Advertisment

Tamil News updates: ஈரான், இஸ்ரேலுக்கு செல்ல வேண்டாம்- இந்தியர்களுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

Tamil News Updates- 12 April 2024- செய்திகளை தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Parandur Airport

Live updates

Tamil News Updates :  பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75 காசுகளாவும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

மருத்துவமனைக்குள் புகுந்த சிறுத்தை

மயிலாடுதுறையை தொடர்ந்து அரியலூரிலும் சிறுத்தை நடமாட்டம். செந்துரை அரசு மருத்துவமனைக்குள் சிறுத்தை செல்லும் சிசிடிவி காட்சி வெளியீடு.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

  • Apr 13, 2024 07:05 IST
    ஈரான், இஸ்ரேலுக்கு செல்ல வேண்டாம்

    தற்போது நிலவி வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து இந்தியர்களும் ஈரான் மற்றும் இஸ்ரேலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    தற்போது ஈரான் மற்றும் இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள் அங்குள்ள இந்திய தூதரகங்களை தொடர்பு கொண்டு தங்கள் இருப்பிடத்தை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    - இந்தியர்களுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்



  • Apr 12, 2024 21:51 IST
    கர்நாடகாவில் முழு வெற்றி பெற வேண்டும்; குமாரசாமி

     

    “என்.டி.ஏ., ஒருங்கிணைப்பு கூட்டத்திற்கு பின், முன்னாள் முதல்வரும், ஜே.டி.எஸ்., தலைவருமான, எச்.டி.குமாரசாமி கூறுகையில், ''பாஜக, ஜேடிஎஸ் என இரு கட்சிகளும் கூட்டாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. அனைவரும் முழு நம்பிக்கையுடனும், நேர்மையுடனும் பணியாற்றி வருகின்றனர். அனைத்து இடங்களிலும் வெற்றி பெற வேண்டும்” என்றார்.



  • Apr 12, 2024 21:48 IST
    காஞ்சிபுரத்தில் அ.தி.மு.க வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

    திருக்குழுக்குன்றம் தெற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் பொதுமக்களை சந்தித்து அ.தி.மு.க வேட்பாளர் வாக்கு சேகரித்தார்.



  • Apr 12, 2024 21:14 IST
    மு.க.ஸ்டாலின் என் அண்ணன் : ராகுல்காந்தி

    மு.க.ஸ்டாலின் என் அண்ணன் என்று கூறியுள்ள ராகுல்காந்தி  மு.க.ஸ்டாலினை தவிர வேறு யாரையும் நான் சகோதரர் என்று அழைத்ததில்லை என கூறியுள்ளார்.



  • Apr 12, 2024 21:12 IST
    ``தமிழர்கள் யாரை எப்படி மதிக்க வேண்டும் என்பது தெரியும்'' : ராகுல் காந்தி

    தமிழர்களுக்கு யாரை எப்படி மதிக்க வேண்டும் என்பது தெரியும். இங்கு வந்து தோசை பிடிக்கும் என சொல்லும் நீங்கள், கலாச்சாரத்தை ஏன் அவமதிக்கிறீர்கள்? உங்களுக்கு தோசை மட்டுமல்ல வடை கூட பிடிக்கலாம், அது தற்போது பிரச்சினை இல்லை'' என ராகுல் காந்தி மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.



  • Apr 12, 2024 20:38 IST
    தி.மு.க ஆட்சியில் விலைவாசி உயர்வு; எடப்பாடி பழனிசாமி

    தி.மு.க ஆட்சியில் விலைவாசி உயர்ந்துள்ளது. அனைத்து பொருள்களின் விலைவாசியும் கடுமையாக உயர்ந்துள்ளது என எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.



  • Apr 12, 2024 20:35 IST
    நாட்டில் அதானி அரசு நடக்கிறது: ராகுல் காந்தி கடும் விமர்சனம்

    நாட்டில் தற்போது அதானி அரசு நடக்கிறது. மத்தியில் இருப்பது மோடி அரசு அல்ல; அதானி அரசு.
    அதானி விரும்பியதால் மும்பை விமான நிலையம் சில மாதங்கள் அவர் கைக்கு சென்றது.



  • Apr 12, 2024 20:28 IST
    இந்த வழித்தடங்களில் திருப்பதி ரயில் ரத்து

    திருப்பதி ரயில்வே யார்டில் நடந்து வரும் பணிகள் காரணமாக ஏப்ரல் 16ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை சென்னை, அரக்கோணம், விழுப்புரத்தில் இருந்து திருப்பதி செல்லும் ரயில்கள் பகுதி ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Apr 12, 2024 20:18 IST
    மதுரையில் அமித் ஷா ரோடு ஷோ; பொன்னாடை அணிவித்த மதுரை ஆதீனம்

    மதுரையில் அமித் ஷா நடத்திய ரோடு ஷோ நிகழ்ச்சியின்போது மதுரை ஆதீனத்தை பார்த்ததும் வாகனத்தை நிறுத்தினார்.
    அப்போது அவருக்கு சால்வை, பொன்னாடையை மதுரை ஆதீனம் அணிவித்தார்.



  • Apr 12, 2024 20:03 IST
    கோவை; ஒரே மேடையில் ராகுல், ஸ்டாலின் பரப்புரை

    கோவையில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டாக பரப்புரையில் ஈடுபட்டனர்.
    ராகுல் காந்திக்கு மஞ்சள் துண்டு அணிவித்து மு.க. ஸ்டாலின் வரவேற்பு அளித்தார்.



  • Apr 12, 2024 19:59 IST
    கோவைக்கு வந்த நிறுவனத்தை குஜராத்துக்கு திருப்பிய பா.ஜனதா; மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

     

    ரூ.6500 கோடி நிறுவனத்தை கோவையில் இருந்து குஜராத்துக்கு பா.ஜனதா கட்சியினர் திருப்பி விட்டனர் என மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.



  • Apr 12, 2024 19:44 IST
    வெளிநாட்டில் இருக்கும் மோடி தேர்தல் நேரத்தில் தமிழ்நாடு வருகிறார்; மு.க. ஸ்டாலின்

    “எப்போதும் வெளிநாட்டு டூரில் இருக்கும் பிரதமர் மோடி, தற்போது தேர்தல் என்பதால் தமிழ்நாட்டுக்கு டூர் அடிக்கடி வருகிறார்” என மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.
    மேலும், “10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் செய்த எதையும் சொல்லி வாக்கு கேட்க முடியாத நிலையில் அவர் இருக்கிறார். குடும்ப அரசியல், ஊழல் கட்சி என கூறி வருகிறார். ஊழலுக்கு ஒரு பல்கலைக்கழகம் கொண்டு வந்தால் அதன் வேந்தராக பிரதமர் மோடி இருப்பார்” என்றார்.



  • Apr 12, 2024 18:37 IST
    தி.மு.க ஆட்சியில் விலைவாசி உயர்வு - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

     நாமக்கல்லில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை செய்தபோது பேசியதாவது: “தி.மு.க-வின் 3 ஆண்டு ஆட்சியில் விலைவாசி உயர்ந்துள்ளது; செங்கல், மணல், கம்பி உள்ளிட்டவற்றின் விலை உயர்வால், வீடு கட்டுவது கனவாகவே உள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் கட்டுமானப் பொருட்களை சேர்க்க வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை” என்று என்று விமர்சித்தார்.



  • Apr 12, 2024 17:47 IST
    அமைச்சர் உதயநிதியின் காரை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை

    தென்காட்சி தொகுதி, சங்கரன் கோயிலில் பிரச்சாரத்தை முடித்து செல்லும்போது, தமிழக அமைச்சர் உதயநிதியின் காரை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். 



  • Apr 12, 2024 17:43 IST
    பரமத்தி வேலூரில் ரூ. 2.83 கோடி பறிமுதல்

    நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2.83 கோடி பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 



  • Apr 12, 2024 17:41 IST
    திருமயம் செல்வதாக இருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பயணம் ரத்து

    மழை காரணமாக புதுகோட்டை மாவட்டம் திருமயம் செல்வதாக இருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருமயம் பைரவர் கோயிலுக்கு செல்வதாக இருந்த அமித்ஷாவின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.



  • Apr 12, 2024 17:41 IST
    திருமயம் செல்வதாக இருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பயணம் ரத்து

    மழை காரணமாக புதுகோட்டை மாவட்டம் திருமயம் செல்வதாக இருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருமயம் பைரவர் கோயிலுக்கு செல்வதாக இருந்த அமித்ஷாவின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.



  • Apr 12, 2024 16:37 IST
    தமிழ்நாடு இந்தியாவை பிரதிபலிக்கும் அற்புத கண்ணாடி - நெல்லையில் ராகுல் காந்தி பேச்சு

    நெல்லையில் ராகுல் காந்தி பேச்சு: “இந்தியாவில் தற்போது பெரும் சித்தாந்த போர் நடக்கிறது. ஒரு பக்கம் பெரியார் போதித்த சமூக நீதி, சமத்துவம், விடுதலை இருக்கிறது. மற்றொரு பக்கம் மோடியைப் போன்றவர்கள் கொண்டாடும் வெறுப்பும், துவேசமும் இருக்கிறது. மோடி சொல்லும் ஒரே நாடு, ஒரே மொழி, என சொல்கிறார். இந்தியாவில் உள்ள பிற மொழிகளை விட தமிழ் எந்த வகையிலும் குறைந்தது இல்லை.  தமிழ்நாட்டு மக்களின் மொழி, கலாச்சாரம், பண்பாடு, அன்பு இவையெல்லாம் என்னை ஈர்த்தவை

    எப்போதெல்லாம் இந்தியாவை புரிந்துகொள்ள விரும்புகிறேனோ, அப்போது எல்லாம் தமிழ்நாட்டைப் பார்க்கிறேன். தமிழ்நாடு இந்தியாவை பிரதிபலிக்கும் அற்புத கண்ணாடியாக உள்ளது." என்று கூறினார்.



  • Apr 12, 2024 16:31 IST
    10 ஆண்டுகளாக பா.ஜ.க அரசு எதுவும் செய்யவில்லை - செல்வப்பெருந்தகை

    தமிழக காங். தலைவர் செல்வப்பெருந்தகை: "10 ஆண்டுகளாக பா.ஜ.க அரசு எதுவும் செய்யவில்லை. இந்தியா கூட்டணி வென்றால் தான் நாட்டை காப்பாற்ற முடியும். சென்னதை மட்டுமல்ல, சொல்லாத வாக்குறுதிகளையும் திமுக நிறைவேற்றியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.



  • Apr 12, 2024 15:34 IST
    சிதம்பரத்தில் நிர்மலா சீதாராமன் பிரசாரம்

    சிதம்பரம் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் கார்த்தியாயினியை ஆதரித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர், "மத்திய அரசு ஏழை மக்களுக்கு இலவச அரிசி வழங்கி வருகிறது. விவசாயிகளின் நலனை காக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது" என்று கூறியுள்ளார். 



  • Apr 12, 2024 15:32 IST
    தேர்தல் விதி மீறல் வழக்குப்பதிவு - அண்ணாமலை விளக்கம் 

    ``இரவு 10 மணிக்கு மேல் நான் மைக்கில் பேசிய வீடியோ இருந்தால் வெளியிடுங்கள். பாஜகவினரை திமுகவினர் தள்ளிவிட்டதால் தான் கைகலப்பு ஏற்பட்டது. 

    தேர்தல் விதிகளை நான் மீறவில்லை, தேர்தல் விதிகள் எனக்கு நன்றாக தெரியும். காவல்துறை அனுமதியோடு தான் கூட்டம் நடைபெற்றது'' 
     என்று தேர்தல் விதி மீறல் வழக்குப்பதிவு  தொடர்பாக அண்ணாமலை விளக்கமளித்துள்ளார். 



  • Apr 12, 2024 15:05 IST
    கோவைக்கு பா.ஜ.க தேர்தல் வாக்குறுதி வெளியீடு 

    "100 வாக்குறுதிகள் - 500 நாட்களில் நிறைவேற்றப்படும்" என்று கூறி பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். 

    அதில் ``கோவை எப்போதும் பசுமையாக இருக்க மரங்கள் நட்டு பசுமை பரப்பை அதிகரிக்க நடவடிக்கை. பல்லடத்தை ஆயத்த ஆடை உற்பத்தி மையமாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். சரவணம்பட்டியில், மக்களின் பொழுதுபோக்குக்காக பொதுப்பூங்கா அமைக்க நடவடிக்கை. கோவையில் ஐ.ஐ.எம் கொண்டுவர வலியுறுத்துவோம். கோவையில் இருந்து ஆன்மிக தளங்களுக்கு 10 புதிய ரயில்கள் இயக்கம். 250 மக்கள் மருந்தகம் ஒன்றரை ஆண்டுகளில் கொண்டு வரப்படும்'' உள்ளிட்டவை அடங்கும் 



  • Apr 12, 2024 14:18 IST
    10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி,மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 



  • Apr 12, 2024 14:17 IST
    மீனவர்களுக்கு எச்சரிக்கை

    "மன்னார் வளைகுடா, குமரிக் கடல் பகுதியில் 45 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இன்றும், நாளையும் கடலுக்கு செல்ல வேண்டாம்" என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 



  • Apr 12, 2024 13:55 IST
    நாளைக்குள் பூத் சிலிப் விநியோகம் -  சத்யபிரதா சாகு

    "தமிழகத்தில் 70 சதவீத வாக்காளர்களுக்கு  பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது. நாளைக்குள் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்படும்" என்று  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். 



  • Apr 12, 2024 13:54 IST
    ஓட்டு மெஷினில் நாம் தமிழருக்கு சின்னம் மாற்றம்?: சத்யபிரதா சாகு விளக்கம்

    நாம் தமிழர் கட்சிக்கு வழங்கப்பட்ட மைக் சின்னம் தான் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை ரூ. 305.74 கோடியை வருமானவரித்துறை கைப்பற்றியுள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். 

     



  • Apr 12, 2024 13:27 IST
    தமிழகத்திற்கு அள்ளி அள்ளி கொடுத்தவர் பிரதமர் மோடி

    தமிழகத்திற்கு அள்ளி அள்ளி கொடுத்தவர், பிரதமர் மோடி. என்னை வெற்றிபெற செய்தால் விருதுநகரிலேயே தங்கி இருந்து மக்களுக்கு சேவை செய்வேன்மதுரையில் 33 மாதங்களில் எம்ய்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வரும். விருதுநகரில் ரூ.2,489 கோடியில் ஜவுளி பூங்கா கொண்டு வந்தது பாஜக அரசு தான்.

    விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார்



  • Apr 12, 2024 13:25 IST
    அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை

    சிறுத்தை நடமாட்டத்தால் ஏற்பட்ட அச்சம் காரணமாக அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளி சென்ற மாணவர்கள் மதியம் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள்

    அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா உத்தரவு



  • Apr 12, 2024 12:52 IST
    பாஜக ஆட்சியின் முடிவுக்கான Countdown ஆரம்பம் ஆகிவிட்டது



  • Apr 12, 2024 12:52 IST
    அண்ணாமலை மீது வழக்குப்பதிவு

    தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக கோவை வேட்பாளரும், பாஜக மாநில தலைவருமான அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    நேற்று (ஏப்.11) ஆவாரம்பாளையம் பகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பிரசாரம் செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் நடவடிக்கை



  • Apr 12, 2024 12:51 IST
    அரசு செயல்படுத்திவரும் திட்டங்களை தொடரலாம்

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை பயனாளர்களுக்கு அளிக்க எந்த தடையும் இல்லை. அரசு செயல்படுத்திவரும் திட்டங்களை தொடரலாம் என தேர்தல் விதிகள் உள்ளது. எனவே, தேர்தல் ஆணையத்தில் எந்த அனுமதியும் பெற தேவையில்லை

    - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு



  • Apr 12, 2024 12:35 IST
    மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து கடிதம்

    மத்திய அரசுக்கு  கண்டனம் தெரிவித்து தலைமை தேர்தல் ஆணையருக்கு ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர்.

    எதிர்க்கட்சிகள் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் மத்திய அரசை கண்டு தேர்தல் ஆணையம் மவுனமாக இருக்கக்கூடாது. அரசியல் சட்டப்பிரிவு 324-வது பிரிவின்படி விசாரணை அமைப்புகளை தேர்தல் ஆணையம் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்

    ஊழலை ஒழிப்பதில் மாற்றுக்கருத்து இல்லை ஆனால், தேர்தல் நேரத்தில் பழிவாங்குவது தவறு. தேர்தல் ஆணையம் தங்கள் கடமையை மறந்து உடனடி நடவடிக்கை எடுக்காதது ஆழ்ந்த வேதனை அளிக்கிறது.

    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றி எழுப்பிய சந்தேகங்களை போக்க  தேர்தல் ஆணையம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. பாஜகவினர் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதில் உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் தவறிவிட்டது.

    - ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள்



  • Apr 12, 2024 11:31 IST
    டெல்லி மாநில அரசை கவிழ்க்க நடக்கும் சதி

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி மாநில அரசை கவிழ்க்க சதி நடப்பதால் தான், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்  எந்த ஆதாரமும் இல்லாமல் கைது செய்யப்பட்டுள்ளார்.

    தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து அரசு அதிகாரிகள் கூட்டங்களில் கலந்துகொள்வதை நிறுத்திவிட்டனர். துணை நிலை ஆளுநரின் அழுத்தும் காரணமாக முதலமைச்சரின் தனிப்பட்ட செயலாளரை உள்துறை அமைச்சகம்  நீக்கியுள்ளது.

    இவை அனைத்தும் டெல்லி மாநில அரசை கவிழ்க்க நடக்கும் சதியை காட்டுகிறது.

    - டெல்லி நிதியமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான அதிஷி பேட்டி



  • Apr 12, 2024 11:29 IST
    கணபதி ராஜ்குமார் செய்தியாளர் சந்திப்பு

    தோல்வி பயத்தில் பாஜக வன்முறையை தூண்டுகிறது. கோவை அமைதி விரும்பும் நகரம்.. இங்கு ரவுடிசம் எடுபடாது. வெளிமாநிலங்களில் இருந்து ஆட்களை அழைத்து வந்து கோவையில் பாஜகவினர் வன்முறையில் ஈடுபடுகின்றனர்.

    - ஆவாரம்பாளையத்தில் பாஜகவினர் வன்முறையில் ஈடுபட்டது குறித்து கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் விளக்கம்



  • Apr 12, 2024 11:29 IST
    சித்திரைப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

    உலகப் புகழ் பெற்ற மீனாட்சியம்மன் கோயில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.

    ஏப்ரல் 19ம் தேதி மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம், ஏப்ரல் 21ல் திருக்கல்யாணம், ஏப்ரல் 23ம் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடைபெற உள்ளது.



  • Apr 12, 2024 10:56 IST
    பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய 2 பேர் கைது

    முக்கிய குற்றவாளிகளான முசாவிர் ஹுசைன் ஷாஜிப், அப்துல் மதின் தாஹா ஆகிய 2 பேர் மேற்கு வங்கத்தில் கைது குண்டுவெடிப்புக்கு பிறகு மேற்கு வங்கத்தில் தலைமறைவாக இருந்த இருவரையும் கைது செய்தது, என்.ஐ.ஏ. வெடிகுண்டு தயாரிப்பதற்கான தளவடாங்களை சப்ளை செய்த முஸாமில் ஷெரீஃப் என்பவர், கடந்த மார்ச் 27ல் கைது செய்யப்பட்டார் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் இதுவரை 3 பேரை கைது செய்தது, என்.ஐ.ஏ.



  • Apr 12, 2024 10:38 IST
    தீபத்தை ஏற்ற தீப்பெட்டியில் இருக்கும் இறுதி தீக்குச்சி தான்- சீமான்

    தீபத்தை ஏற்ற தீப்பெட்டியில் இருக்கும் இறுதி தீக்குச்சி தான் நாம் தமிழர் கட்சி தேர்தல் பிரசாரத்தில் சீமான் பேச்சு.



  • Apr 12, 2024 10:38 IST
    அ.தி.மு.க-வுடன் பா.ம.க கூட்டணி வைக்கவில்லை என்றால், அப்போதே அ.தி.மு.க ஆட்சி கவிழ்ந்திருக்கும்

    கடந்த 2019-ஆம் ஆண்டு, அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்கவில்லை என்றால், அப்போதே அ.தி.மு.க ஆட்சி கவிழ்ந்திருக்கும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து. 



  • Apr 12, 2024 10:19 IST
    சவரனுக்கு ரூ.640 அதிகரிப்பு

     சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரிப்பு தங்கம் ஒரு கிராம் ரூ.6,805-க்கும், சவரன் ரூ.54,440-க்கும் விற்பனையாகிறது.



  • Apr 12, 2024 10:19 IST
    வீட்டிற்குள் நுழைந்து மாதுளை பழம் பறித்த சிறுவர்களை கட்டி வைத்து காலில் சூடு வைத்த வீட்டு உரிமையாளர்

    வீட்டிற்குள் நுழைந்து மாதுளை பழம் பறித்த சிறுவர்களை கட்டி வைத்து காலில் சூடு வைத்த வீட்டு உரிமையாளர் போலீசில் புகாரளித்தும் நடவடிக்கை இல்லை - தாய் குற்றச்சாட்டு



  • Apr 12, 2024 09:46 IST
    அமலாக்கத்துறை, வருமான வரித்துறை என எதற்கும் பயப்படாதவன் இந்த விவசாயி எடப்பாடி பழனிசாமி

    மத்திய ஆட்சியாளர்கள் சொல்லும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை என எதற்கும் பயப்படாதவன் இந்த விவசாயி எடப்பாடி பழனிசாமி.  ஆரணி தேர்தல் பிரசாரத்தில் இ.பி.எஸ் 



  • Apr 12, 2024 09:03 IST
    வெடி விபத்து : பா.ஜ.கவினர் மீது வழக்கு

    நாகையில் பிரசாரத்தின் போது வெடி வெடித்து குடிசை வீடுகள் எரிந்த விவகாரத்தில் பா.ஜ.க-வினர் மீது வழக்கு பதிவு வீட்டின் உரிமையாளர்கள், விஏஓ கொடுத்த புகாரின் பேரில் 3 வழக்கு பதிவு.



  • Apr 12, 2024 09:02 IST
    பிரதமர் தமிழ்நாட்டில் வீடு எடுத்து தங்கினாலும் பா.ஜ.க வெல்லாது

    பிரதமர் தமிழ்நாட்டில் வீடு எடுத்து தங்கினாலும் பா.ஜ.க வெல்லாது.தமிழ்நாடு மீது பிரதமருக்கு எந்த அக்கறையும் இல்லை " "தேர்தலுக்கு தேர்தல் பேன்ஷி டிரஸ் ஷோ போல வந்து செல்கிறார். பாஜக கொண்டு வரும் சட்டத்தை எதிர்த்தால் விசாரணை அமைப்புகளை வைத்து மிரட்டல். பாஜகவின் உருட்டல், மிரட்டல்களுக்கு பயப்பட மாட்டோம். - உதயநிதி 



  • Apr 12, 2024 07:52 IST
    இன்று முதல் 2 நாட்களுக்கு நிர்மலா சீதாராமன் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில் பிரசாரம்

    இன்று முதல் 2 நாட்களுக்கு நிர்மலா சீதாராமன் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில் பிரசாரம் பொதுக் கூட்டங்கள், ரோடு ஷோ நடத்த ஏற்பாடு. 



  • Apr 12, 2024 07:51 IST
    இன்று தமிழகம் வரும் அமித்ஷா

    இன்று தமிழ்நாடு வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.  காரைக்குடி, மதுரையில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். 



  • Apr 12, 2024 07:50 IST
    இன்று தமிழகம் வரும் ராகுல்காந்தி

     மக்களவை தேர்தலை முன்னிட்டு இன்று தமிழ்நாடு வருகிறார், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி.  காலையில் நெல்லையிலும், மாலையில் கோவையிலும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். 



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment