பெட்ரோல் டீசல் விலை நிலவரம்: இந்தியாவில் கடந்த 228 நாட்களாக மாற்றம் இல்லாத பெட்ரோல் டீசல் விலை 229-வது நாளாக இன்றும் மாற்றம் இல்லாமல், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.75-க்கும், டீசல் விலை ரூ92.34-க்கும், கேஸ் விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்: 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர்இருப்பு 2453 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து 172 கனஅடியில் இருந்து 126 கன அடியாக சரிவு. சென்னை குடிநீருக்காக 184 கனஅடி நீர் வெளியேற்றம்.
1081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 94 மில்லியன் கனஅடியாக உள்ளது.புழல் ஏரிக்கு 60 கன அடி நீர் அனுப்பப்பட்டு வருகிறது.
500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 312 மில்லியன் கனஅடியாக உள்ளது.
-
Nov 02, 2024 05:04 ISTதமிழகத்தில் முத்திரைத் தாள் கட்டணம் உயர்வு - இ.பி.எஸ் கண்டனம்
அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “பத்திரப்பதிவுத் துறையின் 20 வகையான சேவைகளுக்கு முத்திரைத்தாள் கட்டணத்தை தி.மு.க அரசு உயர்த்தியுள்ளதாக செய்திகள் வருகின்றன. சொத்து என்ற சாமானியனின் கனவை சாத்தியப்படுத்த உறுதுணையாக இருக்க வேண்டிய அரசே முத்திரைத்தாள் கட்டண உயர்வு மூலம் முட்டுக்கட்டைப் போடுவது கடும் கண்டனத்திற்கு உரியது.” என்று கூறியுள்ளார்.
-
Nov 02, 2024 04:59 ISTதமிழ்த் தேசியமும் திராவிடமும் ஒன்றா ப்ரோ? விஜய்க்கு சீமான் கேள்வி
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: “திராவிடம் என்பது வேறும் தமிழ்த் தேசியம் என்பது வேறு; எப்படி இரண்டும் ஒன்றாகும். எங்கள் லட்சியத்திற்கு எதிராகப் பெற்ற தகப்பனே வந்தாலும் எதிரி எதிரிதான், அதில் தம்பியும் கிடையாது, அண்ணனும் கிடையாது. 2026-ல் என் ஆட்டத்தை யாராலும் சமாளிக்க முடியாது; ப்ரோ இது ட்ரைலர்தான், மெயின் பிக்சர் எப்போது வரும் என்றால் அடுத்து உங்கள் பம் பார்த்த பிறகு வரும்” என்று கூறியுள்ளார்.
-
Nov 01, 2024 20:26 ISTசென்னைக்கு திரும்பி வர நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள் சென்னைக்கு திரும்ப வசதியாக நாளை (நவம்பர் 2) முதல் நவம்பர் 4-ம் தேதி வரை 12,846 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
-
Nov 01, 2024 19:49 ISTசென்னையில் 213.61 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம் - மாநகராட்சி அறிவிப்பு
தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் முடிந்த நிலையில், சென்னையில் இன்று (நவம்பர் 1) மாலை 4 மணி வரை பட்டாசுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
Nov 01, 2024 19:41 ISTதீபாவளி பண்டிகை நாளில் வளசரவாக்கத்தில் அதிக காற்று மாசு அதிகம் - மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்
தீபாவளியன்று அதிகபட்சமாக சென்னை வளசரவாக்கத்தில் 287 என்ற அளவில் காற்றின் தரம் மோசமாக இருந்ததாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
குறைந்தபட்சமாக திருவொற்றியூரில் 150 என்ற அளவில் காற்று மாசு பதிவாகி உள்ளது. தீபாவளி நாளன்று காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை கண்டறியப்பட்ட காற்று மாசின் தரவுகள் வெளியாகி உள்ளது. காற்று மாசு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெகுவாக குறைந்துள்ளது.
-
Nov 01, 2024 18:57 ISTதீபாவளி: சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் மூலம் 5.76 லட்சம் பேர் பயணம்
தீபாவளியை ஒட்டி சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம் 5.76 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். கடந்த 28ம் தேதியில் இருந்து 30ம் தேதி வரை 10,784 பேருந்துகள் இயக்கப்பட்டன.
-
Nov 01, 2024 18:04 ISTநவ.7 முதல் 11 வரை மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வரும் 7 முதல் 11 ஆம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நவம்பர் முதல் வாரத்தில் தெற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது. காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு பகுதியாக மாறி, நவம்பர் 2வது வாரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, 7 முதல் 11ஆம் தேதி வரை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு என்றும் கூறப்பட்டுள்ளது.
-
Nov 01, 2024 17:29 IST32 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
இன்று இரவு 7 மணி வரை சென்னை உட்பட 32 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திருப்பூர், தேனி, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு என்றும் தெரிவித்துள்ளது.
-
Nov 01, 2024 16:39 ISTதுர்நாற்றம் வீசும் நெல்பேட்டை
மதுரை வைகை ஆற்றை ஒட்டிய நெல்பேட்டை பகுதிகளில் ஆடு, மாடு இறைச்சி கடைகள் உள்ளன. அங்கிருக்கும் கழிவுகளை வைகை ஆற்று கரையோரம் கொட்டப்பட்டு வருவதாக தெரிகிறது. இறைச்சி கழிவுகள் மலைபோல் குவிந்துகிடப்பதால் மழைநீர் இறைச்சிகழிவுகளோடு சேர்ந்து குடல்கள், எலும்புகள், சேர்ந்து முகம் சுளிக்க வைக்கும் துர்நாற்றம் வீசுவதாக கூறப்படுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, இறைச்சி கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
Nov 01, 2024 16:10 IST"வைகை ஆற்றை தூய்மையாக வைத்திருக்க வேண்டாமா?" - ஐகோர்ட் நீதிபதி கேள்வி
"குடிநீருக்கு பயன்படும் வைகை ஆற்று நீரை மாசு படாமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டாமா?" என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
"வைகை ஆற்றை தூய்மையாக வைத்திருக்க வேண்டாமா?. குப்பை கொட்டுகின்றனர், இதை நானே நேரில் பார்த்தேன். நகர் பகுதியில் வைகை ஆற்றில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும்" என்றும் குறிப்பிட்டு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
Nov 01, 2024 16:06 ISTராமநாதபுரம்: ஒரு மணி நேரம் கொட்டித் தீர்த்த கனமழை
ராமநாதபுரத்தில் சுமார் ஒரு மணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், மழைநீர் பேருந்து நிலையத்தில் குளம்போல் தேங்கி நிற்கிறது. சாலைகளிலும் தண்ணீர் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளார்.
ராமநாதபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளான அரண்மனை, சூரங்கோட்டை, பாரதி நகரில் கனமழை பெய்தது.
-
Nov 01, 2024 16:02 ISTநியூசிலாந்து 235 ரன்களுக்கு ஆல் அவுட்
இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 235 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக மிட்செல் 82 ரன்கள், வில் யங் 71 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் ஜடேஜா 5, வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
-
Nov 01, 2024 16:00 ISTபுறநகர் ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கம்
நாளை (நவ.02) புறநகர் ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - சூளூர்பேட்டை, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கங்களில் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும் என அறித்துள்ளது.
-
Nov 01, 2024 14:32 ISTதமிழ்நாடு தினம்– த.வெ.க தலைவர் விஜய் வாழ்த்து
எல்லை போராளிகளை நினைவுகூறும் விதமாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்"தமிழர்களுக்கு என்று ஒரு தனி மாநிலம் பிறந்த இந்த நாளை வரலாற்று நினைவுகளுடன் தமிழ்நாடு தினமாகப் போற்றி மகிழ்வோம்" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், "தமிழர் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கப் போராட்டம் நடத்திய எல்லைப் போராளிகளின் தியாகங்களை இன்னாளில் நினைவு கூர்வோம்" எனவும் தெரிவித்துள்ளார்.
-
Nov 01, 2024 14:11 IST156.48 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்
சென்னையில் நேற்று முதல் இன்று நண்பகல் வரை 156.48 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றபட்டதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
Nov 01, 2024 13:56 IST2 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு
திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 2 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நீலகிரி, கோவை உள்ளிட்ட 25 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Nov 01, 2024 13:32 ISTத.வெ.க மாநாட்டில் விஜய் பேச்சு; இந்தியா கூட்டணியில் எந்த சலனமும் இல்லை - செல்வப்பெருந்தகை
விஜயின் அரசியல் பிரவேசம், இந்தியா கூட்டணியை மேலும் வலுவடையச் செய்யும். த.வெ.க மாநாட்டின் விஜய் பேச்சால் இந்தியா கூட்டணியில் எந்த சலனமும் இல்லை. இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. மக்கள் தரும் முடிவை பொறுத்து ஆட்சி அதிகாரப் பகிர்வு குறித்து பரிசீலிக்கப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்
-
Nov 01, 2024 13:22 ISTபழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
பழைய குற்றால அருவியில் சீரான நீர்வரத்து இருப்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பழைய குற்றால அருவியில் உற்சாக குளியல் போட்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர் விடுமுறை என்பதால், பழைய குற்றால அருவியில் கூட்டம் அதிகமாகியுள்ளது. இதனால் அருவி பகுதியில் ஆங்காங்கே காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
-
Nov 01, 2024 13:08 ISTடாஸ்மாக் கடைகளில் மதுவை கூடுதல் விலைக்கு விற்றால் சஸ்பெண்ட் - டாஸ்மாக் நிர்வாகம்
டாஸ்மாக் கடைகளில் மதுவை கூடுதல் விலைக்கு விற்றால் மேற்பார்வையாளர் உள்பட கடையில் பணியாற்றும் அனைவரும் பணியிடைநீக்கம் செய்யப்படுவீர்கள் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது
-
Nov 01, 2024 13:04 ISTமதுரையில் வைகை கரையோரம் இறைச்சி கழிவுகளை கொட்டிய 5 கடைகளுக்கு தலா ரூ10000 அபராதம்
மதுரை நெல்பேட்டை வைகை கரையோரம் இறைச்சி கழிவுகளை கொட்டிய 5 கடைகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இறைச்சி கழிவுகளை சாலை ஓரத்தில் கொட்டினால் கடைக்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இறைச்சி கழிவுகளை மதுரை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். மதுரை மாநகராட்சி நிர்வாகம் வைகை கரையோரம் 38 கேமராக்கள் பொருத்தி கண்காணித்து வருகிறது
-
Nov 01, 2024 12:42 ISTகமலா ஹாரிஸ் தீபாவளி வாழ்த்து
உலகம் முழுவதும் உள்ள 1 பில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுடன் நாங்களும் தீப ஒளியை ஏற்றி, தீமைக்கு எதிராக நன்மைக்கான போராட்டத்தையும், அறியாமைக்கு எதிரான அறிவையும், இருளுக்கு எதிரான ஒளியையும் கொண்டாடுகிறோம் என அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்
-
Nov 01, 2024 12:22 ISTசிவகங்கையில் மின் வயர் அறுந்து விழுந்து சிறுவன் மரணம்
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே மின் வயர் அறுந்து விழுந்து சிறுவன் உயிரிழந்தான். மின்கம்பத்தின் கீழ் நண்பர்களோடு பட்டாசு வெடித்துக் கொண்டிருந்த போது உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. மின்வாரிய அதிகாரிகளின் கவனக் குறைவால் சிறுவன் உயிர் பறிபோனதாக பெரும்பச்சேரி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மின்கம்பத்தை மாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரும்பச்சேரி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
-
Nov 01, 2024 11:58 ISTதிருப்பூர் மாநகராட்சி பகுதியில் 80க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 80க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. ஜம்மனை ஓடைக்கரை உடைந்து, குடியிருப்பு பகுதியை தண்ணீர் சூழ்ந்தது. வீடுகளில் இருந்த மின்சாதன பொருட்கள் நீரில் நனைந்து வீணாகிவிட்டதாக மக்கள் வேதனை தெரிவித்தனர். மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து நிற்பதால் துர்நாற்றம் வீசுவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
-
Nov 01, 2024 11:46 ISTதீபாவளி விடுமுறை; தேவிரம்மா மலை கோயிலில் ஆயிரக்கணக்கானோர் சாமி தரிசனம்
தீபாவளி விடுமுறையை ஒட்டி சிக்மங்களூருவில் உள்ள தேவிரம்மா மலை கோயிலில் சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.
VIDEO | Karnataka: Several injured as thousands of devotees throng Deviramma Hill Temple in Chikkamagaluru. More details are awaited.
— Press Trust of India (@PTI_News) November 1, 2024
(Source: Third Party) pic.twitter.com/fys4psJrPl -
Nov 01, 2024 11:44 ISTபொதிகை விரைவு ரயிலை மீண்டும் கவிழ்க்க சதியா?
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் பொதிகை விரைவு ரயிலை மீண்டும் கவிழ்க்க சதி நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தண்டவாளத்தில் 10கிலோ எடை கொண்ட கல் வைக்கப்பட்டது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்றைய தினம் செங்கோட்டையில் இருந்து சென்னை வந்த பொதிகை விரைவு ரயில் போகநல்லூர் பகுதியில் ரயில் சென்ற போது தண்டவாளம் நடுவே சுமார் 10 கிலோ எடை கொண்ட பெரிய கல் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் ரயிலை நிறுத்தி தண்டவாளத்தில் இருந்த கல்லை ரயில் ஓட்டுநர் அப்புறப்படுத்தினார்
-
Nov 01, 2024 10:41 ISTகுற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை
குற்றாலம் மெயின் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்குதொடர்ச்சி மலையில் பெய்யும் கனமழை காரணமாக அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அனைத்து அருவிகளிலும் கண்காணிப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்
-
Nov 01, 2024 10:39 ISTஎல்லைப் போராட்டத் தியாகிகள் நாளில் போற்றி வணங்குகிறேன்: மு.க.ஸ்டாலின்
தெற்கிலும் வடக்கிலும் பல இடங்களில் போராடி தமிழ்நாட்டின் எல்லையைக் காத்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்றும் நாள், நவம்பர் 1. தமிழர் வாழும், தமிழ் பேசப்படும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைப்பதற்காகப் போராடிய அனைவரையும் எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளில் போற்றி வணங்குகிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
-
Nov 01, 2024 10:29 ISTஉளுந்தூர்பேட்டையில் இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட பட்டாசுகள் வெடித்து இளைஞர் மரணம்
உளுந்தூர்பேட்டை அருகே எறையூரில் இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட பட்டாசுகள் வெடித்து இளைஞர் உயிரிழந்தார். வாகனத்தில் இருந்த பட்டாசுகள் மீது, பட்டாசு ஒன்று பறந்து வந்து விழுந்ததில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் எறையூர் கிராமத்தை சேர்ந்த 22 வயதான டேவிட் வில்சன் என்ற இளைஞர் மரணமடைந்தார், மேலும் 2 இளைஞர்கள் படுகாயம் அடைந்தனர். பட்டாசு விபத்து குறித்து எலவனாசூர்கோட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
-
Nov 01, 2024 10:27 ISTசேலம் அருகே போதையில் வீட்டை சூறையாடிய இளைஞர்கள்
சேலம் அருகே 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போதையில் ஒரு வீட்டின் மீது நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் காயம் அடைந்தனர்
-
Nov 01, 2024 10:26 ISTதள்ளுபடி விற்பனை; ஈரோட்டு ஜவுளி கடைகளில் மக்கள் கூட்டம்
தீபாவளி பண்டிகை நேற்று முடிந்துவிட்ட நிலையிலும், ஈரோட்டில் ஜவுளி கடைகளில் குறைந்த விலைக்கு ஆடைகள் விற்பனை செய்யப்படுவதால் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது
-
Nov 01, 2024 09:48 ISTகோவையில் கனமழை: குட்டையில் ஏற்பட்ட உடைப்பால் பொதுமக்கள் அச்சம்
கோவையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் குளம், குட்டைகள் நிரம்பி வரும் நிலையில், சோமையம்பாளையம் குட்டையில் மதகு அருகே உடைப்பு ஏற்பட்டு நீர் வெளியேறுகிறது. இதே நிலை நீடித்தால் குட்டையில் உள்ள உடைப்பு அதிகமாகி, தரைபாலமும் உடையும் அபாயம் உள்ளதாக மக்கள் அச்சமடைந்துள்ளனர். போர்க்கால நடவடிக்கையாக குட்டையில் இருந்து வெளியேறும் நீரை தடுப்பதற்கு மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
-
Nov 01, 2024 09:47 ISTவீட்டின் சுவர் இடிந்து விழுந்து 4 பேர் படுகாயம்
திருப்பூர் மாநகரில் நேற்றிரவு பெய்த கனமழையால், காங்கேயம்பாளையம் பகுதியில் உள்ள வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், தூங்கிக்கொண்டிருந்த 4 பேர் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
Nov 01, 2024 09:46 ISTதிருப்பதி திருமலை தேவஸ்தானத்திற்கு புதிய தலைவர் நியமனம்
திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் புதிய தலைவராக பொல்லினேனி ராஜகோபால் நாயுடுவை நியமித்து ஆந்திரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. கோயிலுக்கு 24 அறங்காவலர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்
-
Nov 01, 2024 08:49 ISTசென்னையில் காற்றின் தரக்குறியீடு 163 என்ற மிதமான அளவில் பதிவு
சென்னையில் 3 இடங்களில் காற்றின் தரக்குறியீடு மோசமாகியுள்ள நிலையில், காலை 7.05 மணி நிலவரப்படி சென்னை பெருங்குடியில் காற்றின் தரக்குறியீடு 237 ஆகவும், வேளச்சேரி - 219, ஆலந்தூர் - 211 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு பதிவாகியுள்ளது. அதேபோல் பெருங்குடி, ஆலந்தூர், வேளச்சேரி ஆகிய 3 இடங்களில் நிலவும் காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது. ராயபுரத்தில் மோசம் என்ற நிலையில் இருந்த காற்றின் தரக் குறியீடு தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியது ஒட்டுமொத்தமாக சென்னையில் காற்றின் தரக்குறியீடு 163 என்ற மிதமான அளவில் பதிவவாகியுள்ளது.
-
Nov 01, 2024 08:47 ISTபட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தீப்பொறியில் 4 குடிசைகள் எரிந்து நாசம்
சென்னை எண்ணுரில் பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தீப்பொறி காரணமாக 4 குடிசைகள் எரிந்து நாசமாகியதாக தகவல் வெளியாகியுள்ளது. எண்ணூர் மார்க்கெட்டில் ஜவுளி வியாபாரம் செய்து வரும் சாகுல் ஹமீதுக்கு | சொந்தமான வீட்டின் மொட்டை மாடியில் குடிசை வீடுகளை அமைத்து, அவரது சகோதரர்கள் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர். நேற்று அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்தபோது எதிர்பாராத விதமாக குடிசை மீது தீப்பொறி பட்டுள்ளது.
-
Nov 01, 2024 08:44 ISTசாலை விபத்தில் உயிரிழந்த பெண் எஸ்.ஐ குடும்பத்திற்கு முதல்வர் நிவாரணம்
கோவை வால்பாறை காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ. கிருஷ்ணவேணி, சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்தினருக்கு ₹25 லட்சம் நிவாரண நிதியாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.
-
Nov 01, 2024 08:11 ISTதமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், செங்கல்பட்டு, நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், கள்ளக்குறிச்சி, ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
Nov 01, 2024 08:09 ISTஇரு பைக்குகள் நேருக்கு நேர் மோதல்: 3 இளைஞர்கள் பரிதாப மரணம்
தேனி மாவட்டம் கம்பம் – கூடலூர் சாலையில் நேற்று இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், 3 இளைஞர்கள் மரணமடைந்த நிலையில், 2 பேர் படுகாயமடைந்தனர். மதுபோதையில் 5 பேரும் பைக்கில் அதிவேகமாக சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
Nov 01, 2024 08:07 ISTஅமரன் படம் பார்த்த முதல்வர் ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் நன்றி
எங்களது அழைப்பை ஏற்று அமரன் திரைப்படத்தைப் பார்த்து ரசித்ததோடு, படத்தையும், அதில் பங்களிப்பாற்றிய கலைஞர்களையும் மனதார பாராட்டிய மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், என் அன்பிற்கினிய நண்பர் திரு. மு.க.ஸ்டாலின்,அவர்களுக்கும், தமிழ்நாட்டின் துணை முதல்வர், என் அன்பு இளவல் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றி. முதல்வரின் பாராட்டு அமரனின் பெரும் வெற்றிக்கு அறிகுறி என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர், அமரன் படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார்.
எங்களது அழைப்பை ஏற்று #Amaran திரைப்படத்தைப் பார்த்து ரசித்ததோடு, படத்தையும், அதில் பங்களிப்பாற்றிய கலைஞர்களையும் மனதார பாராட்டிய மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், என் அன்பிற்கினிய நண்பர் திரு. @mkstalin அவர்களுக்கும், தமிழ்நாட்டின் துணை முதல்வர், என் அன்பு இளவல் திரு. @Udhaystalin… https://t.co/xvh1Af9SrT
— Kamal Haasan (@ikamalhaasan) November 1, 2024 -
Nov 01, 2024 07:34 ISTபுதுக்கோட்டை மாநகரப்பகுதிகளில் 150 டன் குப்பைகள் அகற்றம்
தீபாவளியை ஒட்டி புதுக்கோட்டை மாநகரப்பகுதிகளில் குவிந்த சுமார் 150 டன் குப்பைகள் அகற்றும் பணி நடைபெற்றது. இதில் 50 டன் அளவுக்கு பிளாஸ்டிக் குப்பைகள் என மாநகராட்சி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 400 தூய்மைப் பணியாளர்களுடன் இணைந்து தன்னார்வலர்களும் குப்பையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பிளாஸ்டிக் கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டு அரியலூரில் உள்ள சிமெண்ட் ஆலைக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளன. தூய்மைப் பணிகளை மேயர் திலகவதி செந்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
-
Nov 01, 2024 07:31 ISTதிருப்பூரில் மதுபோதையில் தமிழக - வடமாநில இளைஞர்கள் இடையே மோதல்
திருப்பூரில், மது போதையில் தமிழக இளைஞர்களும், வடமாநில தொழிலாளர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனியார் மதுவிடுதியில், மது அருந்தும்போது இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியுள்ளது.
-
Nov 01, 2024 07:29 ISTகடைசி டெஸ்ட் போட்டி: நியூசிலாந்தை வீழத்துமா இந்தியா?
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று மும்பை வான்கடேவில் தொடங்குகிறது. முதல் 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்து தொடரை பறிகொடுத்த இந்திய அணி இந்த போட்டியில் ஆறுதல் வெற்றியை நோக்கி களமிறங்குகிறது.
-
Nov 01, 2024 07:27 ISTகடந்த 3 தினங்களில் சென்னையில் இருந்து 5.25 லட்சம் பேர் பயணம்
தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 28, 29, 30 ஆகிய 3 நாட்களில், கிளாம்பாக்கத்தில் இருந்து 5.25 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
Nov 01, 2024 07:25 ISTவணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு
சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.61.50 உயர்ந்து ரூ1964.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டுக்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் (ரூ818.50) எந்த மாற்றமும் இல்லை.
-
Nov 01, 2024 07:22 ISTஈரோட்டில் தீபாவளிக்கு அடுத்த நாள் சலுகை: அலைமோதும் மக்கள் கூட்டம்
ஈரோடு: ஆர்.கே.வி (RKV) சாலையில் உள்ள ஜவுளிக் கடைகளில் தீபாவளிக்கு மறுநாளான இன்று சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாலையிலேயே கடை முன் மக்கள் கூட்டம் திரண்டுள்ளது. கடைகள் திறந்ததும் முண்டியடித்துக் கொண்டு துணிகளை வாங்கிச் செல்கின்றனர். கூட்டம் அதிகரித்ததால் அதிகாலை 3 மணிக்கே விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.