/indian-express-tamil/media/media_files/2025/01/29/kLvA4W4zk0AKXQZ0SRf5.jpg)
Today Latest Live News Update in Tamil 10 October 2025: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.80 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.39 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
சி.என்.ஜி. ஒரு கிலோ கிராம் ரூ.91.50 காசுகளுக்குa விற்பனையாகிறது.
மகளிர் உலகக்கோப்பை- இந்தியா தோல்வி
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வியைத் தழுவியது. இப்போட்டியில், இந்திய அணி நிர்ணயித்த 252 ரன்கள் இலக்கை தென் ஆப்பிரிக்க அணி சிறப்பாக சேஸ் செய்து, 48.5 ஓவர்களிலேயே எட்டிப் பிடித்து வெற்றியைப் பதிவு செய்தது.
இந்த வெற்றியின் மூலம் 4 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்கா 4வது இடத்திலும், இந்தியா 3வது இடத்திலும் உள்ளது.
சென்னை ஏரி நிலவரம்
சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் நீர் இருப்பு 70.03% ஆக உள்ளது.
செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் மற்றும் கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் மொத்த கொள்ளளவான 11.757 டி.எம்.சி.யில் தற்போது 8.233 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது
- Oct 10, 2025 16:09 IST
மீண்டும் அதிகரித்த தங்கம் விலை- சவரனுக்கு ரூ.640 உயர்வு
தங்கம் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்த நிலையில், தற்போது சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 11,340-க்கும் ஒரு சவரன் ரூ.90,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- Oct 10, 2025 15:49 IST
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றிய ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றிய ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி அவரது சகோதரர் இமானுவேல் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மனுவை விசாரித்த ஐகோர்ட் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை கடந்த மாதம் 24ம் தேதி சிபிஐக்கு மாற்றியது. சென்னை ஐகோர்ட் உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சிபிஐ விசாரணைக்கு மாற்றிய உயர்நீதிமன்ற உத்தரவு தொடரும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
- Oct 10, 2025 15:33 IST
கரூர் துயரம் தொடர்பான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
கரூர் துயரம் தொடர்பான வழக்கில் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. மேலும், விரிவான பதில்மனு தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. விஜய் 7 மணிநேரம் தாமதமாக வந்ததால் காலையில் இருந்து கூடியிருந்த தொண்டர்கள் மயங்கி விழுந்தனர். விஜய் வரும்போது நீர்சத்து குறைபாடு காரணமாக தொண்டர்கள் மயங்கி விழுந்தனர். பலியானோர் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் கூடுதலாக காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
- Oct 10, 2025 15:18 IST
இருமல் மருந்து குடித்து குழந்தைகள் இறந்த விவகாரத்தில் எஸ்.ஐ.டி. விசாரணைக் கோரிய மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்
இருமல் மருந்து குடித்து குழந்தைகள் இறந்த விவகாரத்தில் எஸ்.ஐ.டி. விசாரணைக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இருமல் மருந்து குடித்து 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தார். சிறப்பு விசாரணைக் குழு விசாரிக்க கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
- Oct 10, 2025 15:14 IST
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.90,720க்கு விற்பனை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.90,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. காலையில் சவரனுக்கு ரூ. 1320 குறைந்த நிலையில் பிற்பகல் சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,340-க்கு விற்பனையாகிறது.
- Oct 10, 2025 14:57 IST
புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு ரூ.7,000 தீபாவளி போனஸ் வழங்குவதாக அரசு அறிவிப்பு
புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு, ரூ.7,000 தீபாவளி போனஸ் வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரி அரசில் பணிபுரியும் குரூப் பி மற்றும் சி பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக ரூ.7 ஆயிரம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது.
- Oct 10, 2025 14:42 IST
2025-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு மரியா கொரேனா மச்சாடோவுக்கு அறிவிப்பு
2025-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு மரியா கொரேனா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரில் அமைதிக்கான நோபல் பரிசை தேர்வுக் குழு அறிவித்தது. லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் போராளி மரியா கொரேனா மச்சாடோ.
- Oct 10, 2025 14:41 IST
பட்டினப்பாக்கம் செல்லும் தவெக தலைவர் விஜய்
நீலாங்கரை வீட்டிலிருந்து பட்டினப்பாக்கம் புறப்பட்டார் விஜய். 12வது நாளாக பட்டினப்பாக்கம் செல்லும் தவெக தலைவர் விஜய்
- Oct 10, 2025 14:32 IST
தலைவர் கலைஞரின் பிள்ளையாகவே வளர்ந்தார் முரசொலி செல்வம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
கலைஞரின் பிள்ளையாகவே முரசொலி செல்வம் வளர்ந்தார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முரசொலியில் எங்களுக்கெல்லாம் ஆசானாகத் திகழ்ந்தார். திமுக இயக்கத்துக்காகவே இறுதிவரை வாழ்ந்து மறைந்தார் முரசொலி செல்வம். அச்சமில்லை, ஆணவமில்லை, நல்லறிவினில் எம் திராவிடச் செல்வத்துக்கு இங்கு எவரும் நிகரில்லை என நான் உற்ற துணையாகக் கொண்ட முரசொலி செல்வம் அவர்களின் முதலாம் நினைவு நாள். அவரது நினைவுகளை நெஞ்சில் சுமந்தபடி போற்றி வணங்குகிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- Oct 10, 2025 14:30 IST
தாலிபான் அரசுடன் அதிகாரப்பூர்வமாக உறவை ஏற்படுத்தியது இந்தியா
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இந்திய தூதரகத்தை மீண்டும் திறக்க உள்ளதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அறிவிப்பு. தாலிபான் அரசை இந்தியா இதுவரை அங்கீகரிக்காத நிலையில், அதிகாரப்பூர்வமாக உறவை ஏற்படுத்த முடிவெடுத்துள்ளார்.
- Oct 10, 2025 14:29 IST
தற்கால தமிழ்ப் பாடல்கள் குறித்து கவிஞர் வைரமுத்து விமர்சனம்
தமிழ்ப் பாடல்களில் பிறமொழிச் சொற்களுக்கு மத்தியில் ‘தமிழும் கொஞ்சம்' பயன்படுத்தப் படுகிறது என்பதுதான் தற்போதைய நிலை. இசை என்பது ஓசை ஆகிவிட்டது. இது மிகப்பெரிய விபத்து. இதனால் மொழி என்பது ஒலி ஆகிவிட்டது. இவை இரண்டும் மீறி, மாறி வர வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
- Oct 10, 2025 14:13 IST
சபரிமலை தங்க கவச முறைகேடு - அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
சபரிமலை துவாரபாலகர் தங்க கவசம் 4.5 கிலோ எடை குறைந்த விவகாரம். தங்க கொள்ளை நடைபெற்றுள்ளதாக கேரள உயர்நீதிமன்றம் குற்றச்சாட்டு. 6 வாரத்திற்குள் கேரள அரசு அறிக்கை சமர்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- Oct 10, 2025 13:59 IST
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை மதுரை அமர்வுக்கு பதில் சென்னை ஐகோர்ட் விசாரித்தது ஏன் - சுப்ரீம் கோர்ட் கேள்வி
கரூரில் விஜயின் பரப்புரை கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக சி.பி.ஐ விசாரணை கோரும் மனு என 5 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, என்.வி. அஞ்சாரியா அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அமர்வுக்கு பதில் சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது ஏன் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
- Oct 10, 2025 13:50 IST
முதுகலை ஆசிரியர் தேர்வை தள்ளிவைக்க முடியாது - ஐகோர்ட்
முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டி தேர்வை தள்ளிவைக்க கோரிய மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், முதுகலை ஆசிரியர் போட்டி தேர்வை தள்ளிவைக்க முடியாது என்று மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
- Oct 10, 2025 13:26 IST
பாதிக்கப்பட்டவர்களை விஜய் சென்று சந்திக்கவில்லை என்றால் என்ன? சுப்ரீம் கோர்ட் கேள்வி
ஒரே நாளில் சென்னை மற்றும் மதுரை நீதிமன்றங்களில் வெவ்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது எப்படி? பாதிக்கப்பட்டவர்களை விஜய் சென்று சந்திக்கவில்லை என்றால் என்ன என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
- Oct 10, 2025 13:21 IST
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தனி நீதிபதி தலையிட்டது தவறு - உச்ச நீதிமன்றம்
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக விசாரணைக்கு ஏற்றது ஏன் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பிள்ளது. இதற்கு 41 பேர் உயிரிழந்து உள்ளதால் தான் சென்னை உயர்நீதிமன்ற தலையிட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசு தரப்பில் பாதிக்கப்பட்டது.
உயர் நீதிமன்ற மதுரை அமர்வு விசாரித்த வழக்கை சென்னையில் தனி நீதிபதியும் விசாரணைக்கு எடுத்தது ஏன் என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தனி நீதிபதி தலையிட்டது தவறு என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
- Oct 10, 2025 13:09 IST
விஜய் தாமதமாக வந்ததே கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கு காரணம் - சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு வாதம்
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக த.வெ.க உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணையின்போது, “கரூர் கூட்ட நெரிசல் குறித்து விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழுவின் தலைவர் அஸ்ரா கார் சிறந்த அதிகாரி; அவர் சி.பி.ஐ-யில் பணியாற்றியுள்ளார். அவரை பரிந்துரைத்தது உயர்நீதிமன்றம் தான் என்றும் விஜய் தாமதமாக வந்ததே கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கு காரணம் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Oct 10, 2025 12:59 IST
விஜயின் தலைமைப் பண்பு குறித்து எதற்காக உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது? - சுப்ரீம் கோர்ட்டில் த.வெ.க வாதம்
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக த.வெ.க உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணையின்போது, “கரூரில் கூட்ட நெரிசலுக்கு பிறகு விஜய் தப்பி ஓடிவிட்டதாக உயர் நீதிமன்ற விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர் மனுதாரராக இல்லாத போது எதற்காக எங்களைப் பற்றி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவிக்க வேண்டும். வழக்கிற்கு தொடர்பே இல்லாத வகையில் விஜயின் தலைமைப் பண்பு குறித்து எல்லாம் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கரூர் கூட்ட நெரிசலுக்கு பிறகு காவல்துறை கட்டாயப்படுத்தியதால்தான் விஜய் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். கரூர் கூட்ட நெரிசலுக்கு பிறகு பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க த.வெ.க நிர்வாகிகளை அனுமதிக்கவில்லை” என்று த.வெ.க வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
- Oct 10, 2025 12:48 IST
கரூர் துயரம்: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் த.வெ.க வாதம்
விஜயின் பரப்புரை கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான த.வெ.க உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் த.வெ.க தரப்பில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் கோபால் சுப்ரமணியம், ஆர்யமா சுந்தரம் ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர். அப்போது, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம் என த.வெ.க தெரிவித்தது.
தமிழ்நாடு போலீசாரை மட்டுமே கொண்டு அமைக்கப்பட்டுள்ள எஸ்.ஐ.டி மூலம் உண்மை வெளிவராது தமிழக வெற்றி கழகம் சார்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம் உச்சநீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார்.
- Oct 10, 2025 12:21 IST
கிராம சபை கூட்டம் அக்டோபர் 11-ம் தேதி நடைபெறும்; ஸ்டாலின் உரையாற்றுவார் - ககன்தீப் சிக் பேடி அறிவிப்பு
அக்டோபர் 2-ம் தேதி நடைபெற இருந்த கிராம சபை கூட்டங்கள் நாளை அக்.11-ம் தேதி நடைபெற உள்ளன என்று ஐ.ஏ.எஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார். சென்னை டலைமைச் செயலகத்தில் பேட்டி அளித்த ககன்தீப் சிங் பேடி, “ 12000 ஊராட்சிகளில் நாளை நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி மூலம் உரையாற்றுகிறார். முதல்வர் உரைக்காக நெட் பாரத் திட்டத்தின் மூலம் தொழில்நுட்ப வசதி செய்யப்பட்டுள்ளது. சாதி பெயர்கள் உள்ள ஊர்களின் பெயர்களை மாற்றுவது குறித்து நாளை கூட்டத்தில் விவாதிக்கப்படும்” என்று கூறினார்.
- Oct 10, 2025 11:57 IST
சென்னையில் ஐ.டி. நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம் பகுதிகளில் அமைந்துள்ள ஐ.டி நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சலில் வந்த மிரட்டலை அடுத்து தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டலால் பணிக்கு வந்த ஊழியர்களை வீட்டிற்கு திரும்பச் செல்லும்படி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன
- Oct 10, 2025 11:41 IST
நாகேந்திரன் மனைவியின் கோரிக்கை நிராகரிப்பு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி நாகேந்திரன் மரணமடைந்த நிலையில், நாகேந்திரன் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி மனைவி மனு தாக்கல் செய்தார். தங்கள் தரப்பு மருத்துவர் மூலம் பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என நாகேந்திரன் மனைவி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்ட நிலையில் நாகேந்திரன் மனைவியின் கோரிக்கையை ஏற்க உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது
- Oct 10, 2025 11:20 IST
போராட்டம் நடத்த முயன்ற தூய்மை பணியாளர்கள் கைது
சென்னையில் ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்த முயன்ற தூய்மை பணியாளர்களை காவல்துறை கைது செய்தது. 5 மற்றும் 6 ஆம் மண்டலத்தில் தூய்மை பணிகளை தனியார் கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்
- Oct 10, 2025 10:58 IST
1450 ஊராட்சி செயலர் பணியிடங்கள் - அறிவிப்பாணை வெளியீடு
கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 1,450 பணியிடங்களுக்கு இன்று முதல் இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யலாம். டிசம்பர் முதல் வாரத்தில் நேர்காணல் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது
- Oct 10, 2025 10:45 IST
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை - தேஜஸ்வி வாக்குறுதி
பீகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில், தேர்தல் வாக்குறுதிகளை ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி யாதவ் அறிவித்துள்ளார். அதில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும், இதற்காக ஆட்சி அமைத்த 20 நாட்களுக்குள் சட்டம் இயற்றப்படும் என்றும் தேஜஸ்வி தெரிவித்துள்ளார்
- Oct 10, 2025 10:33 IST
த.வெ.க.,வுக்கு ஆதரவாக அ.தி.மு.க குரல் கொடுக்கும் - பொள்ளாச்சி ஜெயராமன்
த.வெ.க தொண்டர்களையும், அந்த கட்சியையும் கொடுமைப்படுத்தும் செயலில் தி.மு.க ஈடுபடுமானால், நிச்சயமாக ஜனநாயகத்தை காக்கும் முயற்சியாக, உறுதியாக அ.தி.மு.க குரல் கொடுக்கும் என அ.தி.மு.க மூத்த தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் திருப்பூரில் செய்தியாளர்களிடம் கூறினார்
- Oct 10, 2025 10:02 IST
பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல்
பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான 51 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட பட்டியலை நேற்று வெளியிட்டது ஜன் சுராஜ் கட்சி. 2-வது பட்டியலில் பிரசாந்த் கிஷோர் பெயர் இடம் பெறும் என தகவல். நவ. 6, 11ம் தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.
- Oct 10, 2025 09:50 IST
நாளை புரட்டாசி கடைசி சனிக்கிழமை: திருப்பதி கோயிலில் பக்தர்கள் கூட்டம்
நாளை புரட்டாசி நான்காம் சனிக்கிழமை என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இலவச தரிசனத்திற்கான வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகளும் நிரம்பியுள்ளது; பக்தர்கள் 24 மணி நேரத்துக்கு மேலும் 3 கிலோ மீட்டர் வரை வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
- Oct 10, 2025 09:38 IST
தங்கம் விலை
கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,320 குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சிக்குப் பிறகு, ஆபரணத் தங்கத்தின் ஒரு கிராம் இன்று ரூ.11,260-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- Oct 10, 2025 09:16 IST
இருமல் மருந்து விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
இருமல் மருந்து விவகாரம் தொடர்பாக 20 குழந்தைகள் உயிரிழந்தது குறித்து நீதி விசாரணை கோரிய பொதுநல மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
- Oct 10, 2025 08:55 IST
கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் இன்று மாற்றம்
செங்கல்பட்டு யார்டில் பொறியியல் பணி நடைபெற உள்ளதால், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை - திருமால்பூருக்கு இன்று காலை 7.27-க்கு புறப்படும் மின்சார ரயில், கடற்கரை - செங்கல்பட்டுக்கு இன்று காலை 9.31, 9.51, 10.56, பகல் 11.40, நண்பகல் 12.25 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
திருமால்பூர் - கடற்கரைக்கு காலை 11.05-க்கு இயக்கப்படும் மின்சார ரயில், செங்கல்பட்டு - கடற்கரைக்கு பகல் 11.30, நண்பகல் 12, மதியம் 1.10, 1.45, பிற்பகல் 2.20 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. இதற்கு மாற்றாக, கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள்கோவில், காட்டாங்குளத்தூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
-சென்னை ரயில்வே கோட்டம்
- Oct 10, 2025 08:47 IST
சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோத ரிசார்ட்களை மூட உத்தரவு
சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோதமாக இயங்கும் தங்கும் விடுதிகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அப்பகுதியில் உள்ள கருவண்ணராயர் கோவில் திருவிழாவில், வனக் கட்டுப்பாடு, ஆடு பலியிடுதல் உள்பட ஏற்கனவே விதிக்கப்பட்ட 11 கட்டுப்பாடுகளை அமல்படுத்தவும் நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது.
- Oct 10, 2025 08:40 IST
ஆம்ஸ்டிராங் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
ஆம்ஸ்டிராங் கொலை வழக்கில் தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை இன்று (அக்.10) உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.
விசாரணையை சிபிசிக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக காவல்துறை மேல்முறையீடு; உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே. மகேஷ்வரி மற்றும் என்.வி. அன்சாரியா அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.
- Oct 10, 2025 08:28 IST
கர்நாடகாவில் பணிபுரியும் பெண்களுக்கு 1 நாள் மாதவிடாய் விடுப்பு
கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் சுமார் 90 லட்சம் பெண்களுக்கும், மாதந்தோறும் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் கால விடுப்பு வழங்கப்பட உள்ளது; இதற்கான ஒப்புதல் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அளிக்கப்பட்டது
ஏற்கனவே பீகாரில் 2 நாட்களும் ஒடிசாவில் ஒரு நாளும் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
- Oct 10, 2025 08:19 IST
இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் 2வது டெஸ்ட் இன்று தொடக்கம்
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி டெல்லியில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. முதல் போட்டியைப்போல் இதிலும் இந்தியா சுலபமாக வென்று தொடரை முழுமையாக கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- Oct 10, 2025 08:07 IST
டிரம்புக்கு நோபல் பரிசு வழங்க இஸ்ரேல் பிரதமர் வலியுறுத்தல்
அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்படும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு அதனை வழங்க வேண்டுமென இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹூ வலியுறுத்தினார்
- Oct 10, 2025 07:43 IST
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
பிலிப்பைன்ஸில் 7.2 ரிக்டர் அளவில் 2-ஆம் முறையாக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸில் நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதில் மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
- Oct 10, 2025 07:41 IST
புழல் சிறையில் இருந்து தஷ்வந்த் விடுதலை
சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில் விசாரணை நீதிமன்றம் அளித்த, உயர் நீதிமன்றம் உறுதி செய்த மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து புழல் மத்திய சிறையில் தண்டனைக் கைதிகள் பிரிவில் அடைக்கப்பட்டிருந்த தஷ்வந்த் நேற்றிரவு விடுதலை செய்யப்பட்டார்
- Oct 10, 2025 07:36 IST
த.வெ.க. மனு- சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) விசாரணையை எதிர்த்து தவெக தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் மகஸ்வேரி, அன்சாரி அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.
சிபிஐ விசாரணை கோரி தனிநபர்கள் தொடர்ந்த வழக்கும் இன்று விசாரணைக்கு வருகிறது.
- Oct 10, 2025 07:36 IST
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை எப்போது?
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 16 -18ஆம் தேதிக்குள் தொடங்குவதற்கு சாத்தியமுள்ளது.
- சென்னை வானிலை ஆய்வு மையம்
- Oct 10, 2025 07:35 IST
நெருங்கிய தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டேன்: மோடி
அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் பேசி, வரலாறு சிறப்புமிக்க காசா அமைதித் திட்டத்தின் வெற்றிக்காக அவரை வாழ்த்தினேன்; வர்த்தக பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட நல்ல முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்து, வரும் காலங்களில் நெருங்கிய தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டேன்
பிரதமர் நரேந்திர மோடியின் எக்ஸ் தளப் பதிவு
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.