பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 87-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75 காசுகளாகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.92.34 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
பாகிஸ்தான்- கனடா அணிகள் மோதல்
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் மற்றும் கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. பாகிஸ்தான் உடனான முந்தைய போட்டியில் இந்தியா 6 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்நிலையில், பாகிஸ்தான் வெற்றிக் கணக்கை தொடங்குமா..? என ரசிகர்கள் எதிர்பார்ப்பு
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Jun 11, 2024 21:27 ISTசென்னை, புறநகர் பகுதிகளில் மழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
-
Jun 11, 2024 21:25 ISTதிருப்பத்தூரில் பாம்பு கறி சாப்பிட்டவர் கைது
திருப்பத்தூரில் பாம்பு கறி சாப்பிட்டவரை போலீசார் கைது செய்தனர்.
-
Jun 11, 2024 20:09 ISTஒடிசா: ஆட்சியமைக்க உரிமை கோரினார் மோகன் சரண் மஜி
ஒடிசா முதலமைச்சராக தேர்தெடுக்கபட்டுள்ள, மோகன் சரண் மஜி, அம்மாநில ஆளுநர் ரகுபர் தாஸை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்
-
Jun 11, 2024 20:09 ISTகாங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பேச்சு
“வாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டியிட்டிருந்தால், பிரதமர் நரேந்திர மோடி தோல்வியடைந்திருப்பார்” என்று ரேபரேலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறியுள்ளார்.
-
Jun 11, 2024 20:08 IST'9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு' - வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
Jun 11, 2024 18:46 ISTஇடைநிலை ஆசிரியர் தேர்வு தேதி மாற்றம்
தமிழ்நாட்டில் வரும் 23ம் தேதி நடைபெற இருந்த இடைநிலை ஆசிரியர் தேர்வு அடுத்த மாதம் 21ம் தேதி நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
-
Jun 11, 2024 18:46 ISTஒடிசா முதல்வராக மோகன் மாஜி தேர்வு
ஒடிசாவில் நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஒடிசா மாநிலத்தின் புதிய முதல்வராக மோகன் மாஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
Jun 11, 2024 18:45 ISTமசூதியை இடிக்க எதிர்ப்பு : போராட்டம் நடத்திய இளைஞர்கள் கைது
கோயம்பேட்டில் உள்ள மசூதி ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டுள்ளதை உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்றம், மசூதியை இடிக்க உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து போராட்டம் நடந்த்திய இஸ்லாமிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
Jun 11, 2024 18:42 ISTஇந்த முடிவுக்காக நாங்கள் இரவு பகலாக உழைத்தோம் : பிரியங்கா காந்தி பெருமிதம்
நாட்டில் தூய்மையான அரசியல் வேண்டும் என தேசம் முழுவதும் ஒரு செய்தியை வழங்கியுள்ளீர்கள்" இந்த முடிவுக்காக நாங்கள் இரவு பகலாக உழைத்தோம், இந்த உற்சாகத்துடன் நாங்கள் உங்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம் என பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
-
Jun 11, 2024 17:31 ISTதமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் வாக்குவங்கியை உயர்த்த வேண்டும் : செல்வப்பெருந்தகை
சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பேசிய மாநில தலைவர் செல்வப்பெருந்தகை "தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் வாக்குவங்கியை உயர்த்த வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
-
Jun 11, 2024 16:38 ISTதேசிய ஜனநாயக கூட்டணி அரசின் அமைச்சரவையில் 20 வாரிசுகளுக்கு இடம்- ராகுல் காந்தி விமர்சனம்
தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் அமைச்சரவையில் 20 வாரிசுகளுக்கு இடம் அளித்துள்ளதாக ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். கட்சிக்காக பாடுபட்டவர்கள், தியாகம் செய்தவர்களின் வாரிசுகளுக்கு பதவி வழங்குவதையே வாரிசு அரசியல் என விமர்சித்தார் மோடி. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் அமைச்சரவையிலேயே வாரிசுகள் நிரம்பியுள்ளன. அவரின் பேச்சுக்கும் செயல்பாடுகளுக்கும் உள்ளவித்தியாசத்திற்கு மோடி என்ன பதில் சொல்லப் போகிரார்?” என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
Jun 11, 2024 16:33 ISTஇடைநிலை ஆசிரியர் தேர்வு தேதி மாற்றம் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
இடைநிலை ஆசிரியர் தேர்வு (SGT) ஜூலை 21-ம் தேதி நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த மாதம் 23ம் தேதி நடைபெற இருந்த தேர்வு நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
Jun 11, 2024 16:26 ISTஇனி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்திக்கமாட்டேன் - அண்ணாமலை
கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி: “இனி விமான நிலையத்தில் பிரஸ் மீட் கிடையாது; அனைத்து செய்தியாளர் சந்திப்பும் இனி பா.ஜ.க கட்சி அலுவலகத்தில் மட்டும்தான் நடைபெறும்” என்று கூறினார்.
-
Jun 11, 2024 15:13 ISTவெளிமாநில பதிவெண் கொண்டு தமிழ்நாட்டில் இயங்கும் ஆம்னி பேருந்துகளுக்கு தமிழ்நாடு அரசு எச்சரிக்கை
முறையாக அனுமதி பெறாமல், வெளிமாநில பதிவெண் கொண்டு தமிழ்நாட்டில் இயங்கும் ஆம்னி பேருந்துகளுக்கு தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
Jun 11, 2024 14:43 ISTகட்டணம் கேட்டதால், புல்டோசரை கொண்டு சுங்கச்சாவடியை உடைத்த ஓட்டுநர்
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாப்பூர் பகுதியில் கட்டணம் கேட்டதால், புல்டோசரை கொண்டு சுங்கச்சாவடியை உடைத்த ஓட்டுநரால் பரபரப்பு ஏற்பட்டது. சுங்கச்சாவடியில் இருந்த 2 பூத்துகள் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டது. புல்டோசர் ஓட்டுநரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
-
Jun 11, 2024 14:09 ISTதங்கப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத் தொகை
பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஊக்கத் தொகையாக ரூ.75 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்
-
Jun 11, 2024 13:49 ISTவிக்கிரவாண்டி தி.மு.க வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டி
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவா தி.மு.க விவசாய தொழிலாளர் அணி செயலாளராக உள்ளார்
-
Jun 11, 2024 13:30 ISTவிழுப்புரம் தி.மு.க தெற்கு மாவட்ட செயலாளராக கௌதம் சிகாமணி நியமனம்
விழுப்புரம் தி.மு.க தெற்கு மாவட்ட செயலாளராக, அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம் சிகாமணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்
-
Jun 11, 2024 13:18 ISTவிழுப்புரம் தி.மு.க வடக்கு மாவட்ட புதிய பொறுப்பாளராக பா.சேகர் நியமனம்
விழுப்புரம் தி.மு.க வடக்கு மாவட்ட செயலாளராக உள்ள அமைச்சர் செஞ்சி மஸ்தான், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து விழுப்புரம் வடக்கு மாவட்ட புதிய பொறுப்பாளராக பா.சேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
Jun 11, 2024 12:44 ISTதமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 20ம் தேதியே தொடங்குவதாக சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் சட்டப்பேரவை உறுப்பினராக நாளை (ஜூன் 12) பதவி ஏற்கிறார்
நெல்லையில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பேட்டி
-
Jun 11, 2024 12:40 ISTதமிழ் புதல்வன் திட்டம் விரைவில் தொடங்கப்படும்
தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை பெருமளவில் கட்டுப்படுத்தி இருக்கிறோம். போதை பொருள் நடமாட்டம் என்பது சட்டம் - ஒழுங்குப் பிரச்சினை மட்டுமல்ல, சமூக ஒழுங்குப் பிரச்சினை. போதைப் பொருள் நடமாட்டம் இருக்கும் என கண்டறியப்படும் பகுதிகளில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். கலைஞர் கனவு இல்லம்" திட்டத்திற்கும்; இரண்டரை லட்சம் தொகுப்பு வீடுகளைப் புனரமைக்கும் திட்டத்திற்கும் தனி கவனம் செலுத்த வேண்டும்"
முதல்வர் ஸ்டாலின்
-
Jun 11, 2024 12:19 ISTமாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டம் இருக்கும் என கண்டறியப்படும் பகுதிகளில் தனிக்கவனம், தீவிரக் கவனம் செலுத்தியாக வேண்டும். தமிழ்நாட்டில் போதை பொருட்களின் நடமாட்டம் அறவே இல்லை, முற்றுப்புள்ளி வைத்துவிட்டோம், என்ற நிலையை நீங்கள் உருவாக்க வேண்டும்.
- சென்னை தலைமை செயலகத்தில் 14 மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
-
Jun 11, 2024 12:18 ISTநீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டம்
கடலூர்: நீட் தேர்வு குளறுபடியை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு இந்திய மாணவர்கள் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
-
Jun 11, 2024 12:17 ISTபிரபல கன்னட நடிகர் தர்ஷன் கைது
பெங்களூருவில் 2 நாட்களுக்கு முன், மருந்தகத்தில் வேலை பார்த்து வந்த ரேணுகா சுவாமி என்ற இளைஞர் கொலை வழக்கு தொடர்பாக, ஏற்கனவே 2 பேரை போலீசார் கைது செய்த நிலையில், தற்போது கன்னட நடிகர் தர்ஷன் கைது
விசாரணையில் தர்ஷனின் நெருங்கிய தோழிக்கு, ரேணுகா சுவாமி அடிக்கடி குறுந்தகவல்கள் அனுப்பி வந்தது கண்டுபிடிப்பு
-
Jun 11, 2024 12:17 ISTபுதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு- ரங்கசாமி நேரில் ஆய்வு
புதுச்சேரியில் வீட்டின் கழிவறையில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடத்தப்படும்
பொதுப்பணித்துறை அமைச்சர் லஷ்மிநாராயணன் பேட்டி
மேலும் சம்பவ இடத்தில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி நேரில் ஆய்வு செய்தார். விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும்- ரங்கசாமி
-
Jun 11, 2024 12:16 ISTநீட் கவுன்சிலிங் நடத்த தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
நடந்து முடிந்த இளநிலை நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கில் கவுன்சிலிங் நடத்த தடை விதிக்க மறுப்பு தெரிவித்த நீதிபதிகள் தேசிய தேர்வு முகமை பதிலளிக்கவும் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு விசாரணை ஜூலை 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது
-
Jun 11, 2024 11:40 ISTமுறைப்படி பொறுப்பேற்ற மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற விவகாரம், தகவல் மற்றும் ஒளிபரப்பு துறையின் இணை அமைச்சர் எல்.முருகன் தனது அலுவலகத்தில் முறைப்படி பொறுப்பேற்றார்.
கடந்த ஆட்சியில் தகவல், ஒளிபரப்பு துறையுடன், கால்நடைத்துறை இணை அமைச்சராக இருந்தார்
-
Jun 11, 2024 11:32 ISTலாலு பிரசாத் யாதவுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
ஒடுக்கப்பட்டவர்களை முன்னேற்றுவதற்காக லாலு பிரசாத் யாதவ் மேற்கொண்ட முயற்சிகள், செயல்படுத்திய புரட்சிகரத் திட்டங்கள் மற்றும் மதச்சார்பின்மைக்கான அவரின் உறுதியான கொள்கை முடிவு ஆகியவை நியாயமான மற்றும் சமநிலை சமூகத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன
உங்களது வாழ்க்கைப் பணி எங்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது
- ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
-
Jun 11, 2024 11:31 ISTமாவட்ட ஆட்சியர்களுடன், ஸ்டாலின் ஆலோசனை
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள், புதிய அறிவிப்புகள் தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் 3 நாள் ஆலோசனை நடத்துகிறார்.
முதல் நாளான இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 14 மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றுள்ளனர்.
-
Jun 11, 2024 11:24 ISTகூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு வந்த கல்விக்கடன் ரூ.5 லட்சமாக உயர்வு
கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு வந்த கல்விக்கடன் ₹1 லட்சத்தில் இருந்து ₹5 லட்சமாக உயர்த்தப்படுவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார்.
-
Jun 11, 2024 11:23 ISTவிஷவாய தாக்கி 3 பேர் உயிரிழந்த விவகாரம்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் கழிவறையில் விஷவாய தாக்கி 3 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விஷவாயு தாக்கிய பகுதியில் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் ஆய்வு செய்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் உமாபதி என்பவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி
-
Jun 11, 2024 10:57 ISTசிவகங்கையில் 300 சவரன் நகை கொள்ளை
சிவகங்கையில், அடகு கடையில் 300 சவரன் நகை, 3 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளை
நகை அடகு கடையின் சுவரில் துளையிட்டு தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற கும்பல்
டி.எஸ்.பி சிபிசாய் சவுந்தர்யன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டை
-
Jun 11, 2024 10:47 ISTகழிவறைக்கு சென்ற 2 பெண்கள் விஷவாயு தாக்கி பலி
புதுச்சேரியில் கழிவறைக்கு சென்ற 2 பெண்கள் விஷவாயு தாக்கி உயிரிழப்பு.
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கழிவறைக்குச் சென்ற 72 வயதான மூதாட்டி செந்தாமரை மயங்கி விழுந்துள்ளார்.
அவரை காப்பாற்ற சென்ற மகள் காமாட்சியும் மயங்கி விழுந்தார். பாட்டி, தாயை தூக்குவதற்காக கழிவறைக்கு சென்ற பெண்ணும் மயங்கி விழுந்தார்.
மூன்று பேரையும் பரிசோதித்த மருத்துவர்கள் காமாட்சி, செந்தாமரை ஆகிய 2 பெண்கள் ஏற்கனவே உயிரிழந்ததை உறுதி செய்தனர்
-
Jun 11, 2024 10:38 ISTதிருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் திறப்பு
திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையம் திறப்பு - இன்று முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.
-
Jun 11, 2024 10:24 ISTதங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.53,160க்கு விற்பனை. கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.6,645க்கு விற்பனை
-
Jun 11, 2024 09:59 ISTபொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
தமிழகத்தில் 2024-25 கல்வியாண்டிற்கான பொறியியல் படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்ப பதிவு செய்ய இன்று கடைசி நாள். விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்கள் tneaonline.org இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
-
Jun 11, 2024 09:43 ISTதருமபுரம் ஆதீன வழக்கு: மேலும் ஒருவர் கைது
தருமபுரம் ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் செந்திலை கைது செய்தது தனிப்படை
ஆபாச வீடியோ இருப்பதாக பணம் கேட்டு தருமபுரம் ஆதீனம் மிரட்டப்பட்ட வழக்கில் நடவடிக்கை
உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் தலைமறைவாக இருந்த செந்திலை கைது செய்தது தனிப்படை
தருமபுரம் ஆதீன வழக்கில் இரண்டாவது நபராக குற்றம் சாட்டப்பட்டவர் திருவையாறு செந்தில்
4 மாதமாக தேடப்பட்டு வந்த நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் செந்தில்
-
Jun 11, 2024 09:37 ISTவிக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நா.த.க தனித்து போட்டி
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவிப்பு
மாநில கட்சி அந்தஸ்து பெற்ற பின் நாம் தமிழர் கட்சி களம் காணும் முதல் தேர்தல்
-
Jun 11, 2024 09:33 ISTகார் ஓட்டி பழகிய 2 சிறுவர்கள் விபத்தில் பலி
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே கார் ஓட்டி பழகிய 2 சிறுவர்கள் விபத்தில் உயிரிழந்த பரிதாபம்.
சிறுவர்கள் ஓட்டி சென்ற ஆம்னி வேன், சாலையில் சென்ற மற்றொரு கார் மீது மோதி பயங்கர விபத்து. விபத்தில் சுக்குநூறாக நொறுங்கிய ஆம்னி வேன். ஆம்னி வேனை ஓட்டி சென்ற 14 வயதான சுதர்சனம், உடன் சென்ற 17 வயதான லோகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
-
Jun 11, 2024 09:07 ISTசீசன் முடிந்தும் குமரியில் குவியும் சுற்றுலா பயணிகள்
கோடை விடுமுறை சீசன் முடிந்தும், கன்னியாகுமரிக்கு 10 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை. நேற்று மட்டும் சுமார் 6,000 சுற்றுலா பயணிகள் படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு உள்ளனர்!
-
Jun 11, 2024 08:08 ISTமீண்டும் மின் கட்டண உயர்வு: வதந்தி
தமிழகத்தில் மீண்டும் மின் கட்டணத்தை அரசு உயர்த்தியுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவலில் உண்மையில்லை.
மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து தமிழக அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. மின் கட்டண உயர்வு இல்லை - தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம்
-
Jun 11, 2024 08:06 ISTபரந்தூர் விமான நிலையம்: நிலம் எடுக்க அரசாணை
பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் எடுப்பதற்கு அரசாணை
பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்திற்கு நெல்வாய் கிராமத்தில் 171 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 30 நாட்களுக்குள் நிலம் எடுப்பு அலுவலகத்தில் மக்கள் ஆட்சேபம் தெரிவிக்கலாம் என அறிவிப்பு
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.