Advertisment

Tamil News Updates: 3 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை: சென்னை வானிலை மையம்

Tamil News Updates: அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Disaster management on 12 people lost lives in recent heavy rain TN Tamil News

Tamil nadu

பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 67-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல்  லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும்,  டீசல் லிட்டர் டீசல் ரூ.92.34 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

Advertisment

எலிமினேட்டர் சுற்று 

ஐ.பி.எல் தொடரின் ப்ளே ஆஃப் சுற்றில் இன்று நடைபெறும் எலிமினேட்டரில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை. அகமதாபாத்தில் உள்ள  நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 • May 22, 2024 23:57 IST
  குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரிக்கை; சவுக்கு சங்கர் தாய் கமலா ஐகோர்ட்டில் மனு

  யூ டியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சவுக்கு சங்கரின் தாய் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அடுத்தடுத்து வழக்குப்பதிவு செய்து தனது மகனை ஒவ்வொரு ஊராக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வருவதாக புகார் கூறியுள்ளார். காவல்துறையினர் தாக்கியதில் காயமடைந்த மகனுக்கு முறையான சிகிச்சை வழங்கப்படவில்லை என்று மனுவில் தெரிவித்துள்ளார். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தனது மகன் செயல்படவில்லை, அதனால், சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யுங்கள் என்று அவருடைய தாய் கமலா தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்துள்ளார். • May 22, 2024 23:03 IST
  நாங்களும் உணவு ஏற்பாடு செய்ய தயார் - அண்ணாமலைக்கு செல்வப்பெருந்தகை பதில்

  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை: “ஜூன் 4ம் தேதிக்கு பிறகு கமலாலயத்தில் 10 பேர் கூட இருக்கப் போவதில்லை; எத்தனை பேர் இருப்பார்கள் என்று சொன்னால் உணவு ஏற்பாடு செய்வோம்; கடந்த 10 ஆண்டில் தமிழகம் எப்படி வஞ்சிக்கப்பட்டது என்பது பற்றி புத்தகமும் வழங்குவோம்” என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்துள்ளார்.  • May 22, 2024 20:55 IST
  யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமின் - திருச்சி மகிளா கோர்ட் உத்தரவு

  பெண் போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமின் வழங்கி திருச்சி மாவட்ட  கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா உத்தரவிட்டுள்ளார்.  • May 22, 2024 20:49 IST
  வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி இருக்கும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை கூடாது - ஐகோர்ட் உத்தரவு

  “வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி இருக்கும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது” என்று சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது. மேலும், ஸ்டிக்கர் ஒட்டுவதை தவறாக பயன்படுத்தினால் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் எனவும் உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் ஸ்டிக்கர் வழங்குவது போல மருத்துவர்களுக்கும் வழங்குவது குறித்து தேசிய மருத்துவ ஆணையத்திடன் கருத்து கேட்கலாமே? என்று  உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும், தேசிய மருத்துவ ஆணையத்தையும், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலையும் வழக்கில் இணைக்க மனுதாரருக்கு உத்தரவிட்டு விசாரணை ஜூன் 14ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது. • May 22, 2024 20:04 IST
  ஆந்திராவில் வாக்குப்பதிவு எந்திரத்தை உடைத்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. கைது

  ஆந்திராவில் கடந்த 13ம் தேதி நடந்த வாக்குப்பதிவின் போது இ.வி.எம் எந்திரத்தை உடைத்தெறிந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ ராமகிருஷ்ண ரெட்டி, தெலங்கானாவில் கைது செய்யப்பட்டார். மாச்சர்லா தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்குள் நுழைந்து இ.வி.எம் எந்திரத்தை உடைக்கும் வீடியோ நேற்று வெளியாகி பரப்ப்பை ஏற்படுத்தியது. • May 22, 2024 19:59 IST
  நடிகர் ஷாருக்கான் மருத்துவமனையில் அனுமதி

  பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டு அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் ஷாருக்கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை காவல்துறை உறுதி செய்துள்ளது. • May 22, 2024 18:56 IST
  மேற்கு வங்கத்தில் 2011ல் வழங்கப்பட்ட ஒ.பி.சி சான்றிதழ்கள் ரத்து

  மேற்கு வங்கத்தில் 2011ம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட OBC சான்றிதழ்களை ரத்து செய்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  2012ம் ஆண்டு பல்வேறு சாதிகளை ஓ.பி.சி பிரிவில் கொண்டுவந்து திரிணாமுல் காங்கிரஸ் அரசு சட்டம் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. • May 22, 2024 18:54 IST
  கோவை பில்லூர் அணையில் நீர் திறப்பு

  கோவை பில்லூர் அணையில் இருந்து விநாடிக்கு 3000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. • May 22, 2024 18:15 IST
  ரூ.2.10 லட்சம் நிதி வழங்கும் ஆர்.பி.ஐ

  2023-24ஆம் ஆண்டில் மத்திய அரசுக்கு இந்திய ரிசர்வ் வங்கி ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்து 874 கோடி நிதி வழங்க கவர்னர் சக்தி கந்த தாஸ் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. • May 22, 2024 18:07 IST
  செல்லப் பிராணிகளுக்கு இணைய வழியில் உரிமம்; தாம்பரம் மாநகராட்சி நடவடிக்கை

  தாம்பரம் மாநகராட்சியில் செல்லப் பிராணிகளுக்கு இணைய வழியில் உரிமம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 20ஆம் தேதிக்குள் https://tcmcpublichealth.in என்ற முகவரியில் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். • May 22, 2024 18:00 IST
  டெல்லி உள்துறை அமைச்சக அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

  டெல்லி வடக்கு பிளாக்கில் உள்ள உள்துறை அமைச்சக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் சோதனை நடத்திவருகின்றனர். • May 22, 2024 17:30 IST
  '791 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன'- அமைச்சர் சிவசங்கர்

  “தி.மு.க. ஆட்சியில் இதுவரை 791 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன. 858 புதுப்பிக்கப்பட்ட பேருந்துகள் மக்கள பயன்பாட்டுக்கு வந்துள்ளன. 1000 மின்சார பேருந்துகள் உள்பட 682 புதிய பேருந்துகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். • May 22, 2024 17:28 IST
  மதுரை: வைகை ஆற்றில் குளித்த சிறுவன் உயிரிழப்பு


  மதுரை விரகனூர் பகுதியைச் சேர்ந்த ஜீவா என்பவரின் மகன் நண்பர்களுடன் வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். • May 22, 2024 16:39 IST
  போலீசார் என்னை துன்புறுத்தவில்லை : சவுக்கு சங்கர் வாக்குமூலம்

  கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் 2 நாட்கள் போலீஸ் காவல் முடிந்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் யூடியூபர் சவுக்கு சங்கரின் நீதிமன்ற காவல் ஜூன் 5 வரை நீடிக்கப்படுவதாக, மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணையின் போது காவல் துறையினர் என்னை துன்புறுத்தவில்லை என்று சவுக்கு சங்கர் கூறியுள்ளார்.   • May 22, 2024 16:06 IST
  பாஜக தேசிய தலைவர் ​ஜே.பி.நட்டாவுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

  "சமூகத்தை பிளவுபடுத்தும் வகையிலான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என கட்சியின் நட்சத்திர பேச்சாளர்களுக்கு அறிவுறுத்துங்கள்" என பாஜக தேசிய தலைவர் ​ஜே.பி.நட்டாவுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. • May 22, 2024 16:00 IST
  அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மகளிர் குழுக்கள் மூலம் சீருடை தைக்க அரசு திட்டம்

  அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தையல் பணிகள் மேற்கொள்ளும் மகளிர் குழுக்கள் மூலம் சீருடை தயாரிக்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சோதனை அடிப்படையில் 50 பள்ளிகளுக்கு இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்படும் சீருடையின் அளவில் மாணவர்களுக்கு ஏற்ப மாறுபாடு இருப்பதால், பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால், ஒவ்வொரு 50 பள்ளிகளிலும் மாணவர்களுக்கு தனித்தனியாக அளவு எடுத்து, மாவட்டத்தில் உள்ள மகளிர் குழுக்கள் மூலம் சீருடை தைக்க திட்டமிடப்பட்டுள்ளது • May 22, 2024 14:56 IST
  2வது நாளாக ஜாபர் சாதிக்கின் சகோதரர் ஆஜர்

  சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் ஜாபர் சாதிக்கின் சகோதரர் சலீம் 2வது நாளாக தனது வழக்கறிஞரோடு நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்

  வங்கி பரிவர்த்தனை உள்ளிட்ட ஆவணங்களோடு ஆஜரான சலீமிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். • May 22, 2024 14:48 IST
  சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி நியமனம்

  சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா நாளை (மே 23) பணி ஓய்வு பெறும் நிலையில், அப் பதவிக்கு ஆர்.மகாதேவனை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். • May 22, 2024 14:16 IST
  பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

  இதுவரை நடந்து முடிந்துள்ள 5 கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுகளும் நான் 3-வது முறையாக பதவியேற்பதை உறுதி செய்துள்ளது.

  அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை விழாவில், தேசத்திற்கு ராமர், வளர்ச்சிக்கு பாரம்பரியம், ஆன்மீகத்துக்கு நவீனம் என கூறியிருந்தேன்; அதன் அடிப்படையில் இன்று  இந்தியா முன்னேறி வருகிறது

  - உத்தரபிரதேச மாநிலம் பஸ்தியில் பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு • May 22, 2024 13:57 IST
  சென்னையில் ஒரு நாள் விட்டு ஒருநாள் குடிநீர் விநியோகம்

  நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில், கடல்சார் பணிகள், பராமரிப்பு பணிகள் காரணமாக தேனாம்பேட்டை, அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்கள் மற்றும் தாம்பரம் மாநகராட்சியில்,  வரும் 24 முதல் ஜூன் 2ஆம் தேதி வரை ஒரு நாள் விட்டு ஒருநாள் குடிநீர் விநியோகிக்கப்படும்

  சென்னை பெருநகர குடிநீர் வாரியம் அறிவிப்பு      • May 22, 2024 13:29 IST
  21 மாவட்டங்களுக்கு கனமழை

  திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, தருமபுரி, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

  - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் • May 22, 2024 13:29 IST
  ஹேமந்த் சோரன் இடைக்கால ஜாமின் மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

  நில அபகரிப்பு முறைகேடு தொடர்பான பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் இடைக்கால ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு • May 22, 2024 13:18 IST
  4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்

  நீலகிரி, தேனி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

  தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு

  சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் • May 22, 2024 12:49 IST
  சென்னை சில பகுதிகளில் சாரல் மழை

  சென்னை: தேனாம்பேட்டை, எழும்பூர் , ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை • May 22, 2024 12:47 IST
  சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி ஆர்.மகாதேவன் நியமனம்

  சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி ஆர்.மகாதேவன் நியமனம்; சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா நாளையுடன் ஓய்வு பெற உள்ள நிலையில் பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி ஆர்.மகாதேவனை நியமித்து குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு; மே 24-ம் தேதி முதல் நீதிபதி ஆர்.மகாதேவன் தலைமை நீதிபதி பணிகளை மேற்கொள்வார்.  • May 22, 2024 12:34 IST
  கனமழை : 12 பேர் உயிரிழப்பு

  தமிழகத்தில் கனமழை காரணமாக கடந்த 16ஆம் தேதியில் இருந்து நேற்று வரை 12 பேர் உயிரிழப்பு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அறிக்கை • May 22, 2024 12:33 IST
  குற்றால வெள்ளம் எச்சரிக்கை புதிய வீடியோ

  தென்காசி மாவட்டம் பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு தொடர்பான புதிய வீடியோ கடந்த 17ஆம் தேதி குற்றால அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 17 வயது சிறுவன் பலி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டவுடன், சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓடும் காட்சிகள் அடங்கிய புதிய வீடியோ • May 22, 2024 12:31 IST
  டிடிஎஃப் வாசனின் கடைக்கு போக்குவரத்து காவல்துறை நோட்டீஸ்

  சென்னை அயப்பாக்கத்தில் உள்ள யூ டியூபர் டிடிஎஃப் வாசனின், இருசக்கர வாகன உதிரிபாக கடைக்கு போக்குவரத்து காவல்துறை நோட்டீஸ்.  அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலென்சர்களை விற்பனை செய்ததாக எழுந்த புகாரில் அம்பத்தூர் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை பிரதமர் அலுவலகத்திற்கு வந்த புகாரின் அடிப்படையில் அம்பத்தூர் போக்குவரத்து போலீசார் நோட்டீஸ் டிடிஎஃப் வாசனின் கடைக்கு சென்று ஆய்வு செய்த போலீசார் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. • May 22, 2024 12:27 IST
  4 மாவட்டங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு

  இன்று தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு • May 22, 2024 11:56 IST
  மாயமான வங்கதேசம் எம்.பி. அன்வருல் அசீம் சடலமாக கண்டெடுப்பு

  கடந்த 12ஆம் தேதி மருத்துவ சிகிச்சைக்காக, வங்கதேசத்தில் இருந்து கொல்கத்தா வந்திருந்த எம்.பி. அன்வருல் அசீம் 14ஆம் தேதிக்கு பின், அன்வருல் அசீமை தொடர்பு கொள்ள இயலாத நிலையில், செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது காணாமல் போன அன்வருல் அசீமை போலீசார் தேடி வந்த நிலையில், நியூ டவுன் பகுதியில் சடலமாக கண்டெடுப்பு வங்கதேச எம்.பி. கொல்லப்பட்டிருக்கலாமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை சந்தேகத்தின் அடிப்படையில் வங்கதேச தலைநகர் தாக்காவில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை.  • May 22, 2024 11:49 IST
  அரசுப் பேருந்துகளில், காவலர்கள் கட்டணமின்றி பயணிக்க அனுமதி இல்லை: போக்குவரத்து துறை

  அரசுப் பேருந்துகளில், காவலர்கள் கட்டணமின்றி பயணிக்க அனுமதி இல்லை. நெல்லை நாங்குநேரி அருகே, டிக்கெட் எடுக்க மறுத்து காவலர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், போக்குவரத்து துறை விளக்கம் .வாரண்ட் இருந்தால் மட்டுமே காவல் துறையினர் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும்.  மற்ற அனைத்து நேரத்திலும் காவலர்கள் டிக்கெட் எடுத்து தான் பயணிக்க வேண்டும் . போக்குவரத்து துறை நாங்குநேரி காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது  • May 22, 2024 11:23 IST
  ஏரியில் குப்பை கழிவுகளை கொட்டுவதற்கு எதிராக மக்கள் சாலை மறியல்

  திருவண்ணாமலை: சாமந்தவாடி ஏரியில் குப்பை கழிவுகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்; சாலை மறியல் போராட்டம் காரணமாக ஆரணி - வந்தவாசி நெடுஞ்சாலையில் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு • May 22, 2024 11:10 IST
  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கருட சேவை உற்சவத்தில் தவறி கீழே விழுந்த குடை

  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கருட சேவை உற்சவத்தில் தவறி கீழே விழுந்த குடை . வைகாசி பிரம்மோற்சவத்தையொட்டி, பக்தர்கள் வெள்ளத்தில் நீந்தி சென்ற வரதராஜ பெருமாள் கருட சேவை உற்சவத்தில் குடை போட்டு, சுவாமியை குலுக்கிய போது, கீழே விழுந்த குடை கருட சேவை உற்சவத்தில் மூன்று இடங்களில் குடை தவறி விழுந்தது சுவாமியை குலுக்கிய போது குடையை பிடிக்க முடியாமல் தவறவிட்ட கோவில் பட்டாச்சாரியார்கள் .  • May 22, 2024 10:46 IST
  10 மாவட்டங்களுக்கு மழை

  தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  • May 22, 2024 10:31 IST
  மன்னிப்பு கோரினார் யூடியூபர் இர்பான்

  கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா என்பதை வீடியோவாக வெளியிட்ட விவகாரம்

  விளக்கம் கேட்டு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பிய நிலையில், மன்னிப்பு கோரினார் யூடியூபர் இர்பான்.

  நேற்று வாட்ஸ் அப் மற்றும் இ-மெயில் மூலம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய சுகாதாரத்துறை.

  தன்னை தொடர்பு கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் மன்னிப்பு கோரினார் இர்பான். மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட உள்ளதாகவும்  தகவல். சட்ட நடவடிக்கைகள் தொடரும் என தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் • May 22, 2024 10:29 IST
  அதி கனமழை: கேரளாவுக்கு ரெட் அலர்ட்

  கேரளா: பத்தனம்திட்டா, இடுக்கி மாவட்டங்களுக்கு இன்றும் (மே 22), நாளையும் (மே 23) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழா, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று (மே 22) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்  • May 22, 2024 10:04 IST
  தீபக் ராஜா கொலை: 5 பேரிடம் போலீசார் விசாரணை

  நெல்லை கே.டி.சி நகரில் தீபக் ராஜா என்ற ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை.

  5 பேர் கைதானதாக கூறப்பட்ட நிலையில், விசாரணை மட்டுமே நடைபெற்று வருவதாக போலீசார் விளக்கம். ரகசிய இடத்தில் வைத்து 5 பேரிடமும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வரும் தனிப்படை போலீசார்.

  நேற்று முன்தினம், தன் வருங்கால மனைவியின் கண் முன்னே தீபக் ராஜா வெட்டி கொலை செய்யப்பட்டார். தீபக் ராஜா மீது, நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 23 வழக்குகள் நிலுவையில் உள்ளன.  • May 22, 2024 09:56 IST
  வைகாசி விசாகம்: வடபழனி கோவிலில் தீர்த்தவாரி

  வைகாசி விசாக திருவிழாவையொட்டி சென்னை வடபழனி முருகன் கோவிலில் தீர்த்தவாரி. விமரிசையாக நடைபெற்ற சுப்பிரமணியர் வீதி உலா.

  வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம். இன்று மாலை 6 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது • May 22, 2024 09:54 IST
  காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது

  வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது

  தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. தாழ்வுப் பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து 24-ம் தேதி தாழ்வு மண்டலாமாக மாறக் கூடும்.  தாழ்வு மண்டலாமானது பிறகு வடகிழக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையும் - இந்திய வானிலை மையம்  Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment