Advertisment

Tamil News Live Update: விஜய் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியுள்ளார்: நடிகர் ரஜினிகாந்த்

Tamil News Live Updates-31.10.2024- இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rajinikanth thanks well wishers and political leader for wishing him speedy recovery Tamil News

பெட்ரோல் டீசல் விலை நிலவரம்: இந்தியாவில் கடந்த 227 நாட்களாக மாற்றம் இல்லாத பெட்ரோல் டீசல் விலை 228-வது நாளாக இன்றும் மாற்றம் இல்லாமல், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.75-க்கும், டீசல் விலை ரூ92.34-க்கும், கேஸ் விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்

3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீரிருப்பு 2463 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீரிருப்பு 100 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீரிருப்பு 312 மில்லியன் கன அடியாக உள்ளது.

  • Oct 31, 2024 10:27 IST
    ரூ.60 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் 

    சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்துள்ள. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 59,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமிற்கு 15 ரூபாய் உயர்ந்துள்ளது.



  • Oct 31, 2024 10:25 IST
    த.வெ.க மாநாடு வெற்றி: நடிகர் விஜய்க்கு ரஜினிகாந்த் வாழ்த்து

    நடிகர் விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.



  • Oct 31, 2024 09:38 IST
    சென்ரலில் இருந்து போடி சென்ற ரயிலில் என்ன நடந்தது?

    சென்னை சென்ட்ரலில் இருந்து போடிநாயக்கனூர் செல்லும் பயணிகள் ரயில் நேற்றிரவு 10.30 மணியளவில் புறப்பட்டது. இன்று காலை 7.50 மணியளவில் மதுரை அருகே சென்றபோது எஞ்சினுக்கு அடுத்த பெட்டியின் சக்கரம் கழன்றுள்ளது. இதனால் உடனடியாக  ரயில் நிறுத்தப்பட்டது.
    விபத்துக்குள்ளான ரயிலில் பயணித்த பயணிகள் உடனடியாக மாற்று ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர். மதுரை ரயில் நிலையத்தில் 5வது நடைமேடையில் இந்த ரயில் விபத்துக்குள்ளாகி நிற்பதால் சென்னையில் இருந்து வரும் மற்ற சிறப்பு ரயில்களின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
    இதனால் அவ்வழியாக செல்லும் ரயில்களை வேறு தடம் வழியாக மாற்ற ரயில்வே அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். கழன்ற சக்கரத்தை மீண்டும் பொருத்தும் பணியில் ரயில்வே பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.



  • Oct 31, 2024 09:13 IST
    காற்றின் தரக்குறியீடு மோசம்: தமிழ்நாட்டில் ஆலந்தூர் முதலிடம்

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிப்பதால், சென்னையில் 3 பகுதிகளில் காற்றின் தரக்குறியீடு மோசமாகியுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னை ஆலந்தூரில், தரக்குறியீடு 248 ஆகவும், குமிடிப்பூண்டி, அருகம்பாக்கம் ஆகிய பகுதிகளில் 200-க்கு மேலும் பதிவாகியுள்ளது.



  • Oct 31, 2024 09:11 IST
    தீபாவளி பண்டிகைக்காக 5.76 லட்சம் பேர் தங்களது சொந்த ஊருக்கு சென்றதாக தகவல்

    தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து, கடந்த 3 நாட்களில் 5.76 லட்சம் பேர் தங்களது சொந்த ஊருக்கு பயணமாகியுள்ளனர். 10784 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது,



  • Oct 31, 2024 09:09 IST
    பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து

    நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள். இந்த தெய்வீக தீபத்திருநாளில் அனைவரும் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், வாழ வாழ்த்துகிறேன். மகாலட்சுமி மற்றும் விநாயக பெருமானின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.



  • Oct 31, 2024 09:06 IST
    தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோருக்காக சிறப்பு ரயில் இயக்கம்

    தீபாவளி முடிந்து சென்னை திரும்புவோருக்கு வசதியாக, நவம்பர் 3-ந் தேதி பிற்பகல் 3 மணிக்கு ராமநாதபுரத்தில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் இரவு 11.40 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.



  • Oct 31, 2024 08:59 IST
    தீபாவளி சிறப்பு ரயில்களின் போக்குவரத்து பாதிப்பு

    சென்னை சென்ரலில் இருந்து போடி செல்லும் ரயில் மதுரை அருகே செல்லும்பொது ரயிலின் சக்கரம் கழன்றதால் பாதியில் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக தீபாவளியை ஒட்டி அவ்வழியாக இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.



  • Oct 31, 2024 08:19 IST
    தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் சென்ற பொதுமக்கள்: வெறிச்சோடிய சென்னை

    தீபாவளி கொண்டாட பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர் சென்றதால், சென்னையில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. தீபாவளியை கொண்டாட சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு 13 லட்சம் பேர் பயணமாகியுள்ளளது. இதனால் அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஜி.எஸ்.டி சாலை உள்ளிட்ட பிரதான சாலைகள் வெறிச்சோடின.



  • Oct 31, 2024 07:37 IST
    சென்னையில் 3 இடங்களில் காற்றின் தரக்குறியீடு மோசமாக உள்ளதாக தகவல்

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிக்கப்பட்டு வரும் நிலையில், சென்னையில் 3 இடங்களில் காற்றின் தரக்குறியீடு மோசமான நிலையில் உள்ளதாக, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது, இதில் காலை 7 மணி நிலவரப்படி மணலியில் 254, அருகம்பாக்கத்தில் 210, பெருங்குடியில் 201-ஆக காற்றின் தரக்குறியீடு உள்ளது.



  • Oct 31, 2024 07:34 IST
    அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், செங்கல்பட்டு, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில், அடுத்த 3 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



  • Oct 31, 2024 07:32 IST
    பரமக்குடி எஸ்.ஐ மின்சாரம் தாக்கி பலி

    தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பரமக்குடி எஸ்.ஐ.சரவணன், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். 



Tamil News Live Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment