா

மத்திய அமைச்சராக பதவியேற்றார் ராமச்சந்திர பிரசாத் சிங்

* அஸ்வினி வைஷ்ணவ் மத்திய அமைச்சராக பதவியேற்பு

* பீகாரை சேர்ந்த பசுபதி குமார் பரஸ் மத்திய அமைச்சராக பதவியேற்பு

* மத்திய அமைச்சராக பதவியேற்றார் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த கிரண் ரிஜிஜூ

5:15 (IST) 7 Jul 2021
பிரதமர் மோடி அமைச்சரவை விரிவாக்கம்; மத்திய அமைச்சராகிறார் எல்.முருகன்?

மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் 43 அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் மத்திய அமைச்சராக பதவியேற்க உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

4:47 (IST) 7 Jul 2021
பிரதமர் மோடி மத்திய அமைச்சரவை விரிவாக்கம்; 43 அமைச்சர்கள் இன்று பதவியேற்பு

மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக 43 தலைவர்கள் இன்று மத்திய அமைச்சர்களாக பதவியேற்கிறார்க்ள். இந்த பட்டியலில் பாஜகவின் நாராயண் ரானே, சர்பானந்தா சோனோவால், ஜோதிராதித்ய சிந்தியா, அஜய் பாட், பூபேந்தர் யாதவ், சோபா கரண்ட்லேஜே, சுனிதா டுக்கல், மீனாட்சி லேகி, பாரதி பவார், சாந்தனு தாக்கூர் மற்றும் கபில் பாட்டீல், எல்.ஜே.பி.யைச் சேர்ந்த பசுபதி பரஸ், அப்னா தளத்தின் அனுபிரியா படேல். ஜி கிஷன் ரெட்டி, பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் அனுராக் தாக்கூர் உள்ளிட்ட சில அமைச்சர்களும் பதவியேற்கிறார்கள் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

4:17 (IST) 7 Jul 2021
75% கட்டணங்களை மட்டுமே வசூலிக்க தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

2020-2021 கல்வியாண்டிற்கான கல்விக் கட்டணத்தில் 75% சதவீதம் மட்டுமே வசூலிக்க தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் 30ம் தேதிக்குள் 40% கட்டணத்தையும் நேரடி வகுப்புகள் தொடங்கிய 2 மாதத்தில் மீதம் 35% கட்டணத்தையும் வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

4:02 (IST) 7 Jul 2021
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க மேலும் 6 மாதம் நீட்டிக்க வேதாந்தா நிறுவனம் மனு தாக்கல்!

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அளித்த அனுமதியை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் புதிய இடைக்கால மனுவை தாக்கல் செய்தது வேதாந்தா நிறுவனம்.

3:27 (IST) 7 Jul 2021
மத்திய அமைச்சர்கள் 12 பேர் ராஜினாமா!

இன்று மாலை மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ராஜினாமா உட்பட 12 அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

3:22 (IST) 7 Jul 2021
‘மதுரையில் எய்ம்ஸ் ஒத்துழைப்பு வழங்க தயார்’ – உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு

“மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு அனைத்து விதமான ஒத்துழைப்பையும் வழங்க தயாராக உள்ளோம்” என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசுத்தரப்பில் பதில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

3:00 (IST) 7 Jul 2021
9 மத்திய அமைச்சர்கள் ராஜினாமா

இன்று மாலை மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ராஜினாமா உட்பட 9 அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

2:40 (IST) 7 Jul 2021
‘பாஜக மீது அதிமுக நம்பிக்கை வைத்துள்ளது’ – ஓபிஎஸ்

பாஜகவால் தான் அதிமுக தேர்தலில் தோல்வி அடைந்த‌து என்ற சிவி.சண்முகத்தின் கருத்து சர்ச்சையான நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “பாஜக மீதும், பிரதமர் மோடி மீதும் அதிமுக முழு நம்பிக்கை வைத்துள்ளது. பாஜக உடனான கூட்டணி தொடரும்; அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

1:56 (IST) 7 Jul 2021
தேர்தல் தோல்விக்கு யார் காரணம் சர்ச்சை – ஜெயக்குமார் விளக்கம்

சி.வி. சண்முகம் உட்கட்சி கூட்டத்தில் பேசியுள்ளார். வெளிப்படையாக கருத்து தெரிவிக்கவில்லை. தேர்தல் தோல்வி தொடர்பான சர்ச்சையில் கட்சி தலைமை உரிய முடிவெடுக்கும். உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்குப் பிறகே கூட்டணி கட்சி பற்றி தெரியும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

1:45 (IST) 7 Jul 2021
மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் ராஜினாமா

மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் ராஜினாமா செய்துள்ளார். மேலும், மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், சதானந்த கவுடா, தேபஸ்ரீ சவுத்திரி ஆகியோர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

1:44 (IST) 7 Jul 2021
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வேலூர், ராணிப்பேட்டை, விருதுநகர், மதுரை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய ஏழு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்றும், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1:32 (IST) 7 Jul 2021
திமுக-வில் இணைகிறார் மகேந்திரன்

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய மகேந்திரன், நாளை மாலை, திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக வில் இணைகிறார். முதற்கட்டமாக மகேந்திரன் உட்பட 75 பேர் திமுகவில் இணைய உள்ளனர்

1:25 (IST) 7 Jul 2021
முதல்வர் பதவி என்பது பதவி அல்ல; பொறுப்பு – ஸ்டாலின் பதிவு

பதவி என்பது பொறுப்பு; பொறுப்போடு மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என கலைஞர் அடிக்கடி சொல்வார். முதல்வர் பதவியை, பதவியாக கருதாமல் பொறுப்பாக கருதி என் பயணம் தொடரும் என கருணாநிதி இல்லத்தில் உள்ள குறிப்பேட்டில் முதல்வர் ஸ்டாலின் பதிவு செய்துள்ளார்.

1:15 (IST) 7 Jul 2021
தரமற்ற சாலைகள் – நெடுஞ்சாலைத்துறையில் 3 பொறியாளர்கள் பணியிடை நீக்கம்

தரமற்ற சாலைகள் போடப்பட்டதாக நெடுஞ்சாலைத்துறையில் 3 பொறியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அந்த பணியை மேற்கொண்ட நிறுவனத்தின் ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

1:02 (IST) 7 Jul 2021
குற்றப்பத்திரிகைகளுக்கு 7 நாட்களுக்குள் ஒப்புதல் வழங்க வேண்டும்

குற்றப்பத்திரிகைகளுக்கு அரசு வழக்கறிஞர்கள் அல்லது குற்ற வழக்கு இயக்குனரக அதிகாரிகள் 7 நாட்களுக்குள் ஒப்புதல் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

12:38 (IST) 7 Jul 2021
ஒளிப்பதிவு திருத்த சட்டத்தை ஆதரிப்பதாக பரவும் தகவலில் உண்மையில்லை- தங்கர் பச்சான்

ஒளிப்பதிவு திருத்த சட்டத்தை ஆதரிப்பதாக பரவும் தகவலில் உண்மையில்லை. நான் ஆதரிக்கவில்லை. சமூக வலைதளங்களில் என் பெயரில் அவதூறு பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயக்குனர் தங்கர் பச்சான் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

12:14 (IST) 7 Jul 2021
பாலியல் தொல்லை – பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் கைது

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்ததாக திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் பால் சந்திரமோகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

11:58 (IST) 7 Jul 2021
மமதா பானர்ஜிக்கு ரூ. 5 லட்சம் அபராதம்

நீதிபதியின் நேர்மையை சந்தேகிக்கும் வகையில் மனுதாக்கல் செய்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது கொல்கத்தா உயர் நீதிமன்றம். சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் சுவேந்து அதிகாரியை எதிர்த்து போட்டியிட்ட மமதா நந்திகிராமில் தோல்வி அடைந்தார். சுவேந்துவின் வெற்றியை எதிர்த்து தொடுத்த வழக்கை நீதிபதி கௌசிக் சந்தா விசாரிக்க கூடாது என்று மனுதாக்கல் செய்திருந்தார் மமதா.

11:54 (IST) 7 Jul 2021
மேகதாது விவகாரம் – நீர்வளத்துறை அமைச்சர் கருத்து

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சி சட்டப்படி தடுக்கப்படும். எக்காரணம் கொண்டும் மேகதாது அணை திட்டம் நிறுத்தப்படும் பேச்சுவார்த்தைக்கு இடமே இல்லை என்று எடியூரப்பா நேற்று கூறியிருந்த நிலையில் பதில் அளித்துள்ள்ளார் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.

11:31 (IST) 7 Jul 2021
தங்க விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 40 குறைந்துள்ளது. தற்போது சவரன் ₹36,120க்கும், கிராம் ₹4,515க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

11:06 (IST) 7 Jul 2021
படையெடுத்த சுற்றுலாப் பயணிகள் – பூங்காக்களை மூடிய நிர்வாகம்

கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களுக்கு செல்ல இ-பாஸ் கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்ட நிலையில் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். இதனை அடுத்து பூங்காக்களை மூடி உத்தரவிட்டுள்ளது மாவட்ட நிர்வாகம்.

11:04 (IST) 7 Jul 2021
சிறுபான்மையினர் ஆணையத்துக்கு புத்துயிர் ஊட்டியுள்ளார் முதல்வர்

சிறுபான்மையினர் ஆணையத்துக்கு புத்துயிர் ஊட்டியுள்ளார் முதல்வர் முக ஸ்டாலின். சிறுபான்மையினர் உரிமை மற்றும் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பீட்டர் அல்போன்ஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

10:48 (IST) 7 Jul 2021
மணிகண்டனுக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2 வாரங்களுக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் பாஸ்போர்ட்டை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவு

10:17 (IST) 7 Jul 2021
100% தடுப்பூசி செலுத்தப்பட்ட கிராமம் – பாராட்டு சான்று வழங்கிய முதல்வர்

தமிழகத்தில் 100% கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட காட்டூர் கிராமத்தின் ஊராட்சி தலைவர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்

10:15 (IST) 7 Jul 2021
கொரோனா நிலவரம்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43,733 ஆக பதிவாகியுள்ளது. 47,240 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்தமாக 930 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

9:33 (IST) 7 Jul 2021
பேருகால அவசர சிகிச்சை பிரிவை திறந்து வைத்தார் முதல்வர்

திருவாரூர் மாவட்டம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த பேருகால அவசர சிகிச்சை பிரிவு மற்றும் சிசு சிகிச்சைக்கான புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார் முதல்வர் முக ஸ்டாலின்.

9:20 (IST) 7 Jul 2021
திமுகவிற்கும் அதிமுகவிற்கும் இடையேயான வாக்கு வேறுபாடு என்பது வெறும் 3%

அதிமுக வாக்கு சதவீதம் நாடாளுமன்றத் தேர்தலை காட்டிலும் சட்டமன்ற தேர்தலில் உயர்வு என்று முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அறிவித்துள்ளார். திமுகவிற்கும் அதிமுகவிற்கும் இடையேயான வாக்கு வேறுபாடு என்பது வெறும் 3% தான் என்றும் அவர் பேச்சு.

9:04 (IST) 7 Jul 2021
அணைக்கரை பாலத்தில் பேருந்து போக்குவரத்து

மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை திருவிடைமருதூர் அருகே உள்ள அணைக்கரை பாலத்தில் இன்று முதல் பேருந்து போக்குவரத்து துவங்க உள்ளது. கும்பகோணம், அணைக்கரையில் கொள்ளிடம் பிரிந்து செல்லும் பகுதியில் அமைந்துள்ள இந்த பாலத்தில் ஏற்பட்ட விரிசல்கள் காரணமாக கனரக போக்குவரத்து மற்றும் பேருந்து போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

9:01 (IST) 7 Jul 2021
ஸ்டான் சுவாமி மீது பொய்யாக வழக்கு பதிந்தோர் மீது நடவடிக்கை

ஸ்டான் சுவாமி மீது பொய்யாக வழக்கு பதிந்தோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குடியரசு தலைவருக்கு கூட்டாக எதிர்க்கட்சி தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். பீமா கோரேகான் கலவரம் தொடர்பாக பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் வைக்கப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Web Title: Tamil news live today weather updates sports news corona cases dmk admk

Next Story
பிளவுபட்ட அதிமுக-வை இணைக்க முயற்சி… நாளை மறுநாள் இரு அணிகளும் பேச்சுவார்த்தை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com