Advertisment

Tamil News Updates: போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது- போதிய பேருந்துகள் இயங்காததால் மக்கள் அவதி

Tamil Nadu News Updates: அனைத்து செய்திகளையும் இந்த லிங்கில் தெரிந்துகொள்ளலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TN Bus

IE Tamil Updates

Tamil Live News Updates: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லாமல் வெள்ளிக்கிழமை சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்பட்டது.

Advertisment

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது

தமிழ்நாட்டில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை தொடங்கிய நிலையில், பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பேருந்துகள் வழக்கமான அளவில் இயக்கப்படவில்லை. இந்த வேலைநிறுத்தத்தால், வெளியூர்களுக்கு குறைவான எண்ணிக்கையிலேயே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளதால், பேருந்து சேவை பெருமளவு பாதிக்கப்படும் என்ற அச்சம் பயணிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • Jan 09, 2024 06:18 IST
    அனைத்து பேருந்துகளையும் இயக்குவதற்கு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

    “தேவைப்படும் பட்சத்தில் ராணுவ பயிற்சி ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பேருந்துகளை இயக்க அழைக்கப்படுவார்கள். அனைத்து பேருந்துகளையும் இயக்குவதற்கு ஏதுவாக அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் மேலாண்மை இயக்குனர் தெரிவித்தார். 



  • Jan 09, 2024 06:16 IST
    பகலிலும் ஆம்னி பேருந்துகளை இயக்க தயார் என அறிவிப்பு

    அரசு கோரிக்கை வைத்தால் இரவு வேளைகள் மட்டுமின்றி, பகலிலும் ஆம்னி பேருந்துகளை இயக்க தயார் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளனர்.



  • Jan 09, 2024 06:11 IST
    திருவண்ணாமலையில் இரவு  11 மணி அளவில் அரசு பேருந்துகள் இயக்கம் 80 சதவீதம் முடங்கியதால் மக்கள் அவதி 

    திருவண்ணாமலையில் இரவு  11 மணி அளவில் அரசு பேருந்துகள் இயக்கம் 80 சதவீதம் முடங்கியதால் மக்கள் மிகவும் அவதிக்குள்ளானார்கள். பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டதால் பக்தர்கள் பேருந்து நிலையத்தில் தூங்கும் அவல நிலை ஏற்பட்டது.



  • Jan 08, 2024 22:33 IST
    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் மத்திய அரசின் குழு ஜன. 11 முதல் 14 வரை ஆய்வு

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் வரும் 11-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை மத்திய அரசின் குழு ஆய்வு மேற்கொள்கிறது. வரும் 11ம் தேதி தூத்துக்குடி செல்லும் 7 பேர் கொண்ட குழு ஆட்சியர் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு ஆய்வு மேற்கொள்ள உள்ளது.



  • Jan 08, 2024 22:05 IST
    புதுச்சேரியில் பொங்கல் பரிசு ரூ.500 வழங்குவதற்கு - ஆளுநர் ஒப்புதல்

    புதுச்சேரியில் பொங்கல் சிறப்பு பொருட்களுக்கு பதிலாக பரிசு ரூ.500 ரொக்கமாக வழங்கப்பட உள்ளது. அரசு ஊழியர்கள், கௌரவ அட்டைதாரர்கள் அல்லாத அனைத்து அட்டைதாரர்களுக்கும் ரூ.500 தருவதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.



  • Jan 08, 2024 22:03 IST
    வண்டலூர் உயிரியல் பூங்கா விடுமுறை நாளான ஜன. 16-ம் தேதி திறந்திருக்கும்

    வண்டலூர் உயிரியல் பூங்கா விடுமுறை நாளான ஜன. 16-ம் தேதி திறந்திருக்கும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது. பிளாஸ்டிக் பொருட்கள், புகையிலை, மது போன்றவற்றைக் கொண்டுவருவதை பார்வையாளர்கள் தவிர்க்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Jan 08, 2024 22:01 IST
    கனமழை: காரைக்காலில் ஜன. 09 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

    கனமழை காரணமாக காரைக்காலில் நாளை (09.01.2024) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Jan 08, 2024 21:50 IST
    பஸ் ஊழியர் ஸ்ட்ரைக்: போராட்டத்தில் இருந்து விலகிய காங்கிரஸ் தொழிற்சங்கம்

     

    மக்கள் பாதிக்கக் கூடாது என்ற நோக்கில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இருந்து விலகுகிறோம் என்று காங்கிரஸ் தொழிற்சங்கமான ஐ.என்.டி.யூ.சி அறிவித்துள்ளது.



  • Jan 08, 2024 20:58 IST
    புதுச்சேரியில் பொங்கல் பரிசு ரூ.500 - ஆளுநர் ஒப்புதல்

    புதுச்சேரியில் பொங்கல் பரிசாக ரூ.500 வழங்கப்பட உள்ளது. இதற்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் வழங்கி உள்ளார்.
    புதுச்சேரியில் பொங்கல் சிறப்பு பொருள்களுக்கு பதிலாக ரூ.500 வழங்கப்பட உள்ளது. அரசு ஊழியர்கள், கௌரவ அட்டைதாரர்கள் அல்லாத அனைத்து அட்டைதாரர்களுக்கும் ரூ.500 பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது.



  • Jan 08, 2024 20:38 IST
    எண்ணூர் வாயு கசிவு; பசுமை தீர்பாயம் முக்கிய உத்தரவு

    சென்னை எண்ணூர் பகுதியில் உள்ள கோரமண்டல் தொழிற்சாலையில் இருந்து அம்மோனியா வாயுக்கசிவு குறித்து தீவிரமாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய கடல்சார் வாரியம் மற்றும் தொழில் பாதுகாப்புத்துறைக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.



  • Jan 08, 2024 20:37 IST
    "தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக முதலீடு"- அப்பல்லோ ப்ரீத்தா பேட்டி


    உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற அப்போலோ மருத்துவக் குழுமத்தின் துணை தலைவர் ப்ரீத்தா, "தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக முதலீடு செய்து வருகிறோம்" என்றார்.



  • Jan 08, 2024 20:36 IST
    பொன்னேரி திருப்பாலைவனம் காவல் நிலையங்கள் ஆவடி சரகத்துடன் இணைப்பு

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி மற்றும் திருப்பாலைவனம் காவல் நிலையத்தை ஆவடி காவல் ஆணையரகத்துடன் இணைத்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
    கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுருந்தார். இதன் மூலம் ஆவடி காவல் ஆணையரகத்தில் 27 காவல் நிலையங்கள் செயல்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



  • Jan 08, 2024 20:35 IST
    கேப்டன் விஜயகாந்த் உருவ படத்துக்கு ராகவா லாரன்ஸ் அஞ்சலி


    மறைந்த தேமுதிக நிறுவனத் தலைவரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் திருவுருவ படத்துக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று மரியாதை செலுத்தினார்.



  • Jan 08, 2024 19:36 IST
    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு; மாடுபிடி வீரர்களுக்கு அழைப்பு


    உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் ஜனவரி 10ம் தேதி பகல் 12 மணி முதல் ஜன.11 ம் தேதி பகல் 12 மணி வரை http://madurai.nic.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.



  • Jan 08, 2024 19:33 IST
    ஜன.16 வண்டலூர் பூங்கா திறப்பு

     

    பொங்கல் விடுமுறையை தொடர்ந்து, வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா வருகிற 16ஆம் தேதி (செவ்வாய்) திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    மேலும், “பார்வையாளர்கள் கண்டிப்பாக பிளாஸ்டிக் பொருட்களை கொண்டுவர வேண்டாம்” எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



  • Jan 08, 2024 18:54 IST
    ஜன.28ல் முதல்வர் ஸ்டாலின் ஸ்பெயின் பயணம்

    ஜனவரி 28ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின், ஆஸ்திரேலியா பயணம் செய்ய உள்ள நிலையில், இந்த பயணங்களை முடித்துக்கொண்டு, அதன் பிறகு, அமெரிக்கா செல்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.



  • Jan 08, 2024 18:18 IST
    "ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றியாளருக்கு காருக்கு பதில் டிராக்டர்: அன்புமணி ராமதாஸ்

    "ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறுவோர்களுக்கு பரிசாக காருக்கு பதிலாக விவசாயிகளுக்கு தேவைப்படும் டிராக்டர் உள்ளிட்ட கருவிகளை தமிழக அரசு வழங்க வேண்டும்" என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.



  • Jan 08, 2024 17:30 IST
    உலக முதலீட்டாளர்கள் மாநாடு : 6.64 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் என தகவல்

    சென்னையில் நடந்து வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ₹6.64 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. 14.54 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பை சேர்த்து மொத்தமாக, 26.90 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறும் என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.



  • Jan 08, 2024 17:28 IST
    "கேப்டன் கூட வேலை செஞ்சது ரொம்ப பெருமையா இருக்கு : நடிகர் சூரி

    "கேப்டன் கூட வேலை செஞ்சது ரொம்ப பெருமையா இருக்கு" சென்னை கோயம்பேட்டில் உள்ள மறைந்த கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியபின் நடிகர் சூரி பகிர்ந்த தகவல்!



  • Jan 08, 2024 16:53 IST
    கள்ளக்குறிச்சியில் காலணிகள் உற்பத்தி ஆலை; ஸ்டாலின் அடிக்கல்

    கள்ளக்குறிச்சியில் தோல் அல்லாத காலணிகள் உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ 2302 கோடி முதலீட்டில் அமைக்கப்படும் இந்த ஆலையால் 20,000 பேருக்கு வேலை வாய்ப்பு அமையும்



  • Jan 08, 2024 16:41 IST
    கனமழையால் செய்யூர் அரசு மருத்துவமனையை சூழ்ந்த மழை நீர்

    கனமழையால் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அரசு மருத்துவமனையை மழை நீர் சூழ்ந்தது. இதனையடுத்து நோயாளிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்



  • Jan 08, 2024 16:22 IST
    வங்கிக் கணக்கில் பொங்கல் பரிசுத் தொகை; தமிழக அரசு பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

    பொங்கல் பரிசுத் தொகை ரூ.1000ஐ வங்கிக் கணக்கில் வரவு வைப்பது குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மகளிர் உரிமை தொகையைப் போல் பொங்கல் பரிசையும் வங்கி கணக்கில் செலுத்த பரிசீலிக்கலாம். மேலும் சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் வழங்குவது குறித்தும் பரிசீலிக்கலாம் என தமிழக அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.



  • Jan 08, 2024 16:03 IST
    பொங்கல் பண்டிகை; 19,484 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் சிவசங்கர்

    பொங்கல் பண்டிகையை ஒட்டி 11,006 சிறப்பு பேருந்துகள் சென்னையில் இருந்து இயங்கும். மாநிலம் முழுவதும் 19,484 பேருந்துகள் இயக்கப்படும் கோயம்பேடு, தாம்பரம், கிளாம்பாக்கம் ஆகிய பேருந்து நிலையங்களில் முன்பதிவு மையங்கள் செயல்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்



  • Jan 08, 2024 15:53 IST
    மின்துறையில் ரூ.1.75 லட்சம் கோடி முதலீடு

    இரண்டு நாள் உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் மின்துறையில் தமிழகத்திற்கு ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்



  • Jan 08, 2024 15:37 IST
    போக்குவரத்து சங்கங்கள் ஸ்டிரைக் அறிவிப்பு; அதிகாரிகளுடன் அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை

    திட்டமிட்டபடி நாளை வேலைநிறுத்தம் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் போக்குவரத்து துறை உயரதிகாரிகள், காவல்துறையினர் பங்கேற்றுள்ளனர்.



  • Jan 08, 2024 15:21 IST
    காவல் நிலைய மரணம்; பிரேத பரிசோதனை செய்ய ஐகோர்ட் உத்தரவு

    விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, காவல் நிலையத்தில் மரணமடைந்த பாலகிருஷ்ணன் உடலை கோவை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும். முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு எஸ்.பி., பெருந்துறை டி.எஸ்.பி-யின் தனிப்படை போலீசார், ரகசிய இடத்திற்கு அழைத்து சென்று கொடூரமாக தாக்கியதால் பாலகிருஷ்ணன் மரணமடைந்தாகவும், பிரேத பரிசோதனையை வேறு அரசு மருத்துவமனையில் நடத்தி, அதனை வீடியோ பதிவு செய்யவும், நியாயமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என சகோதரர் மாரியப்பன் வழக்கு தொடர்ந்து இருந்தார். காவல்துறையின் செயலை மறைக்கும் நோக்கில் காவல்துறை, மருத்துவர்கள் கூட்டாக சேர்ந்து செயல்படுகிறார்கள் எனவும் மனுவில் புகார் தெரிவித்து இருந்தார்.



  • Jan 08, 2024 15:08 IST
    செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க கூடாது; அமலாக்கத்துறை பதில் மனு

    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க கூடாது என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. ஜாமின் மனு மீதான விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது



  • Jan 08, 2024 14:49 IST
    நெல்லையில் கனமழை எச்சரிக்கை

    நெல்லையில் நாளை (ஜன.9 ) மற்றும் 10-ம் தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது;

    ஆறுகளில் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாகவும், ஆற்றில் யாரும் இறங்கவோ, கால்நடைகளை இறக்கவோ வேண்டாம்

    - மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன்



  • Jan 08, 2024 14:49 IST
    கொற்றலை ஆற்றில் உபரி நீர் திறப்பு அதிகரிப்பு

    திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அணைக்கு நீர் வரத்து 1000 கன அடியாக அதிகரித்துள்ளதால், கொற்றலை ஆற்றில் உபரி நீர் திறப்பு 50 கன அடியில் இருந்து 1000 கன அடியாக அதிகரிப்பு

    கனமழை தொடர்ந்தால் உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்படும் என அதிகாரிகள் தகவல்



  • Jan 08, 2024 14:28 IST
    செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணை

    பதில் மனு தாக்கல் செய்ய முடியவில்லை என்றால் எதற்காக வழக்கு தொடருகிறீர்கள்? அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணையில் அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கேள்வி

    வழக்கின் விசாரணை நடந்த சிறிது நேரத்திற்கு பிறகு அமலாக்கத்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு



  • Jan 08, 2024 14:21 IST
    நாளை பேருந்துகள் இயங்கும் - அமைச்சர் சிவசங்கர் உறுதி

    தொமுச உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் நாளை பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்

    நாளை பேருந்துகள் இயக்கப்படும்

    2 கோரிக்கைகளை ஏற்பதாக ஏற்கனவே போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது                                                                     

    2 கோரிக்கைகளை ஏற்றதால் தான், பொங்கலுக்கு பின் மற்றவை குறித்து முடிவெடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது - அமைச்சர் சிவசங்கர்



  • Jan 08, 2024 14:15 IST
    22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தி.மலை, ராணிப்பேட்டை, வேலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



  • Jan 08, 2024 14:08 IST
    போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நாளை வேலைநிறுத்தம்

    சென்னை தேனாம்பேட்டையில் அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில்;

    ஏற்கனவே அறிவித்திருந்தபடி ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நாளை வேலைநிறுத்தம்



  • Jan 08, 2024 13:35 IST
    உயர் சாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு வழக்கு

    உயர் சாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீட்டை தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களில் செயல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று தொடரப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

    மாநில அரசே இது குறித்து முடிவு செய்ய வேண்டும், நீதிமன்றம் தலையிட முடியுமா என்கிற பிரச்னை இருக்கிறது என நீதிபதிகள் கருத்து



  • Jan 08, 2024 13:35 IST
    கனமழை

    அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை, தஞ்சை, கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்

    - வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன்



  • Jan 08, 2024 13:34 IST
    பெண்களுக்கான வேலைவாய்ப்பு பெருகியுள்ளது

    தமிழ்நாட்டில் பெண்களுக்கு கட்டணமில்லாப் பேருந்து திட்டம் அறிமுகப்படுத்தியதன் மூலம், பெண்களுக்கான வேலைவாய்ப்பு பெருகியுள்ளது.

    இந்த திட்டத்தை பெண்களுக்கான தனிப்பட்ட திட்டமாக பார்க்காமல் சமூக மேம்படுத்தலுக்கான திட்டமாக பார்க்க வேண்டும்

    -உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் பேச்சு



  • Jan 08, 2024 13:12 IST
    சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பு

    வடகிழக்கு பருவமழை தொடர்ந்து தீவிரமாகவே உள்ளது.

    சென்னையில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது

    2 நாட்களுக்கு பிறகு மழை படிப்படியாக குறையும். தென் மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்

    -சென்னை வானிலை ஆய்வு மையம்     



  • Jan 08, 2024 13:12 IST
    இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு

    சீர்காழி, சிதம்பரம், வேளாங்கண்ணி, திருவாரூர், நாகை பகுதிகளில் அதிகனமழை பெய்துள்ளது.

    திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    -சென்னை வானிலை ஆய்வு மையம்    



  • Jan 08, 2024 13:11 IST
    1000 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் சேதம்

    சிதம்பரம் தொடர் மழை காரணமாக காட்டுமன்னார்கோவில் ற்றுவட்டாரப் பகுதிகளில் அறுவடைக்கு தயாரான 1000 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் சேதமடைந்து உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்



  • Jan 08, 2024 12:58 IST
    போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் 3-வது முறையாகபேச்சுவார்த்தை

    போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நாளை முதல் வேலை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில் பேச்சுவார்த்தை

    தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் முத்தரப்பு பேச்சுவார்த்தை

    தொழிலாளர் நலத்துறை இணை இயக்குனர் ரமேஷ் தலைமையில், போக்குவரத்து தொழிற்சங்கங்கள் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை

    ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் நாளை முதல் வேலைநிறுத்தம் அறிவிப்பு

    ஏற்கனவே நடைபெற்ற இரண்டு கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், தற்போது 3வது முறையாக பேச்சுவார்த்தை

    அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் இளங்கோ, மாநகரப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆல்பி ஜான் பங்கேற்பு

    தொழிற்சங்கங்கள் தரப்பில் சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவையை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்பு



  • Jan 08, 2024 12:42 IST
    பூண்டி ஏரியில் நீர் திறப்பு அதிகரிப்பு

    பூண்டி ஏரியில் உபரி நீர் திறப்பு 1000 கன அடியாக அதிகரிப்பு. நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக 50 கன அடியில் இருந்து 1000 கன நீர் திறப்பு அடியாக அதிகரிப்பு



  • Jan 08, 2024 12:41 IST
    ஜல்லிக்கட்டு தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரி மனு: அவசரமாக விசாரிக்க முறையீடு

    ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரிய மனுக்கள். அவசரமாக விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் முறையீடு

    மனுக்களை பரிசீலித்து, பட்டியலிடுவது குறித்து முடிவெடுக்கப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து. ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டுகள் இயற்கையான செயல் பண்புகளுக்கும், காளைகளின் குணங்களுக்கும் எதிரானது - பீட்டா அமைப்பு

    2017 முதல் 2022 வரை நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரில் பார்த்து சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கையை பரிசீலிக்க உச்சநீதிமன்றம் தவறிவிட்டது - பீட்டா. ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் - பீட்டா



  • Jan 08, 2024 12:28 IST
    ஸ்டிரைக் நடந்தாலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

    தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தினாலும் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மக்கள் எந்ததொரு சிரமமும் இல்லாமல் பயணம் செய்ய ஏற்பாடுகள் செய்து தரப்படும்- போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்



  • Jan 08, 2024 12:15 IST
    சாலிகிராமத்தில் விஜயகாந்த் படத்திற்கு நடிகர் சூரி மரியாதை

    சென்னை, சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது மகன்களை சந்தித்து நடிகர் சூரி ஆறுதல்



  • Jan 08, 2024 12:03 IST
    ஸ்டெர்லைட் - அவசரமாக விசாரிக்க முறையீடு

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடல் விவகாரத்தில் வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீடு மனு

    அவசரமாக விசாரிக்க கோரி ஆலையின் ஆதரவாளர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு

    வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீடு மனுவை விசாரிக்கும் போது இடையீட்டு மனுவையும் இணைத்து விசாரிக்கப்படும் - உச்சநீதிமன்றம்



  • Jan 08, 2024 11:22 IST
    போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் போராட்டத்திற்கு தடை கோரி வழக்கு

    போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் அறிவித்த காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு

    பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பது சட்டவிரோதம் - மனுதாரர்

    போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும், அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என முறையீடு

    நாளை முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் உத்தரவு



  • Jan 08, 2024 11:20 IST
    அதிகபட்சமாக சீர்காழியில் 24 செ.மீ., மழைப்பதிவு 

    சீர்காழியில் 24 செ.மீ. மழைப்பொழிவு. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சீர்காழியில் 24 செ.மீ., மழைப்பதிவு 

     

    சிதம்பரத்தில் 23 செ.மீ., வேளாங்கன்னியில் 22 செ.மீ., திருவாருர், நாகையில் தலா 21 செ.மீ., மழைப்பதிவு கொள்ளிடம், புவனகிரியில் தலா 19 செ.மீ., நன்னிலத்தில் 17 செ.மீ., மழைப்பதிவு



  • Jan 08, 2024 11:19 IST
    உச்சநீதிமன்றம் அன்றைக்கு அளித்த தீர்ப்பே தவறானது: நீதிபதி நாகரத்னா

    "உச்ச நீதிமன்றத்தில் 2022-ல் மோசடியாக உத்தரவு பெறப்பட்டுவிட்டது. பில்கிஸ் பானு வழக்கில், 2022 மே மாதம் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பே தவறானது. பாதிக்கப்பட்ட பெண்ணின் உரிமையை காப்பது மிகவும் முக்கியமானது" - உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்னா



  • Jan 08, 2024 11:16 IST
    குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை: உச்ச நீதிமன்றம்

    பில்கிஸ் பானு வழக்கில், 11 குற்றவாளிகள் விடுதலை செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு. 
    குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை. வழக்கு மகாராஷ்டிராவில் நடைபெற்றதால் 11 பேரை விடுவிப்பது குறித்து மகாராஷ்டிரா அரசு தான் முடிவு எடுக்க வேண்டும்- உச்ச நீதிமன்றம்



  • Jan 08, 2024 11:01 IST
    பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளை விடுதலை செய்தது செல்லாது

    பில்கிஸ் பானு வழக்கு மராட்டியத்தில் நடைபெற்றதால் 11 பேரை விடுவிப்பது குறித்து மராட்டிய அரசுதான் முடிவு எடுக்க வேண்டும். குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை - உச்சநீதிமன்றம்



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment