Advertisment

Tamil News updates: தொடர் மழை காரணமாக 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Tamil Nadu News Updates: அனைத்து செய்திகளையும் இந்த லிங்கில் தெரிந்துகொள்ளலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sasa

IE tamil Updates

 Tamil News Updates: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லாமல் வெள்ளிக்கிழமை சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்பட்டது.

Advertisment

கலைஞர் `100' விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு

ஒருமுறை திரைப்படம் பார்க்க கலைஞரை கூப்பிட்ட போது நான் இரட்டை இலைக்கு ஓட்டுப்போட்டுவிட்டேன் எனக் கூறியது பத்திரிகைகளில் செய்தியாக வெளியானது. அன்று மாலை திரைப்படம் பார்க்க போவதை குளிர்ஜுரம் எனக் எனக்கூறி தவிர்த்தேன் பின்னர் வைரமுத்து கூறிய பின்னர் நான் போன போது என்னைப் பார்த்துவிட்டு "குளிர்ஜுரமா சூரியனுக்கு அருகில் அமருங்கள் சரியாகிவிடும்" எனக் கூறி என்னை அருகில் அமரவைத்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

  • Jan 07, 2024 20:27 IST
    விஜயகாந்த் குடும்பத்தினருக்கு நடிகை ரோஜா ஆறுதல்

    விஜயகாந்த் காலமானதால், அவருடைய குடும்பத்தினருக்கு நடிகையும் ஆந்திர அமைச்சருமான ரோஜா மற்றும அவரது கணவர் ஆர்.கே. செல்வமனி ஆறுதல் கூறினர். இருவரும் சென்னை, சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில், பிரேமலதா விஜயகாந்த்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.



  • Jan 07, 2024 20:26 IST
    அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் போக்குவரத்து ஊழியர்களுடன் நாளை பேச்சுவார்த்தை

    போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் சிவசங்கர் சென்னை, பல்லவன் இல்லத்தில் நாளை (08.01.2024) காலை 10.30 மணியளவில் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.



  • Jan 07, 2024 19:29 IST
    மோடியை அவதூறு செய்த 3 அமைச்சர்கள் சஸ்பெண்ட் - மாலத்தீவு அரசு நடவடிக்கை 

    பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டதற்காக மாலத்தீவு அரசாங்கம், மரியம் ஷியுனா, மல்ஷா ஷெரீப் மற்றும் மஹ்சூம் மஜித் ஆகிய மூன்று அமைச்சர்கள் இடைநீக்கம் செய்துள்ளது. மாலத் தீவு அரசின் அறிக்கையில், “இதுபோன்ற இழிவான கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டோம்” என்று கூறியுள்ளது



  • Jan 07, 2024 19:23 IST
    உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றி பெறும் - அண்ணாமலை

    பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை: “உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றி பெறும்; 2 நாட்களில் ரூ. 10 லட்சம் கோடி முதலீடு வரும் என எதிர்பார்க்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.



  • Jan 07, 2024 19:19 IST
    சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - வெதர்மேன் பிரதீப் ஜான்

    சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று இரவு முதல் நாளை (08.01.2024) மாலை வரை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் ஜான் பிரதீப் தெரிவித்துள்ளார். இது மிக்ஜாம் புயல் அளவுக்கு தீவிரமாக இருக்காது. இருப்பினும், 100 - 200 மில்லி மீட்டர் வரை மழை பொழியலாம் என்று தனியார் வானிலை கணிப்பாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.



  • Jan 07, 2024 18:42 IST
    இந்தி படிக்க வேண்டாம் என சொல்லவில்லை; விஜய் சேதுபதி

    மெர்ரி கிறிஸ்துமஸ் பட விழாவில் இந்தி தொடர்பான கேள்விக்கு விஜய் சேதுபதி டென்ஷன் ஆனார். அப்போது இந்தி படிக்க வேண்டாம் என சொல்லவில்லை; திணிக்க வேண்டாம்” எனக் கூறுகிறோம் என்றார்.
    மேலும் என்னைப் போன்றோரிடம் ஏன் இந்தக் கேள்வியை திருப்பி திருப்பி கேட்கிறீர்கள் என்றார்.



  • Jan 07, 2024 18:14 IST
    டாடா பவர் நிறுவனம் ரூ.55,000 கோடி முதலீடு

    டாடா பவர் நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.55 கோடி வரை முதலீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காற்றாலை, சூரிய சக்திகளில் இந்த முதலீடு அமைய உள்ளது.



  • Jan 07, 2024 18:08 IST
    சேலத்தில் ₹2,500 கோடி முதலீட்டில் அமைகிறது Aerospace Hub!

     சேலத்தில் ₹2,500 கோடி முதலீட்டில் Aerospace Hub அமைய உள்ளது. இதன் மூலம் 5 ஆண்டுகளில் 15 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.



  • Jan 07, 2024 17:16 IST
    சிறுத்தை அச்சம்; பந்தலூரில் பொதுமக்கள் சாலை மறியல்

    பந்தலூர் பகுதியில் 3 வயது சிறுமி சிறுத்தை தாக்கி உயிரிழந்ததை தொடர்ந்து வனத்துறையினரை கண்டித்து சாலைமறியலில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.



  • Jan 07, 2024 16:55 IST
    தமிழகத்தின் 19 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை, குமரி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, தேனி, கோவை, நீலகிரி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூரில் உள்ளிட்ட தமிழகத்தின் 19 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • Jan 07, 2024 16:37 IST
    முதுமலை கொண்டு செல்லப்படும் சிறுத்தை

    நீலகிரியில் பிடிபட்ட சிறுத்தை முதுமலை புலிகள் காப்பகம் கொண்டு செல்லப்படுகிறது. முன்னதாக 10 நாட்களில் 2 பேரை கொன்ற சிறுத்தையை, மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்



  • Jan 07, 2024 16:24 IST
    4 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

    ஈரோடு, கோபி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த செல்லும் வழியில் காவலர்களிடம் இருந்து 2 கைதிகள் தப்பியோடிய விவகாரத்தில், பாதுகாப்பு பணியில் இருந்து சிறுவலூர் உதவி ஆய்வாளர் உட்பட 4 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்



  • Jan 07, 2024 16:09 IST
    ‘வடக்குப்பட்டி ராமசாமி’ பிப்ரவரி 2ம் தேதி ரிலீஸ்

    சந்தானத்தின் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படம் வரும் பிப்ரவரி 2ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது



  • Jan 07, 2024 15:51 IST
    எரிசக்தித் துறையில் ரூ 1.37 லட்சம் கோடி ஒப்பந்தங்கள்; பேச்சுவார்த்தை நிறைவு

    எரிசக்தித்துறையில் ரூ 1.37 லட்சம் கோடி அளவிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்த பேச்சுவார்த்தை நிறைவு பெற்றுள்ளது. இதன்மூலம் 18,420 மெகாவாட் மின் உற்பத்தி கூடுதலாக மேற்கொள்ளப்பட உள்ளதாக மின்சாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்



  • Jan 07, 2024 15:30 IST
    மிக்ஜாம் புயல் நிவாரண நிதி; ரூ5 கோடி வழங்கிய கோத்ரேஜ்

    மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ5 கோடிக்கான காசோலையை கோத்ரேஜ் நிறுவனத்தின் தலைவர் நிசாபா வழங்கினார்.



  • Jan 07, 2024 14:52 IST
    நீலகிரி சிறுத்தை தாக்கி இருவர் உயிரிழப்பு; மு.க. ஸ்டாலின் நிவாரணம்

     நீலகிரி மாவட்டத்தில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த இருவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹10 லட்சம் நிவாரணமாக வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.



  • Jan 07, 2024 14:35 IST
    சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்திய வனத்துறை

    நீலகிரி, பந்தலூரில் சிறுத்தை தாக்கியதால் 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, புதரில் சிறுத்தை பதுங்கி இருந்தபோது கால்நடை மருத்துவர்கள் மயக்க ஊசி செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுத்தை இருக்கும் பகுதியில் பொதுமக்கள் யாரும் நடமாட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



  • Jan 07, 2024 14:11 IST
    ஆருத்ரா வழக்கு; லாபம் பார்த்த மக்களிடம் விசாரணை

    ஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடி வழக்கில், லாபம் சம்பாதித்த பொதுமக்களின் விவரங்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சேகரித்து வருகின்றனர். ரூ.1 லட்சம் முதலீடு செய்து, ஒரு வருடத்தில் ரூ.3 லட்சம் லாபம் எடுத்துவிட்டு, பின்னர் முதலீடு செய்யாமல் லாபத்துடன் சென்றவர்கள் குறித்து விசாரணை நடைபெறுகிறது. இது போல சுமார் 600 கோடி ரூபாய் வரை லாப பணம் பொதுமக்களுக்கு சென்றுள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்



  • Jan 07, 2024 13:57 IST
    தாமிரபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

    திருநெல்வேலி மாவட்டம் மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தாமிரபரணி ஆற்றில் 5000 முதல் 7000 கனஅடி நீர் செல்ல வாய்ப்புள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் இறங்க வேண்டாம், கால்நடைகளையும் இறக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒரு சில பகுதிகளில் கனமழை வரை பெய்யக்கூடும் என்பதால் கரையோரம் வசிக்கும் மக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது



  • Jan 07, 2024 13:53 IST
    'அயலான்' படத்தின் 3வது சிங்கிள் இன்று மாலை வெளியீடு

    சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள 'அயலான்' படத்தின் 3வது சிங்கிளான 'சுரோ சுரோ' பாடல் இன்று மாலை 4.02 மணிக்கு வெளியாகிறது.



  • Jan 07, 2024 13:43 IST
    முதலீட்டாளர்கள் மாநாடு - சிறப்பான வரவேற்பு

    முதலீட்டாளர்கள் மாநாட்டின் முதல் நாளிலேயே சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. எதிர்பார்த்ததை விட அதிகளவு பார்வையாளர்கள் பதிவு செய்துள்ளனர்.

    1 ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கிற்கான செயல் திட்டத்தை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார் - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா



  • Jan 07, 2024 13:20 IST
    14 மாவட்டங்களில் இன்று கனமழை

    சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு 



  • Jan 07, 2024 13:19 IST
    கோத்ரேஜ் தொழிற்சாலையில் LGBTQ பிரிவினருக்கு பணிஇடம் ஒதுக்கீடு

    செங்கல்பட்டில் தொடங்கவுள்ள தொழிற்சாலையில் LGBTQ பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% பணியிடங்கள் ஒதுக்கீடு - தமிழ்நாடு அரசின் கொள்கையின்படி கோத்ரேஜ் நிறுவனம் அறிவிப்பு

    செங்கல்பட்டில் ரூ.515 கோடி முதலீட்டில் கோத்ரேஜ் தொடங்க உள்ள தொழிற்சாலையில் தமிழ்நாடுஅரசின் அனைவரரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற கொள்கையின்படி வேலைவாய்ப்பில்  LGBTQ பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% பணியிடங்கள் ஒதுக்கப்படும் என அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. 



  • Jan 07, 2024 13:08 IST
    பெண்களின் பங்களிப்பு உயர வேண்டும்- பியூஸ் கோயல்

    பெண்களின் பங்களிப்பு உயர வேண்டும். நாட்டில் பணியுரியும் பெண்களில் 43% பேர் தமிழ்நாட்டில் உள்ளனர். பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு உயர வேண்டும் என விரும்புகிறேன்-  பியூஸ் கோயல்



  • Jan 07, 2024 13:08 IST
    பியூஸ் கோயலுக்கு முதல்வர் நன்றி 

    கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் மாநிலம், அதனால் சிறந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் உண்டு. எனது அழைப்பை ஏற்று வந்துள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுக்கு நன்றி

    வங்கிப் பணியாளராக இருந்து நிதி, வர்த்தகத்துறையில் சிறந்து விளங்குபவர் பியூஸ் கோயல், அழைப்பை ஏற்று வந்துள்ள அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் நன்றி 

    அமெரிக்கா உள்ளிட்ட 9 நாடுகள் எங்களுடன் பங்குதாரராக உள்ளன" - முதல்வர் ஸ்டாலின்



  • Jan 07, 2024 12:21 IST
    எல்லா துறைகளிலும் திறமையான பணியாளர்கள்- ஸ்டாலின் 

    எல்லா துறைகளிலும் திறமையான பணியாளர்கள். தமிழ்நாடு முழுவதும் சீரான வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

    ஏற்கனவே தமிழகத்தில் உள்ள நிறுவனங்கள் தங்கள் திட்டங்களை விரிவுப்படுத்தியுள்ளன. இதுவே தமிழகத்தில் தொழில் தொடங்க சிறந்த சூழல் உள்ளதற்கு சான்று. எல்லா துறைகளிலும் திறமையான பணியாளர்களை தமிழகம் கொண்டுள்ளது. 

    இன்றும், நாளையும் இந்த மாநாட்டில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் சிறப்பு அமர்வுகள் நடைபெற உள்ளன- ஸ்டாலின் 



  • Jan 07, 2024 12:19 IST
    பெண்கள் முன்னேற்றத்தில் தமிழகம் முன்னிலை. 

    பெண்கள் முன்னேற்றத்தில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. பெண்கள் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

    திறமையான இளைஞர் சக்தியை உருவாக்குவதில் தமிழகம் உறுதியாக இருக்கிறது. பொருளாதார வளர்ச்சிக்கு சட்டம் ஒழுங்கு பேணப்பட்டு, அமைதி நிலவ வேண்டும். பொருளாதார வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு சிறப்பாக இருக்க வேண்டும்.

    2021ல் பொறுப்பேற்ற பிறகு இந்த வசதிகளை சிறப்பாக மேம்படுத்தி வருகிறோம்-  முதல்வர் ஸ்டாலின் 



  • Jan 07, 2024 12:18 IST
    மழை போல முதலீடும் மழையாக பெய்யும்- ஸ்டாலின் 

    மழை போல முதலீடும் மழையாக பெய்யும். எல்லா வெளிநாடுகளும் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளதால், தற்போது கோட் சூட் அணிந்துள்ளேன். இன்று சென்னையில் பெய்யும் மழை போல முதலீடும் மழையாக பெய்யும் என நம்புகிறேன்- முதல்வர் ஸ்டாலின் 



  • Jan 07, 2024 12:17 IST
    Mitsubishi நிறுவனத்தில் 60% பெண்களுக்கு முன்னுரிமை

    Mitsubishi நிறுவனம் ரூ.500 கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம். கும்மிடிப்பூண்டியில் அமையவுள்ள Mitsubishi நிறுவனத்தில் 60% பெண்களுக்கு முன்னுரிமை



  • Jan 07, 2024 11:36 IST
    மோடியின் இதயத்தில் தமிழக வளர்ச்சிக்கு தனி இடம்: பியூஸ் கோயல்

    பிரதமரின் இதயத்தில் தமிழக வளர்ச்சிக்கு தனி இடம். பிரதமர் மோடியின் இதயத்தில் தமிழகத்தின் வளர்ச்சிக்கு தனி இடம் உள்ளது. 

    இந்தியாவின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் செங்கோல், தமிழகத்தை சேர்ந்தது- மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்

    இந்தியாவின் பண்பாட்டிற்கு தமிழக கலாச்சாரம் அளித்து வரும் பங்கு மிகப்பெரியது. இந்தியாவின் கலாச்சார தொடர்புகளை பிரதிபலிக்கவே காசி சங்கமம் போன்ற நிகழ்வுகள்" - மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்



  • Jan 07, 2024 11:35 IST
    முதலீடு செய்ய வந்தவர்களை காண்பதில் மகிழ்ச்சி: பியூஸ் கோயல்

    முதலீடு செய்ய வந்தவர்களை காண்பதில் மகிழ்ச்சி. முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவுக்கு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் வாழ்த்து.

    வரலாறு, கலாச்சாரம், இயற்கையில் சிறந்த தமிழகத்திற்கு முதலீடு செய்ய வந்துள்ளனர். முதலீடு செய்ய வந்துள்ள அனைவரையும் காண்பதில் மகிழ்ச்சியடைகிறேன். காஞ்சி பட்டுப்போல பல வண்ணங்களில் குவிந்திருக்கும் அனைவரையும் காண்பதில் மகிழ்ச்சி

    1 ட்ரில்லியன் பொருளாதார இலக்கை நோக்கி செல்லும் தமிழகத்திற்கு வாழ்த்து - மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்



  • Jan 07, 2024 11:15 IST
    தமிழ்நாட்டில் டாடா நிறுவனம் ரூ.12,000 கோடி முதலீடு

    டிவிஎஸ் நிறுவனம்  ரூ.5000 கோடி முதலீடு

    தமிழ்நாட்டில் டிவிஎஸ் நிறுவனம் கூடுதலாக ரூ.5,000 கோடி முதலீடு

    தமிழ்நாட்டில் ஹூண்டாய் நிறுவனம் கூடுதலாக ரூ.6,000 கோடி முதலீடு

    தமிழ்நாட்டில் JSW எனர்ஜி நிறுவனம் ரூ.12,000 கோடி முதலீடு

    தமிழ்நாட்டில் டாடா நிறுவனம் ரூ.12,000 கோடி முதலீடு

    தமிழ்நாட்டில் Pagatron நிறுவனம் ரூ.1,000 கோடி முதலீடு



  • Jan 07, 2024 11:15 IST
    செமிகண்டக்டர் மற்றும் மேம்பட்ட உற்பத்தி கொள்கை 2024 வெளியீடு

    செமிகண்டக்டர் மற்றும் மேம்பட்ட உற்பத்தி கொள்கை 2024 வெளியீடு

    1 ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு செயல் திட்டத்தை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்



  • Jan 07, 2024 10:48 IST
    மத்திய அமைச்சருக்கு ஜல்லிக்கட்டு காளை நினைவுப்பரிசு

     மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுக்கு ஜல்லிக்கட்டு காளை நினைவுப்பரிசை வழங்கினார் முதல்வர் வெளிநாட்டு சிறப்பு விருந்தினர்களுக்கு தமிழக அரசு சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது



  • Jan 07, 2024 10:47 IST
    ரூ.170 கோடியில் QUALCOMM சிப் வடிவமைப்பு மையம் திறந்து வைப்பு

    QUALCOMM சிப் வடிவமைப்பு மையம் திறப்பு ரூ.170 கோடியில் QUALCOMM சிப் வடிவமைப்பு மையம் திறந்து வைப்பு QUALCOMM சிப் வடிவமைப்பு மையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின் கோத்ரேஜ் கன்ஸ்யூமர் புராடெக்ட் கம்பெனிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல்



  • Jan 07, 2024 10:37 IST
    ஹூண்டாய் நிறுவனம் கூடுதலாக ரூ. 6000 கோடி முதலீடு

    தமிழ்நாட்டில் கடந்தாண்டு ரூ. 20,000 கோடி செய்த ஹூண்டாய் நிறுவனம் கூடுதலாக ரூ. 6000 கோடி முதலீடு செய்ய உள்ளதாக சென்னையில் நடக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அறிவிப்பு தமிழ்நாட்டுக்கும் ஹூண்டாய் நிறுவனத்துக்கும் நீண்ட கால தொழில் தொடர்பு உள்ளதாக அந்நிறுவன இந்திய நிர்வாக அதிகாரி பேச்சு



  • Jan 07, 2024 10:36 IST
    தமிழ்நாடு அரசு முன்னேற்றக் கொள்கையில் தீவிரமாக உள்ளது

    தமிழ்நாடு அரசு முன்னேற்றக் கொள்கையில் தீவிரமாக உள்ளது. திறமையுள்ள மனிதவளம் தமிழ்நாட்டில் உள்ளது முழுவதும் பெண்களே பணியாற்றும் வகையில் நாங்கள் உற்பத்தி ஆலையை நடத்தி வருகிறோம். 4000 பெண்கள் அதில் பணியாற்றுகின்றனர் - OLA EV நிறுவன தலைமை செயல் அதிகாரி பவிஷ் அகர்வால் பேச்சு



  • Jan 07, 2024 10:35 IST
    இந்திய தொழில்துறை வளர்ச்சியில் தமிழ்நாடு சிறப்பான பங்களிப்பை வழங்குகிறது

    இந்திய தொழில்துறை வளர்ச்சியில் தமிழ்நாடு சிறப்பான பங்களிப்பை வழங்குகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசின் தொழிற்கொள்கை மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து பல நாடுகளில் பல நிறுவனங்கள் என்னிடம் தெரிவிக்கின்றன - CII தேசிய தலைவர் தினேஷ் பேச்சு



  • Jan 07, 2024 10:34 IST
    நாட்டிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு உள்ளது

    நாட்டிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு உள்ளது மின்வாகன உற்பத்தி, ஆட்டோமொபைல் உள்ளிட்ட பல பிரிவுகளில் தமிழ்நாடு நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உரை



  • Jan 07, 2024 10:16 IST
    சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு



  • Jan 07, 2024 10:13 IST
    உலக முதலீட்டாளர் மாநாடு: ஒரே மேடையில் மு.க.ஸ்டாலின் பியூஷ் கோயல்

     உலக முதலீட்டாளர் மாநாடு - மேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஒன்றிய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் அமர்ந்துள்ளனர். 



  • Jan 07, 2024 09:31 IST
    சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    சென்னையில் மந்தைவெளி, மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.



  • Jan 07, 2024 09:11 IST
    தமிழகத்தில் 19 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் 19 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தி.மலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்



  • Jan 07, 2024 09:09 IST
    குற்றால அருவிகளில் குளிக்க தடை

    குற்றால அருவிகளில் குளிக்க தடை தென்காசி, குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை



  • Jan 07, 2024 08:49 IST
    பெண் பயணியிடம் தரக்குறைவாக பேசிய அரசுப் பேருந்து ஓட்டுநர் சஸ்பெண்ட்

    நீலகிரி மாவட்டம் அய்யன்கொல்லி பகுதியில் பெண் பயணியிடம் தரக்குறைவாக பேசிய அரசுப் பேருந்து ஓட்டுநர் பன்னீர், சஸ்பெண்ட் கைக்குழந்தையுடன் கைகாட்டி நிறுத்திய போது நிற்காமல் சென்றது குறித்து அப்பெண் கேள்வி எழுப்பிய நிலையில், “இது என்ன உன் அப்பன் வீட்டு வண்டியா?” என ஓட்டுநர் தரக்குறைவாக பேசினார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், பன்னீரை சஸ்பெண்ட் செய்து போக்குவரத்துத்துறை நடவடிக்கை



  • Jan 07, 2024 08:49 IST
    வங்கதேச நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது

    வங்கதேச நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது 42,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 1500 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்த பிறகே தேர்தலை நடத்த வேண்டும் எனக்கோரி, பிரதான எதிர்க்கட்சி தேர்தலை புறக்கணித்துள்ளது



  • Jan 07, 2024 08:48 IST
    3 வயது குழந்தையை இழுத்துச் சென்று கொன்ற சிறுத்தை

    நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த பந்தலூர் பகுதியில் 3 வயது குழந்தையை இழுத்துச் சென்று கொன்ற சிறுத்தை. 2 மாதமாக அச்சுறுத்தி வரும் அந்த சிறுத்தையை சுட்டுப் பிடிக்க மாவட்ட நிர்வாகம், வனத்துறை ஆலோசனை



  • Jan 07, 2024 08:31 IST
    இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

    தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.  தமிழ்நாட்டில் வடகடலோர மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  



  • Jan 07, 2024 08:01 IST
    மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குனர் அறிவிப்பு

    வரும் 9ம் தேதி போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குனர் அறிவிப்பு.மாநகரப் போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் உட்பட போக்குவரத்து பணியாளர்கள் அனைவரும் வரும் 9ம் தேதி கட்டாயம் பணிக்கு வர வேண்டும்.போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்திருக்கும் நிலையில், யாருக்கும் விடுப்பு அல்லது ஓய்வு இல்லை.வார விடுமுறை அல்லது பணி ஓய்வில் இருப்பவர்களும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். தொடர் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக பணிக்கு வராத தொழிலாளர்கள் மீது சட்டப்படி ஒழுங்கு நடவடிக்கையும், போராட்டத்தில் கலந்து கொள்ள தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும்.



  • Jan 07, 2024 07:46 IST
    பொங்கல் பரிசுத் தொகுப்பு - இன்று முதல் டோக்கன்

    பொங்கல் பரிசுத் தொகுப்பு - இன்று முதல் டோக்கன் .ஜனவரி 10 முதல் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் டோக்கன் இன்று முதல் வழங்கப்படும் என்றும் அறிவிப்பு.



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment