Advertisment

Tamil News Updates: நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன் - மகாவிஷ்ணு

Tamil News Updates: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
mahavishnu

பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 193வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல், ரூ100.75-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

விமான சேவைகள் பாதிப்பு

சென்னையில் நேற்று இரவு பெய்த கனமழையால் 35 விமான சேவைகள் பாதிப்பு. பெங்களூரு, மும்பை, விஜயவாடா, திருச்சியில் இருந்து சென்னை வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்தபடி இருந்தன. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

  • Sep 27, 2024 03:02 IST
    கொள்கை பகைவர்களின் எனர்ஜி செலவாகட்டும்; நான் மௌனம் காக்கவில்லை, அமைதியாக இருந்தேன்- திருமா

    சென்னையில் நடந்த விழாவில் வி.சி.க தலைவர் திருமாவளவன் பேச்சு: “கொள்கை பகைவர்களின் எனர்ஜி செலவாகட்டும், அவர்கள் கத்தி முடிக்கும் வரை நாம் அமைதியாக இருப்போம். அவர்கள் என்ன வியூகம், கற்பனையைக் கொண்டு வருகிறார்கள் என்று பார்த்தேன்.  நான் மௌனம் காக்கவில்லை, அமைதியாக இருந்தேன்” என்று தெரிவித்துள்ளார். 



  • Sep 26, 2024 21:49 IST
    தென்காசி அருகே 3 பேர் கொலை வழக்கில் 4 பேருக்கு மரண தண்டனை; 5 பேருக்கு 5 ஆயுள் தண்டனை - கோர்ட் தீர்ப்பு

    2014-ம் ஆண்டு, தென்காசி அருகே முன்விரோதம்  காரணமாக இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் காளிராஜ், முருகன், வேணுகோபால் ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 4 பேருக்கு மரண தண்டனையும் 5 பேருக்கு தலா 5 ஆயுள் தண்டனையும் விதித்து நெல்லை வன்கொடுமி தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.



  • Sep 26, 2024 20:43 IST
    அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மலர் தூவி மரியாதை

    புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களுக்குச் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவருடன், அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.



  • Sep 26, 2024 20:39 IST
    ‘என் நண்பன் பாலு நினைவாக..’ சாலைக்கு எஸ்.பி.பி பெயர் சூட்டிய ஸ்டாலினுக்கு இளையராஜா நன்றி 

    இசையமைப்பாளர் இளையராஜா, “என் நண்பன் பாலுவின் நினைவாக, அவன் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள சாலைக்கு எஸ்.பி. பாலசுப்ரமணியம் சாலை’ என்று பெயரை மாற்றி வைத்ததற்காக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தமிழக மக்களின் சார்பிலும் திரையுலகின் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறினார்.



  • Sep 26, 2024 19:45 IST
    பொய் வழக்கில் இருந்து மீண்டு வருவேன்; சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி பேட்டி

    புழல் சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி பேட்டி: “என் மீது அன்பும், நம்பிக்கையும் பாசமும் வைத்திருந்த கழகத் தலைவர் முதலமைச்சருக்கு வாழ்நாள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் என் மீது போடப்பட்ட இந்த பொய் வழக்கில் இருந்து சட்டப் போராட்டம் நடத்தி மீண்டு வருவேன்” என்று கூறினார்.



  • Sep 26, 2024 19:35 IST
    செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை; தி.மு.க-வினர் உற்சாக வரவேற்பு 

    சென்னை புழல் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த செந்தில் பாலாஜிக்கு தி.மு.க தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தி.மு.க தொண்டர்கள் புழல் சிறை வளாகத்தில் திரண்டு வந்து மலர்தூவியும் பட்டாசு வெடித்தும் செந்தில் பாலாஜிக்கு வரவேற்பு அளித்தனர்.



  • Sep 26, 2024 18:51 IST
    செந்தில்பாலாஜி சற்று நேரத்தில் சிறையில் இருந்து விடுதலை

    ஜாமின் தொடர்பான ஆவணங்கள் புழல் சிறைத்துறைக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், செந்தில்பாலாஜி சற்று நேரத்தில் விடுதலையாகிறார்



  • Sep 26, 2024 18:32 IST
    புழல் சிறையை சுற்றிலும் போக்குவரத்து ஸ்தம்பிப்பு

    புழல் சிறையில் உள்ள செந்தில்பாலாஜியை வெளியே விடுவதற்கான பணியை சிறைத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில், செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள் குவிந்துள்ளாதால் புழல் சிறையை சுற்றிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது



  • Sep 26, 2024 18:21 IST
    செந்தில் பாலாஜியை சிறையில் இருந்து விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு

    உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ரூ.25 லட்சம் இரு நபர் ஜாமின் உத்தரவாதம் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து செந்தில்பாலாஜியை சிறையில் இருந்து விடுவிக்க முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்



  • Sep 26, 2024 18:03 IST
    செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து விடுதலையாவதில் தாமதம்

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து விடுதலையாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 2 உறவினர்களின் பிணை உத்தரவாதங்களில் சந்தேகம் உள்ளது என முதன்மை அமர்வு நீதிபதி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்



  • Sep 26, 2024 17:52 IST
    அமலாக்கத்துறை வழக்கறிஞரை நீதிமன்றம் அழைத்து வர நீதிபதி உத்தரவு

    செந்தில் பாலாஜி பிணை உத்தரவை எங்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பதில் குழப்பம் உள்ளது என்று கூறிய சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் அமலாக்கத்துறை வழக்கறிஞரை நீதிமன்றம் அழைத்து வர உத்தரவிட்டுள்ளார்



  • Sep 26, 2024 17:46 IST
    செந்தில் பாலாஜி பிணை உத்தரவாதத்தை ஏற்க நீதிபதி மறுப்பு

    செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கிய உச்ச நீதிமன்ற தீர்ப்பில், பிணை உத்தரவாதத்தை நீதிமன்றத்தில்தான் தாக்கல் செய்ய வேண்டும் என குறிப்பிடவில்லை. பிணை உத்தரவாதத்தை அமலாக்கத்துறை விசாரணை அதிகாரியிடம் தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். நீதிபதியின் முடிவுக்கு செந்தில் பாலாஜி தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. செந்தில் பாலாஜி இன்று வெளியே வரக்கூடாது என முடிவு செய்துவிட்டதைப் போல செயல்படுகிறீர்கள் என செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்



  • Sep 26, 2024 17:25 IST
    செந்தில் பாலாஜி விடுதலையாவதில் சிக்கல்

    செந்தில் பாலாஜி விடுதலையாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பில் குழப்பங்கள் உள்ளன என சென்னை முதன்மை அமர்வு நீதிபதி தெரிவித்துள்ளார்



  • Sep 26, 2024 17:10 IST
    டெல்லி புறப்பட்டார் ஸ்டாலின்; நாளை மோடியுடன் சந்திப்பு

    பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்க கோரி நாளை காலை 11 மணிக்கு பிரதமர் மோடியை முதலமைச்சர் ஸ்டாலின் சந்திக்கிறார். இதற்காக இன்று முதல்வர் ஸ்டாலின் விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டார்



  • Sep 26, 2024 16:08 IST
    கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவிகளுக்கென தனி ஓய்வறை

    சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் தானியங்கி இயந்திரங்கள் முறையாக பராமரிக்கப்படாதது குறித்த வழக்கில் கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவிகளுக்கென தனி ஓய்வறை அமைக்க நிதி ஒதுக்க வேண்டும்சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • Sep 26, 2024 16:07 IST
    ஜாமின் ஆர்டருடன் உறவினர்கள்: செந்தில் பாலாஜியால் மற்ற கைதிகள் வெளி வருவதில் தாமதம்

    புழல் மத்திய சிறையின் வெளியே ஜாமின் ஆர்டருடன் கைதிகளின் உறவினர்கள் ஏராளமானோர் காத்திருக்கும் நிலையில்,செந்தில்பாலாஜியை வெளியில் விடும் வரை மற்றவர்களை வெளியில் விட சிறைத்துறை அனுமதிக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.



  • Sep 26, 2024 15:13 IST
    செந்தில் பாலாஜிக்கு ஜாமின்: புழல் மத்திய சிறைக்கு முன் குவிந்த திமுக தொண்டர்கள்

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து இன்று மாலை அல்லது நாளை காலை அவர் சிறையில் இருந்து வெளியே வருவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவரை வரவேற்க புழல் மத்திய சிறைக்கு முன் திமுக தொண்டர்கள் குவிந்தனர். 



  • Sep 26, 2024 15:09 IST
    செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமின்: கோவையில் தி.மு.க.வினர் கொண்டாட்டம்

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து கோவையின் உக்கடம், பூ மார்க்கெட், ஆர்.எஸ்.புரம், குனியமுத்தூர், சரவணம்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பிரியாணி உள்ளிட்ட உணவுப் பொருட்களையும் திமுக தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



  • Sep 26, 2024 14:22 IST
    6 மாவட்டங்களில் கனமழை

    தமிழ்நாட்டில் இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 



  • Sep 26, 2024 14:09 IST
    செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் நீட்டிப்பு நிறுத்திவைப்பு

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு நிறுத்திவைக்கப்படுத்தாகவும், 'உச்சநீதிமன்ற உத்தரவு நகல் கிடைத்த பிறகு இதில் முடிவு எடுக்கிறேன்' என்றும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் கூறியுள்ளார். 



  • Sep 26, 2024 14:08 IST
    செந்தில் பாலாஜிக்கு ஜாமின் - ஜவாஹிருல்லா வரவேற்பு!

    "15 மாதம் சட்டப் போராட்டம் நடத்தி உச்ச நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கும் செந்தில் பாலாஜி அவர்களின் தியாகம் போற்றத்தக்கது.  வழக்கு விசாரணை தொடங்காமலேயே 471 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தது ஒன்றிய பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. 

    அதிகாரத்திற்கு அஞ்சாமல் தலை வணங்காமல் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்திப் பிணை பெற்றிருக்கிறார். உடல் நலத்தில் சற்று குன்றி இருந்தாலும் மனத் தைரியத்தில் விஞ்சி நின்று அதிகாரத்தை அதிர வைத்திருக்கிறார். இனி வரும் நாட்கள் மீண்டும் மக்கள் சேவையைத் தொடங்க மனப்பூர்வ வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா கூறியுள்ளார். 



  • Sep 26, 2024 13:57 IST
    நீதிமன்ற வளாகத்தில் ரவுடியை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்ற போலீசார் 

    சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடியான ஜான் என்பவரை, மாவட்ட நீதிமன்றம் அருகே வைத்து குண்டுக்கட்டாக தூக்கிச் சென்ற போலீசார் கைது செய்துள்ளனர். நெப்போலியன் என்பவரது கொலை வழக்கில் ஆஜராக மனைவியுடன் நீதிமன்றம் வந்தவரை மற்றொரு வழக்கில் போலீசார் கைது செய்தனர்



  • Sep 26, 2024 13:50 IST
    பா.ஜ.க நிர்வாகிக்கு ஐகோர்ட் நீதிபதி எச்சரிக்கை  

    பழனி பஞ்சாமிர்தம் குறித்து வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி செல்வகுமார், செல்போனை காவல்துறையிடம் சமர்ப்பிக்கவும், தனது செயலுக்கு சமூக வலைதளத்தில் வருத்தம் தெரிவிக்கவும் அவர் முன்ஜாமின் கோரிய மனு மீது உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

    அந்த ட்வீட்டை நீக்கவும் உத்தரவிட்டு முன்ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இதுபோல நடந்துகொண்டால், சமூக ஊடகங்களில் இருந்து வெளியேற உத்தரவிட நேரிடும் எனவும் நீதிபதி பரத சக்ரவர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். 



  • Sep 26, 2024 13:43 IST
    மதுரை: 2 பெண் குழந்தைகளை கத்தியால் குத்திக் கொலை - போலீஸ் விசாரணை 

    மதுரை அண்ணா நகர் பகுதியில் தனது 2 பெண் குழந்தைகளையும் கத்தியால் குத்திக் கொலை செய்து, தந்தை தூக்கிட்டு தற்கொலை முயற்சி செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் 2 குழந்தைகளும் உயிரிழந்த நிலையில், தந்தை சேதுபதி அரசு ராசாசி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

     



  • Sep 26, 2024 13:42 IST
    செந்தில் பாலாஜிக்கு ஜாமின் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு

    "எதிர்க்கட்சிகளை முடக்க பாஜக அரசு எந்த எல்லைக்கும் செல்லும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின்." என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. 



  • Sep 26, 2024 13:34 IST
    புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயத்திற்கு டெங்கு பாதிப்பு

    புதுச்சேரி மூலக்குளத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் நமச்சிவாயத்திற்கு டெங்கு பாதிப்பு உறுதியான நிலையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 



  • Sep 26, 2024 13:33 IST
    கோவை: தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலம் 2 வாரத்தில் ஸ்டாலின் திறப்பு 

    கோவை விளாங்குறிச்சியில், தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல கட்டடத்தை 2 வாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என்று ஆய்வுக்குப் பிறகு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 3200 பேர் பணியாற்றும் வகையில் 6 அடுக்குகளாக 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டடம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.



  • Sep 26, 2024 13:32 IST
    'இந்து சமய அறநிலையத்துறை கோயில்களை முறையாக பராமரிப்பது இல்லை' - மதுரை ஐகோர்ட் கருத்து!

    ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் குருக்கள் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரிய வழக்கில், உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியா கெளரி அமர்வு, "இந்து சமய அறநிலையத்துறை கோயில்களை முறையாக பராமரிப்பது இல்லை. வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். வேலையை மட்டும் செய்கிறது." என்று கருத்து தெரிவித்துள்ளது. 

    கோயில் அனுமதிக்கப்பட்ட குருக்கள், அலுவலகர்கள், பணியாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு? ஆண்டு வருமானம் எவ்வளவு? செலவின விபரங்கள் என்ன? ஆகியவற்றை அறிக்கையாக தாக்கல் செய்ய கோயில் செயல் அலுவலருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. 



  • Sep 26, 2024 13:13 IST
    லெபனான் நாட்டை விட்டு  இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் -  இந்தியா எச்சரிக்கை

    “லெபனான் நாட்டில் அசாதாரண சூழல் நிலவி வருவதால், அந்நாட்டில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும். மேலும் லெபனானுக்கு பயணம் மேற்கொள்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும்” என லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகம் உத்தரவிட்டுள்ளது. 



  • Sep 26, 2024 13:12 IST
    செந்தில் பாலாஜி தியாகம் செய்தா சிறைக்குச் சென்றார்? - சீமான் கேள்வி

    'செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்த போது, வழக்கு தொடர்ந்ததே தி.மு.க தான். செந்தில் பாலாஜி செய்த தியாகம் என்ன?' என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். 



  • Sep 26, 2024 13:09 IST
    கிண்டி ரேஸ் கிளப் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

    சென்னை கிண்டி ரேஸ் கிளப் குத்தகை ரத்து விவகாரம் தொடர்பாக ரேஸ் கிளப் நிர்வாகத்திற்கும், அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்ன உயர் நீதிமன்றத்தில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார். சீல் வைப்பு நடவடிக்கை தொடர்பாக ரேஸ் கிளப் நிர்வாகம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை 3 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

     



  • Sep 26, 2024 13:08 IST
    கிண்டி ரேஸ் கிளப் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

    சென்னை கிண்டி ரேஸ் கிளப் குத்தகை ரத்து விவகாரம் தொடர்பாக ரேஸ் கிளப் நிர்வாகத்திற்கும், அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்ன உயர் நீதிமன்றத்தில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார். சீல் வைப்பு நடவடிக்கை தொடர்பாக ரேஸ் கிளப் நிர்வாகம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை 3 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

     



  • Sep 26, 2024 13:07 IST
    'தேவை இல்லாமல் 15 மாத காலம் சிறையில் வைத்தனர்' - டி.கே.எஸ்.இளங்கோவன் பேச்சு 

    தி.மு.க செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் பேசுகையில், “ ஜாமின் என்பது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கான உரிமை, சட்டப்படியான உரிமை. செந்தில் பாலாஜியை தேவை இல்லாமல் 15 மாத காலம் சிறையில் வைத்து இருக்கிறார்கள்;

    வழக்கில் என்ன முகாந்திரம் இருக்கிறது என்பது தெரியவில்லை. சரியான குற்றம்சாட்டு பதியப்பட வில்லை. 15 மாத காலம் சிறையில் வைத்திருப்பது அவரின் உரிமையை மீறிய செயலாக தான் கருதப்படும்” என்று கூறியுள்ளார். 



  • Sep 26, 2024 12:50 IST
    பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கோயில் பூசாரி கைது 

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடகரை பகுதியில் சிறார்களை கோயிலுக்குள் அழைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கோயில் பூசாரி திலகர் (70) போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 

    குழந்தைகள் தங்களின் பெற்றோரிடம் இது குறித்து தெரிவிக்க, அப்பகுதி மக்கள் கோயிலை நோக்கி திரண்டு வர, திலகர் உள்ளே இருந்துகொண்டு கோயிலைப் பூட்டியுள்ளார்.  போலீசாருக்கு தகவல் தெரிந்து அவர்கள் வந்து திலகரை அழைத்துச் சென்று வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். 



  • Sep 26, 2024 12:27 IST
    செந்தில் பாலாஜி அமைச்சர் பதவி ஏற்க தடை இல்லை: ஆர்.எஸ் பாரதி

    "செந்தில் பாலாஜி அமைச்சராவதற்கு எந்த தடையும் இல்லை அமலாக்கத்துறை வேண்டுமென்றே திட்டமிட்டு வழக்கை இழுத்தடித்தார்கள்" என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். 

     சென்னையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்லும் போது செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்திருப்பது, அவரின் டெல்லி பயணமும் மிகப்பெரிய வெற்றி பெரும் என்ற நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் கொடுக்கிறது. செந்தில் பாலாஜிக்கு 15 மாத சிறை என்பது தேவையற்ற ஒன்று என நீதிமன்றம் சொல்லி இருக்கிறது. 

    கொங்கு மண்டலத்தில் திமுகவின் வெற்றிக்காக பணியாற்றினார் என்பதற்காகவே சிறையில் அடைத்தார்கள். செந்தில் பாலாஜி சிறையில் இருந்தாலும், வெளியே இருந்தாலும், திமுகவின் செல்வாக்கை யாராலும் குறைக்க முடியாது;

    செந்தில் பாலாஜி அமைச்சராவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை. இது தாமதிக்கப்பட்ட நீதி, வழக்கை அமலாக்கத்துறை இழுத்தடிக்க நினைத்த போதெல்லாம், நீதிமன்றம் சரியான பதில் கொடுத்துள்ளது." என்று அவர் கூறியுள்ளார். 



  • Sep 26, 2024 11:56 IST
    "அதிகாரத்திற்கு எல்லோரும் அடிபணிந்துவிட மாட்டார்கள்" - ஜோதிமணி எம்.பி

    "அதிகாரத்திற்கு எல்லோரும் அடிபணிந்துவிட மாட்டார்கள். அதை எதிர்த்து நின்று வெற்றியடைவார்கள் என்பதை இந்தியா கூட்டணித் தலைவர்கள் நிரூபித்திருக்கிறார்கள். அமலாக்கத்துறையால் அநீதியாக கைது செய்யப்பட்டு அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்ட இந்தியா கூட்டணியின் அனைத்துத் தலைவர்களும்  சட்டப் போராட்டத்தை சந்தித்து வெற்றியடைந்துள்ளார்கள் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி" என்று ஜோதிமணி எம்.பி பதிவிட்டுள்ளார்.

     



  • Sep 26, 2024 11:55 IST
     'உன் தியாகம் பெரிது... உறுதி அதனினும் பெரிது' -  மு.க.ஸ்டாலின்

    "ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு 471 நாட்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் பிணை கிடைத்திருக்கிறது. 

    அமலாக்கத் துறையானது, அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில், அதற்கு உச்சநீதிமன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது. எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது. அரசியல் சதிச் செயல்கள் 15 மாதங்கள் தொடர்ந்தன. கைது செய்து சிறையிலேயே வைத்துவிடுவதால் சகோதரர் செந்தில் பாலாஜியின் உறுதியைக் குலைக்க நினைத்தார்கள். 

    முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன். உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது." என்று முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 



  • Sep 26, 2024 11:48 IST
    15 மாத சட்ட போராட்டம்  - அமைச்சர் ரகுபதி பேச்சு 

    "15 மாதங்களாக சட்ட போராட்டம் நடத்தி செந்தில் பாலாஜி வெற்றி பெற்றுள்ளார். செந்தில் பாலாஜி போன்று வேறு யாரும் சிறையில்  இருந்தே சட்டப்போராட்டத்தை நடத்தி இருக்க முடியாது"  என்று  அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். 



  • Sep 26, 2024 11:47 IST
    மும்பை கனமழைக்கு 4 பேர் பலி; பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

    மும்பையில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் நகர் முழுதும் மழைநீர் தேங்கியுள்ளது. இந்த கனமழைக்கு 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பைக்கு 'ஆரஞ்சு’ அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

    மும்பையில், விமல் அனில் கெய்க்வாட் என்ற 45 வயது பெண் புதன்கிழமை இரவு அந்தேரியில் உள்ள வெராவலி நீர்த்தேக்கம் அருகே உள்ள வாய்க்காலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். கூடுதலாக, கல்யாணின் கம்பா கிராமத்தில் இரண்டு தொழிலாளர்கள் மின்னல் தாக்கியதில், மற்றொரு பெண் கொபோலியில் உள்ள நீர்வீழ்ச்சியின் அருகே மூழ்கி இறந்தார்.



  • Sep 26, 2024 11:08 IST
    செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராவதற்கு எந்த தடையும் இல்லை

    “செந்தில் பாலாஜி கடந்த 15 மாதங்களாக விசாரணை குற்றவாளியாக இருப்பதால், அவரின் அடிப்படை உரிமைகளை கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கி உள்ளது; 

    ஒவ்வொரு திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்து போடவேண்டும். 25 லட்சம்  ரூபாய்க்கான சொந்த பிணை தொகையை வழங்க வேண்டும். செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராவதற்கு எந்த தடையும் இல்லை. இவ்வழக்கு தொடர்பான அனைத்து விசாரணைகளுக்கும் அவர் ஒத்துழைப்பு தரவேண்டும்;

    இன்று மாலை அல்லது நாளை காலை அவர் சிறையில் இருந்து வெளியே வருவார்” - செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கியது தொடர்பாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் என்.ஆர். இங்கோ தெரிவித்தார். 



  • Sep 26, 2024 10:49 IST
    செந்தில் பாலாஜிக்கு ஜாமின்

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு. 470 நாட்களாக சிறையில் உள்ள செந்தில் பாலாஜிக்கு  உச்சநீதிமன்றம் இன்று ஜாமின் வழங்கியது,

    அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடியில் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டது.

     ஜாமின் மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு வழக்கில் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்தது.



  • Sep 26, 2024 10:29 IST
    இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய வழக்கில் காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது 

    நீதிபதிகள் அபெய் எஸ்.ஓகா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிக் ஆகியோர் தீர்ப்பளிக்கிறார்கள்.

    இந்த வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி முடிந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

    செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தது.

    செந்தில் பாலாஜியின் உடல் நிலையை கருத்தில் கொண்டும், ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருப்பதாலும் ஜாமின் வழங்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கை வைந்திருந்தது.

    விசாரணை முடிந்து 37 நாட்களுக்கு பிறகு நீதிபதிகள் இன்று தீர்ப்பளிக்கிறார்கள்.



  • Sep 26, 2024 10:10 IST
    பேராயர் எஸ்றா சற்குணம் உடலுக்கு ஸ்டாலின் அஞ்சலி

    உடல்நலக் குறைவால் காலமான பேராயர் எஸ்றா சற்குணம் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். 

    ன்னை வானகரத்தில் நடைபெற்று வரும் இறுதி மரியாதை நிகழ்வில், அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, சென்னை மேயர் பிரியா கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.



  • Sep 26, 2024 09:07 IST
    இந்திய செஸ் அணிக்கு ரூ.3.30 கோடி பரிசு

    செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற இந்திய அணியினருக்கு 3 கோடியே 20 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என இந்திய செஸ் சம்மேளனம் அறிவித்துள்ளது.

    வெற்றி பெற்ற அணியில் இடம்பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. முன்னதாக டெல்லியில் செஸ் வீரர், வீராங்கனைகளுக்கு செஸ் சம்மேளனம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.



  • Sep 26, 2024 09:02 IST
    இரவில் கொட்டித் தீர்த்த கனமழை

    சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு கனமழை கொட்டித் தீர்த்தது. கோயம்பேடு மெட்ரோ சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீர், சாலையில் ஒரு அடிக்கும் மேல் மழை நீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரக்கூடிய வியாபாரிகள், பொதுமக்கள் பாதிப்பு.மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் இடத்தில் அதிகளவு மழை நீர் தேங்கி நிற்கிறது. 



  • Sep 26, 2024 08:35 IST
    ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை டெல்லி செல்கிறார். நாளை காலை 11 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment