Advertisment

Tamil News Updates: அயோத்தியில் இன்று ராமர் கோயில் திறப்பு விழா

21 January 2024- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sasaa

IE Tamil updates

Tamil News Live Updates: Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

 ஏரிகள் நீர் நிலவரம்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 87.23% நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் - 84.8%, புழல் - 85.06%, பூண்டி - 95.11%, சோழவரம் - 72.99%, கண்ணன்கோட்டை - 99.2%. 

 

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • Jan 21, 2024 22:08 IST
    தி.மு.க இளைஞரணி மாநாட்டு அரங்கம்; உலக சாதனை

    தி.மு.க இளைஞரணி மாநாட்டுக்காக சேலத்தில் அமைக்கப்பட்ட அரங்கம், உலகின் மிகப்பெரிய தற்காலிக மாநாட்டு அரங்கம் என்ற Unique World Records புத்தகத்தில் இடம்பெற்றது. 9.50 லட்சம் சதுர அடி பரப்பளவில், 45 நாட்களில் இந்த மாநாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.



  • Jan 21, 2024 20:55 IST
    ராமர் கோயில் விழாவை மறைமுகமாக தடை செய்கிறது தமிழக அரசு; நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

    அயோத்தி ராமர் கோயில் விழாவை மறைமுகமாக தடை செய்கிறது தமிழக அரசு. பொதுமக்களுக்கு அனுமதி தராமல் காவல்துறை மூலம் தடை செய்கிறார் அமைச்சர் சேகர்பாபு. நாளிதழில் வரும் செய்தி தவறு என்றால் உடனடியாக அமைச்சர் விளக்கம் தராதது ஏன்? என்னிடம் கட்சியினர் மட்டுமின்றி, பொதுமக்களும் இரவு முதல் புகார் அளித்தனர். சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி பூஜை செய்ய அனுமதி மறுப்பதா? என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்



  • Jan 21, 2024 20:15 IST
    'எந்தக் கொம்பனாலும் தி.மு. கழகத்தை வீழ்த்த முடியாது'- மு.க. ஸ்டாலின்


    “எந்தக் கொம்பனாலும் தி.மு.கழகத்தை வீழ்த்த முடியாது என்பதைச் சேலம் மாநாடு காட்டியுள்ளது என்பதை சேலம் மாநாடு காட்டியுள்ளது” என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.



  • Jan 21, 2024 19:55 IST
    தெற்கில் பிறந்த விடியல், வடக்கிலும் விரைவில் பிறக்கும்; ஸ்டாலின்

    தெற்கில் பிறந்த விடியல், வடக்கிலும் விரைவில் பிறக்கும். எவராலும் தி.மு.க.,வை வீழ்த்த முடியாது என்பதை மாநாடு காட்டுகிறது. இளைஞரணியே என் தாய்வீடு, என்னை வளர்த்தது இளைஞரணியே, கட்சிக்குள் புது ரத்தத்தை பாய்ச்சியதும் இளைஞரணியே.. தி.மு.க இன்றும் கம்பீரமாக இருக்க, கொள்கை உரமே காரணம் என சேலம் தி.மு.க இளைஞரணி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்



  • Jan 21, 2024 19:30 IST
    தமிழ்நாட்டு மக்கள் இம்முறையும் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள்; மு.க ஸ்டாலின்!

    திமுக இளைஞரணி மாநாடு சேலத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டார்.  அப்போது, " தமிழக மக்கள் இம்முறையும் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள்" என கூறினார்.



  • Jan 21, 2024 18:05 IST
    'தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாது'- உதயநிதி


    இன்னும் 200 ஆண்டுகள் ஆனாலும் தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாது என உதயதிநி கூறியுள்ளார்.



  • Jan 21, 2024 18:05 IST
    'தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாது'- உதயநிதி


    இன்னும் 200 ஆண்டுகள் ஆனாலும் தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாது என உதயதிநி கூறியுள்ளார்.



  • Jan 21, 2024 16:34 IST
    உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்ட நாளிதழ் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை - தமிழ்நாடு அரசு

    தமிழ்நாட்டு கோவில்களில் நாளை (ஜனவரி 22) சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடத்த எந்த தடையும் இல்லை. அனுமதி மறுக்கப்பட்டதாக வெளியிடப்பட்ட பொய்ச் செய்திக்கு மறுப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்ட நாளிதழ் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.



  • Jan 21, 2024 15:58 IST
    தமிழ்நாடு 6.5 லட்சம் கோடி வரி கொடுத்தால் 2.5 கோடியை மட்டுமே தருகிறது ஒன்றிய அரசு - தங்கம் தென்னரசு

     

    தி.மு.க இளைஞரணியின் 2-வது மாநில மாநாட்டில், ‘நிதித்துறையில் மாநில உரிமைகள் பறிப்பு’ என்ற தலைப்பில் உரையாற்றிய நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “6.5 லட்சம் கோடியைத் ஒன்றிய அரசுக்கு  தமிழ்நாடு கொடுக்கிறது.. ஆனால், வரிப்பகிர்வாக ஒன்றிய அரசு நமக்கு வெறும் 2.5லட்சம் கோடியை மட்டுமே தருகிறது.” என்று கூறினார்.



  • Jan 21, 2024 14:25 IST
    தமிழகத்தில் கோயில்களில் நாளை பூஜை செய்ய  தடையில்லை - நிர்மலா சீதாராமனுக்கு சேகர்பாபு கண்டனம்

    அமைச்சர் சேகர் பாபு: “சேலத்தில் எழுச்சியோடு நடைபெற்று வரும் தி.மு.க இளைஞரணி மாநாட்டை திசை திருப்புவதற்காக திட்டமிட்டு வதந்தி பரப்பப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் ராமர் பெயரில் பூஜை செய்யவோ, அன்னதானம் வழங்கவோ, பிரசாதம் வழங்கவோ பக்தர்களுக்கு எந்த தடையையும் அறநிலையத்துறை விதிக்கவில்லை. முற்றிலும் உண்மைக்கு புறம்பான, உள்நோக்கம் கொண்ட பொய் செய்தியை உயர்ந்த பதவியில் உள்ள ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்றோர் பரப்புவது வருத்தத்துக்குரியது” என்று தெரிவித்துள்ளார்.



  • Jan 21, 2024 14:21 IST
    தி.மு.க இளைஞரணி மாநில மாநாடு: தொண்டர்களுக்கு விதவிதமான உணவுகள்

    தி.மு.க இளைஞரணி மாநில மாநாட்டில் தொண்டர்களுக்கு விதவிதமான உணவுகள் பரிமாறப்படுகிறது. சைவம் மற்றும் அசைவ உணவுகள் தனித்தனி இடங்களில் வழங்கப்படுகிறது. சைவ உணவுகளாக வெஜிடபிள் பிரியாணி, தயிர் சாதம், பிரட் அல்வா வழங்கப்படுகிறது. அசைவ உணவாக மட்டன் பிரியாணி, சில்லிசிக்கன், பிரட் அல்வா வழங்கப்படுகிறது. 10-க்கும் மேற்பட்ட வரிசைகள் ஏற்படுத்தப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது.



  • Jan 21, 2024 14:19 IST
    அ.தி.மு.க-வில்தான் பெண்களுக்கு மரியாதை கிடைக்கும் - காயத்ரி ரகுராம்

    சமீபத்தில் அ.தி.மு.க-வில் இணைந்த நடிகை காயத்ரி ரகுராம், “அ.தி.மு.க-வில்தான் பெண்களுக்கு மரியாதை கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.



  • Jan 21, 2024 13:40 IST
    ஆப்கனில் விபத்துக்குள்ளானது இந்திய விமானம் அல்ல

    ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளான விமானம் இந்திய விமானம் கிடையாது என மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் விளக்கம்.

    விபத்துக்குள்ளானது மொராக்கோ நாட்டைச் சேர்ந்த சிறிய ரக விமானம் என குறிப்பிடப்பட்டுள்ளது.,

     



  • Jan 21, 2024 13:36 IST
    டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி

    3 நாள் தமிழக பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி. ராமேஸ்வரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் மதுரை வந்த பிரதமர் மோடி மதுரையில் இருந்து விமானம் மூலம் டெல்லி பயணம்.

    அயோத்தி கோயில் திறப்பு விழாவுக்காக 22 புனித தீர்த்தங்கள், புனித மண்ணை எடுத்துச் செல்கிறார் பிரதமர் மோடி



  • Jan 21, 2024 13:14 IST
    திமுக இளைஞரணி மாநாடு - 25 தீர்மானங்கள் நிறைவேற்றம்

    ஆளுநர் பதவியை நிரந்தரமாக நீக்கிட திமுக இளைஞரணி மாநாட்டில் தீர்மானம் தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு பணியிடங்களில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு வேலை.

     மத்திய அரசு பணிகளில் இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்பட வேண்டும்.மாநில சுய ஆட்சி அடிப்படையில் மாநில அரசின் அதிகாரத்தை வலிமைப்படுத்த வேண்டும். பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் தொடரும் ரெய்டுகளுக்கு கண்டனம். ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். மாநில பட்டியலுக்கு கல்வியை மாற்ற வேண்டும். பல்கலைக்கழக வேந்தராக ஆளுநருக்கு பதில் முதல்வர் செயல்பட வேண்டும். குலக்கல்வியை எதிர்த்து இளைஞரணி போராட்டம் தொடரும். வெள்ள பாதிப்பு நிவாரணமாக ரூ.6000 வழங்கிய முதல்வருக்கு நன்றி. வரலாறு காணாத மழை நேரத்தில் மக்களை காத்த முதல்வருக்கு நன்றி. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்திய முதல்வருக்கு நன்றி



  • Jan 21, 2024 13:12 IST
    மோடியை வரவேற்றதற்கும் தேர்தல் கூட்டணிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை: ஜி.கே.வாசன்

    பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வரவேற்றதற்கும் தேர்தல் கூட்டணிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை - திண்டுக்கல்லில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி



  • Jan 21, 2024 13:06 IST
    இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு

    மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை நாளை வெளியிடுகிறார்- தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு



  • Jan 21, 2024 13:05 IST
    இளைஞரணி மாநாடு வெற்றி பெற தேசிய தலைவர்கள் வாழ்த்து

    சேலத்தில் நடைபெற்றுவரும் திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாடு வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஆகியோர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கடிதம்



  • Jan 21, 2024 13:04 IST
    கோயில்களில் நாளை பூஜைகளுக்கு  தடை இல்லை: வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அரசு

    தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் நாளை பூஜைகளுக்கு  தடை இல்லை- வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அரசு

    தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் உள்ளே அரசியல் கட்சிகள், மத அமைப்புகள் ராமர் கோயில் திறப்பை ஒளிபரப்பு செய்ய மட்டுமே  அனுமதி அளிக்கப்பட வில்லை. மற்றபடி பூஜைகள், அன்னதானம் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட வில்லை என அரசுத் தரப்பில் விளக்கம். 



  • Jan 21, 2024 13:00 IST
    பொது விடுமுறையை எதிர்த்து தொடரப்பட்ட மனு தள்ளுபடி

    ராமர் கோயில் திறப்பு விழாவை ஒட்டி, மகாராஷ்டிரா அரசு அறிவித்த பொது விடுமுறையை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது மும்பை உயர்நீதிமன்றம்



  • Jan 21, 2024 12:53 IST
    மக்களவைத் தேர்தல்: அண்ணாமலைக்கு டெல்லி தலைமை உத்தரவு

    மக்களவைத் தேர்தல் தமிழக வேட்பாளர்கள் தேர்வு தொடர்பாக டெல்லி பா.ஜ.க மேலிடம் ஆலோசனை.  39 தொகுதிகளுக்கு 3 நபர்கள் வீதம் இம்மாத இறுதிக்குள் பட்டியலை அனுப்ப பா.ஜ.க மாநிலத் தலைவர்   அண்ணாமலைக்கு டெல்லி தலைமை உத்தரவு எனத் தகவல்



  • Jan 21, 2024 12:50 IST
    அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு அழைப்பு

    அயோத்தி ராமர் கோயில் வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கும் நாளைய நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.



  • Jan 21, 2024 12:35 IST
    இந்தியாவில் இருந்து மாஸ்கோ சென்ற விமானம் விபத்து

    இந்தியாவில் இருந்து மாஸ்கோ சென்ற பயணிகள் விமானம் ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் உள்ள பதக்‌ஷான் மாகாணத்தில் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல்.

    பதக்‌ஷான் மாகாணத்தின் சிபக் மாவட்டத்தில் உள்ள மலையில் மோதி விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

    விபத்துக்குள்ளான விமானத்தில் எத்தனை பேர் பயணித்தார்கள், அவர்களின் நிலை குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை



  • Jan 21, 2024 12:15 IST
    எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நாளை விடுமுறை இல்லை

    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நாளை அரை நாள் விடுமுறை அளிக்கும் முடிவு திரும்பப் பெறப்பட்டது. அறிவிப்பை திரும்பப் பெறுவதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு 

    அப்பாயிண்ட்மெண்ட் பெற்றவர்களுக்கு புறநோயாளிகள் பிரிவு வழக்கம் போல செயல்படும் என அறிவிப்பு

    ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி பிற்பகல் 2.30 மணி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    பல்வேறு தரப்பினரின் விமர்சனம், கண்டனங்களை தொடர்ந்து அறிவிப்பை திரும்ப பெற்றது, டெல்லி எய்ம்ஸ்.

     அவசர மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு வழக்கம்போல செயல்படும் என ஏற்கனவே அறிவிப்பு. "எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நாளை விடுமுறை இல்லை"



  • Jan 21, 2024 12:08 IST
    மதுரைக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி

    ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டார் பிரதமர் மோடி



  • Jan 21, 2024 12:08 IST
    மதுரைக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி

    ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டார் பிரதமர் மோடி



  • Jan 21, 2024 12:07 IST
    ஜிப்மர் மருத்துவமனையில் நாளை அவசர சிகிச்சைகள் வழக்கம் போல வழங்கப்படும்

    புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நாளை அவசர சிகிச்சைகள் வழக்கம் போல வழங்கப்படும்"

    சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜிப்மர் தரப்பில் உத்தரவாதம்

    நாளை திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகள் ஏதும் இல்லை எனவும் விளக்கம்

    ஜிப்மர் விளக்கத்தை ஏற்று மருத்துவமனையை மூட தடை கோரிய வழக்கை முடித்து வைத்தது, சென்னை உயர் நீதிமன்றம்

    ஏற்கனவே திட்டமிடப்பட்ட பரிசோதனைகளை நடத்த வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவு

    அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி நாளை அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது

    "ஜிப்மரில் அவசர சிகிச்சைகள் வழக்கம்போல் வழங்கப்படும்"



  • Jan 21, 2024 11:44 IST
    தந்தை பெரியாருக்கு மலர்தூவி மரியாதை

    திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாட்டில் தந்தை பெரியாருக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.  முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்



  • Jan 21, 2024 11:41 IST
    கோதண்டராமர் கோயிலில் பிரதமர் வழிபாடு 

    அரிச்சல் முனையில் இருந்து தனுஷ்கோடி கோதண்டராமர் கோயிலில் பிரதமர் வழிபாடு 



  • Jan 21, 2024 11:09 IST
    இந்துக்களின் உண்மையான எதிரி பாஜக- உதயநிதி

    "இந்துக்களின் உண்மையான எதிரி பாஜகதான்" - திமுகவின் 2வது இளைஞரணி மாநாட்டில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றம்



  • Jan 21, 2024 11:08 IST
    உத்தரப் பிரதேசம் புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்

    நாளை அயோத்தி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில் உத்தரப் பிரதேசம் புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்



  • Jan 21, 2024 10:56 IST
    நீட் தேர்வு விலக்கில் உறுதியாக வெற்றி பெற்றே தீருவோம்

    நீட் தேர்வு விலக்கில் உறுதியாக வெற்றி பெற்றே தீருவோம் - சேலம் இளைஞரணி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்



  • Jan 21, 2024 10:41 IST
    பல்கலை.களுக்கு முதலமைச்சரே வேந்த்ராக இருந்திட வேண்டும்

    பாஜகவின் மதவாத அரசியலுக்கு எதிரான பரப்புரையை திமுக இளைஞரணி முன்னெடுக்கும் ஆளுநர் பதவியை நிரந்தரமாக நீக்கிட வேண்டும் கல்வி, மருத்துவத்தை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். பல்கலை.களுக்கு முதலமைச்சரே வேந்த்ராக இருந்திட வேண்டும் நீட் தேர்வு விலக்கில் உறுதியாக வெற்றி பெற்றே தீருவோம்" - திமுக இளைஞரணி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்



  • Jan 21, 2024 10:37 IST
    மொழிப்போர் தியாகிகளின் உருவப்படங்கள் திறந்துவைக்கப்பட்டது

    மொழிப்போர் தியாகிகளின் உருவப்படங்கள், மாநாட்டில் திறந்து வைக்கப்பட்டது.  



  • Jan 21, 2024 10:29 IST
    ஆளுநர் பதவியை நிரந்தரமாக அகற்ற தீர்மானம்

    மாநில உரிமைகளை மறுக்கும், ஆளுநர்களின் பதவியை நிரந்தமாக நீக்கும் தீர்மானத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்மொழிந்தார். 



  • Jan 21, 2024 10:26 IST
    திமுக இளைஞரணி மாநாட்டின் தீர்மானங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாசித்து வருகிறார்



  • Jan 21, 2024 10:03 IST
    முதல்வருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் உதயநிதி



  • Jan 21, 2024 10:03 IST
    துர்கா ஸ்டாலின் பங்கேற்பு

    திமுக இளைஞரணி மாநாட்டில் பங்கேற்க சென்ற துர்கா ஸ்டாலின்



  • Jan 21, 2024 09:40 IST
    திமுக இளைஞரணி மாநாட்டில் தண்ணீர் பாட்டிலுடன் தின்பண்டங்கள் அடங்கிய மஞ்சள் பைகள்

    தி.மு.க இளைஞரணி மாநாட்டில் போடபட்டுள்ள இருக்கைகளில் தண்ணீர் பாட்டிலுடன்  தின்பண்டங்கள் அடங்கிய மஞ்சள் பைகள் வைக்கப்பட்டுள்ளன.   



  • Jan 21, 2024 09:38 IST
    சென்னையின் 7 இடங்களில் 'மக்களுடன் முதல்வர்' என்ற சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது

    சென்னை மக்களுடன் முதல்வர் என்ற சிறப்பு முகாம் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற உள்ளது. திருவொற்றியூர், மண்ணடி , எம் .எம். டி.ஏ உள்ளிட்ட 7 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. 



  • Jan 21, 2024 09:29 IST
    திமுக இளைஞர் அணியின் 2வது மாநில மாநாடு தொடங்கியது

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கொடியேற்றி வைக்க திமுக இளைஞர் அணியின் 2வது மாநில மாநாடு தொடங்கியது



  • Jan 21, 2024 09:21 IST
    காவிரியில் நீர் வரத்து 2300 கன அடியாக அதிகரிப்பு

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து திடீர் அதிகரிப்பு நேற்று பிற்பகலில் ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில், இன்று 2300 கன அடி நீர்வரத்து கடந்த ஒரு வாரமாக 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட நிலையில், அதிக அளவில் காவிரியில் தண்ணீர் வருகிறது



  • Jan 21, 2024 09:20 IST
    தனுஷ்கோடி புறப்பட்ட பிரதமர் மோடி

    ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி புறப்பட்ட பிரதமர் மோடி



  • Jan 21, 2024 09:11 IST
    திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

    நான் வளர்ந்த, என்னை வளர்த்துவிட்ட, நான் உருவாக்கிய, என்னை உருவாக்கிய பாசறைதான் இளைஞர் அணி. அடக்கமாக, அமைதியாக, ஓய்வின்றி உழைக்கிறேன் என நீங்கள் என்னை பாராட்டுகிறீர்கள் என்றால், அதற்கான களத்தை அமைத்துக் கொடுத்தது இளைஞர் அணிதான்.தமிழ்நாட்டில் என் கால்படாத இடங்களே இல்லை என சொல்லும் அளவிற்கு பயணம் செய்தேன். திமுகவிற்கு புதிய ரத்தம் பாய்ச்சுவதற்கு இளைஞரணிதான் அடித்தளம் அமைத்தது.நான் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பதற்கு காரணமே இளைஞரணிதான். ஆற்றல் மிக்க இளைஞர்கள் என்னை சுற்றி இருப்பதால்தான் நான் சுறுசுறுப்பாக இருக்கிறேன்.தற்போது இளைஞரணியை வழிநடத்த உங்களுக்கு உதயநிதி கிடைத்துள்ளார். அவரை இறுகப்பற்றிக்கொள்ளுங்கள். அவர் பொறுப்புக்கு வந்த கொஞ்ச காலத்திலேயே அசைக்க முடியாத கோட்டையாக இளைஞரணியை கட்டி எழுப்பி வருகிறார்.வலிமையான கொள்கை, உறுதியான பிடிப்பு, இனிமையான பரப்புரை, தொடர்ச்சியான உழைப்பு இவையனைத்தும் அவரிடம் இயல்பாகவே இருப்பவை.கலைஞர் எங்கள் மீது வைத்த நம்பிகையை நாங்கள் காப்பாற்றியது போல, என் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, வெற்றிப்படையாக செயல்பட வேண்டும்.



  • Jan 21, 2024 08:57 IST
    திமுக இளைஞரணியின் 2வது மாநாட்டில் பங்கேற்க சாரை சாரையாக திரண்டு வரும் தொண்டர்கள்

    திமுக இளைஞரணியின் 2வது மாநாட்டில் பங்கேற்க சாரை சாரையாக திரண்டு வரும் தொண்டர்கள். திருவள்ளூரில் இருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு ரயிலில் பயணித்த தொண்டர்கள் பெத்தநாயக்கம் பாளையத்தை அடைந்தனர்.



  • Jan 21, 2024 08:09 IST
    இன்று காலை தனுஷ்கோடி செல்கிறார், பிரதமர் மோடி

    நேற்று பகல் 12 மணி முதல் இன்று பகல் 12 மணி வரை பொதுமக்களுக்கு தடை போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி அரிச்சல் முனையில் உள்ள கோதண்ட ராமர் கோயிலில் இன்று பிரதமர் மோடி தரிசனம் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பொது போக்குவரத்திற்கும் தடை



  • Jan 21, 2024 08:00 IST
    புத்தகக் கண்காட்சி இன்றுடன் நிறைவு

    நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சி  இன்றுடன் நிறைவு பெறுகிறது.



  • Jan 21, 2024 07:58 IST
    திமுக இளைஞரணி மாநாட்டு: குவிந்த தொண்டர்கள்

    திமுக இளைஞரணி மாநாட்டில் பங்கேற்க சாரை சாரையாக திரண்டு வரும் தொண்டர்கள்



  • Jan 21, 2024 07:58 IST
    திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாடு:பாதுகாப்பு பணியில் 8,000 போலீசார்

    சேலத்தில் இன்று திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாடு நடைபெறுவதை ஒட்டி, 4 டிஐஜி, 19 எஸ்.பி.க்கள் தலைமையில் 8,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment