Advertisment

Tamil News Updates: உதயநிதி டி-சர்ட் அணிந்தால் அ.தி.மு.க-வுக்கு பயம் ஏன்? -  அமைச்சர் முத்துசாமி

Tamil News Updates: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Muthusamy

பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

Advertisment

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 205 நாட்களாக இந்தியாவில் மாற்றம் இல்லாத பெட்ரோல் டீசல் விலையில் 206-வது நாளாக இன்னும் மாற்றம் இல்லை. அதன்படி, பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ100.75-க்கும், டீசல் ரூ92.34-க்கும், கேஸ், ரூ88.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீரிருப்பு நிலவரம்

3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீரிருப்பு 2061 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீரிருப்பு 62 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீரிருப்பு 300 மில்லியன் கன அடியாக உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

  • Oct 10, 2024 03:12 IST
    உதயநிதி டி-சர்ட் அணிந்தால் அ.தி.மு.க-வுக்கு பயம் ஏன்? -  அமைச்சர் முத்துசாமி

    அமைச்சர் முத்துசாமி, “கட்சி சின்னத்துடன் உதயநிதி டி-சர்ட் அணிந்தால் அ.தி.மு.க ஏன் பயப்படுகிறது? அ.தி.மு.க-வினருக்கு எந்த குற்றமும் தெரியாததால் இதை குற்றமாக சொல்கிறார்கள். மதுவிலக்கு துறையை செந்தில் பாலாஜி சிறப்பாக செய்வார்; பில்லிங் மெஷின் அவர் கொண்டுவந்ததுதான்” என்று கூறினார்.



  • Oct 10, 2024 03:06 IST
    ரத்தன் டாடா மறைவிற்கு அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் இரங்கல் 

    டாடா குழுமத்தின் தற்போதைய தலைவர் நடராஜன் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், "ஒட்டுமொத்த டாடா குடும்பத்தின் சார்பாக, அவரது அன்புக்குரியவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் மிகவும் ஆர்வத்துடன் போராடிய கொள்கைகளை நிலைநிறுத்த பாடுபடும்போது, அவரது மரபு தொடர்ந்து எங்களுக்கு ஊக்கமளிக்கும்," எனக் குறிப்பிட்டுள்ளார்.



  • Oct 10, 2024 03:05 IST
    ரத்தன் டாடா மரணம்; தலைவர்கள், தொழிலதிபர்கள் இரங்கல்

    டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா நீண்ட காலம் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் புதன்கிழமை (அக்டோபர் 09) காலமானார். அவருக்கு வயது 86. 

    தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



  • Oct 09, 2024 20:55 IST
    மயிலாடுதுறை அ.தி.மு.க செயலாளர் போகர் ரவி மீது தி.மு.க-வினர் தாக்குதல்:  இ.பி.எஸ் கண்டனம்

    மயிலாடுதுறை அ.தி.மு.க செயலாளர் போகர் ரவி மீது தாக்குதல் குறித்து, “தி.மு.க அரசில் எதிர்க்கட்சியினர் மீது கொலை வெறித்தாக்குதல்” நடத்தப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.



  • Oct 09, 2024 20:02 IST
    தொழிலதிபர் ரத்தன் டாடா, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்

    தொழிலதிபர் ரத்தன் டாடா, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. வயது மூப்பு காரணமாக வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக நேற்று செய்தி வெளியான நிலையில், மும்பையில் உள்ள அவரது நெருங்கிய வட்டாரங்கள் மூலம் தகவல் வெளியாகி உள்ளது.



  • Oct 09, 2024 19:55 IST
    சென்னை மெட்ரோ பணிகளுக்காக கத்திப்பாரா சந்திப்பில் அக்.11 முதல் 14 வரை போக்குவரத்து மாற்றம் 

    சென்னை மெட்ரோ பணிகளுக்காக கத்திப்பாரா சந்திப்பில் அக்.11 முதல் 14 வரை சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

    கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து போரூர் செல்லும் போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை. அவை வழக்கம் போல் செல்ல அனுமதிக்கப்படுகிறது. 

    போரூரில் இருந்து கத்திப்பாரா மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் பெல் ராணுவ சாலை சந்திப்பிலிருந்து மவுண்ட் பூந்தமல்லி சாலையில் நேராக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

    அதற்கு பதிலாக அவர்கள் மவுண்ட் பூந்தமல்லி சாலை பெல் இராணுவ சாலை சந்திப்பில் புதியதாக அமைந்துள்ள சாலை வழியாக டிபென்ஸ் காலனி 1-வது அவென்யூவில் (வலதுபுறம் திரும்பி) இலகுரக வாகனங்கள் மட்டும் செயிண்ட் தாமஸ் மருத்துவமனை வழியாக பட்ரோடு சென்று அடையலாம்.

    மற்ற வாகனங்கள் கண்டோன்மென்ட் சாலையில் இடது புறம் திரும்பி சுந்தர் நகர் 7-வது குறுக்கு தெரு, தனகோட்டி ராஜா தெரு சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் தெற்கு பகுதி சாலை வழியாக ஒலிம்பியா 100 அடி சாலை சந்திப்பு அடைந்து வாகனங்கள் கத்திப்பாராவை அடைய வலது புறமாகவும், வடபழனியை அடைய இடது புறமாகவும் தங்கள் இலக்குகளை நோக்கி செல்லலாம்.



  • Oct 09, 2024 19:42 IST
    'தமிழக அரசே தொழிலாளர்களை போராட விடு'- சாம்சங் ஊழியர்களுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் ஆதரவு

    இயக்குநர் பா. ரஞ்சித்: “சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்தை மதிக்காமல், தமிழக அரசு தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக நடந்துகொள்வது மிக மோசமான அணுகுமுறை. தொழிலாளர்களை கைது செய்வது அரசியலமைப்பிற்கு முரணனாது; அவர்களை அச்சுறுத்துவதற்காக காவல்துறையை ஒரு கருவியாகப் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது; போராட்டக் களத்தை அரசு அகற்றுவதில் எந்த நியாயமும் இல்லை” என்று கூறியுள்ளார்.



  • Oct 09, 2024 19:39 IST
    வைத்தீஸ்வரன் பேரூராட்சி அலுவலகத்தில் புகுந்து அ.தி.மு.க செயலாளர்கள் மீது தி.மு.க நிர்வாகி தாக்குதல்

    வ்வாய்க்கிழமை நடைபெற்ற அ.தி.மு.க மனித சங்கிலி போராட்டத்தில் பேரூராட்சியில் ஊழல் நடப்பதாக போகர் ரவி பேசியதால், தி.மு.க மாவட்ட பொருளாளரும் பேரூராட்சி தலைவரின் கணவருமான அலெக்ஸாண்டர் மற்றும் அவரது சகோதரரும் பேரூராட்சி துணைத் தலைவருமான அன்புச்செழியன் உட்பட 7 பேர் பேரூராட்சி அலுவலகத்தில் புகுத்து தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.



  • Oct 09, 2024 19:34 IST
    பணியின்போது திருவாரூர் வேளாண் துறை இணை இயக்குநர் மரணம்

    திருவாரூர் வேளாண் துறை இணை இயக்குநர் ஏழுமலை பணியின்போது உடல்நலக் குறைவால் காலமானார். குடவாசல் பகுதியில் நெல் வைதிப்பு பணிகளை ஆய்வு செய்து திரும்பிய நிலையில் ஏழுமலை காலமானார்.



  • Oct 09, 2024 18:15 IST
    குரூப் 4 காலிப் பணியிடங்களில் கூடுதலாக 2,208 இடங்கள் சேர்ப்பு

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களில் கூடுதலாக 2,208 இடங்கள் சேர்ப்பு. கூடுதல் இடங்கள் சேர்க்கப்பட்டதன் மூலம் குரூப் 4  காலிப்பணியிடங்கள் 8,932 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 



  • Oct 09, 2024 18:07 IST
    சாம்சங் தொழிலாளர்களை சந்தித்த திருமா

    சாம்சங் தொழிலாளர்கள் அமைதியாக போராடிய நிலையில் அவர்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. வழக்கை அரசு திரும்ப பெற வேண்டும். சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கம் வைக்க அனுமதிக்காதது அடக்குமுறை. சாம்சங் நிறுவனத்தை எதிர்க்கவில்லை. அதன் அடக்குமுறையையே எதிர்க்கிறோம் என சாம்சங் தொழிலாளர்களை சந்தித்த பின் வி.சி.க தலைவர்  திருமாவளவன் பேட்டி அளித்தார்.  



  • Oct 09, 2024 16:54 IST
    2வது நாளாக கனமழை

    தேனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான அல்லிநகரம், ரத்தினம் நகர், பழனிச்செட்டிபட்டி, கருவேல்நாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 2வது நாளாக கனமழை பெய்து வருகிறது



  • Oct 09, 2024 16:46 IST
    திருப்பதி லட்டு விவகாரம் - சுழலும் சர்ச்சை

    திருப்பதிக்கு வழங்கப்பட்ட நெய்யில் கலப்படம் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. நெய்யில் கலப்படம் இல்லை என்பதற்கான அக்மார்க் சான்று பெற்ற பின்னரே, திருப்பதி தேவஸ்தான போர்டு, ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்திடம் இருந்து நெய் வாங்கியது தெரிய வந்துள்ளது. 



  • Oct 09, 2024 16:46 IST
    குஜராத்தில் தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகம்

    குஜராத் மாநிலம் லோதல் பகுதியில் தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இந்த திட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 



  • Oct 09, 2024 16:24 IST
    தொழிலாளர்கள் போராட்டம் - அரசியல் கட்சியினர் ஆதரவு

    தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் தொழிலாளர்களுக்கு திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். 



  • Oct 09, 2024 16:02 IST
     2024ம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு!

    2024 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு டேவிட் பேக்கர், ஜான் எம். ஜம்பர் மற்றும் டெமிஸ் ஹசாபிஸ் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுளள்து. 

    டேவிட் பேக்கருக்கு கணக்கீட்டு புரத வடிவமைப்பிற்காகவும், டெமிஸ் ஹசாபிஸ் மற்றும் ஜான் எம். ஜம்பர் ஆகியோருக்கு புரத அமைப்பு கணிப்புக்காகவும் வழங்கப்பட்டுள்ளது. 

    இந்த ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் கணினி மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் புரதங்களின் ரகசியங்களை வெளிப்படுத்தியுள்ளனர். ஹசாபிஸ் மற்றும் ஜம்பர் செயற்கை நுண்ணறிவை வெற்றிகரமாகப் பயன்படுத்தி, அறியப்பட்ட அனைத்து புரதங்களின் கட்டமைப்பையும் கணிக்க, பேக்கர் வாழ்க்கையின் கட்டுமானத் தொகுதிகளில் தேர்ச்சி பெறுவது மற்றும் முற்றிலும் புதிய புரதங்களை உருவாக்குவது எப்படி என்பதைக் கற்றுக்கொண்டுள்ளார் 



  • Oct 09, 2024 16:02 IST
     2024ம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு!

    2024 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு டேவிட் பேக்கர், ஜான் எம். ஜம்பர் மற்றும் டெமிஸ் ஹசாபிஸ் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுளள்து. 

    டேவிட் பேக்கருக்கு கணக்கீட்டு புரத வடிவமைப்பிற்காகவும், டெமிஸ் ஹசாபிஸ் மற்றும் ஜான் எம். ஜம்பர் ஆகியோருக்கு புரத அமைப்பு கணிப்புக்காகவும் வழங்கப்பட்டுள்ளது. 

    இந்த ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் கணினி மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் புரதங்களின் ரகசியங்களை வெளிப்படுத்தியுள்ளனர். ஹசாபிஸ் மற்றும் ஜம்பர் செயற்கை நுண்ணறிவை வெற்றிகரமாகப் பயன்படுத்தி, அறியப்பட்ட அனைத்து புரதங்களின் கட்டமைப்பையும் கணிக்க, பேக்கர் வாழ்க்கையின் கட்டுமானத் தொகுதிகளில் தேர்ச்சி பெறுவது மற்றும் முற்றிலும் புதிய புரதங்களை உருவாக்குவது எப்படி என்பதைக் கற்றுக்கொண்டுள்ளார் 



  • Oct 09, 2024 15:59 IST
    மாட்டு வண்டி பந்தயம் - மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு

    மதுரை, முசுண்டகிரிபட்டி கிராமத்தில் மாட்டு வண்டி பந்தயம் நடத்த அனுமதி கோரிய வழக்க்கில், மதுரை மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. 



  • Oct 09, 2024 15:59 IST
    'சாம்சங் ஊழியர்கள் போராட்டம் நடத்த தடையில்லை' - சென்னை உயர்நீதிமன்றம்

    "அமைதியான முறையில் போராட்டம் நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது. நீதிமன்ற உத்தரவின்படி அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்றது" என்று வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத் கூறியுள்ளார். 



  • Oct 09, 2024 15:39 IST
    காங்கிரஸ் தேர்தல் பார்முலா - மோடி பேச்சு 

    "ஹிந்து சமூகத்தை பிளவுபடுத்துவது அதை தங்களின் வெற்றி பார்முலா ஆக மாற்றுவது தான் காங்கிரஸ் அரசியலின் அடிப்படை. வகுப்பு வாதம் மற்றும் ஜாதியின் அடிப்படையிலேயே காங்கிரஸ் கட்சி தேர்தலில் போட்டியிடுகிறது" என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். 

     



  • Oct 09, 2024 15:38 IST
    த.வெ.க மாநாடு - ஐ.ஜி அஸ்ரா கார்க் ஆய்வு 

    த.வெ.க மாநாடு நடைபெற உள்ள இடத்தில் வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் ஆய்வு நடத்தி வருகிறார். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை அவர் வழங்கியுள்ளார்.  



  • Oct 09, 2024 15:35 IST
    பிரெஞ்சு தூதரக அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

    புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனையை தொடர்ந்து பிரெஞ்சு தூதரக அலுவலகத்துக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    புதுச்சேரியில் பிரெஞ்சு துணை தூதரக அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். முழு சோதனைக்கு பிறகே, ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தூதரகத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    ஜிப்மர் மருத்துவமனைக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், இன்று பிரெஞ்சு துணை தூதரக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • Oct 09, 2024 15:31 IST
    கணித ஆசிரியர் மீது 43 மாணவிகள் பாலியல் புகார்

    தஞ்சாவூர்: பாப்பாநாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 43 மாணவிகள் கணித ஆசிரியர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். சைல்டு லைன் அதிகாரிகள் பள்ளிகளில் விசாரணை மேற்கொண்ட நிலையில், தலைமறைவாக உள்ள ஆசிரியர் முத்துக்குமரனை போலீசார் தேடி வருகின்றனர். ஆசிரியர் முத்துக்குமரனை சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளது. 



  • Oct 09, 2024 15:05 IST
    ஆசிரியர்களுக்கு இன்று சம்பளம் விடுவிப்பு - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

    எஸ்.எஸ்.ஏ. ஆசிரியர்களுக்கான சம்பளம் இன்று விடுவிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 



  • Oct 09, 2024 14:24 IST
    அனுமதியின்றி நடந்த ரேக்ளா பந்தயம்; லாரி மோதி மாடு உயிரிழப்பு

    அனுமதியின்றி நடந்த ரேக்ளா பந்தயத்தில் லாரி மீது மாட்டுவண்டி மோதியதில் சம்பவ இடத்திலேயே மாடு உயிரிழந்தது. போலீசார் மாட்டு வண்டியை ஒட்டி சென்ற ராமநாதபுரத்தை சேர்ந்த ஜெயக்குமாரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாட்டை துன்புறுத்துதல், அனுமதியின்றி ரேக்ளா நடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது



  • Oct 09, 2024 14:22 IST
    அன்புமணிக்கு விஜய் பிறந்தநாள் வாழ்த்து

    பா.ம.க தலைவர் அன்புமணிக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்



  • Oct 09, 2024 14:21 IST
    ஆந்திராவில் தன்னை அவமதித்து ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் குறித்து உதயநிதி ஸ்டாலின் கருத்து

    என்னை இழிவு செய்வதாக நினைத்து தங்களின் அரசியல் முதிர்ச்சி இவ்வளவு தான் என்று அம்பலப்பட்டு நிற்பவர்களை பார்த்து பரிதாபம் மட்டுமே வருகிறது என ஆந்திராவில் தன்னை அவமதித்து ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்



  • Oct 09, 2024 13:59 IST
    சாம்சங் தொழிலாளர்களிடம் அடக்குமுறையோடு நடக்கவில்லை - தங்கம் தென்னரசு

    போராடும் சாம்சங் தொழிலாளர்களை விரோதமாக பார்க்கவில்லை. தொழிலாளர்களிடம் அடக்குமுறையோடு நடக்கவில்லை. காவல்துறையோடு மோதலில் ஈடுபட்டவர்கள் தான் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வர அரசு தயாராக உள்ளது என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்



  • Oct 09, 2024 13:42 IST
    சாம்சங் நிறுவனம் வேறு மாநிலத்திற்கு செல்வதாக வெளியாகும் செய்திகள் தவறானவை -தங்கம் தென்னரசு

    சாம்சங் நிறுவனம் வேறு மாநிலத்திற்கு இடம்மாறுவதாக வெளியாகும் செய்திகள் தவறானவை என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்



  • Oct 09, 2024 13:01 IST
    தமிழ்நாட்டில் இன்று முதல் 14-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாட்டில் இன்று முதல் அக்டோபர் 14ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 



  • Oct 09, 2024 12:44 IST
    ரஜினியின் வேட்டையன் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி

    நாளை வெளியாக உள்ள ரஜினியின் வேட்டையன் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. வழக்கமாக 4 காட்சிகள் திரையிடப்படும் நிலையில், கூடுதலாக ஒரு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஞானவேல் இயக்கத்தில் உருவாகி உள்ள வேட்டையன் படத்தில், அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்



  • Oct 09, 2024 12:43 IST
    போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் ஊழியர்கள் கைது

    காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொட்டும் மழையிலும் போராடி வந்த நிலையில், போலீசார் கைது செய்துள்ளனர்



  • Oct 09, 2024 12:16 IST
    சாம்சங் தொழிலாளர்கள் கைது; ஐகோர்ட்டில் அவசர முறையீடு

    தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த, சாம்சங் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது. சி.ஐ.டி.யூ தொழிற்சங்கம் சார்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி ஆஜராகி அவசர ஆட்கொணர்வு வழக்காக விசாரிக்க வலியுறுத்திய நிலையில், பிற்பகலில் விசாரிப்பதாக நீதிபதிகள் பாலாஜி மற்றும் வேல்முருகன் அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது



  • Oct 09, 2024 12:14 IST
    சுதந்திர போராட்ட வீரத் தியாகிகளின் உருவ சிலைகளை திறந்து வைத்த ஸ்டாலின்

    சுதந்திர போராட்ட வீரத் தியாகிகளின் உருவ சிலைகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தென்காசியில் பூலித்தேவன் படைத்தளபதி வெண்ணி காலாடிக்கு சிலை திறக்கப்பட்டுள்ளது. சிவகங்கையில் சுதந்திர போராட்ட வீராங்கனை குயிலிக்கு சிலை திறக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் சுதந்திர போராட்ட வீரர் எத்தலப்பர் நாயக்கருக்கு சிலையுடன் கூடிய அரங்கம் திறக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக சிலைகளை திறந்து வைத்தார்



  • Oct 09, 2024 12:12 IST
    எங்களது கோரிக்கையை அமைச்சர் புரிந்து கொள்ளவில்லை – சி.ஐ.டி.யு

    சங்கத்தை பதிவு செய்வது மட்டுமே எங்கள் பிரச்சினை இல்லை. போலீசாரை வைத்து அச்சுறுத்த பார்க்கிறார்கள். எங்களது கோரிக்கையை அமைச்சர் புரிந்து கொள்ளவில்லை. சாம்சங் ஊழியர்களை நள்ளிரவில் வீடு, வீடாக சென்று கைது செய்வதா? சங்கம் அமைப்பது அடிப்படை உரிமை, அதற்கு அனுமதி மறுப்பது ஏன்? என சி.ஐ.டி.யு கேள்வி எழுப்பியுள்ளது



  • Oct 09, 2024 12:10 IST
    சாம்சங் ஊழியர்கள் நள்ளிரவில் கைது; இ.பி.எஸ் கண்டனம்

    சாம்சங் ஊழியர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். போராட்டங்களை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துவைக்காமல், அடக்குமுறையால் ஒடுக்க முயல்வதா? இதுபோன்ற ஜனநாயக விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை கைவிட வேண்டும். கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் . தமிழக அரசு மீண்டும் தலையிட்டு, உரிய பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சனையை சுமூகமாக தீர்க்க வேண்டும் என இ.பி.எஸ் வலியுறுத்தியுள்ளார்.



  • Oct 09, 2024 12:08 IST
    மாணவர்கள் போராட்டம்; சென்னை மாநில கல்லூரிக்கு இன்று முதல் ஞாயிறு வரை விடுமுறை

    பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் தாக்கப்பட்டு, மாநில கல்லூரியை சேர்ந்த சுந்தர் என்ற மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளதால் சென்னை மாநில கல்லூரிக்கு இன்று முதல் ஞாயிறு வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கலைந்து செல்ல மறுத்து, தரையில் அமர்ந்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்



  • Oct 09, 2024 11:14 IST
    கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தோல் வங்கி திறப்பு

    சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீக்காய சிகிச்சைப் பிரிவில் ₹8.80 கோடி மதிப்பிலான அதிநவீன சிகிச்சை உபகரணங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொக்கி வைத்தார். இங்கு மூளைச்சாவு அடைந்து தோல் தானம் செய்பவர்களின், தோலை சேமித்து வைக்க தோல் வங்கியும் திறக்கப்பட்டுள்ளது



  • Oct 09, 2024 10:40 IST
    புதிதாக 25 தாழ்தள பேருந்து: மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கும் அமைச்சர்

    சென்னை பல்லவன் சாலையில் உள்ள போக்குவரத்து பணிமனையில் நடைபெறும் நிகழ்ச்சியில், புதிதாக 25 தாழ்தள பேருந்துகளை மக்கள் பயன்பாட்டுக்குத் தொடங்கி வைக்கிறார் அமைச்சர் சிவசங்கர்.



  • Oct 09, 2024 09:48 IST
    மாநிலக்கல்லூரி மாணவர் மரணம்: போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

    பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரிகளில் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், மின்சார ரயில் வழித்தடத்திலும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உதவி ஆணையர் தலைமையில் போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் இணைந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில்களில் இறங்கி வரும் மாணவர்களின் அடையாள அட்டைகளும் ஆய்வு செய்ய்ப்பட்டு வருகிறது.இதற்கிடையே, சுந்தர் தாக்கப்பட்ட வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே இவ்வழக்கில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சந்துரு (20), யுவராஜ் (20), ஈஸ்வர் (19), ஹரி பிரசாத் (20) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்



  • Oct 09, 2024 09:07 IST
    மாணவர்கள் மோதலில் படுகாயமடைந்த மாணவன் மரணம்

    சென்னை சென்ரல் ரயில் நிலைய வாசலில் கடந்த 4-ந் தேதி, பச்சையப்பன், மற்றும் மாநில கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் படுகாயமடைந்த மாநில கல்லூரி மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி தற்போது அவர் உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது இரு கல்லூரிகளுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், ரயில் மற்றும் பஸ் போக்குவரத்தில் தீவரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. 



  • Oct 09, 2024 08:28 IST
    மதுபோதையில் பாறாங்கல்லை தூக்கி தண்டவாளத்தில் வைத்த நபர் கைது

    கன்னியாகுமரி: ஆரல்வாய்மொழி பகுதியில் கடந்த 2ம் தேதி ரயில் தண்டவாளத்தில் பாறாங்கல் வைக்கப்பட்ட விவகாரத்தில், தெரிசனங்கோப்பு பகுதியைச் சேர்ந்த நபரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர் மதுபோதையில் பாறாங்கல்லை தண்டவாளத்தில் வைத்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளார்



  • Oct 09, 2024 08:27 IST
    குப்பைகள் கொட்டினால் டிஜிட்டல் முறையில் அபராதம்: சென்னை மாநகராட்சி முயற்சி

    பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டிட கழிவுகளை கொட்டும் நபர்களுக்கு அபராதம் விதிக்கும் முறையை டிஜிட்டல் முறைக்கு மாற்ற சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. போலீஸ் அபராதம் விதிக்கும் கருவி போன்ற டிஜிட்டல் கருவியை சோதனை அடிப்படையில் பயன்படுத்தி வருகிறது. இதற்காக முதற்கட்டமாக 500 கருவிகள் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



  • Oct 09, 2024 08:23 IST
    ஆயுதபூஜை தொடர் விடுமுறை: சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்

    ஆயுதபூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு இன்றும் நாளையும் சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து, 1105பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து 300 பேருந்துகளும், மாவரத்தில் இருந்து 110 பேருந்துகளும், பல்வேறு இடங்களில் இருந்து 200 பேருந்துகளும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Oct 09, 2024 07:55 IST
    சிறுமியை திருமணம் செய்த கூலி தொழிலாளி கைது

    கன்னாகுமரி மாவட்டம் குளத்தூரில், ஏற்கனவே 2 திருமணம் செய்த கூலித்தொழிலாளி, 3-வதாக 14 வயது சிறுமியை திருமணம் செய்ததால், கைது செய்யப்பட்டுள்ளார்.



  • Oct 09, 2024 07:53 IST
    தமிழக அரசின் பண்ணை பசுமை கடைகளில் தக்காளி - வெங்காயம் விற்பனை

    வெங்காயம் தக்காளி விலை உயர்வை சந்தித்து வரும் நிலையில், அவற்றை மகாராஷ்டிராவில் இருந்து இறக்குமதி செய்து பண்ணை பசுமை கடைகளில் தமிழக அரசு விற்பனை செய்கிறது. கடைசிகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ55 வரையும், தக்காளி ஒரு கிலோ ரூ80 வரையும் விற்பைன செய்து வரும் நிலையில், இங்கு வெங்காயம் கிலோ ரூ40-க்கும், தக்காளி ரூ60-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு நபருக்கு 2 கிலோ மட்டுமே வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.



  • Oct 09, 2024 07:32 IST
    ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் வெற்றி: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

    காங்கிரஸ் கட்சிக்கு பெரிய வெற்றியை கொடுத்த காஷ்மீர் மக்களுக்கு வாழ்த்துக்கள். இந்த வெற்றி ஜனநாயகத்திற்கும், இந்தியா கூட்டணிக்கும் கிடைத்த வெற்றி என்று காஷ்மீர் தேர்தலில் வெற்றி பெற்ற, காங்கிஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சிக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 



  • Oct 09, 2024 07:28 IST
    மகளிர் உலககோப்பை டி20: இந்தியா - இலங்கை மோதல்

    மகளிர் டி 20 உலகக்கோப்பை தொடரில், இந்தியா, இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன.  துபாயில் நடைபெறும் போட்டியில், இந்திய அணி தோல்வியடைந்தால் அரை இறுதிக்கான வாய்ப்பு கேள்விக்குறியாகும். ஏற்கனவே 2 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி ஒரு தோல்வி கண்டுள்ள இந்திய அணி இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.



  • Oct 09, 2024 07:25 IST
    சரஸ்வதி பூஜை தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் இயக்கம்

    சரஸ்வதி பூஜை பண்டிகையை முன்னிட்டு,  சென்னை எழும்பூர்கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்கள் இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில்,எழும்பூரில் இருந்து மற்றும் ம் தேதிகளிலும் கன்னியாகுமரியில் இருந்து மற்றும் ம் தேதிகளிலும் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Oct 09, 2024 07:22 IST
    வேன் - கார் நேருக்கு நேர் மோதி விபத்து: 4 பேர் மரணம்

    திருப்பூர் உடுமலைப்பேட்டை அருகே பொலேரோ காரும், டேம்போ டிராவிலர் வேணும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மரணமடைந்த நிலையில், 2 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெம்போ டிராவலரில் பயணித்த 23 பேரில் 12 பேருக்கு காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



Tamilnadu Live News Udpate
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment