Petrol and Diesel Price: சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூ.108.21க்கும் டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூ.98.21க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Tamilnadu updates: பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவருக்கு 2 PSO உள்பட 11 பேர் கொண்ட துணை ராணுவ படையினர் பாதுகாப்பு வழங்குவர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
அம்மா மினி கிளினிக் மருத்துவர்கள் விடுவிப்பு
அம்மா மினி கிளினிக்குகளில் பணியாற்றிய மருத்துவர்களின் பணிக்காலம் நிறைவு பெற்றது.
மினி கிளினிக்குகளில் பணியமர்த்தப்பட்ட அனைத்து மருத்துவர்களையும் பணியில் இருந்து சுகாதாரத் துறை விடுவித்தது.
1,800 மருத்துவர்கள் மாற்று பணிவாய்ப்பு வழங்க கோரி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜி.எஸ்.டி வசூல் அதிகரிப்பு
சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) மொத்த வசூல் மார்ச் மாதத்தில் ரூ. 1.42 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு இந்த நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் தற்போது 45.6 சதவீதம் ஜிஎஸ்டி வருவாய் அதிகரித்துள்ளது. இதனை மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்தது.
World news update: இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலை; இலங்கையில் நீடிக்கும் குழப்பம் ஆகியவை காரணமாக அதிபர் இல்லத்துக்கு முன் அரங்கேறிய வன்முறையில் ஈடுபட்ட 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, அந்நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனை அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்தார்.
IPL update: பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 138 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய கொல்கத்தா அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
1 – 5 ஆம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதி தேர்வு கிடையாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 6 – 9 ஆம் வகுப்புகளுக்கு மே 5-13 ல் தேர்வு நடைபெறும்.
சொத்து வரி உயர்வை உடனே திரும்ப பெற வலியுறுத்தி ஏப்ரல்5ல் தமிழக முழுவதும் அதிமுக போராட்டம் நடத்தவுள்ளதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்
டெல்லியில் திமுக அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டபோது திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியனின் செல்போன் திருடப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ள நிலையில், சொத்து மதிப்புக்கு வரியா? சொத்து மதிப்பே வரியா? என கேள்வி எழுப்பியதோடு, சொத்து வரி உயர்வுக்கு மத்திய அரசு மீது பொய் புகார் தெரிவித்து தமிழக அரசு கபட நாடகம் ஆடுகிறது. மத்திய அரசு சொத்து வரியை உயர்த்தவே சொல்லவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் பிறை தென்பட்டதால் நாளை முதல் ரமலான் நோன்பு தொடங்குகிறது என தமிழ்நாடு அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு தொடர்பாக இதுவரை ஜனாதிபதி விளாடிமிர் புதினை மறைமுகமாக விமர்சிக்காத போப் பிரான்சிஸ், சனிக்கிழமையன்று ஒரு “வல்லமை” தேசியவாத நலன்களுக்காக மோதல்களைத் தூண்டுவதாகக் கூறினார்.
பிப்ரவரி 24 அன்று தொடங்கப்பட்ட நடவடிக்கையானது “சிறப்பு இராணுவ நடவடிக்கை” பிரதேசத்தை ஆக்கிரமிப்பதற்காக அல்ல, மாறாக அதன் அண்டை நாடுகளை இராணுவமயமாக்க மற்றும் “குறைக்க” வடிவமைக்கப்பட்டுள்ளது என்று ரஷ்யா கூறுகிறது. பிரான்சிஸ் ஏற்கனவே அந்த சொற்களை நிராகரித்து, அதை ஒரு போர் என்று அழைத்தார்.
“ஐரோப்பாவின் கிழக்கிலிருந்து, சூரியன் உதிக்கும் தேசத்திலிருந்து, இப்போது போரின் இருண்ட நிழல்கள் பரவியுள்ளன. பிற நாடுகளின் படையெடுப்புகள், காட்டுமிராண்டித்தனமான தெருச் சண்டைகள் மற்றும் அணுகுண்டு அச்சுறுத்தல்கள் ஆகியவை தொலைதூர கடந்த காலத்தின் கொடூரமான நினைவுகள் என்று நாங்கள் நினைத்தோம்,” என்று போப் கூறினார். இரண்டு நாள் பயணமாக மத்திய தரைக்கடல் தீவு நாட்டிற்கு வந்த பிறகு மால்டா அதிகாரிகளிடம் உரையாற்றினார்.
“இருப்பினும், அவர்களின் எழுச்சியில் மரணம், அழிவு மற்றும் வெறுப்பு ஆகியவற்றை மட்டுமே கொண்டு வரும் பனிக்கட்டி போர் காற்று, பல மக்களின் வாழ்க்கையில் சக்திவாய்ந்ததாக வீசி நம் அனைவரையும் பாதித்துள்ளது,” என்று அவர் கூறினார். (ராய்ட்டர்ஸ்)
ப்ரோவரியின் மேயர் வெள்ளிக்கிழமை மாலை ஒரு தொலைக்காட்சி உரையின் போது “ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்கள் இப்போது புரோவரி மாவட்டம் முழுவதையும் விட்டுச் சென்றுவிட்டனர்” என்று கூறினார். உக்ரேனியப் படைகள் அங்கு எஞ்சியிருக்கும் ரஷ்ய வீரர்களின் பகுதியையும், “இராணுவ தளவாடங்களை ” அழிக்கும் பணியைத் தொடங்கும் என்றும் அவர் கூறினார். பல ப்ரோவரி குடியிருப்பாளர்கள் ஏற்கனவே நகரத்திற்குத் திரும்பிவிட்டதாகவும், கடைகள் மற்றும் வணிகங்கள் மீண்டும் திறக்கப்படுவதாகவும் மேயர் கூறினார்.
வெள்ளியன்று, Kyiv மேயர் Vitali Klitschko, உக்ரேனிய போராளிகள் ரஷ்ய துருப்புக்களை பின்னுக்குத் தள்ளியதை அடுத்து, Kyiv க்கு வடமேற்கே உள்ள செயற்கைக்கோள் நகரங்கள் குறிவைக்கப்பட்டதாகவும், Brovary யிலும் சண்டை நடந்ததாகவும் கூறினார். (ராய்ட்டர்ஸ்)
ஜெயரஞ்சன் எழுதிய 'A DRAVIDIAN JOURNEY' என்ற புத்தகத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசளித்தார்
டெல்லி திமுக அலுவலக திறப்பு விழாவில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு சால்வை அணிவித்து, நினைவுப் பரிசுகள் வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
திருப்பத்தூர் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ₨2 லட்சம் நிவாரணம் காயமடைந்தவர்களுக்கு தலா ₨50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த திமுக அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குத்துவிளக்கு ஏற்றினார்
டெல்லி, திமுக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 45 அடி உயர கொடிக் கம்பத்தில் கொடியேற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அண்ணா – கருணாநிதி அறிவாலயத்தை திறந்து வைத்தார்
டெல்லியில் அண்ணா – கலைஞர் அறிவாலயம் திறப்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பங்கேற்றுள்ளார்.
திருப்பத்தூர் அருகே ஜவ்வாது மலையில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ2 லட்சம் இழப்பீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தடகள வீராங்கனை சமீஹா பர்வீனுக்கு ரூ2 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. மாநில, தேடிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என வீராங்கனை சமீஹா கோரிக்கை வைத்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் உத்தரவை தொடர்ந்து, அமைச்சர் மெய்யநாதன் ஊக்கத்தொகை அறிவித்துள்ளார்.
இலங்கையில் இன்று மாலை 6 மணி முதல் நாளை மறுநாள் காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சொத்து வரியை உயர்த்தினால்தான் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி தரப்படும் என மத்திய அரசு கூறியது. சொத்து வரியை உயர்த்துவதில் எங்களுக்கு விருப்பமில்லை.நாடு முழுவதுமே சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது; மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில்தான் மிக மிக குறைவாக இருக்கிறது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
இலங்கையில் நிலவி வரும் கடும் மின்வெட்டு காரணமாக, ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளையும் மூடுமாறு அந்நாட்டின் பொதுப் பயன்பாடுகள் ஆலோசனைக்குழு பரிந்துரைத்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.
இந்தியாவில் முதன்முறையாக PLF (Premium Large Format) முறையில் பீஸ்ட் டிரைலர் வெளியாக உள்ளது.
அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை; சசிகலாவின் சேலம் சுற்றுப்பயணத்தால் அதிமுகவுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது- ஈபிஎஸ் பேட்டி!
திருப்பத்தூர் அருகே ஜவ்வாது மலையில் சேம்பரை என்ற இடத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்றபோது மலை மீது ஏறிய வேன், கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
வன்னியர் உள் ஒதுக்கீடு வழக்கில் திமுக அரசு சரியாக வாதாடவில்லை. உள்ஒதுக்கீடு நிறைவேற கூடாது என்பதற்காக திட்டமிட்டு சரியாக வாதாடவில்லை. மேலும் உள்ஒதுக்கீடு வழக்கில் சரியான தரவுகளை திமுக அரசு தாக்கல் செய்யவில்லை என ஈபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியா – நேபாளம் இடையே ரயில்வே, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் 4 ஒப்பந்தங்கள் இந்திய பிரதமர் மோடி , நேபாள பிரதமர் தியூபா முன்னிலையில் இன்று கையெழுத்தானது.
நேபாளத்தில் ரூபே கார்டு சேவை அறிமுகம். நிதி பரிமாற்றத்தில் புதிய அத்தியாத்தை உருவாக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, குமரி மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவொற்றியூரில் பொதுமக்களிடம் பேசிக்கொண்டிருந்த, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென்று மயங்கி விழுந்தார். அதிக வெயில் தாக்கம் காரணமாக சீமானுக்கு மயக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. பிறகு, ஆம்புலன்ஸில் முதலுதவி பெற்ற சீமான் நலம் பெற்று இல்லம் திரும்பினார்.
டெல்லி நேரு பூங்காவில் முதல்வர் முக ஸ்டாலின் நடைபயணம் மேற்கொண்டார். டெல்லியில் இன்று திமுக அலுவலகத்தை அவர் திறந்து வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவொற்றியூரில் பொதுமக்களிடம் பேசிக் கொண்டிருந்த நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென்று மயங்கி விழுந்தார். மயக்கத்தில் இருந்த அவரை உடனடியாக தொண்டர்கள் ஆம்புலன்ஸுக்கு தூக்கிச் சென்றனர்.
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பணியாற்றும் ஒரே கட்சி அதிமுக தான் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். திமுக அரசு 150% வரை சொத்து வரியை உயர்த்தியுள்ளது. மின்சார கட்டணத்தை உயர்த்த உள்ளது. தமிழகத்தில் போதை பொருள் விற்பனை அதிகரித்து உள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேச்சு.
முதல்வர் மு.க.ஸ்டாலின் மிகவும் துடிப்புடன் இருக்கிறார். எனவே உள் இட ஒதுக்கீடு போராட்டத்திற்கு அவசியம் இருக்காது என்றே நம்புகின்றேன் என்று பாமக நிறுவர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
02.04.2011-ல் உலகக் கோப்பையை வென்றது இந்தியா. உலக கோப்பையை வென்று 11 ஆண்டுகள் நிறைவானது என்று வீரர்கள் மகிழ்ச்சி
டெல்லியில், பிரதமர் மோடி உடன் நேபாளா பிரதமர் ஷேர் பகதூர் தியூபா சந்திப்பு
தமிழகம் முழுவதும் சொத்து வரியை 100% வரை உயர்த்தியிருக்கின்ற திமுக அரசுக்கு கடும் கண்டனம் அறிவித்துள்ளார் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் ட்வீட். தமிழ்நாட்டு மக்களுக்கு தரப்போவதாக சொன்ன விடியல் இதுதானா? என்று தினகரன் பேச்சு.
நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதத்திற்கான வரியை ஏப்ரல் 15க்குள் செலுத்தினால் 5% வரி சலுகை அளிக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.
சொத்து வரி மற்றும் தொழில் வரியை செலுத்தாமல் ரூ.230 கோடி நிலுவையில் உள்ளது என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. சொத்து மற்றும் தொழில் வரி கடந்த ஆண்டை விட 35% கூடுதலாக வசூல் ஆகியுள்ளது என்றும், பிரபல நட்சத்திர ஓட்டல்கள் அதிகளவு நிலுவை வைத்துள்ளதாகவும் மாநகராட்சி தகவல்
நகரப்பகுதிகளில் சொத்துவரி உயர்வை திரும்பப்பெற வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வலியுறுத்தினார். நகரப்பகுதிகளில் 150% வரை சொத்துவரி உயர்த்தப்பட்டது நியாயமற்றது என்றும் அவர் தெரிவித்தார்.
கரூரில் அரசு அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அதிமுக நகர செயலாளர் விவேகானந்தன் கைது செய்யப்பட்டார்.
உதகை, கொடைக்கானல், காட்டுமன்னார்கோவிலில் ரூ.100-ஐ தொட்டது ஒரு லிட்டர் டீசல் விலை; அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரக் கூடும் என மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தனது இருசக்கர வாகன விலையை ரூ.2000 வரை உயர்த்தப்போவதாக ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனம் அறிவித்துள்ளது.
வேதா இல்லத்தை கையகப்படுத்திய உத்தரவை ரத்து செய்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுக்கு எதிராக அதிமுக சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சியில் ஆளுங்கட்சிக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு சிறப்பு பரிசாக 150% வரை சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் குற்றம்சாட்டினார். சொத்து வரி உயர்வு வெறும் டிரைலர்தான், இனிவரும் காலங்களில் மக்களுக்கு பல பம்பர் பரிசுகள் காத்திருக்கின்றன என்றும் ஈபிஎஸ் விமர்சித்தார்.
டெல்லி நேரு பூங்காவில் நடைபயிற்சி சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
பெட்ரோல், டீசல் மற்றும் சுங்க கட்டண உயர்வால் லாரிகளின் வாடகை உயர்ந்தது. லாரிகள் வாடகை உயர்வால் கோயம்பேட்டில் காய்கறிகளின் விலை உயர்ந்தது. காய்கறிகளின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 உயர்ந்தது.
டெல்லியில், திமுக அலுவலகத்தை இன்று திறந்து வைக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். மத்திய அமைச்சர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பாஜகவை எதிர்ப்பது, அக்கட்சியின் மீதான தனிப்பட்ட வெறுப்பு அல்ல, பாஜகவின் கொள்கைகளை விமர்சிக்கிறோமே தவிர, தனிப்பட்ட நபர்களை அல்ல. தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற சக்திகளை திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் ஒன்று திரட்டி பாஜகவை ஓரங்கட்டிவிட்டன என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
ஆஸ்கர் அகாடமி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் வில் ஸ்மித். கிறிஸ் ராக்கை விழா மேடையில் அறைந்தது சர்ச்சையான நிலையில் விலகியுள்ளார்.
சென்னை, பல்லாவரம் மறைமலையடிகள் பள்ளியை மாதிரி பள்ளியாக தரம் உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஏப்ரல் 9ஆம் தேதி பள்ளியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது.