Tamil News updates : தமிழகத்தில் மேலும் 1,657 பேருக்கு கொரோனா பாதிப்பு

இன்று தமிழகத்தில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamil news live updates : வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுதல், பெட்ரோல் டீசல் விலைகளை குறைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தத்தில் பொதுமக்கள் இறங்கியுள்ளனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது என்றும் ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

பழையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு

கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் பழையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர உத்தரவு.

ஐ.பி.எல். போட்டிகள்

26/09/2021 அன்று மும்பை மற்றும் பெங்களூருக்கு இடையே நடைபெற்ற ஐ.பி.எல்.போட்டியில் மும்பை அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது பெங்களூரு அணி. பெங்களூரு வீரர் ஹர்ஷால் படேல் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்த, 111 ரன்களுக்கு மும்பை அணி சுருண்டது.

பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று டீசலில் விலை 24 காசுகள் அதிகரிப்பு. பெட்ரோல் விலையில் மாற்றம் ஏதும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 98.96க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீசல் ரூ. 93.93க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Live Updates
4:43 (IST) 27 Sep 2021
இந்தியாவில் கொரோனா : சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்திற்கு கீழ் குறைவு

இந்தியாவில் சுமார் 6 மாதங்களுக்கு பிறகு கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்திற்கு கீழ் இறங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டள்ள நிலையில், தினசரி பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை குறைந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் 2,94,497 பேர் கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்னர். இதில், 55 சதவீதம் சுமார் 1.63 லட்சத்துக்கும் அதிகமானோர் கேரளாவில் உள்ளனர். கேரளாவுக்குப் அடுத்து மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 37,000 பேர் சிகிச்சை பெற்று வருகிகன்றனர்.

கேரளாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை தீவிரமடைந்து வரும் நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்துள்ளது. இதில் இந்தியாவில் கடந்த சில மாதங்களாக தினசரி பாதிப்பு 25,000 க்கு கீழே போகவில்லை. இதில் ஞாயிற்றுக்கிழமை, 26,041 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது இதில் 15,951 பேர் கேரளாவிலும், 3,200 பேர் மகாராஷ்டிராவிலும் பதிவாகியுள்ளது.

2:39 (IST) 27 Sep 2021
தமிழகத்தில் ஒரே நாளில், 1657 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ள நிலையில், இன்று ஒரே நாளில், 1657 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2658923 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புக்கு இன்று 19 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 35509 ஆக உயர்ந்துள்ளது.

1:27 (IST) 27 Sep 2021
தமிழகத்தின் நிலுவை நீரை வழங்க கர்நாடகாவுக்கு உத்தரவு

செப்டம்பர் மாதம் வரை தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நிலுவை நீரை வழங்க கர்நாடகாவுக்கு காவிரி மேலான்மை வாரியம் உத்தரவிட்டுள்ளது.

1:24 (IST) 27 Sep 2021
விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டதாக தகவல்

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று கூறி இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மனுதாக்கல் செய்துள்ளார்.

12:09 (IST) 27 Sep 2021
காஞ்சிபுரத்தில் மநீம வேட்பாளர்களை ஆதரித்து கமல் பிரச்சாரம்

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொள்கிறார். அப்போது பேசிய அவர், அடையாளம் தெரிந்தவர்களுக்கு வாக்களியுங்கள்; நேர்மையான ஆட்களை தேர்வு செய்யுங்கள் என தெரிவித்தார்.

11:22 (IST) 27 Sep 2021
வெளிநாட்டினரை கண்காணிக்க டிஜிபிக்கு உத்தரவு

தமிழ்நாட்டுக்கு வருகை தரும் வெளிநாட்டினரின் நடமாட்டத்தை கண்காணிக்க மாவட்ட அளவில் தனிப் பிரிவை ஏற்படுத்த வேண்டும் என தமிழ்நாடு டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

10:55 (IST) 27 Sep 2021
மாநிலங்களவை உறுப்பினராக எல்.முருகன் போட்டியின்றி தேர்வு

மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படாத காரணத்தால், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

10:40 (IST) 27 Sep 2021
செல்வகணபதி போட்டியின்றி தேர்வு

புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினராக பாஜகவை சேர்ந்த செல்வகணபதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

10:30 (IST) 27 Sep 2021
ஐபிஎல் 2021: குல்தீப் யாதவ் விலகல்

நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து காயம் காரணமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் விலகுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

10:21 (IST) 27 Sep 2021
மாநிலங்களவை தேர்தல்: திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு

தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 2 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில் திமுக வேட்பாளர்கள் டாக்டர் கனிமொழி மற்றும் ராஜேஷ்குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

9:33 (IST) 27 Sep 2021
சிறுமி ஜனனியிடம் நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுமி ஜனனியை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்

8:55 (IST) 27 Sep 2021
சென்னை சாலைக்கு நடிகர் நாகேஷ் பெயர் சூட்டவேண்டும் – கமல்

நடிகர் நாகேஷுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. அவரது மகத்தான பங்களிப்பை சிறப்பிக்கும் வகையில் சென்னை சாலைக்கு அவர் பெயர் சூட்டவேண்டும், அவர் பெயரில் விருது வழங்கப்பட வேண்டும் என கமலஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

8:06 (IST) 27 Sep 2021
ஐ.ஜி. முருகனுக்கு எதிரான பாலியல் வழக்கு; தெலங்கானாவுக்கு மாற்றிய உத்தரவு ரத்து

ஐ.ஜி. முருகனுக்கு எதிரான பாலியல் வழக்கு விசாரணையை தெலுங்கானா மாநிலத்திற்கு மாற்றிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

8:01 (IST) 27 Sep 2021
868 வழக்குகள் வாபஸ் – ஸ்டாலின் உத்தரவு

கடந்த ஆட்சியில் நீட் தேர்வு மற்றும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது பதியப்பட்ட 868 வழக்குகள் வாபஸ் பெறவேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

7:56 (IST) 27 Sep 2021
சுகாதார திட்டம் – பிரதமர் தொடங்கி வைத்தார்

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் சுகாதாரத் திட்டத்தை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தவர, டிஜிட்டல் சுகாதார திட்டத்தில் ஒவ்வொருவருக்கும் அடையாள அட்டை உருவாக்கப்பட்டு உடல்நலம் குறித்த விவரங்கள் பாதுகாக்கப்படும் என்றார்.

7:41 (IST) 27 Sep 2021
சட்டம்- ஒழுங்கு சரியில்லை – இபிஎஸ்

திமுக ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சரியில்லை என்றும் தேர்தல் நேரத்தில் அளித்த அறிவிப்புகளும் நிறைவேற்றப்படவில்லை, விவசாயிகள், மாணவர்கள் ,இளைஞர்களை மு.க.ஸ்டாலின் ஏமாற்றி விட்டார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

7:40 (IST) 27 Sep 2021
4 மாதங்களுக்குள் தேர்தல்

தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் 4 மாதங்களுக்குள் நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த கால அவகாசம் கொடுத்திருக்கிறது உச்சநீதிமன்றம்.

7:23 (IST) 27 Sep 2021
6 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

5:59 (IST) 27 Sep 2021
நான்காவது தடுப்பூசி முகாம் எப்போது? அமைச்சர் பதில்

தற்போது தமிழகத்தில் மூன்று லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பு உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார். மத்திய அரசு கூடுதலாக தடுப்பூசிகள் அளிக்கும் பட்சத்தில் 4வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அவர் அறிவித்துள்ளார்.

5:15 (IST) 27 Sep 2021
செந்தில் பாலாஜி

56,000 காலிப் பணியிடங்கள் மின் வாரியத்தில் உள்ளன. எந்தெந்த பணியிடங்களுக்கு அவசரமாக அவசியமாக பணியாளர்களை நிரப்ப வேண்டும் என்றூ ஆய்வு செய்து அறிவிக்கப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி அளித்துள்ளார்.

4:28 (IST) 27 Sep 2021
ஆந்திராவில் கனமழை

குலாப் புயல் இன்று கரையை கடக்கும் நிலையில் ஆந்திராவில் உள்ள விஜயநகரம், விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. விசாகப்பட்டினம் வழியாக செல்லக்கூடிய பல ரயில்கள் இதனால் ரத்து செய்யப்பட்டுள்ளன.

3:59 (IST) 27 Sep 2021
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,041 நபர்களுக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,041 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 276 நபர்கள் கொரோனா தொற்றால் பலியாகியுள்ளனர். நோயில் இருந்து முழுமையாக குணம் அடைந்து 29,621 நபர்கள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

3:57 (IST) 27 Sep 2021
ஹௌரா ரயில் தாமதமாக புறப்படும்

சென்னை சென்ட்ரலில் இருந்து ஹவுரா செல்லும் சிறப்பு ரயில் 8 மணி நேரம் தாமதமாக மாலை 3 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் என்றூ அறிவிக்கப்பட்டுள்ளது. இணை ரயில் வர தாமதமானதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

3:30 (IST) 27 Sep 2021
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நயன்தாரா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் சாமி தரிசனம்

3:27 (IST) 27 Sep 2021
தனியார் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெறுவதால் ஆந்திராவில் பேருந்துகள் இயங்கவில்லை. இதனை தொடர்ந்து தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

3:26 (IST) 27 Sep 2021
உள்ளாட்சி தேர்தல் கமல்ஹாசன் இன்று முதல் பிரச்சாரம்

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் இன்று முதல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். காஞ்சி மாவட்டம் கோவூரில் இருந்து பிரச்சாரத்தை அவர் துவங்குகிறார்.

Web Title: Tamil news live updates today ipl 2021 weather politics un meet

Next Story
TNEA : 7.5% இட ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு போதுமான இடங்கள் கிடைக்கவில்லை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X