/indian-express-tamil/media/media_files/2025/05/15/RUlpz9jrnWTmq36ayJKv.jpg)
Today Latest Live News Update in Tamil 29 August 2025: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.80 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.39 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
சி.என்.ஜி. ஒரு கிலோ கிராம் ரூ.91.50 காசுகளுக்கு விற்பனையாகிறது.
- Aug 29, 2025 14:20 IST
நெல்லுக்கான ஆதார விலை ரூ.2,500ஆக உயர்வு
சாதாரண ரக நெல்லின் ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ.131 உயர்த்தி ரூ.2,500-க்கும் சன்ன ரக நெல்லுக்கு ரூ.156 உயர்த்தி ரூ.2545க்கும் கொள்முதல் செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
- Aug 29, 2025 14:16 IST
ஜி.எஸ்.டி குறைப்பினால் கிடைக்கும் பலன்கள் நேரடியாக பொதுமக்களை சென்றடைய வேண்டும் - ஸ்டாலின்
மாநிலங்களின் வருவாயை பாதுகாக்காமல் ஜி.எஸ்.டி சீர்த்திருத்தங்கள் பயன் அளிக்காது. மாநிலங்களின் வருவாயை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜி.எஸ்.டி வரி குறைப்பினால் கிடைக்கும் பலன்கள் நேரடியாக பொதுமக்களை சென்றடைய வேண்டும் என ஸ்டாலின் கூறியுள்ளார்.
- Aug 29, 2025 13:36 IST
புதிய தொழிற்புரட்சி ஏற்படும்: பிரதமர் மோடி
ஜப்பான் தொழில்நுட்பமும் இந்தியாவின் திறமையும் இணைந்து தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்த முடியும். மெட்ரோ முதல் செமி கண்டக்டர் வரை இந்தியாவும் ஜப்பானும் நெருங்கிய ஒத்துழைப்பை கொண்டுள்ளன. ஜப்பானின் ஒத்துழைப்புடன் மும்பை- அகமதாபாத் புல்லட் ரயில் பணிகள்நடைபெற்று வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
- Aug 29, 2025 13:29 IST
ராமர் பால விவகாரம் - மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு
ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது குறித்த முடிவை தெரிவிக்க கோரி பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவிற்கு 4 வாரங்களில் பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- Aug 29, 2025 13:13 IST
நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து ஸ்டாலின் விசாரிப்பு
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்குச் சென்று இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விசாரித்தார்
- Aug 29, 2025 13:10 IST
மாதம்பட்டி ரங்கராஜ் மீது கிரிசில்டா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்வதாக கூறி, கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டதாக புகார் அளித்துள்ளார். அண்மையில் இருவரும் திருமண கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படம் வெளியிட்ட நிலையில் தற்போது புகார் கொடுக்கப்பட்டுள்ளது
- Aug 29, 2025 12:32 IST
ஸ்டாலினுடன் காவல்துறை நிர்வாகப் பிரிவு டி.ஜி.பி வெங்கட்ராமன் சந்திப்பு
தமிழக டி.ஜி.பி சங்கர்ஜிவால் நாளை மறுநாள் ஓய்வு பெறுகிறார். இந்தநிலையில், காவல்துறை நிர்வாகப் பிரிவு டி.ஜி.பி வெங்கட்ராமன் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வரைச் சந்தித்தார். வெங்கட்ராமன் சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது
- Aug 29, 2025 12:19 IST
அ.தி.மு.க கட்சி விதிகள் திருத்தத்தை எதிர்த்த வழக்கு; தனி நீதிபதி உத்தரவு ரத்து
அ.தி.மு.க கட்சி விதிகள் திருத்தத்தை எதிர்த்து வழக்கு தொடர சுரேன், ராம்குமார் ஆதித்தன் ஆகியோருக்கு அனுமதியளித்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது
- Aug 29, 2025 11:51 IST
ஜப்பானும் இந்தியாவும் இணைந்தால் புதிய தொழிற்புரட்சியை ஏற்படுத்த முடியும் - மோடி
மெட்ரோ முதல் செமி கண்டக்டர் வரை இந்தியாவும்-ஜப்பானும் நெருங்கிய ஒத்துழைப்பை கொண்டுள்ளன. ஜப்பான் தொழில்நுட்பமும், இந்தியாவின் திறமையும் இணைந்து புதிய தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்த முடியும். ஜப்பானின் ஒத்துழைப்புடன் மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன என ஜப்பானில் பிரதமர் மோடி கூறியுள்ளார்
- Aug 29, 2025 11:47 IST
பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தல பொன்விழா; போக்குவரத்து மாற்றம்
சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தல பொன்விழா ஆண்டுப் பெருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையில் அறிவித்துள்ளது.
- Aug 29, 2025 11:43 IST
மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றிவிட்டார் - ஜாய் கிரிசில்டா புகார்
நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் கோயிலில் வைத்து தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும், 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் ஜாய் கிரிசில்டா புகார் தெரிவித்துள்ளார்
- Aug 29, 2025 11:41 IST
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கருத்துக்கு சீமான் பதில்
தெருவெல்லாம் போதையும் சாராயமும் விற்றுக் கொண்டு 3 பிள்ளை பெற்றுக்கொள் என்றால் எப்படி பெறுவான். நான் என்ன சாப்பிட வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும், என்ன மதத்தில் இருக்க வேண்டும், என்னை எரிக்கணுமா, புதைக்கணுமா? இதெல்லாம் சொல்றது உங்கள் வேலை அல்ல என இந்தியர்கள் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தியதற்கு சீமான் பதில் அளித்துள்ளார்
- Aug 29, 2025 11:01 IST
ஆக்ஸ்போர்டு பல்கலை.,யில் பெரியாரின் படத்தை திறந்து வைக்கிறேன் - ஸ்டாலின்
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அறிவாசான் தந்தை பெரியாரின் திருஉருவப்படத்தை திறந்து வைக்கிறேன் என தி.மு.க எம்.பி என்.ஆர் இளங்கோ இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
- Aug 29, 2025 10:15 IST
விஜய் தனித்து நின்றால் தாக்கத்தை ஏற்படுத்தும்- பிரேமலதா
2006 தேர்தலில் விஜயகாந்த் யாருடனும் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்டார். அதே போல 2026 தேர்தலில் விஜய் தனித்து நின்றால் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார்
- பிரேமலதா - Aug 29, 2025 09:20 IST
விஷால் பேட்டி
இன்று 12.30 மணிக்கு விஷால் அனைவரும் எதிர்பார்த்த அறிவிப்பு இன்று மதியம் 12.30 மணிக்கு அறிவிப்பேன். ரஜினிகாந்தின் 50 ஆண்டு கால திரைப்பயணத்திற்கு பாராட்டு விழா நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படும். நடிகர் சங்க கட்டிடப் பணி 2 மாதங்களில் நிறைவடையும்
- 48வது பிறந்தநாளில் நடிகர் விஷால் பேட்டி
- Aug 29, 2025 09:17 IST
மாநகராட்சி அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு!
சென்னை ரிப்பன் மாளிகையில் 5 துணை ஆணையர்கள் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு; துப்புரவுக்கு தூய்மைப் பணியை ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் கூடுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
CCTV கண்காணிப்பு வாகனங்கள், 20-க்கும் மேற்பட்ட மாநகரப் பேருந்துகள், 3 தீயணைப்பு வாகனங்கள், 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள், காவல் ரோந்து வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
- Aug 29, 2025 08:24 IST
வருவாய்த் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப தமிழ்நாடு அரசு
வருவாய்த் துறையில் 3 வருடங்களுக்கு கீழ் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை, காலம் தாழ்த்தாமல் உடனடியாக நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியரின் பொது நேர்முக உதவியாளரே விதிகளுக்கு உட்பட்டு நிரப்பிக் கொள்ளலாம் என்று ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது - Aug 29, 2025 08:06 IST
வெள்ளி வென்றார் நீரஜ் சோப்ரா!
டைமண்ட் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 2ஆம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். ஸ்விட்சர்லாந்தின் சூரிச் நகரில் நடைபெற்ற தொடரின் இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ரா 85.01 மீ. தூரம் ஈட்டி எறிந்தார்; நீரஜ் வெள்ளி வென்ற நிலையில் ஜெர்மனியின் ஜூலியன் வெப்பர் 90.51 மீ. தூரம் ஈட்டி எறிந்து தங்கப் பதக்கம் வென்றார்.
- Aug 29, 2025 08:06 IST
டிஜிபி சங்கர் ஜிவால் இன்றுடன் பணி ஓய்வு!
தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநராக 2023 ஜூன் 30இல் பதவியேற்ற சங்கர் ஜிவால் இன்றுடன் பணி ஓய்வு பெறவுள்ளார். அவருக்கு எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் இன்று மாலை 4 மணிக்கு பணி நிறைவு விழா நடைபெறுகிறது.
- Aug 29, 2025 07:32 IST
தமிழகத்தில் செப்.3 வரை மழைக்கு வாய்ப்பு-
ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒடிசா பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து சத்தீஸ்கரில் நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். ஆக.30 முதல் செப்.3-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் நாளை அதிகபட்ச வெப்பநிலை, வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது
சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் - Aug 29, 2025 07:31 IST
தமிழ்நாட்டில் திமுக கூட்டணியே மாபெரும் வெற்றி பெறும்- கருத்துக் கணிப்பில் தகவல்
தமிழ்நாட்டில் இன்று மக்களவைத் தேர்தல் நடந்தால் திமுக கூட்டணியே மாபெரும் வெற்றி பெறும். அதிமுக - பாஜக கூட்டணிக்கு 3 இடங்கள் மட்டுமே கிடைக்கக்கூடும்.
தமிழ்நாடு அரசியலில் விஜய்யின் வருகை திமுக கூட்டணிக்கு சாதகமாக அமையும். திமுக எதிர்ப்பு வாக்குகளையே விஜய் பிரிப்பார்.
இந்தியா டுடே - சி வோட்டர்ஸ் கருத்துக் கணிப்பில் தகவல்.
- Aug 29, 2025 07:30 IST
2 நாள் அரசு முறைப்பயணமாக ஜப்பான் சென்றடைந்தார் பிரதமர் மோடி
இரண்டு நாள் அரசு முறைப்பயணமாக ஜப்பான் சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி. மோடியின் வருகையால் கடைசி நேரத்தில் அமெரிக்கா உடனான வர்த்தகப் பேச்சு வார்த்தையை ஜப்பான் ரத்து செய்துள்ளது. இன்று, நாளை 15வது இந்தியா - ஜப்பான் உச்சி மாநாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
Landed in Tokyo. As India and Japan continue to strengthen their developmental cooperation, I look forward to engaging with PM Ishiba and others during this visit, thus providing an opportunity to deepen existing partnerships and explore new avenues of collaboration.… pic.twitter.com/UPwrHtdz3B
— Narendra Modi (@narendramodi) August 29, 2025 - Aug 29, 2025 07:30 IST
சாய் தன்ஷிகா- விஷால் நிச்சயதார்த்தம்
நடிகையும், காதலியுமான சாய் தன்ஷிகாவை கரம் பிடிக்கிறார், நடிகர் விஷால். சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில், இன்று நிச்சயதார்த்தம் நடக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.