Advertisment

Tamil News Updates : தமிழகத்தில் இன்று 3,039 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

author-image
WebDesk
New Update
Tamil News Updates : தமிழகத்தில் இன்று 3,039  பேருக்கு கொரோனா பாதிப்பு

Chennai news : மூன்று நாட்களுக்கு பிறகு நேற்று சென்னையில் தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பமானது. ஆனால் தடுப்பூசி தட்டுப்பாடுகள் நிலவி வருவதால் இன்று தலைநகரில் தடுப்பூசி முகாம்கள் இல்லை என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.

Advertisment

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

தென்மேற்கு பருவமழை ஜூலை முதல் இரண்டு வாரங்களில் தீவிரம் அடையும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. இன்று காலை முதல் சென்னையின் அண்ணாநகர், அரும்பாக்கம், நுங்கம்பாக்கம், கோயம்பேடு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

தமிழக பாஜக தலைவராக அறிவிக்கப்பட்டார் அண்ணாமலை

தமிழகத்தின் பாஜக தலைவராக பதவி வகித்த எல். முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில் புதிய தமிழகத்தின் புதிய பாஜக தலைவராக அண்ணாமலை நேற்று மாலை அறிவிக்கப்பட்டார். இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க

பெட்ரோல் டீசல் விலை

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. ரூ.101.37. டீசல் ஒரு லிட்டர் ரூ. 94.15க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 22:20 (IST) 09 Jul 2021
    தமிழகத்தில் இன்று 3,039 பேருக்கு கொரோனா பாதிப்பு

    தமிழகத்தில் இன்று 3,039 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தொற்று பாதிப்புக்கு இன்று ஒரே நாளில் 69 பேர் பலியாகியுள்ளதாக சுகதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  • 20:35 (IST) 09 Jul 2021
    அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 6 தீர்மானங்கள்

    அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில் மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க வேண்டும், விலைவாசி உயர்வை தடுக்க வேண்டும் என்றும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை குறைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது


  • 19:42 (IST) 09 Jul 2021
    கேரளாவில் மேலும் 13,563 பேருக்கு கொரோனா தொற்று

    கேரளாவில் மேலும் 13,563 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தொற்று பாதிப்புக்கு இன்று 130 பேர் பலியாகியுள்ளனர். மேலும் கேரளாவில் கொரோனாவுக்கு 1.13 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்


  • 19:41 (IST) 09 Jul 2021
    டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 81 பேருக்கு கொரோனா

    டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 81 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தொற்று பாதிப்புக்கு 3 பேர் பலியாகியுள்ளனர். தற்போது டெல்லியில் கொரோனாவுக்கு 798 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்


  • 19:40 (IST) 09 Jul 2021
    சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுக ஆலோசனை கூட்டம்

    சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.


  • 19:39 (IST) 09 Jul 2021
    12ஆம் தேதிக்குள் 15 லட்சம் தடுப்பூசிகளை தருவதாக மத்திய அரசு உறுதி

    12ஆம் தேதிக்குள் 15 லட்சம் தடுப்பூசிகளை தருவதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மேலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவுப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், புதிய மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்க கோரியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


  • 18:44 (IST) 09 Jul 2021
    அரசு கேபிள் டிவி மூலம் ஒடிடி தளங்கள் ஒளிப்பரப்ப நடவடிக்கை

    தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள குறிஞ்சி என்.சிவகுமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், "நஷ்டத்தில் இயங்கும் அரசு கேபிள் டிவி நிறுவனம் லாபத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஓ.டி.டி. தளங்களை அரசு கேபிள் டிவி மூலம் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய்ளார்.


  • 17:25 (IST) 09 Jul 2021
    அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது

    அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.


  • 17:11 (IST) 09 Jul 2021
    நிதிநிலை பற்றி விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

    தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்: “தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றிய வெள்ளை அறிக்கை பட்ஜெட்டுக்கு முன்பாக வெளியிடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.


  • 16:23 (IST) 09 Jul 2021
    மே 7ம் தேதிக்கு பின் உள்ள கணக்குகள் தனியாக வைக்கப்படும் - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

    தமிழ்நாடு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்: “மே 7ம் தேதிக்கு பின் உள்ள கணக்குகள் வைக்கப்படும். வரவு, செலவுகள் குறித்து இணையதளத்தில் வெளியிடப்படும். 472 கோடி ரூபாய் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.


  • 15:46 (IST) 09 Jul 2021
    தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து!

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ள நிலையில், ஒரு சவரன் ரூ.36,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ.4,515-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


  • 15:31 (IST) 09 Jul 2021
    ரேஷனில் காலாவதியான பொருட்களை வழங்கினால் கடும் நடவடிக்கை - அமைச்சர் சக்கரபாணி

    உணவு மற்றும் உணவு வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி: “ரேஷனில் காலாவதியான பொருட்களை வழங்கினால், பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷனில் தரமான பொருட்கள் தடையின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ரேஷன் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க புகார் புத்தகம் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்று கூறினார்.


  • 15:27 (IST) 09 Jul 2021
    'திரைப்படங்களுக்கு வரி விலக்கு குறித்து தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும்' - சென்னை உயர்நீதிமன்றம்

    திரைப்படங்களுக்கு வரி விலக்கு அளிக்கும் விஷயத்தில், யாரும் பாதிக்கப்படாத வகையில் கொள்கை முடிவு எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


  • 15:26 (IST) 09 Jul 2021
    'ஜிகா வைரஸ் குறித்து தமிழக மக்கள் அச்சப்பட தேவையில்லை' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    'ஜிகா வைரஸ்' குறித்து தமிழக மக்கள் அச்சப்பட தேவையில்லை; வைரஸ் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரியை சேர்த்து கர்ப்பிணி பெண் மகப்பேறு முடிந்து நலமுடன் உள்ளார்.


  • 14:51 (IST) 09 Jul 2021
    பாஜகவின் சித்தாந்தத்தை தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிற்கும் எடுத்துச் செல்லும் வரை ஓய மாட்டோம் - தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை

    பாஜகவின் சித்தாந்தத்தை தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிற்கும் எடுத்துச் செல்லும் வரை ஓய மாட்டோம் என்று தெரிவித்துள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, "தமிழக மக்கள் மீது பிரதமர் வைத்துள்ள பேரன்பு, தேசப்பற்றையும் எடுத்துச் சொல்வோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.


  • 14:48 (IST) 09 Jul 2021
    'அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி கிடையாது' - சசிகலா ஆடியோ பேச்சு

    "அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளர் போன்ற பதவிகள் கிடையாது; அவர்களாக போட்டுக் கொண்டுள்ளனர். அதிமுகவை நல்லபடியாக கொண்டு செல்வதற்கான சூழ்நிலை உருவாகி உள்ளது" என சசிகலா பேசியுள்ள ஆடியோவில் பதிவாகியுள்ளது


  • 14:00 (IST) 09 Jul 2021
    சென்னையில் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன்

    "வங்கக்கடலில் 11ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு குறைவு தான். இருப்பினும், சென்னையில் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்' என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.


  • 13:39 (IST) 09 Jul 2021
    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களான நீலகிரி, தேனி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


  • 13:39 (IST) 09 Jul 2021
    'இலங்கையின் உண்மையான நண்பன் சீனா' - பிரதமர் மகிந்த ராஜபக்சே பேச்சு

    "இலங்கையின் உண்மையான நண்பன் சீனா; ஆசியாவின் வளர்ச்சியை சீனாவே வழிநடத்தும்" என இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.


  • 13:29 (IST) 09 Jul 2021
    நடிகை நயன்தாராவின் தந்தை மருத்துவமனையில் அனுமதி

    நடிகை நயன்தாராவின் தந்தை குரியன் கோடியாட்டு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் இந்திய விமானப்படையில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


  • 13:24 (IST) 09 Jul 2021
    இந்தியாவில் புதிதாக 43,393 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,393 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு 3 கோடியே 7 லட்சத்து 52 ஆயிரத்து 950 ஆக அதிகரித்துள்ளது.


  • 13:16 (IST) 09 Jul 2021
    பாலாற்றில் வெள்ளப்பெருக்கினால் போக்குவரத்து பாதிப்பு

    திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு முதல் பெய்து வரும் மழையால் பாலாறு மற்றும் கிளை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


  • 13:11 (IST) 09 Jul 2021
    மேகதாது அணை விவகாரம்

    மேகதாது அணை விவகாரம் தொடர்பாக வரும் 12-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.


  • 12:39 (IST) 09 Jul 2021
    டெல்டா மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு

    நீலகிரி, கோவை மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தேனி திண்டுக்கல், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.


  • 12:23 (IST) 09 Jul 2021
    தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

    வங்கக்கடலில் நாளை மறூநாள் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளது. அதேபோல் தென்மேற்கு மற்றும் அரபிக்கடல் பகுதிகளிலும் 40-50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 11,12ஆம் தேதிகளில் ஆந்திரா மற்றும் தமிழகத்தில் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருக்கிறது.


  • 12:07 (IST) 09 Jul 2021
    கேந்திரிய வித்யாலயாவில் தமிழ் ஆசிரியர்கள் இல்லை

    கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் இல்லை என்றும் தமிழ் ஆசிரியர்களை நியமிக்க மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தினேன் என்றும் திமுக எம்.பி. திருச்சி சிவா பேட்டியளித்துள்ளார். மேலும், அங்கு சமஸ்கிருதத்தை கட்டாயம் ஆக்கியுள்ளனர் என்கிற குற்றச்சாட்டையும் முன்வைத்தார்.


  • 11:32 (IST) 09 Jul 2021
    மகாராஷ்ட்ராவிற்கு அடுத்த படியாக கேரளாவில் அதிக கொரோனா தொற்று

    கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை 30 லட்சத்தை தாண்டியது. மற்ற மாநிலங்களில் கொரோனா தொற்று குறைவை கண்ட நிலையில் ஜூலை 8ம் தேதி அன்று 13,772 நபர்களுக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.


  • 11:13 (IST) 09 Jul 2021
    2019-2020ஆம் ஆண்டிற்கான சிறந்த படைப்புகளுக்கான விருதை வழங்கினார் முதல்வர்

    சென்னை, தலைமை செயலகத்தில் 21 எழுத்தாளர்களுக்கு சிறந்த படைப்புகளுக்கான விருதினை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். எழுத்தாளர்கள் அறிவரசன், வசந்தா, ஆடலரசு ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.


  • 10:34 (IST) 09 Jul 2021
    கீழடியில் 7ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள்

    கீழடியில் 7ம் கட்ட ஆராய்ச்சி நடைபெற்று வருகின்ற நிலையில் சுடுமண் மற்றும் கண்ணாடி பாசிமணிகள் அகழ்வாய்வின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் ஆராய்ச்சிக்காக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


  • 10:05 (IST) 09 Jul 2021
    பல்கலைக்கழக முறைகேடுகளை விசாரிக்க குழு அமைத்தது தமிழக அரசு

    சேலம் பெரியார் பல்கலை., மதுரை காமராஜர் பல்கலை மற்றும் அண்ணாமலை பல்கலை.களில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக இந்த குழு விசாராணை நடத்தி 3 மாதங்களில் அறிக்கையை தாக்கல் செய்யும் என்று தகவல் வெளியாகியுள்ளது.


  • 10:03 (IST) 09 Jul 2021
    24 மணி நேரத்தில் இந்தியாவில் 911 நபர்கள் கொரோனாவுக்கு பலி

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43,393 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 44,459 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 911 பேர் உயிரிழந்துள்ளனர். 4,58,727 நபர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறது.


  • 09:32 (IST) 09 Jul 2021
    டோக்கியோவில் அவசர நிலை அறிவிப்பு

    டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் பார்வையாளர்கள் இன்றி போட்டிகள் நடைபெறும் என்று ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் அவசரநிலையை அறிவித்துள்ளது அந்நாட்டு அரசு.


  • 09:11 (IST) 09 Jul 2021
    ஹைதி நாட்டு அதிபர் படுகொலை

    ஹைதி நாட்டின் அதிபர ஜோவெனெல் மோய்ஸ் அவருடைய வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் அவரது மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


  • 09:03 (IST) 09 Jul 2021
    40 லட்சத்தை தாண்டிய கொரோனா மரணங்கள்

    உலகம் முழுவதும் கொரோனா நோய்தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தை கடந்து புதிய மைல்ஸ்டோனை புதன்கிழமை அன்று எட்டியது. இது ஒரு சாதாரண வருடத்தில் இந்தியாவில் இறக்கும் நபர்களின் எண்ணிக்கையை காட்டிலும் நான்கு மடங்கு அதிகமானது.


  • 08:55 (IST) 09 Jul 2021
    மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிப்பு

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 4,594 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு 12,000 கன அடியாக உள்ளது.


  • 08:53 (IST) 09 Jul 2021
    பாலாற்றில் மழைநீர் வெள்ளம்

    வாணியம்பாடி மற்றும் ஆந்திராவின் வனப்பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்துவருகிறது. இதனால் இரு மாநில எல்லையான புல்லூர் பகுதியில் உள்ள தடுப்பணையை தாண்டி பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.


  • 08:35 (IST) 09 Jul 2021
    கொரோனா மூன்றாம் அலை - ரூ. 23, 000 கோடி ஒதுக்கிய மத்திய அமைச்சரவை

    கொரோனா மூன்றாம் அலை வந்தால் எதிர்கொள்ள ஆயத்தமாக இருக்க ரூ. 23 ஆயிரம் கோடியை அவசர கால நிதியாக ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


  • 08:33 (IST) 09 Jul 2021
    தேவையற்ற கருத்துகளை தவிர்க்க வேண்டும் - மோடி அறிவுரை

    புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்கள் தேவையற்ற கருத்துகலை தவிர்க்க வேண்டும் என்றும் மோடி அறிவுரை வழங்கியுள்ளார். சரியான நேரத்தில் அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்று நேற்று மாலை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அவர் அறிவித்துள்ளார்.


  • 08:16 (IST) 09 Jul 2021
    மீனவர்களால் தூக்கிவரப்பட்ட மீன்வளத்துறை அமைச்சர்

    மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பழவேற்காடு பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டுவிட்டு கரைக்கு திரும்பும் போது மீனவர்களால் தூக்கிவரப்பட்ட காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Tamil Nadu Live Updates Tamil News Live Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment