Tamil News Updates: தமிழகத்தில் விரைவில் சட்ட மன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த தேர்தலில்,”இரு அணிகளுக்கு இடையில்தான் போட்டி; 3-வது அணியை மக்கள் ஏற்பதில்லை!” என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
டேட்டா கார்டு என கூறி வரும் முதல்வருக்கு கு டாட்டா காட்ட மக்கள் காத்திருக்கின்றனர் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
குமரிக்கடல் பகுதியில் நீடிக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, தூத்துக்குடியில் கனமழை பெய்யும்” என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கனமழை காரணமாக நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு நிவாரணம், காப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி விவகாரத்தில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்ததை தொடர்ந்து “நான் சுட்டிக்காட்டிய பின்னரே பொள்ளாச்சி வழக்கில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், தியேட்டர்களில் ‘ரசிகர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து மாஸ்க் அணிய வேண்டும் என அப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாளை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க மதுரை செல்ல உள்ள திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மதுரையில் நாளை ராகுல் காந்தியை சந்திப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் எல்.முருகன், “அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி குறியது சரியானதுதான். கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயார். பாமகவின் வன்னியர் உள் ஒதுக்கீடு கோரிக்கையில் தமிழக அரசின் முடிவை நாங்கள் ஏற்போம்.” என்று கூறினார்.
தஞ்சை மாவட்டம் திருவையாற்றை அடுத்த வரகூரில் தனியார் பேருந்து பயணிகள் மீது மின்கம்பி உரசியதில் 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தது வேதனையளிக்கிறது. உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலும், அனுதாபங்களும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டரில் இரங்கல் தெரிவித்தார்.
Web Title:Tamil news live update tamil daily update election campaign update
அதிமுக கூட்டத்தில் பேசிய அமைச்சர் பாஸ்கரன் : “காவிரி - குண்டாறு இணைப்பு திட்ட அடிக்கல் நாட்டு விழாவுக்கு பிரதமர் வாஜ்பாயை அழைக்க எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்ல உள்ளார்” என்று பேசியது கூட்டத்தில் கலந்துகொண்டவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
தமிழகத்தில் இன்று 673 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,28,287 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 6,653 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
திருவள்ளுவர் திருநாள் விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. பாவேந்தர் பாரதிதாசன் விருந்து கவிஞர் அறிவுமதிக்கும் தமிழ்த்தென்றல் திருவிக விருது வி.என்.சாமிக்கும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டுக்கான தமிழ்த்தாய் விருது உலக தமிழ்ச் சங்கத்துக்கும் உவேசா விருது கி.ராஜநாராயணனுக்கும் கம்பர் விருது ஹண்டேவுக்கும் சி.பா.ஆதித்தனார் நாளிதழ் விருது தினமணிக்கும் சி.பா.ஆதித்தனார் வார இதழ் விருது கல்கிக்கும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகளை முதல்வர் பழனிசாமி வழங்கி கௌரவிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் திருநாள் விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. 2021ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது முனைவர் வைகைச் செல்வனுக்கும் 2020ம் ஆண்டுக்கான பெரியார் விருது தமிழ்மகன் உசேனுக்கும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அண்ணல் அம்பேத்கர் விருது வரகூர் அருணாச்சலத்துக்கும் பேரறிஞர் அண்ணா விருது அமரர் கடம்பூர் எம்.ஆர். ஜனார்தனனுக்கும் வழங்கப்படுகிறது. காமராஜர் விருது முனைவர் தேவராஜ்ஜுக்கும் மகாகவி பாரதியார் விருது பூவை செங்குட்டுவனுக்கும் வழங்கப்பட உள்ளது.
பள்ளி மாணவர்களை வருகைப் பதிவுக்காக கட்டாயப்படுத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். கொரோனா ஊரடங்கிற்கு பிறகு வரும் 19-ந் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை முன்னதாக அறிவித்தது.
தஞ்சாவூர் பேருந்து விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த விபத்தில் நடராஜன், மாரியம்மாள், கல்யாணராமன், கவிதா 4 பேர் உயிரிழந்தனர். மேலும், விபத்தில் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா 25,000 ரூபாயும் வழங்க உத்தரவிட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே செந்தலையில் இன்று மதியம் லாரியை முந்த முயன்ற தனியார் பேருந்து பள்ளத்தில் பாய்ந்து அருகில் இருந்த மின்கம்பி உரசியதில் 2 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்த சமந்தம் தொடர்பாக டான்ஜெட்கோ தலைவர், தஞ்சை கண்காணிப்பு பொறியாளர் அறிக்கை தாக்கல் செய்ய மாநில உரிமை ஆணையம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது.
புதிய கல்விக் கொள்கை-2020ன் அமலாக்கம் குறித்து, மத்திய கல்வித்துறை மூத்த அதிகாரிகளுடன், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’ இன்று ஆய்வு செய்தார். மாணவர்கள் பள்ளி கல்வியிலிருந்து, உயர் கல்விக்கு சுமூகமாக மாறுவதற்கான வசதிகளை செய்ய, கல்வி அமைச்சகத்தின் உயர் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் துறைகளுக்கிடையே தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான பணிக் குழுவை அமைக்க, இந்தக் கூட்டத்தில், அமைச்சர் பரிந்துரைத்தார்
பிரதமரின் ஃபசல் பீமா யோஜனா திட்டம் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்வதை முன்னிட்டு அனைத்துப் பயனாளிகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
தஞ்சாவூரில் தனியார் பேருந்து மீது மின்கம்பி உரசியதில் 4 பேர் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடைபெறுகிறது; யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
இந்தியாவில் கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 2.14 இலட்சமாக (2,14,507) சரிந்தது. இது நாட்டின் மொத்த பாதிப்பில் 2.04 சதவீதமாகும். கடந்த 2020 ஜூன் 30-ஆம் தேதி சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,15,125 ஆக இருந்தது. 197 நாட்களுக்குப் பிறகு தற்போது இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது.
தமிழக நிலப்பரப்பின் அனைத்து திசைகளிலும் ,மூன்று பெரும் வரலாற்றுக் காலங்களை ஆய்வுகளமாக அமைத்து ஒரே நேரத்தில் ஏழு இடங்களில் அகழாய்வு செய்வது இதுவே முதன் முறை.மகிழ்ந்து வரவேற்கிறேன் என மதுரை எம்.பி சு. வெங்கடேசன் கருத்து தெரிவித்தார்.
அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் - தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பொங்கல் வாழ்த்து.
தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் பரவாமல் இருக்க, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பின், பள்ளி மாணவர்களுக்கு தேர்வு குறித்த அட்டவணை வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
”திமுக ஆட்சி அமைந்தவுடன் சிறு விவசாயி – பெரும் விவசாயி என பாகுபாடின்றி அனைத்து விவசாயிகளின் கடன்களும் ரத்து செய்யப்படும்” என்று திமுக தலைவர் மு. க ஸ்டாலின் உறுதி அளித்தார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் தற்போது 50-வது நாளை கடந்துள்ளது. இதில் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பின்பும் தொடரும் விவசாயிகள் போராட்டம் தொடர்வது குறிப்பிடத்தக்கது.!
தமிழகத்தில் 7 இடங்களில் இந்தாண்டு அகழாய்வு நடைபெறவுள்ளதாக தொல்லியல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்டனில், நடந்த கலவரத்தை தொடர்ந்து அதிபர் ட்ரம்ப்-ன் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்ட நிலையில், தற்போது அவரது யூடியூப் சேனலும் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விதிகளை மீறியதாக கூறி யூடியூப் நிறுவனம் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
சசிகலா குறித்து நான் தவறாக பேசவில்லை, அதிமுகவினர்தான் தவறாக பேசினார்கள என திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு வரும் 19-ந் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், பள்ளிக்கு வரும் மாணவர்கள் பெற்றோரிடம் கடிதம் பெற்று வரவேண்டும் எனவும், தனியார் பள்ளிகள் திறப்பதற்கு முன் அனுமதி பெற வேண்டும் எனவும், பள்ளிகள் திறப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு நடத்தப்படும் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை "நேரில் காண மக்கள கூட்டம் கூட வேண்டாம்" என்று பொதுமக்களுக்கு காவல்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்கள் மது அருந்தக் கூடாது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாகியுள்ள விஜய்யின் ‘மாஸ்டர்’, திரையுலகிற்கு புதிய நம்பிக்கையை விதைக்கும்... தயாரிப்பாளர்களை ஊக்குவிக்கும்... என விநியோகஸ்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் கால்நடைகளை தீயணைப்பு துறை வீரர்கள் படகுகள் மூலம் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.